Advertisment

சிக்கிய 4 கோடி! சிக்காத 560 கோடி! நயினாரை போட்டுக்கொடுத்த கருப்பு ஆடு யார்?

ss

ந்த தேர்தலில் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது என வருமான வரித்துறை கணக்குப் போட்டிருக்கிறது என்று நக்கீரனில் நாம் குறிப் பிட்டிருந்தோம். அந்தப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது சிக்க ஆரம்பித் திருக்கிறது. பா.ஜ.க.வினரின் வி.ஐ.பி. தொகுதிகளான கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தென்சென்னை ஆகிய தொகுதிகளுக்கு முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் பணத்தை பா.ஜ.க.வின் தேசியத் தலைமை அனுப்பி வைத்துள்ளது. இது தவிர தொகுதிக்கு இவ்வளவு என மொத்தம் 560 கோடி ரூபாய் அனுப்பப்பட்டி ருக்கிறது என்று நக்கீரனில் குறிப்பிட்டிருந்தோம். இந்த தகவலை தமிழக போலீசின் உளவுத்துறை சீரியஸாக எடுத்துக்கொண்டது. பா.ஜ.க.வும் உஷாரானது.

Advertisment

தமிழ்நாடு எங்கும் தீவிரமாக சோதனை செய்யும் போலீசாரின் கண்களில் படாமல் பணத்தை எடுத்துச்செல்ல பெரிய திட்டம் வகுக்கப்பட்டது. அதனடிப்படை யில் பா.ஜ.க. மா.த.வுக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரிகள் கொண்ட படை திரட்டப்பட்டது. போலீஸ் வாகனங்களில

ந்த தேர்தலில் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது என வருமான வரித்துறை கணக்குப் போட்டிருக்கிறது என்று நக்கீரனில் நாம் குறிப் பிட்டிருந்தோம். அந்தப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது சிக்க ஆரம்பித் திருக்கிறது. பா.ஜ.க.வினரின் வி.ஐ.பி. தொகுதிகளான கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தென்சென்னை ஆகிய தொகுதிகளுக்கு முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் பணத்தை பா.ஜ.க.வின் தேசியத் தலைமை அனுப்பி வைத்துள்ளது. இது தவிர தொகுதிக்கு இவ்வளவு என மொத்தம் 560 கோடி ரூபாய் அனுப்பப்பட்டி ருக்கிறது என்று நக்கீரனில் குறிப்பிட்டிருந்தோம். இந்த தகவலை தமிழக போலீசின் உளவுத்துறை சீரியஸாக எடுத்துக்கொண்டது. பா.ஜ.க.வும் உஷாரானது.

Advertisment

தமிழ்நாடு எங்கும் தீவிரமாக சோதனை செய்யும் போலீசாரின் கண்களில் படாமல் பணத்தை எடுத்துச்செல்ல பெரிய திட்டம் வகுக்கப்பட்டது. அதனடிப்படை யில் பா.ஜ.க. மா.த.வுக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரிகள் கொண்ட படை திரட்டப்பட்டது. போலீஸ் வாகனங்களிலேயே கொஞ்சம் பணம் கொண்டு செல்லப்பட் டது. அது பெரிய ரிஸ்க் என தகவல் வந்ததால் மாற்று வழியை ஆலோசித்தனர். அதன்படி ஹவாலா முறையில் இயங்கும் வட இந்திய மார்வாடிகளைப் பிடித்தனர். அவர் களுக்கு சென்னையில் பணம் கொடுக்கப்பட்டது. அந்தப் பணத்துக்கு சமமான பணத்தை மார்வாடிகள் அந்தந்த தொகுதிகளில் இருக்கும் பா.ஜ.க.வினருக்கு கொடுத்தனர்.

Advertisment

nn

நெல்லையில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கும் பா.ஜ.க. மா.த.வுக்கும் இடையே ஏழாம் பொருத்தம். அவரை அவரது சொந்தத் தொகுதியான நெல்லையில் நிற்க வைக்காமல் பா.ஜ.க. தலைவர்களிடம் பேசி தூத்துக்குடி வேட்பாளர் ஆக்கினார் மா.த. அதை எதிர்த்துப் போராடி சண்டை போட்டு நெல்லை வேட்பாளர் ஆனார் நயினார். அதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்க மான தி.மு.க., அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களிடம் பேசி சாதி ரீதியாக நெல்லையில் நயினார் ஜெயிப் பார் என்கிற இமேஜைக் கொண்டு வந்தார். இது மா.த.வை கடுப்பேற்றியது. தமிழகத்தில் தோற்கும் பா.ஜ.க.வில் நயினார் மட்டும் ஜெயித்தால் அவர் மத்திய மந்திரியாகி விடுவார். மாநிலத் தலைவர் பதவியும் அவருக்கே சென்றுவிடும் என டென்ஷ னான மா.த., நயினாருக்கு ஹவாலா மூலம் பணம் கொண்டு செல்லும் வழியை சொல்லவில்லை.

