மிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சியைத் துவக்கி, மாநில மாநாட்டை நடத்தி முடித்த நடிகர் விஜய், பொதுவெளியில் அரசியல் செய்யாமல் கூண்டுக்கிளியாக இரும்புத்திரைக்குள் இருந்து வருவது சரி அல்ல; அவர் வெளியே வரவேண்டும்' என்கிற குமுறல்கள் அக்கட்சியினரிடம் வெடித்தபடி இருக்கின்றன.

vijay

நம்மிடம் குமுறிய த.வெ.க. தொண்டர்கள், "கடந்த அக்டோபரில் மாநாடு நடத்திய எங்கள் தலைவர் விஜய், தி.மு.க.வை அரசியல் எதிரியாகவும், பா.ஜ.க.வை சிந்தாந்த எதிரியாகவும் உருவகப்படுத்தி கர்ஜித்தார். அவரது கர்ஜனை எங்களுக்கெல்லாம் அவரது படத்தைப் போலவே முறுக் கேற்றியது. விக்கிரவாண்டியிலிருந்து ஒரு இறுமாப்புடன் கிளம்பினோம். ஆனால், மழையில் நனைந்த புஸ்வாணம் மாதிரி நமத்துக் கிடக்கிறது எங்கள் அரசியல். குறிப்பாக, மாநாட்டில் கர்ஜித்த வேகம், அதன் பிறகு விஜய்யிடம் இல்லை. மாநாட்டுக்குப் பிறகு பொதுவெளியில் வருவார் என நிறைய எதிர்பார்த்தோம். ஏமாற் றம்தான். கூண்டுக்கிளியாக ஒரு இரும்புத் திரைக்குள் புகுந்துகொண்டார் என்கிற நினைப்புதான் விஜய்மீது எங்களுக்கு இருக்கிறது. சினிமா வில் நடிப்பதுபோல கேரவன் அரசியல் செய் கிறார்.

மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் கட்சிகளாக இருக்கும் தி.மு.க.வையும், பா.ஜ.க. வையும் எதிர்த்து அர சியலுக்குள் நுழைந்து விட்ட நீங்கள், கேரவ னுக்குள் முடங்கிக் கிடப்பது சரி அல்ல. அடுத்தகட்ட செயல் திட்டம் என்னவென்று கூட எங்களுக்கு (தொண்டர்கள்) தெரியவில்லை.

Advertisment

vv

பொதுச்செயலாள ராக புஸ்சி ஆனந்த், பொருளாளராக வெங்கட்ராமன் மற்றும் கொள்கைப் பரப்புச் செயலாளர், செய்தித்தொடர்பாளர் என மாநில நிர்வாகிகள் சிலரை நியமித்ததோடு சரி, வேறு எந்த நியமனமும் அதிகாரப்பூர்வமாக இல்லை. நூற்றுக்கும் அதிகமான மா.செ.க்கள், 25-க்கும் மேற்பட்ட அணிகளின் செயலாளர் உள்ளிட்ட நிர் வாகிகள் நியமிக்கப்படவிருப்பதாக புஸ்ஸி ஆனந்த் தரப்பிலிருந்து எங்களுக்குச் சொல்லப்பட்டது.

அப்படி சொல்லி ஒன்றரை மாதங்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், இன்னும் நியமனம் குறித்த அறிவிப்பு வரவில்லை. இதைப்பற்றி புஸ்ஸியிடம் நாங்கள் கேட்டால், "தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கு ; அவசரப் படாதீர்கள். நியமன அறிவிப்பு வரும்'னு சொல்றார்.

Advertisment

பொங்கல் முடிந்ததும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எல்லா கட்சிகளும் தேர்தல் பணிகளில் வேகத்தை அதிகரிக்கத் தொடங்கிவிடும். நாம், இன் னும் மாவட்ட அமைப்பையே உருவாக்காமல் தேர்த லுக்கு நாட்கள் இருக்கிறது என நினைத்துக் கொண்டேயிருந்தால் எல்லாம் நடந்துவிடுமா? மாற்றுக் கட்சியில் இருக்கும் விஜய் ரசிகர்கள் அங்கிருந்து வெளியேறி த.வெ.க.வில் இணைய வேண்டும் என ஒரு அட்வைஸ் தரப்பட்டது. ஆனால், இதில் ஒரு சின்ன அசைவு தெரிந்ததே தவிர, பெரிய அளவில் எந்த அதிர்வுகளையும் நாங்கள் பார்க்கவில்லை. இதுவே இப்படி இருக்கும்போது, இரும்புத் திரைக்குள் தன்னை புகுத்திக்கொண்டு விஜய் அரசியல் செய்தால், எப்படி மக்களிடம் தாக்கம் ஏற்படும்?

