சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (63)

ss

ss

(63) காலத்தோடு கரைந்துபோன கனவுக்கன்னிகள்!

"மிஸ்ஸியம்மா' என்றொரு படம். நான் முதன்முறையாகப் பார்த்த சாவித்திரி அம்மாவின் படம். ஒரு கிறிஸ்டியன் பெண்ணாக நடித்திருப்பார். ஜெமினி கணேசனுக்கு ஆசிரியர் வேலை கிடைப்பதாக ஒரு வாய்ப்பு. அவர் மணமானவராக இருக்கவேண்டும் என்பது பள்ளி நிர்வாகத்தின் நிபந்தனை. மனைவிக்கு எங்கே போவது? மணமாகாத சாவித்திரியும் வேலை தேடி அலைகிறார். அவர்களை சந்திக்கும் ஜெமினி, "நீங்கள் மட்டும் என் நிபந்தனைக்கு சம்மதித் தால் நம்ம இருவருக்குமே வேலை கிடைக்கும்'' என்று சொல்ல... "என்ன நிபந்தனை'' என கேட்கிறார் சாவித்திரி.

"நாம் இருவரும் கணவன்-மனைவியாக...'' வசனத்தை முடிக்குமுன் ஆத்திரமடைந்து வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறார் சாவித்திரி. பின்னர் கணவன் -மனைவியாக நடிக்கவேண்டும் என்று விளக்கிச் சொல்கிறார் ஜெமினி. ஏகப்பட்ட நிபந்தனைகளோடு ஒப்புக்கொள்கிறார் சாவித்திரி. அந்தப் பள்ளியின் தாளாளர் ரங்காராவ். அது நகைச்சுவை கலந்த காதல் கதை. அதில் அழகு தேவதையாக காட்சியளிப்பார் சாவித்திரி. அந்தப் படத்தில் அவர் சிரித்தது அபூர்வம். எப்போதும் உர்ர்...ரென்று இருப்பார்.

இதுக்கு நேர்விநோதமான கதாபாத்திரம் "கை கொடுத்த தெய்வம்' படத்தில். வெகுளியான தொணதொணன்னு பேசும் கதாபாத்திரம். "பாசமலர்' பட கதாபாத்திரம் குறித்து எழுத எனக்குத் தகுதியில்லை. அப்படி சிவாஜியோடு போட்டிபோட்டு நடித்திருப்பார். ஹபிபுல்லா ரோட்டில் இவர

ss

(63) காலத்தோடு கரைந்துபோன கனவுக்கன்னிகள்!

"மிஸ்ஸியம்மா' என்றொரு படம். நான் முதன்முறையாகப் பார்த்த சாவித்திரி அம்மாவின் படம். ஒரு கிறிஸ்டியன் பெண்ணாக நடித்திருப்பார். ஜெமினி கணேசனுக்கு ஆசிரியர் வேலை கிடைப்பதாக ஒரு வாய்ப்பு. அவர் மணமானவராக இருக்கவேண்டும் என்பது பள்ளி நிர்வாகத்தின் நிபந்தனை. மனைவிக்கு எங்கே போவது? மணமாகாத சாவித்திரியும் வேலை தேடி அலைகிறார். அவர்களை சந்திக்கும் ஜெமினி, "நீங்கள் மட்டும் என் நிபந்தனைக்கு சம்மதித் தால் நம்ம இருவருக்குமே வேலை கிடைக்கும்'' என்று சொல்ல... "என்ன நிபந்தனை'' என கேட்கிறார் சாவித்திரி.

"நாம் இருவரும் கணவன்-மனைவியாக...'' வசனத்தை முடிக்குமுன் ஆத்திரமடைந்து வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறார் சாவித்திரி. பின்னர் கணவன் -மனைவியாக நடிக்கவேண்டும் என்று விளக்கிச் சொல்கிறார் ஜெமினி. ஏகப்பட்ட நிபந்தனைகளோடு ஒப்புக்கொள்கிறார் சாவித்திரி. அந்தப் பள்ளியின் தாளாளர் ரங்காராவ். அது நகைச்சுவை கலந்த காதல் கதை. அதில் அழகு தேவதையாக காட்சியளிப்பார் சாவித்திரி. அந்தப் படத்தில் அவர் சிரித்தது அபூர்வம். எப்போதும் உர்ர்...ரென்று இருப்பார்.

இதுக்கு நேர்விநோதமான கதாபாத்திரம் "கை கொடுத்த தெய்வம்' படத்தில். வெகுளியான தொணதொணன்னு பேசும் கதாபாத்திரம். "பாசமலர்' பட கதாபாத்திரம் குறித்து எழுத எனக்குத் தகுதியில்லை. அப்படி சிவாஜியோடு போட்டிபோட்டு நடித்திருப்பார். ஹபிபுல்லா ரோட்டில் இவர் கட்டிய புது பங்களா. பல நாட்கள் அந்த வீட்டைப் போய் பார்த்து ரசிப்பேன்... மாணவனாக இருந்தபோது. நேரில் சாவித்திரி பேரழகி என்று சொல்லிவிட முடியாது. ஆனால் திரையில் அமர்க்களமாக இருப்பார்.

