"நான் அவன் இல்லை' பட பாணியில் பல பெண் களை திருமணம் செய்வ தாக சில்மிஷம் செய்து, அவர் களுக்கு டிமிக்கி கொடுத்து டீலில் விட்டு விலகிச் சென்றுவிடுவதே வாடிக்கையாகக்கொண்ட ஏமாற் றுக்காரரை போலீஸ் சுற்றி வளைத்துப் பிடித்து, தற்போது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.
சங்கீதா என்பவர் திருச்சியி லுள்ள ஒரு தனியார் நிறுவனத் தில் பணிபுரிந்து வந்துள்ளார். கணவரை இழந்த இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருக்கிறான். திருவாரூரை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவர், அஃபீஷி யலாக சங்கீதாவுடன் பேசத் தொடங்கியவர், நாளடைவில், சங்கீதாவுக்கு கணவர் இல்லையென் பதைத் தெரிந்துகொண்டு அவரிடம் கொஞ்சங் கொஞ்சமாக காதல் மொழி பேசியிருக்கிறார். சங்கீதாவுக்கும் இஸ்மாயிலுக்குமான பழக்கம், திருமணத்தை நோக்கிச்செல்ல, சென்னை பெரும்பாக்கத்தில் வசிக்கும் தனது நண்பர் பரூக் அகமதுவுடன் சங்கீதாவின் வீட்டிற்கே சென்று பெண் கேட்டிருக்கிறார். சங்கீதாவின் வீட்டில் சம்மதம் தெரிவித்த நிலையில், சங்கீதா மதம் மாறினால் தான் திர
"நான் அவன் இல்லை' பட பாணியில் பல பெண் களை திருமணம் செய்வ தாக சில்மிஷம் செய்து, அவர் களுக்கு டிமிக்கி கொடுத்து டீலில் விட்டு விலகிச் சென்றுவிடுவதே வாடிக்கையாகக்கொண்ட ஏமாற் றுக்காரரை போலீஸ் சுற்றி வளைத்துப் பிடித்து, தற்போது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.
சங்கீதா என்பவர் திருச்சியி லுள்ள ஒரு தனியார் நிறுவனத் தில் பணிபுரிந்து வந்துள்ளார். கணவரை இழந்த இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருக்கிறான். திருவாரூரை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவர், அஃபீஷி யலாக சங்கீதாவுடன் பேசத் தொடங்கியவர், நாளடைவில், சங்கீதாவுக்கு கணவர் இல்லையென் பதைத் தெரிந்துகொண்டு அவரிடம் கொஞ்சங் கொஞ்சமாக காதல் மொழி பேசியிருக்கிறார். சங்கீதாவுக்கும் இஸ்மாயிலுக்குமான பழக்கம், திருமணத்தை நோக்கிச்செல்ல, சென்னை பெரும்பாக்கத்தில் வசிக்கும் தனது நண்பர் பரூக் அகமதுவுடன் சங்கீதாவின் வீட்டிற்கே சென்று பெண் கேட்டிருக்கிறார். சங்கீதாவின் வீட்டில் சம்மதம் தெரிவித்த நிலையில், சங்கீதா மதம் மாறினால் தான் திருமணம் செய்வேனென்றும், சங்கீதாவுக்கும் அவரது மகனுக்கும் பெயரை இஸ்லாமியப் பெயராக மாற்ற வேண்டு மெனக்கூற, சங்கீதா சனம் ஆனார். அவரது மகன் அரவிந்த் முகமது ஹபீப் ஆனார். அதை யடுத்து, இவர்களின் திரு மணம், பாலக்கரையிலுள்ள பள்ளிவாசலில் நடந்தது. இத்திருமணத்தை பெங்க ளூரில் பதிவு செய்துள்ள னர்.
