Advertisment

'ரூம் போடலாமா?'' கைதியின் மனைவியிடம் சிறைக்காவலர் சேட்டை!

ss

சேலத்தில், கைதியின் மனைவியிடம் செல்போனில் ஆபாச தகவல்களை அனுப்பி சேட்டைகள் செய்துவந்த சிறைக்காவலர் அதிரடி யாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

Advertisment

நாமக்கல் மாவட் டத்தைச் சேர்ந்தவர் முருகன் (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இருசக்கர வாகனங்களை பழுதுபார்க் கும் பட்டறை நடத்திவந்தார். இவருடைய மனைவி உமா.(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு இரு குழந்தைகள்.

இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் முருகனை, காவல்துறையினர், கடந்த 2021-ஆம் ஆண்டு கைதுசெய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

ss

Advertisment

கணவரைப் பார்ப்பதற்காக உமா அவ்வப் போது சேலம் மத்திய சிறைக்குச் சென்று வந்துள்ளார். மனு எழுதும் பிரிவில் சிறை வார்டன் விஜயகாந்த் பணியாற்றிவந்தார். உமா கணவரைக் காண்பதற்காக சிறைக்குச் சென்றபோது, அவ ருடைய செல்போன் எண்ணை விஜயகாந்த் பெற்றுக்கொண்டார். இதையடுத்து, தினமும் அவ ருக்கு வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் மூலம் தொடர்பு கொண்டு பேசிவந்திருக்கிறார். தொடர்ந்து பலான ம

சேலத்தில், கைதியின் மனைவியிடம் செல்போனில் ஆபாச தகவல்களை அனுப்பி சேட்டைகள் செய்துவந்த சிறைக்காவலர் அதிரடி யாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

Advertisment

நாமக்கல் மாவட் டத்தைச் சேர்ந்தவர் முருகன் (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இருசக்கர வாகனங்களை பழுதுபார்க் கும் பட்டறை நடத்திவந்தார். இவருடைய மனைவி உமா.(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு இரு குழந்தைகள்.

இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் முருகனை, காவல்துறையினர், கடந்த 2021-ஆம் ஆண்டு கைதுசெய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

ss

Advertisment

கணவரைப் பார்ப்பதற்காக உமா அவ்வப் போது சேலம் மத்திய சிறைக்குச் சென்று வந்துள்ளார். மனு எழுதும் பிரிவில் சிறை வார்டன் விஜயகாந்த் பணியாற்றிவந்தார். உமா கணவரைக் காண்பதற்காக சிறைக்குச் சென்றபோது, அவ ருடைய செல்போன் எண்ணை விஜயகாந்த் பெற்றுக்கொண்டார். இதையடுத்து, தினமும் அவ ருக்கு வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் மூலம் தொடர்பு கொண்டு பேசிவந்திருக்கிறார். தொடர்ந்து பலான மெசேஜ்களையும் அனுப்பி வந்துள்ளார். என்ன நடந்தது என்பதை உமாவே நம்மிடம் சொன்னார்.

"வார்டன் விஜயகாந்த் பெரும்பாலும் வாட்ஸ்ஆப் வாய்ஸ்கால் மூலம்தான் பேசுவார். ஒருநாள் என்னைத் தொடர்புகொண்டு, "எனக்கு உன்னை உடனே பாக்கணும்போல இருக்கு. நீ சிறைக்கு வந்துட்டுப் போனதில இருந்து உன் ஞாபகமாவே இருக்கேன். உன் வீட்டுக்கு வரட்டுமா?' எனக் கேட்டார். அவர் என்னிடம் இப்படி பேசுவார் என்று கொஞ்சம்கூட நினைக்க வில்லை. அதிர்ச்சியடைந்த நான், "எனக்கு கல்யாண மாகி, இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என்னிடம் இப்படி பேசுவது சரியல்ல' என்றேன். ஆனாலும் தொடர்ந்து ஆபாசமாகப் பேசினார். எடுத்த எடுப்பிலேயே என்னை, வாடீ... போடீ... என்றுதான் சொன்னார். அவரை "வாங்க, போங்க' என்று சொன்னதற்கு, "நீ.. வா... போ...' என்றே அழைக்கும்படி சொன்னார். "சேலத்திற்கு வா ரூம் போடலாம். ஒருநாள் என்னுடன் தங்கிவிட்டுப் போ' என அருவருப்பாக வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் செய்தார்.