வானத்தை அண்ணாந்து பார்த்து நட்சத்திரங்களை ரசிப்பதுபோல் சாவித்திரியை ரசித்த கூட்டம் எண்ணிலடங்காது. நடிகையாக உச்சம் தொட்ட அவர், பல லட்சங்களை சம்பளமாக வாங்கும் நிலைக்கு வளர்ந்தார்.

ஆனால் அவர் ஒருநாள் ஒரு வாடகை வண்டியில் என் அலுவலகம் வந்தார். நான், யாரோ எனத் தெரியாமல் கடந்து போய்விட்டேன். அவர் என்னைக் கூப்பிட்டதும் குரல் புரிந்துகொண்டேன். பதட்டத்துடன் திரும்பி வந்து "என்னம்மா?'' என்று கேட்டேன்.

"கொஞ்சம் தனியாகப் பேசலாமா தம்பி?'' எனக் கேட்டார்.

என் அறைக்குள் அழைத்துச் சென்று அமர வைத்து "சொல்லுங்கம்மா'' என்றேன்.

"நிறைய படம் எடுக்குறீங்க. எனக் கும் ஏதாவது ஒரு வேஷம்...'' அவர் முடிக்கவில்லை.

ss

"சரிம்மா'' என்று சொல்லி ஒரு கவரில் பணம் போட்டு, "தயவு செய்து இதை வாங்கிக்கங்க''

அவர்... "அப்ப வேஷம்?'' கையை நீட்டாமலே கேட்டார்.

"அதுக்கான முன்பணம்தான்'' என்று சொன்னதும் வாங்கிக்கொண்டார்.

"பெத்த மனம் பித்து' படத்தில் வேறு நாயகியைப் போடலாம் என்றிருந்த நான், சாவித்திரி அம்மாவை ஜெயாவுக்கு அம்மா வாகப் போட்டேன். வெகுசிறப்பாக நடித்தார். படம் நூறு நாட்கள் ஓடியது. விழாவுக்கு வந்து கலைஞர் கையால் கேடயமும் பெற்றுக் கொண்டார்.

அடுத்து நான் எழுதிய "தாய்க்கொரு பிள்ளை' படத்தில் ஜெய்சங்கருக்கு அம்மாவாக நடிக்கவைத்தேன். அந்தம்மா தொட்ட உச்சங்கள் கணக்கில் அடங்கா! சம்பாதித்த பணக் கணக்குகூட அவருக்குத் தெரியாது. ஆனால் பிற்காலத்தில் பாண்டிபஜாரிலிருந்த ராஜராஜேஸ்வரி ஜூவல்லர்ஸ் கடைக்கு அடிக்கடி வந்து, தங்க -வெள்ளிப் பொருட்களை, நகைகளை விற்பதை நான் பார்த்திருக்கிறேன்.

அடுத்து நான் பார்த்து வியந்தது நடிகை பானுமதி. பரணி ஸ்டுடியோ முதலாளி யம்மா. படங்களை டைரக்ட் பண்ணியிருக் காங்க, பாடுவாங்க, நடிப்பாங்க. அந்தக் காலத்தில் ஒரு புதுமைப்பெண், புரட்சிப்பெண் என்றே சொல்லலாம். அவங்க ஸ்டுடியோவிலே "கனிமுத்து பாப்பா', "பெத்த மனம் பித்து', "தெய்வக் குழந்தைகள்', "காசி யாத்திரை', "மஞ்சள் முகமே வருக' போன்ற பல படங்களை எடுத்தேன். எல்லா படங்களும் தொடர் வெற்றிபெற்றன.

ஒருநாள் "அம்மா கூப்பிடுறாங்க' என ஸ்டுடியோ மேனேஜர் வந்து சொல்ல, ஸ்டுடியோ பக்கத்தில் அவர்கள் பங்களாவுக்குப் போனேன். பாசத்தோடு வரவேற்று அமரவைத்து என் படங்களைப் பற்றிப் பேசினார். பல காட்சிகளைப் பற்றிச் சொல்லி என் தனித் தன்மையைப் பாராட்டி னார். "ஒரு நல்ல கதையா எழுதுங்க, நாம தயா ரிக்கலாம்' என்று சொன்னார். மனமகிழ்வோடு புறப்படும்போது... அவர்களின் அற்புதமான நடிப்பால் ஒளிர்ந்த ஏவி.எம்.மின் "அன்னை' பற்றிப் பேசினேன். உண்மையாகவே "அன்னை' படத்தின் நடிப்பு, வசனங்கள் எல்லாமே சூப்பர். நான் அந்த நேரத்தில் தெலுங்கு, இந்தி என பலமொழிப் படங்களில் வேலை செய்து கொண்டி ருந்ததனால், என்னால் பானுமதி அம்மா கேட்டதை செய்ய முடியவில்லை. அவர்களோடு ஒரு படம் பண்ணவேண்டும் என்ற நெடுநாளைய ஆசை நிறைவேறாமல் போனது வருத்தமே.

