2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச் சாரங்களை த.வெ.க தலைவர் விஜய் மேற் கொண்டுவருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்களைச்  சந்திப்பதாக அறிவித்த விஜய் முதற்கட்டமாக செப்டம்பர் 13-ஆம் தேதி தன்னு டைய தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியிலிருந்து தொடங்கினார். அங்கு கூடிய இளைஞர்களின் கூட்டம் அரசியல் கட்சிகளைத் திரும்பிப் பார்க்கவைத்திருந்தாலும் நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளாகியது. 

Advertisment

இந்தநிலையில்தான் இரண்டாவது பிரச்சாரத்தை 20-ஆம் தேதி நாகை, திருவாரூரில் நடத்தி தி.மு.க., பா.ஜ.க., இந்து மக்கள் கட்சி யினரின் கண்டிப்புக்கு ஆளாகியிருக்கிறார் விஜய்.

விஜய் நாகையில் பிரச்சாரம் செய்வதற்கு கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்படி மைதானம், நாகூர் புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச் உள்ளிட்ட ஏழு இடங்களை குறிப்பிட்டு அதில் ஒரு இடத்தில் அனுமதிகேட்டி ருந்தனர். புத்தூர் ரவுண்டானா, கிழக்கு கடற்கரைச் சாலையில் பிரச்சாரம் செய்யலாம். மற்ற இடங்களைவிட கூட்டநெரிசலை கட்டுக்குள் வைத்திருக்கமுடியும் என மாவட்ட காவல்துறை அனுமதியளித்தது. முப்பது நிமிடங்களுக்குள் பிரச்சாரத்தை முடித்துக்கொள்வதாக எழுத்துப் பூர்வமாக ஒப்புதலளித்து புத்தூர் அண்ணா சிலை பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றனர் த.வெ.க.வினர். 

இதற்கிடையில் த.வெ.க. மாவட்டச் செயலாளர் சுகுமாரன், "விஜய் பிரச்சாரம் செய்யும் அன்று ஒருநாள் நாகை பகுதியில் மின்சாரத்தை நிறுத்தி வைக்கவேண்டும், இல்லையென்றால் மின்சாரக் கம்பங்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவேண்டும்' என மின்சாரத் துறையிடம் மனு அளித்த விவகாரம்  பொதுமக்கள் மத்தியில் எரிச்சலையும் நகைப்பையும் உண்டாக்கியது. 

Advertisment

நாகை, திருவாரூரில் நடக்கும் இரண்டாவது பிரச்சாரத்திற்கு சென்னையிலிருந்து காரைக்கா லுக்கு தனி ஹெலிஹாப்டரில் வந்து அங்கிருந்து சாலைமார்க்கமாக பிரச்சார இடத்திற்கு வருகிறார் என கட்சித் தலைமை அறிவித்திருந்ததால் அந்த பகுதியில் வழிநெடுக, விஜய்யை வரவேற்க டிஜிட்டல் போர்டுகள்  குவித்திருந்தனர். திடீரென ரூட்டை மாற்றி சென்னையிலிருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் வந்து, நாகை வந்ததால் தொண்டர் கள் ஏமாற்றமடைந்து பேனர்களைக் கிழித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

நாகையில் கூட்டநெரிசலில் தனியார் மண்டபத்தின் காம்பவுண்ட் சுவர் இடிந்து சிலர் மயக்கமடைந்து ஆபத்தான சூழலில் மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். திருவாரூர் தெற்கு வீதியில் 11 இளம்பெண்கள், ஆறு இளைஞர்கள் உள்ளிட்ட 23 பேர் மயங்கிவிழுந்து ஆம்புலன்சில் ஏற்றிச்செல்லப்பட்டனர். தெற்கு வீதியிலுள்ள குளக்கரை கோயில்மேல் ஏறி கீழேவிழுந்து பவித்திரமாணிக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் கால்துண்டானது. பழைய நகராட்சி கட்டடத்தில் ஏறும்போது கல்சரிந்து ஒருவரின் மண்டை உடைந்தது. அதேபோல அருகிலிருந்த கட்டடத்தில் ஏறும்போது தடுமாறி விழுந்து ஒரு இளைஞரின் கால் உடைந்தது. கலைநிகழ்ச்சிக்கு தஞ்சாவூரிலிருந்து 30 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி நடத்தவிடா மல் இடித்துத்தள்ளியதால் நிகழ்ச்சிகளை நடத்தாமல் நொந்துபோய் நகராட்சி வாசலில் அமர்ந்துவிட்டனர் அர்ஜூன் கலைக்குழுவினர்.