மொத்தம் தரப்பட்ட 50 கோடியை பேருந்து மற்றும் கார்களில் அனுப்ப ஆரம்பித்தார் நயினார். இரண்டு மூன்று கார்களில் மாற்றி மாற்றி எஸ்கார்ட் பாதுகாப்போடு சென்ற 46 கோடி பணம் பிடிபடவில்லை. கடைசியாக இருந்த 4 கோடியை நயினார் நடத்தும் புளூ டைமண்ட் ஹோட்டலில் மேனேஜராக இருக்கும் சதீஸ் என்பவர் மூலம் ரயிலில் அனுப்பத் திட்டமிட்டார் நயினார். இதற்காக நயினார் பெயரிலேயே ரிசர்வேஷன் பெறப்பட்டது. இந்தத் தகவலை லேட்டாகத் தெரிந்துகொண்ட மா.த., நயினாரை அசிங்கப் படுத்த உளவுத்துறைக்கு தகவலை போட்டுக் கொடுத்தார்.

ரயிலில் ஏ.சி. பெட்டியில் பணத்துடன் ஏறிய சதீஸ் கும்பலைப் பிடிக்கச் சென்ற போலீசார் போவதற்கு முன்பே ரயில் எழும்பூரை விட்டு நகர ஆரம்பித்தது. உடனே தாம்பரத்தில் இருந்த தமிழக உளவுப் போலீசாருக்கு தகவல் சொல்ல அவர்கள் சதீஸ் உட்பட இரண்டு பேரை நான்கு பைகளில் இருந்த நாலு கோடி ரூபாயுடன் கைது செய்தனர். சதீஸ் இது நயினார் நாகேந்திரன் பணம் என்றார். எங்கிருந்து பெற்றீர்கள் எனக் கேட்டதற்கு இரண்டு மூன்று இடங்களைச் சொன்னார். அங்கு போய்த் தேடிப் பார்த்தபோது சில லட்சங்கள்தான் கிடைத்தது.

மொத்தம் ரயிலில் கிடைத்த தொகை மூன்று கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாய். நயினாரின் பணம் சிக்கியது என்ற தகவல் தெரிந்ததும் அதனால் தான் டென்ஷன் அடைந்ததாக ஒரு நாடகத்தை நடத்தத் திட்டமிட்டார் மா.த. கோவையில் அவரது பிரச்சாரத்தை படமெடுக்க வந்த பத்திரிகையாளர்களிடம் வாய்க்கு வந்ததைப் பேசினார். இந்தத் தேர்தலில் ஒரு பைசாகூட நாங்கள் செலவு செய்யமாட்டோம். இதை மீடியாக்கள் பூதக்கண்ணாடி வைத்து பார்க்கலாம் என்று சொன்ன மா.த. அவரது பிரச்சாரத்தை கவரேஜ் செய்து வந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

இந்தப் பணம் கைப்பற்றலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பா.ஜ.க.வினரின் தேர்தல் அலுவலகங்களை சோதனையிட வேண்டும் என ஒரு மனுவை தலைமை தேர்தல் கமிஷனர் சத்யப்பிரகாஷ் சாஹுவிடம் தி.மு.க. மற்றும் சி.பி.எம். கட்சிகள் அளித்துள்ளன. தமிழகத்தில் சத்யப்பிரகாஷ் சாஹுவிற்குப் போட்டியாக ஒரு தேர்தல் கமிஷனரை பார்வையாளராக தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. அவரது கட்டுப்பாட்டில் தான் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத் துறை இயங்குகிறது. அவர்கள் தி.மு.க., அ.தி.மு.க. வுக்கு நெருக்கமான ஒப்பந்தக்காரர்கள் வீடுகளில் தொடர்ந்து ரெய்டு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மாநிலப் போலீஸ் தி.மு.க. வசம் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை வைத்து பா.ஜ.க.வினரோடு மோதுகிறார்கள். இந்தத் தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய கேட்ச்சாக நயினார் நாகேந்திரனின் பணம் காட்சிப்பொரு ளாக மாறியுள்ளது. இதற்குக் காரணம் பா.ஜ.க. மா.த.தான் அந்தக் கருப்பு ஆடு என்கிறார்கள் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள்.

nkn100424
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe