துரை சமயநல்லூரில் உள்ள சத்தியமூர்த்தி நகர். இங்கே காட்டுநாயக்கன் சமூ கத்தைச் சேர்ந்த 300 குடும் பங்கள், மற்ற சமூகங்களின் 600 குடும்பங்கள் என 2000 பேர் வசிக்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 800 பேர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கிறார்கள். மதம் மாறினாலும் தங்கள் சமூகத்திற்குள் பெண் கொடுப்பது, எடுப்பது என்ற முறையை மட்டும் மாற்றாமல் இருந்து வரும் நிலையில்தான், கடந்த வாரம் திடீரென ஒரு போஸ்டரை ஒட்டி சர்ச்சையைக் கிளப்பி யிருக்கிறார்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர்.

caste

"இது மதமாற்றம் தடை செய்யப்பட்ட பகுதி. மீறினால் போலீசில் ஒப்படைக்கப்படுவார்கள். இதுதான் அந்த போஸ்டர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தாத்தா, இந்து மத பேரக் குழந்தையைக் கொஞ்சினால் ரூ.2000 அபராதம். இந்து மகளை கிறிஸ்தவ தாய் பார்த்தாலே ரூ.1000 அபராதம். கிறிஸ்தவர்கள் பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்தால் ரூ.300 அபராதம். ஊர் மந்தையில் கிறிஸ்தவ குழந்தைகள் விளையாடினால் ரூ.500 அபராதம்' -இது ஊருக்குள் ஒட்டப்பட்டு கிழிக்கப்பட்ட போஸ்டர் சொல்லும் சேதி.

Advertisment

போஸ்டர் ஒட்டியதோடு மட்டும் நின்றுவிட வில்லை, அந்த அறிவிப்பை அமல்படுத்தியும் திகில் கிளப்பியிருக்கிறார்கள். கிறிஸ்தவரான கவிதா, இந்துவாக இருக்கும் தனது தாயைப் பார்த்ததற்காக 5,000 அபராதம் போட்டுள்ளார்கள். "அவ்வளவு பணம் கட்ட முடியாது' என கவிதா கெஞ்சிய பிறகு 3,000 ரூபாயாகக் குறைத்திருக் கிறார்கள்.

இதே போல் பிரின்ஸி என்கிற 3 வயது கிறிஸ்தவ குழந்தையைக் கொஞ்சியதற்காக இந்து மத சித்திக்கு 3 ஆயிரம் அபராதம் விதித்திருக்கிறார்கள்.

caste

Advertisment

இந்த தகவலையெல்லாம் நமது நண்பர் மூலம் கேள்விப்பட்டு, சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகருக்குள் நுழைந்ததுமே அந்த போஸ்டர்தான் நம்மை வரவேற்றது. டீக்கடையில் அமர்ந்திருந்த காட்டுநாயக்கன் சமூக தலைவர் அழகர்பாண்டியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

""எல்லாரும் ஒத்துமையாத்தான் இருந்தோம் தம்பி. என்னோட தம்பி மகன் கிருஷ்ணன், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி பீட்டர் கிருஷ்ணனாகி, இங்கே இருக்கும் சர்ச்சில் பாதிரியாரா இருக்கான். அவன்தான் எங்க குழந்தைகளை சர்ச்சுக்கு வரவச்சு பைபிள் பாடம் நடத்தி, அத போட்டோ எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாரிக்க ஆரம்பிச்சான். அதனால ஊர் பஞ்சாயத்துக் கூடி அவனை கண்டிச்சோம். ஆனா அவனோ எங்களின் தொழிலான குறி சொல்வதை, சாத்தானின் வேலை என்கிறான். இது எங்களின் பிழைப்பைக் கெடுக்கும் வேலையில்லையா? அதனாலதான் இந்து முன்னணி பேரில் போஸ்டர் அடித்து ஒட்டினோம்''’’ என்கிறார்.

மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் நம்மிடம் பேசும் போது, ""முன்னெல்லாம் கோவிலில் அன்னதானம் நடந்தால் கிறிஸ்தவர்களும், சர்ச்சில் அன்னதானம் நடந்தால் இந்துக்களும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவோம். இதெல்லாம் 2017 நவம்பரோடு போச்சு. என்னைக்கு இந்து முன்னணியைச் சேர்ந்த தங்கம் வெங்கடேஷ், எம்.கே.முருகன் ஆகியோர் இங்கே காவிக் கொடியை ஏற்றினார்களோ அன்னைக்கோட எல்லாம் போச்சு. இதுல கஷ்டமான சங்கதி என்னன்னா, மதுரை புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட தி.மு.க. மேற்கு ஒன்றியச் செயலாளரான திரைச்செல்வமும் இந்து முன்னணியினருக்கு சப்போர்ட் பண்ணுவதுதான்''’’ என்றார்.

சர்ச்சை நபரான பாதிரியார் பீட்டர் கிருஷ்ணனைச் சந்தித்தோம். ""வெளிநாட்டிலிருந்து எனக்கு பணம் வருது. குறி சொல்வதை கேலி பண்ணினேன் என தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பிவருகிறார்கள். இப்போது ஊர்மந்தையில் குழந்தைகள் விளையாடுவதற்குக் கூட அபராதம் போட்டால் எப்படி? இதப்பத்தியெல்லாம் கலெக்டரிடம் புகாராக எழுதிக் கொடுத்திருக்கிறேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை''’என்கிறார்.

மற்றொரு சர்ச்சை நபரான எம்.கே.முருகனோ, ""மதமாற்றம் செய்றது தப்புதானே. அதத் தான் தட்டிக் கேட்டோம். அதே சமயம் இந்து முன்னணி கொடியை ஏற்ற எங்களுக்கும் உரிமை இருக்கு''’என்றார்.

"மதம் மனிதனை மிருகமாக்கும், சாதிவெறி சாக்கடை யாக்கும்'’ -சத்தியமூர்த்தி நகரைவிட்டுக் கிளம்பும் போது, தந்தை பெரியாரின் இந்த வாசகங்கள்தான் நினைவலைகளில் மோதின.

-அண்ணல்