பிரச்சார பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் கூறுகையில், "த.வெ.க.வில் கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் பிரச்சனையில்லாத இடமாகச் சொன் னால் பிரச்சனை செய்து நெரிசலான இடங்களையே அனுமதி வாங்குறாங்க. மற்ற கட்சிகள் கூட்டம் நடத்தினாலோ, பிரச்சாரம் செய்தாலோ அவர்களுக்கு சுயகட்டுப்பாடு இருக்கும். ஆனால் த.வெ.கவில் அப்படி இல்லை. ஆம்புலன்ஸ்ல தொண்டர்கள் குறுக்கும்நெடுக்குமா போறாங்க, விஜய்யை பின்தொடர்ந்தே ஒரு கூட்டம் வருது. கூடியிருந்த கூட்டத்தில் 60% 17 வயதுக்கு உட்பட்டவர்கள், அதுல 10% பாதுகாப்புக்கு வந்திருந்த பெற்றோர்கள், மீதமுள்ள 20%தான் த.வெ.கவினர். மீதமுள்ளவர்கள் லோக்கல் வர்த்தகர்களும் பொதுமக்களும்'' என்கிறார்.

Advertisment

ரசிகர்களின் சலசலப்புக்கு இடையே நாகை திருவாரூரில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், பத்து நிமிடம், ஆறு நிமிடம் என ஷூட்டிங்கில் எழுதிக் கொடுத்த வசனத்தை ஒப்பிப்பதுபோல் மக்கள் முன்பு டயலாக் பேசிவிட்டுக் கிளம்பினார்.

விஜய் பிரச்சாரம் குறித்து அரசியல் விமர்சகர் களும், த.வெ.க.வினரும் கூறுகையில், "விஜய் பிரச் சாரக் களத்தில் எதிர்பார்த்ததைவிட வரவேற்பு அதிகமா இருக்குது. இது வாக்குகளாக மாறுமா என் றால் கேள்விக்குறியே. கட்சி உறுப்பினர் சேர்க்கையில் கோட்டை விடுறாங்க. தேர்தல் அறிக்கை தயாரிப் பதற்கான முன்னெடுப்புகளும் தொடங்கவில்லை. அரசியல் கட்சிகளுக்கான அடிப்படை விஷயங்கள் தாமதமாவதால், திராவிட கட்சிகளின் வேகத்துக்கும், வியூகத்துக்கும் ஈடுகொடுக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. எல்லா கட்சிகளுக்கும் ஸ்டார் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். விஜய் மட்டுமே தேர்தல் நேரத்தில் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யும் நிலை. தேர்தல் களத்தில் ஊறிப்போன திராவிடக் கட்சிகளுக்கு ஈடுகொடுக்க விஜய்யால் முடியுமா என்றால் சந்தேகமே'' என்கிறார்கள்.

இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் குருமூர்த்தி, “"விஜய்  திருவாரூரில் பிரச்சாரம் செய்ய வந்தபோது குளக்கரையிலிருந்த காசி விஸ்வநாதர் திருக்கோயில் கோபுரத்தின்மேல் செருப்புக் காலுடன் ரசிகர்கள் ஏறி நின்றது கண்டிக்கத்தக்கது. விஜய் பிரச்சாரம் தொடங்கிய சில நாட்களிலேயே விஜய் ரசிகர்கள் ஏர்போட்டில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியும், ஆபாச அருவருக்கத்தக்க நடனங்களாலும் முகம்சுளிக்கும் அளவிற்கு நடந்துகொள்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்திற்கு நிரந்தர தடைவிதிக்கவேண்டும்''”  என்கிறார்.

பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசையோ, "அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதித்தருபவர் சரிபார்த்து எழுதிக் கொடுக்கணும். திடீரென்று அரசியலுக்கு வந்தவுடன் என்ன ஏதென்று புரியாமல் பேசுகிறார். பார்க்க வருபவர்கள் வேறு. வாக்களிக்க வருபவர்கள் வேறென்பது சீக்கிரம் புரியும்''’என்கிறார்.