முகமது இஸ்மாயில் -சனம் இருவரும் குடும்பம் நடத்தியதில், சனம் கருவுற் றார். அவருக்கு இரட்டை குழந்தை என்பது தெரிய வந்தது. அதேநேரம், முக மது இஸ்மாயில் தவறான வழிகளில் செல்வதை சனம் தெரிந்துகொள்ள, அவர்களுக்கிடையே பிரச்சனை வெடிக்கத் தொடங்கியது. அதில், கருவிலிருந்த குழந்தைகள் இறந்துவிட்டன. அடுத்ததாக, மீண்டும் கருவுற்ற சனம் வயிற்றில் இம்முறை 3 குழந்தைகள் வளர்ந்துள்ளன. அவற்றையும் கலைக்க நினைத்த இஸ்மாயில், திருட்டுத்தனமாக கருக்கலைப்பு மாத் திரைகளை விழுங்கச் செய்தும், பப்பாளி ஜூஸை குடிக்கவைத்தும் முயன்றிருக்கிறார். இதில் இரண்டு கருக்கள் சிதைய, ஒரு குழந்தை மட்டும் 8 மாத குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளது. அதன்பின்னர் சனத்தை விட்டுவிட்டு எங்காவது ஓடிவிட இஸ்மாயில் தொடர்ந்து முயற்சிக்க, அவரை சனம் சமாதானப்படுத்திவந்திருக்கிறார். இருந்தும், இந்தியாவிலிருந்தே தப்பி, குவைத்துக்கு ஓடத் திட்டமிட்டார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சனம், இஸ்மாயிலின் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்க, அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதும், திரு மணம் வரை சென்றதும்... அந்த விஷயம் அவரது தாயாருக்கும் தெரியுமென்பதையும் அறிந்து அதிர்ச்சியானார். அவருடைய தாயார், தன்னிடமிருக்கும் 25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தன்னுடைய மகளுக்கு மட்டுமே போகவேண்டுமென்ற எண்ணத் தில், இஸ்மாயிலின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக் கிறார். அதேவேளை, அவரை திருமணம் செய்துகொள்ளும் நோக்கில் வரக்கூடிய பெண்களிடம், தன் மகனைப்பற்றி மோசமாக எடுத்துக்கூறி விரட்டப் பார்ப் பாராம். அப்படியும் போகாமல் இஸ்மாயிலை திருமணம் செய்து விட்டால், அப்பெண்ணைக் கொடுமைப்படுத்தி விரட்டுவாராம். அப்போதும் கிளம்பாமலிருந்தால், சென்னை பாரூக் மூலமாக பேசி தலாக் செய்யவைப்பாராம். அப்படித் தான் பாத்திமா என்பவரை தலாக் செய்துள்ளனர். அந்த வரிசையில் சனமும் சிக்கியுள்ளார்.
இஸ்மாயிலின் லிஸ்ட், பெங்களூரில் ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிந்த புனிதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), திருவாரூரில் உணவகத்தில் பணிபுரிந்த வனிதா என நீண்டுகொண்டே செல்லும். இந்த சூழ்நிலையில், தலைமறைவாக இருந்த அவர்மீது திருவாரூர், திருச்சி, பெங்களூர் பகுதிகளில் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக் கையும் இல்லாத நிலையில், இஸ்மாயிலை கையுங்களவுமாகப் பிடிக்க சனம் திட்டம் தீட்டினார்.
பெண் ஒருவரை செட் செய்து, திருவாரூரிலுள்ள இஸ்மாயிலின் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அதை உணராத இஸ்மாயில், அப்பெண் ணிடம் பழக்கமாக, வாட்ஸ் அப் சாட்டிங்கில் கடலையைத் தொடர, பெங்க ளூரிள்ள வி.ஐ.பி. ஹோட்டலுக்கு போகலாமென்று அவள் ஆசை வார்த்தை பேச, போகலாமென்று ஒப்புக்கொண்ட இஸ்மாயில், பெங்களூருக்கு செல்வதற்காக திருவாரூர் பஸ் ஸ்டாப்புக்கு வர, இஸ்மாயிலை போலீசார் சுற்றி வளைத்து கைதுசெய்தனர். அதன்பின்னர் தான் தன்னோடு சாட்டிங்கில் பேசியது தன் மனைவி சனம் என்பது தெரிய வந்தது. இஸ்மாயிலை நேரில் சந்தித்தது மட்டுமே சனம் செட்டப் செய்த பெண்!
தற்போது வழக்கு நீதி மன்றத்தில் இருக்கின்ற நிலை யில், காவல் ஆணையரகத்தில் சனத்துக்கு மாதாமாதம் ரூ.15 ஆயிரம் தருவதாகக் கூறிவிட்டு, முதல் மாதம் 10 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு, அதன்பின் ஒரு ரூபாய்கூடக் கொடுக்காமல் தன்னை மிரட்டுவதாக வேதனை யுடன் தெரிவித்தார் சனம். இஸ்மாயில் எப்போது வேண்டு மானாலும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிடலாம் என்ற நிலையில், 'அவர்மேல் சட்டப்படி எப்.ஐ.ஆர். பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு குழந்தைகளுடன் யார் ஆதரவு மின்றி இருக்கும் தான் உட்பட பல பெண்களை ஏமாற்றிவரும் இஸ்மாயிலை சட்டப்படி தண்டிக்க வேண்டும்' எனக் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். பல பெண்களின் வாழ்வில் விளையாடிய பலே மோசடிக்காரன்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும்.