ஆரம்ப காலத்திலிருந்து எனக்குப் பிடித்த காமெடி நடிகர் சந்திரபாபு. ஆங்கில நடிகர் DANY KAYE என்பவரையும், இன்னும் ஒரு ஆங்கில நடிகரையும் பாபு ஃபாலோபண்ணி நடிப்பார். இவர் மிக திறமைசாலி. கதை எழுதுவார், இயக்குவார், ஆடுவார், பாடுவார், நாயகனாகவும் நடிப்பார்... நகைச்சுவை நடிப்பால் அசத்துவார். இப்படியொரு சகலகலாவல்லவனை அந்தக் காலத்தில் பார்ப்பது அரிது. எல்லாத்தையும் புதுமை யாகச் செய்யவேண்டும் என நினைப்பவர், செய்பவர். சக நடிகர்களுக்குத் தயங்காமல் தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்துவார். பல படப்பிடிப்புத் தளங்களில் நானே நேரில் பார்த்திருக்கிறேன்.

ஏவி.எம்.மில் "சகோதரி' என்று ஒரு சின்ன படம். பாலாஜி கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் முடிந்ததும் போட்டுப் பார்த்த ஏவி.எம். அவர்கள், இதற்கு தனியா ஒரு காமெடி டிராக் எடுத்து சேர்த்தால் நன்றாக இருக்கும் என அபிப்பிராயப்பட்டிருக்கிறார். யாரை வைத்து செய்வது என டிஸ்கஷன் நடந்தது. முடிவில் சந்திரபாபுவை வைத்து செய்யலாம் எனத் திட்டமிட்டனர். பாபுவை அணுகியபோது அவர் "நானே ஒரு காமெடி டிராக் எழுதி, ஷூட்பண்ணித் தர்றேன். ஆனால் ஒருலட்ச ரூபா வேண்டும்' எனக் கேட்டிருக்கிறார். ஏவி.எம். அவர்கள் ஒப்புக்கொண்டார். ஒரு மெட்ராஸ் பால்காரன் வேஷத்தில் நடித்து சந்திரபாபு மிரட்டியிருப்பார். அது படத்தின் பெரிய வெற்றிக்கு காரணமானது. சந்திரபாபு மேலே மேலே உயர்ந்துகொண்டே போனார். அதே அளவுக்கு எதிரிகளும் உருவானார்கள். பல படங்களில் அவர் தவிர்க்கப்பட்டார். வெளியே பேசாமலே பாபு ஒதுக்கப்பட்டார்.

cs

தன்மானஸ்தனான சந்திரபாபு, இறங்கிப்போக விரும்பவில்லை. யாரையும் சந்தித்து வாய்ப்புக் கேட்கவும் இல்லை. நாளடைவில் அவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார். எனது "மஞ்சள் முகமே வருக' படத்துக்கு பரணி ஸ்டுடியோவில் பூஜை... ஷூட்டிங். அன்று நான் அழைக்காமலே பூஜைக்கு வந்திருந்தார். மதியம் லஞ்ச் பிரேக்வரை மேக்அப் அறையில் அமர்ந் திருந்தார். நான் போய் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு செட்டுக்குப் போய்விட்டேன். அவர் இந்தப் படத்தில் நடிக்கலாம் என்ற விருப்பத்தோடு வந்திருப்பார் என உண்மையாகவே எனக்குத் தெரியாது. பல நாட்கள் கழித்து அவரது நண்பர் ஒருவர் சொன்னபோதுதான் புரிந்துகொண்டேன்.

அப்படி ஒரு நிலைமை திறமைசாலிகளுக்கு ஏன் ஏற்படுகிறது? இது இப்பவும் சிலருக்கு நடக்கத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம்?

சில முட்டாள்கள் முக்கிய பொறுப்பு களுக்கு வந்தமர்வதுதான். அவர்களுக்குப் பக்கத்தில் புத்திசாலிகள், திறமைசாலிகள் நின்றால், மக்கள் பார்க்கும்போது என்ன நினைப்பார்கள்? ஆகவே அவர்களை அகற்றிவிட்டால்...?

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்

nkn150225
இதையும் படியுங்கள்
Subscribe