என் கணவர் பிணையில் வெளியே வந்த பிறகு, காவலர் விஜயகாந்த் என்னை தொடர்புகொள்வதை விட்டுவிட்டார். அவருடைய செல்போன் எண்ணையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். ட்ரூகாலர் மூலமும் அந்த எண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், என் கணவரை கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி, நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, மீண் டும் விஜயகாந்த் என்னிடம் செல்போனில் தொடர்புகொண்டு தவறாகப் பேசினார். இதற்கு எப்படியாவது முடிவு கட்டவேண் டும் என்றுதான் சேலம் மத்திய சிறை அதி காரியிடம் புகாரளித்தேன்'' என்கிறார் உமா.

சிறைக்காவலர் விஜயகாந்த்தின் ஜொள்ளு மேட்டரை அம்பலப்படுத்தி யதில் இன்னொருவரின் பங்கும் இருக்கிறது. கொடநாடு வழக்கில் மர்மமான முறையில் இறந்த கனகராஜின் அண்ணன் தனபால், நிலமோசடி வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். அப்போது அவர் உடல் ரீதியாக சில பிரச்னைக்காக சிறை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார். அவருடன், உமாவின் கணவர் முருகனும் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு வைத்துதான் முருகன் தன் மனைவியிடம் காவலர் விஜயகாந்த் எக்குத்தப்பாக பேசிவருவதாகவும், காவல்துறையில் புகாரளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் உதவி கேட்டுள்ளார்.

நில மோசடி வழக்கில் பிணையில் வெளியேவந்த தனபால், இதுகுறித்து நமது கவனத்திற்குக் கொண்டு வந்தார். அவர் உமாவை அழைத்துச் சென்று சேலம் சிறைத்துறை நிர்வாகம் மற்றும் நாமக்கல் எஸ்.பி.யிடமும் புகாரளிக்க வைத்துள்ளார். இதுதொடர்பாக சேலம் மத்திய சிறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

"சேலம் மத்திய சிறை ஏற்கனவே பல்வேறு சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. இந்த சிறையில் பணியாற்றி வந்த அருண், சிவசங்கர் ஆகிய இரண்டு வார்டன்கள் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ss

உமா விவகாரத்திலும் அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக சிறை எஸ்.பி. (பொறுப்பு) வினோத், இதில் தனிக்கவனம் செலுத்தினார். வார்டன் விஜயகாந்த் மீது புகார் வந்த உடனேயே விசாரணையை விரைவுபடுத்தினார். கடந்த ஆறு மாதமாக உமா, விஜய காந்த் ஆகியோரின் செல்போன் இன்கமிங், அவுட்கோயிங் அழைப்புகள் குறித்த சி.டி.ஆர். அறிக்கையைப் பெற்றார்.

முதலில் விஜயகாந்தின் சி.டி.ஆர். அறிக்கையை ஆய்வு செய்ததில், அவருடைய அதிகாரப்பூர்வ செல்போன் எண்ணிலிருந்து உமாவுக்கு ஒரு அழைப்புகூட செல்ல வில்லை. இதனால் எங்களுக்கு கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது.

ss

அடுத்து, உமாவின் சி.டி.ஆர். அறிக்கையை ஆய்வு செய்தனர். அதில், சந்தேகத்திற்குரிய ஒரே ஒரு செல்போன் எண் மட்டும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அந்த எண்ணிலிருந்து உமாவுடன் 9 நிமிடங்கள் பேசப்பட்டிருந் தது. தனக்கு இந்த எண்ணில் இருந்துதான் காவலர் விஜய காந்த் பேசினார் என்பதையும் உமா உறுதிப்படுத்தினார். இதையடுத்து விஜயகாந்த்தை, செப்டம்பர். 11-ஆம் தேதி உடனடியாக பணியிடைநீக்கம் செய்து மத்திய சிறை எஸ்.பி. (பொறுப்பு) வினோத் உத்தரவிட்டார்.

புகார் வந்த 6 நாள்களில், "பலான' காவலர் மீது நடவடிக்கை எடுத்து, அதிரடி காட்டியிருக்கிறது சேலம் மத்திய சிறை நிர்வாகம். அதேநேரம், காவலர் விஜயகாந்த் மீது நாமக்கல் எஸ்.பி.யிடம் அளித்த புகாரின்பேரில் இன்னும் எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யவில்லை என்ற அதிருப்தியும் கிளம்பியிருக்கிறது. காவலர் விஜயகாந்த்தை பாலியல் புகாரின்பேரில் கைது செய்யவேண்டும் என்கிறது பாதிக்கப்பட்ட தரப்பு.

nkn200923
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe