"ஹலோ தலைவரே, தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தயாராகி வருகிறார்.''”
"ஆமாம்பா, சில அமைச் சர்களின் செயல்பாட்டில் திருப்தி இல்லாத முதல்வர், சாட்டையை எடுக்கப் போகிறார்ன்னு தகவல் வருதே?''”
"உண்மைதாங்க தலைவரே, எதிர்பார்த்த அளவிற்கு அமைச்சர்கள் சிலர் செயல்பட வில்லை என்கிற ஆதங்கம் முதல்வர் ஸ்டாலினிடம் இருக்கிறது. அதேபோல் சில அமைச் சர்கள் தங்களைப் பற்றி எழும் விமர்சனங் களைக் கூட பொருட்படுத்துவதில்லை என்பதிலும் அவருக்குக் கோபம். குறிப்பாக வனத்துறையில் இருந்து அண்மையில் சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் ராமச்சந்திரன், மேடநாடு காப்புக்காட்டில் உள்ள தன் உறவினரின் டீ எஸ்டேட்டுக்கு, வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைத்தது பற்றிப் புகார் எழுந்தும், அவர் அமைதிகாத்து வருவது முதல்வருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறதாம். அதோடு கொடநாடு விவகாரத்தில் எடப்பாடித் தரப்புக்கு அவர் தரப்பில் இருந்து சில உதவிகளும் செய்யப்பட்டதாக ஒரு தகவலும் முதல்வர் காதுக்குச் சென்றிருக்கிறது. அதேபோல் ஆதி திராவிட நலத்துறைக்கு ஒன்றிய அரசால் ஒதுக்கப் பட்ட நிதியில் பெரும்பகுதி, உரிய முறையில் செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட தகவலும் முதல்வரை சங்கடத்துக்கு ஆளாக்கி இருக்கிறது. அதனால் இவர்கள் பதவிக்கு ஆபத்து என்ற செய்தி கோட்டை வட்டாரத்தில் இறக்கை கட்டிப் பறக்கிறது. மேலும் அமைச்சரவைக் கூட் டத்தில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் வாய்ப் பும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச் சர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் பேசிக்கிறாங்க.''”
"புதிதாக சிலருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம்னு சொல்லப்படுதே?''”
"ஆமாங்க தலைவரே, டெல்டா பகுதிக்கு வாய்ப்பு தரும் வகையில் டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி.ஆர். பி.ராஜாவுக்கு இந்தமுறை அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் ஆதி திராவிட நலத் துறைக்கு முன்னாள் அமைச்சர் தமிழரசி யோ அல்லது புது முகமான சங்கரன் கோயில் ராஜாவோ நியமிக்கப்படலாம் என்றும் தகவல் கசி கிறது. இதேபோல் புதுமுகங்கள் சிலருக்கு வாய்ப்பு இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இதனால் அமைச்சர்கள் பலரின் கோப்புகளும் துருவப்பட்டு வருகின்றன என்கிறார்கள். இதனி டையே அமைச்சரவை யைக் கூட்டும் முதல்வர் ஸ்டாலின், அதில் அமைச் சர்களுக்கு எதிரான தன் கோபத்தைக் கொட்டக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.''”
"ஜி-ஸ்கொயர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட ரெய்டுகளும் அமைச்சர் பி.டி.ஆருக்கு எதிரான ஆடியோ விவகாரமும் சில ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களையும் சில அமைச்சர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்குதே.''”
"உண்மைதாங்க தலைவரே... காரணம் என்னன்னா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் உட்பட யாரையும் ஜி-ஸ்கொயர் தொடர்புடைய பவர்புள்ளிகள் நெருங்க விடுவது இல்லையாம். அதேபோலத்தான் பி.டி.ஆரும்... சக அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் யாரையும் அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளமாட் டாராம். அவர்கள் ஏதேனும் ரெகமெண்ட் பண்ணினாலும் பழனிவேல் தியாகராஜன் கண்டுகொள்வது இல்லை என்கிறார்கள். அதனால் ‘கொஞ்ச ஆட்டமா ஆடுனீங்க. அனுபவிங்க என்கிற மனோபாவத் துடன்தான், இந்த ரெய்டுகளையும் ஆடியோ வெளியீட்டையும் அந்த தி.மு.க. புள்ளிகளே ரசித்தார்களாம். ஜூனியர் அமைச்சர்கள் சிலரே சீனியர்களிடம், ’எல்லாம் அதிரடியாக இருக்கே. 30,000 கோடியாமேன்னு ஆச்சரியப்படுவதும், டெல்லியின் போக்கு ரொம்ப தீவிரமாக இருக்கிறது. மெயின் பிக்சரையும் வெளியிடப் போவுதாம். அதனால், எல்லாருமே பாத்து நடந்தாகனும் என்று பதில் சொல்வதுமாக இருக்கிறார்களாம். இதெல்லாம் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் அதிர்வலைகளையே காட்டுது.''”
"ஆனால் ஜி.ஸ்கொயர் விவகாரத் தில் தி.மு.க.வுக்கு எந்த சிக்கலும் வராது என்றும் சொல்லப்படுகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, ஜி.ஸ்கொயர் பற்றித் தெரிகிற பிம்பம் வேறு. உண்மை வேறுன்னு அதிகாரிகள் தரப்பே சொல்லுது. அந்த நிறுவனத்தின் முக்கியப் புள்ளியான அண்ணாநகர் கார்த்தியைக் கொஞ்ச காலமாகவே தி.மு.க. மேலிடம் ஒதுக்கி வைத்திருக் கிறதாம். குடும்ப நிகழ்வுகளுக்குக் கூட அவர்களை இப்போதெல்லாம் அழைப்பதில்லையாம். அதனால் அங்கு உண்டாகும் டேமேஜ் தி.மு.க.வை எந்த வகையிலும் பாதிக்காது என்கிறார்கள். அந்த நிறுவனத்தின் ஆடிட்டர் சண்முகராஜாவிடம் இருந்தும், ரெய்டு நடந்த இடங்களில் இருந்தும் நிறைய நிறைய தொழில் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டாலும், இந்த விவகாரத்திற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதாகவே முடியும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.''”
"அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் டெல்லியின் சித்து வேலை இருக்கிறதே?''”
“உண்மைதாங்க தலைவரே, அமைச் சர் பி.டி.ஆர். எந்த அளவிற்கு ஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறாரோ அந்த அள வுக்கு நண்பர்களி டம் லூஸ் டாக் கிலும் ஈடுபடு வாராம். இதை யறிந்த பா.ஜ.க.வும் புலனாய்வு அமைப்புகளும் வியூகம் வகுத்து, முன்பு பிரசாந்த் கிஷோரின் ஐபேக் கில் செயல்பட்ட டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் மணி, பி.டி.ஆரின். நட்பு வட்டத்தில் இருப்பதை அறிந்து, அந்தப் பெண் மணியை அவ ரிடம் பேச வைத் துப் பலவற்றை யும் பதிவு செய்த தாம். இதை அறியாமல் அமைச்சரும் ஜாலிமூடில் கிண்டலாய்ப் பேசிய அந்த உரையாடலைத்தான், டெல்லி பா.ஜ.க. தற்போது அண்ணாமலை மூலம் வெளியிட்டு, தி.மு.க.வுக்கு எதிரான சூறாவளியை எழுப்பியதாம். இதேபோல் இன்னும் பல அமைச்சர்கள் பற்றியும், அவர்களுக்கு நெருக்கமான நபர்கள் மூலமே பேசவிட்டுப் பதிவு செய்த, சில அதிரடி ஆடியோக்களையும் ஒன்றிய அரசு தன் கைவசம் வைத்திருக்கிறதாம். உரிய நேரத்தில் அவற்றையெல்லாம் தி.மு.க.வின் முதுகில் கத்திகளாக வைத்து மிரட்டும் திட்டமும் டெல்லியிடம் இருக்கிறதாம். இந்த வரிசையில் முதல் பலிகடாதான் பி.டி.ஆர். என்கிறார்கள் டெல்லித் தரப்பினர்..''”
"பி.டி.ஆர். தன்னிலை விளக்கம் கொடுத்தும் முதல்வர் சமாதானம் ஆகவில்லை என்கிறார்களே?''”
"அந்த ஆடியோக்களில் ஒட்டு வேலை செய்திருக்கிறார்கள். நான் அப் படி எல்லாம் பேச வில்லை என்று அமைச்சர் பி.டி.ஆர். நேரிலேயே சென்று முதல்வர் ஸ்டாலினிடம் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். எனினும் அவரிடம் இறுக்கமாகவும் பட்டும் படாமலுமே பேசினாராம் ஸ்டாலின். இந்தநிலையில் பி.டி.ஆர். குரலில் வெளி யான அந்த 2 ஆடியோவின் உண்மைத் தன்மை களையும் அறிய உளவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதோடு, இதுபோன்ற வீடியோக்கள் இன்னும் இருக்கிறதா? எனவும் விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம். இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் உட்பட தி.மு.க. அமைச்சர்கள் பலரின் போன்களையும் கடந்த 1 வருடமாக ஒட்டுக்கேட்டு வருகிறதாம் ஒன்றிய அரசு. இந்தத் தகவல் முதல்வருக்கு சொல்லப்பட அவர் அதிர்ந்து போயிருக்கிறார். இன்னும் சில தி.மு.க. அமைச் சர்களின் ஆடியோக்கள் புலனாய்வு அமைப்புகளி டம் சிக்கி இருப்பதை அறிந்த அறிவாலயம், அவற்றை எல்லாம் எப்படி எதிர்கொள்வது என்ற ஆலோ சனையிலும் இருக்கிறதாம்.''”
"உதயநிதிக்கு எதிராக ராஜ்பவன் களமிறங்கியிருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்புடைய ரெட் ஜெயண்ட் நிறுவனம் பற்றி, கவர்னர் ரவியிடம் பா.ஜ.க. அண்ணாமலை ஏற்கனவே புகார் கொடுத்திருந்தார். அதைக் கையில் எடுத்த கவர்னர், ரெட் ஜெயண்ட் விவகாரங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற மூன்று புலனாய்வு அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றை அதிரடியாகக் களமிறக்கி இருக்கிறார். அந்தக் குழு, அந்த திரை நிறுவனம் மீது கொடுக்கப்பட்ட புகாரையும், அந்தப் பட நிறுவனத்தின் ஆவணங்களையும் துருவிக்கொண்டு இருக்கிறது. ரெட்ஜெயண்ட் தரப்பு தனது கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்திருப்பதால், எங்கள் மடியில் கனமில்லை. அதனால் கவர்னரின் விசாரணைக் குழுவால் எங்களுக்கு பயமில்லை என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லிக்கொண்டு இருக்கிறது. அதேநேரம் முதல்வரின் மருமகன் சபரீசனைக் குறிவைத்திருக்கும் ஒன்றிய அரசு, அவர் வெளிநாடு முதலீடுகளில் எந்த அளவுக்கு ஈடுபட்டிருக்கிறார்? அவருடைய நண்பர்கள் யார்? என்றெல்லாம் துருவிக்கொண்டு இருக்கிறது''.
"இந்த நேரத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறதே?''”
"அது எதிர்பாராத சந்திப்பு என்கிறார்கள் டெல்லித் தரப்பினர். சென்னை கிண்டியில் உருவாக்கப்பட்டிருக்கும் பல்நோக்கு உயர்சிகிச்சை மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க இருக்கிறார். அவரை நேரில் சந்தித்து அழைக்கவே முதல்வர் டெல்லி சென் றிருந்தார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் சந்திக்க விரும்பியுள்ளார் ஸ்டா லின். ஆனால், இருவருக்கும் ஏற்கெனவே ஃபிக்ஸ் செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் இருந்ததால், அவர்களைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லையாம். இதனால் உடனடியாக சென்னை திரும்ப டெல்லி ஏர்போர்ட்டுக்கு அவர் வந்தபோது, அதே நேரம் மும்பை செல்ல ஏர்போர்ட்டுக்கு வந்திருக்கிறார் ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன். அங்கே இருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர். அப்போது நிர்மலா, அடுத்த மாதம் என் மகளுக்கு திருமணம் நடக்கிறது. நீங்கள் அவசியம் கலந்து கொள்ளவேண்டும் என முதல்வரை அழைத்தாராம்.''
"ஓ.பி.எஸ். எடுத்த டெல்லி மூவ் எதுவும் பலிக்கலையே?''”
’"உண்மைதாங்க தலைவரே, எடப்பாடித் தரப்பு அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தரப்பை டெல்லியில் சந்தித்துவிட்டுத் திரும்பி இருக்கும் நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டாராம் ஓ.பி.எஸ். ஆனால் சந்திக்க வாய்ப்பில்லைன்னு சொல்லப் பட்டிருக்கிறது, இதனால் அப்செட்டான அவர், ஜே.பி.நட்டாவிடம் பா.ஜ.க. பற்றி ரொம்பவே வருத்தப்பட்டாராம். "நாங்கள் நடத்திய திருச்சி மாநாட்டிற்கு முன்பாகவே பிரதமரையும் அமித்ஷாவையும் சந்திக்க விரும்பினேன். ஆனால் நோ ரெஸ்பான்ஸ். மோடிஜியை நம்பித்தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் என்னை அவர் தொடர்ந்து புறக்கணிக்கிறார். இத்தனை ஆண்டு காலமும் என்னை பொறுமையாக இருக்க வைத்து விட்டீர்கள், நான் அப்படியே இருக்க வேண்டுமா?', என்றெல்லாம் அப்போது பொரிந்து தள்ளினாராம். ஜே.பி.நட்டாவோ, "எப்போதும் பா.ஜ.க.வின் நம்பிக்கைக்குரிய நண்பர் நீங்கள். உங்களை தவிர்த்துவிட்டு அ.தி.மு.க. அரசியலை நாங்கள் பிரித்துப் பார்க்கமாட்டோம்' என மீண்டும் நம்பிக்கை கொடுத்துள்ளாராம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். ஓய்வுபெறும் தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு பதிலாக, புதியதாக அவர் நாற்காலியில் சிவ்தாஸ் மீனா ஐ.ஏ.எஸ். அமர இருக்கிறார் என்கிறது கோட்டை வட்டாரம். அவர் கொஞ்சம் கடுமையாக வேலை வாங்கக்கூடிய அதிகாரி என்பதால், முதல்வரின் நம்பர் ஒன் செயலாளர் உதயசந்திரனை மாற்றும் அரசின் முடிவு தள்ளிப்போகிறதாம். எஸ்.ஒன். -மாற்றம் இதேபோல வெவ்வேறு காரணத்தினால் தள்ளிப்போயிருக்கிறதாம். இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் கன்பர்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்ப தில்லை என்றும், அவர்களைத் துறைச் செயலாளர்களாக ஆக்குவதில்லை என்றும் அவர்கள் தரப்பின் குமுறலை, புதிய தலைமைச் செயலாளர் தீர்ப்பார் என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் பிறந்திருக்கிறதாம்.''
_____________
இறுதிச் சுற்று!
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா ஏப்ரல் 21-ந் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில்... தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் மே 1, திங்கள்கிழமையன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், "12 மணி வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக ஏப்ரல் 24-ந் தேதி அறிவித்திருந்தோம். இன்று 12 மணிநேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கிறோம்'' என்றதோடு, "தி.மு.க. தொழிற்சங்கமும் இந்த மசோதாவை எதிர்த்ததற்குப் பெருமைப்படுகிறேன்'' என கூறினார்.