விஜய்க்கு இருக்கும் மாஸ் இமேஜும், சோசியல் மீடியாவில் ஒரு ஸ்டேட்மெண்டை அவர் பதிவு செய்தால் ஒரு மணி நேரத்தில் 1 கோடி பேர் பார்க்கிறார்கள் என்கிற இமேஜும் கள அரசியலுக்கு உதவாது. ஏன்னா, ஓட்டுப்போடுகிற ஜனங்களில் 70 சதவீதம் பேர் இன்னமும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குள் வராதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

அதனால், மாநாட்டுக்குப் பிறகு, நேரடி கள அரசியலில் 50 சதவீதத்தையாவது விஜய் கடந்திருக்க வேண்டும். அது இல்லை என்கிறபோதுதான் எங்களுக்கு சோர்வு வருகிறது. கட்சித் தொண்டர்கள் எளிதில் அணுகக் கூடியவராக விஜய் இல்லை. அவ ருக்கும் தொண்டர்களுக்கும் பாலமாக இருப்பதாக சொல்லப்படும் புஸ்ஸி ஆனந்த், வெங்கட்ராமன் போன்றவர்கள் கூட தொண்டர்களின் உணர்வுகளை விஜய்யிடம் சொல்ல பயப்படுகிறார்கள். அப்புறம் எப்படி நாங்கள் த.வெ.க.வின் அரசியலை முன்னெடுக்க முடியும்? மாவட்ட அமைப்பு இருந்தாலாவது எங்களின் குறைகளை, கோரிக்கைகளை மா.செ. மூலமாக தலைமைக்கு தெரிவிக்க முயற்சிப்போம்... அதுவும் இல்லை.

vv

தூத்துக்குடி மாவட்டத்தில் விஜய் ரசிகர் மன்றத்தில் மிகப்பெரிய சக்தியாக இருந்தவர் பில்லா ஜெகன். அவர் மீதிருந்த க்ரைம் ரெக்கார்டு காரணமாக நீக்கப்பட் டார். உடனே தனது சகோதரியை ரசிகர் மன்றத்துக்குள் நுழைத்து, அவர்மூலம் தனது அரசியலை செய்துவருகிறார். தற்போது த.வெ.க.வில் மாவட்டச் செயலாளர் பொறுப்பை சகோதரிக்கு வாங்கித் தந்து தூத்துக்குடி மாவட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைக்க திட்ட மிடுகிறார்.

இதனை எதிர்த்து தனது ஆதரவாளர் ஒருவரை அங்கு மா.செ.வாக நியமிக்க தீர்மானித்து அவருக்கு புஸ்ஸி ஆனந்த் கொம்பு சீவிவிட, மாவட்டத்தில் ரணகளம் நடந்து கொண்டிருக்கிறது. இதுமாதிரி நிறைய மாவட்டங்களில் ஆரோக்கியமற்ற பிரச்சனைகள் இருந்துவருகின்றன.

இந்த நிலையில், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் நியமனம் விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது என தகவலறிந்து தலைமைக் கழகத்தில் நாங்கள் விசாரித்த போது, பதவி நியமன விசயத்தில் ஊழல் தொடங்கியிருப்பதை அறியமுடிந்தது. அதாவது, நியமன பதவிகள் புஸ்ஸி தரப்பி லிருந்து பல லட்சங்களில் விலை பேசப் படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந் தோம். இதையெல்லாம் தலைவரிடம் (விஜய்) கொண்டு செல்ல வழி தெரியாமல் தவிக்கிறோம்.

கட்சியைத் துவங்கியபோது சாதி, மத பேதமற்ற, லஞ்ச ஊழலற்ற, தன்னலமற்ற, சமூக, பொருளாதார, அரசியலை உள்ளடக்கிய அடிப்படை அரசியல் மாற்றத்தைத் தருவோம் என பிளிறினார் தலைவர் விஜய். ஆனால், கட்சியின் ஆரம்பத்திலேயே ஊழல் புழு ரகசியமாக நெளியத் துவங்கியிருக்கிறது. இது ஆரோக்கியமானதாக இல்லை.

தொண்டர்களுக்கும் தலைவருக்கும் இடைவெளி இல்லாத அரசியலை எதிர்பார்க் கிறோம். அதனை விஜய் உருவாக்க வேண்டும். இதைத் தவிர்த்து கேரவன் அரசியலை மட்டுமே விஜய் செய்துகொண்டிருந்தால், சட்டமன்றத் தேர்தலை த.வெ.க. சந்திப்பதற்கு முன்னதாகவே தொண்டர்கள் விலகிச் சென்று விடுவார்கள். இதனை விஜய் புரிந்துகொள்ள வேண்டும்'' ‘என்று எச்சரிக்கை செய்யும் வகையில் தங்களின் குமுறல்களை வெளிப்படுத்து கிறார்கள் த.வெ.க. உறுப்பினர்கள்.

த.வெ.க. உள்வட்டாரங்களில் என்னதான் நடக்கிறது என விசாரித்தபோது, "விஜய்க்கு அடுத்தபடியாக த.வெ.க.வில் புஸ்ஸி ஆனந்த், வெங்கட்ராமன், வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமி ஆகிய மூவர்தான் தெரி கிறார்கள். ஆனால் இந்த மூவரும் கூட, தொண்டர்களின் உணர்வு களை அல்லது எதிர்பார்ப்புகளை விஜய்யிடம் எடுத்துச் செல்லுமளவுக்கு துணிச்சல் மிகுந்தவர்களாகத் தெரியவில்லை.

இதில் ஜான்ஆரோக்கியசாமி கொள்கை வகுப்பாளர், வியூக வகுப்பாளர் என்பதால் அதனைத் தாண்டி, அடிப்படை கட்சி அரசிய லில் அவர் தலையிடா மல் இருக்கலாம். ஆனால், கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் (விஜய்யின் ஆடிட்டர்) ஆகியோருக்கு கட்சியை வலிமைப்படுத்தும் பொறுப்பு இருக்கு. ஆனால், அவர்களோ அதனை தட்டிக்கழிப்பதுடன், எல்லாம் தானாக நடக்கும் என்கிற மனோநிலையில் அரசியல் செய்துவருகின்றனர்.

இந்த மூவரும் ஆரம்பத்தில் தனித்தனியாக ஆளுக்கொரு திசையில் பயணித்தனர். தற்போது ஓரளவுக்கு இவர்களுக்குள் ஒற்றுமை வந்தி ருக்கிறது. ஆனாலும், ஆடிட் மனோபாவத்திலிருந்து வெங்கட்ராமன் விடுபடவில்லை. ஒரு படத்துக்கு 250 கோடி ரூபாய் என வருடத்துக்கு இரண்டு படம் வீதம் 500 கோடி ரூபாய் வருமா னத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவதை விஜய்யின் தகுதியாக கட்டமைக்கிறார்கள்.

அப்படியானால், இதுவரை சேமித்து வைத்திருக்கும் பணத்தை அரசியலுக்கு செல விட வேண்டும். ஆனால், அப்படிச் செய்ய விஜய் விரும்பவில்லை. தன்னை விரும்பும் தொழிலதிபர்கள் உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கிறார். அப்படி யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. அதனால் தடுமாறுகிறார் விஜய். சமீபத்தில், கவர்னரை சந்தித்து தி.மு.க. வுக்கு எதிரான ஊழல் புகார்களை விஜய் கொடுக்கவிருக்கிறார் என செய்தி பரவியது. அதெல்லாம் ஒரு சாக்குதான். உண்மையில், ராஜ்பவனுக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் நட்பைப் பெறுவதுதான் விஜய்யின் திட்டம்.

மாநில, மாவட்ட நிர்வாகி கள் கட்டமைப்பு இருக்க வேண் டும்; யாரிடமும் விவாதிக்காமல் தன்னை கூண்டுக்கிளியாக சுருக்கிக் கொள்வதை தவிர்க்க வேண்டும், பொது வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்களிடம் நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும், அவர்களிடம் யாரின் உதவியுமில்லாமல் அவரே தொடர்புகொண்டு பேச வேண்டும், ஒரு நாளைக்கு 10 பேரிடம் ஆலோசிக்க வேண்டும், அதை வைத்து மாநில நிர்வாகிகளிடம் விவாதிக்க வேண்டும். மாநில நிர்வாகிகளை எதிர்பார்க்காமல் தொண்டர் களிடமும், நிர்வாகிகளிடமும் நேரடித் தொடர்பு தலைவருக்கு இருக்கவேண்டும்.

இந்த எதுவுமே விஜய்யிடம் இல்லை. சிலரிடம் விவாதித்தாலும் அதனைக் கேட்டு விட்டு அவர்களின் தொடர்பை துண்டித்துக் கொள்கிறார் விஜய். அதேபோல, விஜய்யை அரசியல் பிரபலங்கள் உள்பட யாரையும் நெருங்கவிடாமல் புஸ்சி போன்றவர்கள் தீவிர மாக இருக்கிறார்கள்''’என்று த.வெ.க. உள் வட்டங்களை அறிந்தவர்கள் விவரிக்கின்றனர்.

என்ன செய்யப்போகிறார் விஜய்?