த்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் மூலம் இடஒதுக்கீட்டை காலி செய்ய மோடி அரசு போட்டிருந்த திட்டத்தை முறியடித்திருக்கின்றன எதிர்க்கட்சிகள்!

Advertisment

மத்திய அரசின் நிர்வாகத்திலுள்ள இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலான உயர் பதவிகளுக்கு 45 நபர்களை ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நியமிக்க முடிவுசெய்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது பிரதமர் மோடி அரசு. இதற்குத்தான் கடும் கண்டனங்கள் தேசிய அளவில் எழுந்தன. நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி அனைத்து எதிர்க் கட்சிகளின் தலைவர்களும், ”இந்த நேரடி நியமனத்தை கைவிட வேண்டும்; நியமன அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று போர்க் கொடி உயர்த்தினர். நாடு முழுவதும் இந்த நியமன அறிவிப்பு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Advertisment

modi

இதுகுறித்து தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் நாம் விசாரித்தபோது, "இந்தியாவில் மத்திய -மாநில அரசுகளின் நிர்வாக உயர்பதவிகளில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றிபெறும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள்தான் நியமிக்கப்படுவர். இதில் அனைத்து இட ஒதுக்கீடும் பின்பற்றப் படும்.

அப்படி யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக் கான மத்திய அரசின் உயர் பணியிடங்களுக்கு வெளிச் சந்தையிலிருந்து ஆட்களை ஒப்பந்தத்தின் அடிப்படை யில் தேர்வு செய்து நியமிக்க திட்டமிட்டது மத்திய அரசு. அரசு நிர்வாகத்தில் இது ஆபத்தான போக்கு!

Advertisment

அதாவது, தனியார் நிறுவனங்களில் பல்வேறு துறைகளில் நிபுணர்களாக இருப்பவர்கள், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் திறமையைப் பயன்படுத்தும் பொருட்டு இந்த நியமனங்களை செய்வதாக சொல்கிறது மத்திய அரசு. இதன் மூலம் மோடிக்கு நெருக்கமான கார்ப்பரேட் நிறு வனங்கள் தங்களின் அதிகாரிகளை அரசு நிர்வாகத் தில் உள்ளே நுழைக்க முடியும். அரசு நிர்வாகத்தில் அவர்கள் பங்கெடுக்கும்போது, மத்திய அரசின் கொள்கை முடிவுகள், அமைச்சரவையின் ஆலோ சனைகள்; முடிவுகள், பாதுகாக்கப்பட வேண்டிய ரகசியங்கள், சமூகநலத் திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய விசயங்கள் வெளியே செல்வதற்கு வாய்ப்பு கள் அதிகம். குறிப்பாக, சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்ல வாய்ப்புகள் உண்டு!

மேலும், ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்களை அரசுப் பணிகளுக்குள் கொண்டு வருகிற திட்டமும் அதில் இருக்கிறது. மெல்ல மெல்ல நுழைக்க முயற்சிக்கும் இப்படிப்பட்ட நேரடி நியமனங்கள், ஒரு கட்டத்தில் எல்லா நிலைகளிலும் அதிகரித்து யு.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நடத்த வேண்டிய நிர்வா கப் பணியிடங்கள் முழுவதும் கபளீகரம் செய்து விடும். இதனால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்களை முழுமையாக ஒழித்துக்கட்டி விடுவார்கள்.

mm

இதுதவிர, ஒப்பந்த அடிப்படையில் எடுக் கப்படும் இந்த நேரடி நியமனங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாது. இதனால், இடஒதுக்கீடு மூலம் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களுக்கு ஆபத்து ஏற்படும். மொத்தத்தில், அரசியலமைப்பு கொடுத் துள்ள இடஒதுக்கீடு உரிமையை எதிர்காலத்தில் முற்றிலும் ஒழித்துக்கட்டும் மறைமுக சதி வேலைகள்தான் இந்த நேரடி நியமனங்களில் இருக்கிறது''’என்று விரிவாகச் சுட்டிக்காட்டு கிறார்கள் அதிகாரிகள். மோடி அரசின் நேரடி நியமனத்தை கண்டித்துள்ள டாக்டர் ராமதாஸ், "அரசின் உயர்பதவிகளில் தகுதியான ஆட்களை நியமிப்பதற்காக கடைப்பிடிக்கும் நடைமுறைகளை சீர்குலைக்கிறது ஒன்றிய அரசின் அறிவிப்பு. கடந்த 2018-ல் இதே முறையில் 10 அதிகாரிகளை நியமித்தபோதே அதனை கண்டித்திருந்தேன். இப்போது அதே பாணியில் 45 பேரை நியமிப்பது ஏற்கக்கூடியதல்ல. இந்த நேரடி நியமனங்களால், பிற்படுத்தப்பட்ட -ஒடுக்கப்பட்ட சமூக அதிகாரிகளுக்கான இடஒதுக்கீடும், பதவி உயர்வுகளும் பாதிக்கப்படும். சமூக நீதிக்கு ஆபத்தை விளைவிக்கும். சமூக நீதிக்கு எதிரான எந்த முடிவாக இருந்தாலும், எந்த அரசாக இருந்தாலும் அதனை ரத்து செய்வதுதான் சமூக நீதிக்கான அரசாக இருக்க முடியும். நேரடி நியமனத்தைக் கைவிட்டு அரசின் அனைத்து நியமனங்களும் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றியே இருக்க வேண்டும்''’என்றிருக்கிறார் ராமதாஸ்.

அதேபோல நேரடி நியமனத்தைக் கண்டித் துள்ள ராகுல்காந்தி, "பா.ஜ.க.வின் நேரடி நியமன முறை போன்ற சதிகளை எப்பாடுபட்டாவது முறி யடிப்போம். எந்தச் சூழ்நிலையிலும் அரசியலமைப் பையும், இட ஒதுக்கீட்டு முறையையும் காங்கிரஸ் பாதுகாக்கும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, இடஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை காங்கிரஸ் உயர்த்திப் பிடிக்கும்''” என்று சூளுரைத்திருக்கிறார்.

இதே பாணியில் இப்படி நாடு முழுக்க எதிர்ப்புகளும் கண்டனங்களும் கடுமையாக எதிரொலித்த நிலையில், நேரடி நியமனத்தை ரத்து செய்திருக்கிறது மோடி அரசு. இதுகுறித்து யு.பி.எஸ்.சி. தலைவர் பிரீத்தி சுடானுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ள மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜித்தேந்திரசிங், நேரடி நியமன அறிவிப்பை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி ரத்து செய்யப் பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், "இது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி. வலுவான இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் நேரடி நியமன முறையை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றிருக்கிறது''’என்கிறார் அழுத்தமாக.

மத்திய அரசின் உயர்பதவிகளில் மோடி அரசு கொண்டுவரத் துடித்த சதிகளை முறியடித் துள்ளன எதிர்க்கட்சிகள்!