Advertisment

சங்கத்தை மூடு! சங்கை நெரிக்கும் சாம்சங்! - தீவிரமடையும் போராட்டம்!

ss

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை ஒடுக்க முயல்வதாகக் கூறி, கம்யூனிஸ்ட் தலை வர்கள், தொழிலாளர்களுக்கு ஆதரவாக எழும்பூரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்த நிலையில்.. இரா.முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களையும் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

Advertisment

sa

ஆர்ப்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், "சாம்சங் நிர்வாகத்துக்கு கோபம் ஏற்பட்டுவிடக்கூடாதென்ற அச்சத்தில் காவல் துறையும் அரசும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதியளிக்க மறுத்துள்ளன. தொழிலாளர் உரிமையை தி.மு.க. அரசு மறுத்தது என்ற பேச்சுக்கு இடம் தந்துவிடக்கூடாது. பன்னாட்டு நிறுவனங் களுக்கு அடிபணிந்து தமிழக மக்களின் உரிமையை மறுக்கப்போகிறீர்களா? தொழிலாளர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு விரைந்து சுமூக தீர்வு காணவேண்டும்'' என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், "தொழிலாளர் சங்கம் வைக்கக்கூடாது என நிறுவனம

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை ஒடுக்க முயல்வதாகக் கூறி, கம்யூனிஸ்ட் தலை வர்கள், தொழிலாளர்களுக்கு ஆதரவாக எழும்பூரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்த நிலையில்.. இரா.முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களையும் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

Advertisment

sa

ஆர்ப்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், "சாம்சங் நிர்வாகத்துக்கு கோபம் ஏற்பட்டுவிடக்கூடாதென்ற அச்சத்தில் காவல் துறையும் அரசும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதியளிக்க மறுத்துள்ளன. தொழிலாளர் உரிமையை தி.மு.க. அரசு மறுத்தது என்ற பேச்சுக்கு இடம் தந்துவிடக்கூடாது. பன்னாட்டு நிறுவனங் களுக்கு அடிபணிந்து தமிழக மக்களின் உரிமையை மறுக்கப்போகிறீர்களா? தொழிலாளர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு விரைந்து சுமூக தீர்வு காணவேண்டும்'' என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், "தொழிலாளர் சங்கம் வைக்கக்கூடாது என நிறுவனம் அடாவடித்தனம் செய்வதற்கு தொழிலாளர் நலத்துறை ஆதர வளிப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதியில்லை என நடு இரவில் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. இதெல்லாம் முதல்வருக்குத் தெரிந்து நடைபெறுகிறதா?''” என சூடான கேள்விகளை எழுப்பினார்.

Advertisment

ஸ்ரீபெரும்புதூரையடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கிவரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக அடிப்படை உரிமை களுக்காகப் போராடிவருகின்றனர். இதுவரை ஐந்துகட்டப் பேச்சுவார்த்தை நடந்தபின்னும் தீர்வு கிட்டவில்லை.

sa

2024, செப் 28-அக் 01 நக்கீரன் இதழில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைப் பற்றி பதிவு செய்திருந்தோம்.

போராட்டம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தோழர் முத்துக்குமாரை தொடர்புகொண்டு பேசினோம். "சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள், அவர்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் நிறுவனத்தினர் அதைக் கேட்பதற்கு முன்வராத காரணத்தினால் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க யூனியனைத் தொடங்கினார்கள். இதனால் தொழிலாளர்கள் மிரட்டப்பட்டனர். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதியிலிருந்து தொழி லாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்துவருகின்றனர். இந்திய அரசின் சட்டங் களை சாம்சங் மதிக்கவில்லை என்பதோடு, சாம்சங்கின் பிடிவாதத்துக்கு தமிழக அரசும் துணைநிற்கிறது. சாம்சங் நிறுவனமோ, தொழிலாளர் நலத்துறையோ, தமிழக அரசோ இதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை. மேலும், "இந்நிலையில் சி.ஐ.டி.யு. சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை, கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி கைதுசெய்து பொய் வழக்கைப் பதிவுசெய்தனர்''’ என்றார்.

சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சௌந்தரராஜ னோ, "கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 16 ஆண்டுகளாக நடந்துவரும் சாம்சங் நிறுவனத் தில் நிறுவனம் உருவாக்கிய சங்கம் மட்டுமே செயல்பட்டு வருகின்றது. அது தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்வதில்லை. இதனால் தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த ஜூன் மாதம், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தைத் தொடங்கினர். அன்றிலிருந்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் தொழி லாளர்களை தனித்தனியாக மிரட்டி வருகின்றனர்.

1,810 தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தில் தற்போது வேலை செய்துவருகின்றனர். அதில் 1,450 பேர் நிரந்தரத் தொழிலாளர்கள். தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றனர். காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ஆதர வாகச் செயல்பட்டு வருகின்றனர். நியாயமான கோரிக்கையை வைத்து, உரிமைக்காக போராட்டம் நடத்தும் தொழிலாளர்கள் மீது சட்டத்துக்குப் புறம்பாக பொய் வழக்கைப் பதிவுசெய்து வருகின்றனர். 85% தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத் துக்கு ஆதரவளித்துவரும் நிலையில்.. தொழிற்சங்கப் பதிவாளர் இணை ஆணையர் ரமேஷ் 45 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண் டிய எங்கள் சங்கத்தை, சட்டத்தை மீறி 106 நாட்களாக பதிவு செய்யாமல், இந்திய அரசியல் சாசனத்திற்கும் தொழிலாளர்கள் நலனுக்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறார்''’என்கிறார்.

ss

விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் தொழிலாளர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளது. பதிலுக்கு சாம்சங் நிறுவனமும் காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் என இரண்டு வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.

75 சதவிகித தொழிலாளர்கள் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையிலும் சாம்சங் நிறுவனம் உற்பத்தியைத் தொடர்கிறது. இதுவே சட்டவிரோதம். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்கும் நோக்கில் செப்டம்பர் 1 முதல் 8-ஆம் தேதி வரையிலான சம்பளத்தை தரமறுத்து தொழிலாளிகளை நிர்வாகம் பழிவாங்கி வருவதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சாம்சங் நிறுவனத்துக்குச் சாதகமாகச் செயல்படுவதாகக் கூறப்படும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனோ, “"நான் தொழிலாளர் நலத்துறை அமைச்சரே தவிர, சாம்சங் நிறுவன நலத்துறை அமைச்சரல்ல.… இரு தரப்புக்கும் பாதிப்பில்லாமல் சுமூக தீர்வை நோக்கிச் செயல்படுவதால் விவகாரம் தாமதமாகிறது''’என்கிறார்.

nkn091024
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe