Advertisment

சாதுவா? குற்றவாளியா? திணறும் திருவண்ணாமலை போலீஸ்!

yy

திருவண்ணாமலையை பிரபலப்படுத்துவது அண்ணாமலையார் கோவிலும், கிரி வலமும்தான். 14 கி.மீ சுற்றளவு கொண்ட மலையை வலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் லட்சக்கணக்கிலும், தினமும் ஆயிரக்கணக்கிலும் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

Advertisment

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2020 மார்ச் மாதம் முதல், பௌர்ணமியன்று கிரிவலம் வருவதற்கு தடை விதித்துவருகிறது மாவட்ட நிர்வாகம். இதனால் பௌர்ணமி தவிர்த்த மற்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம், இரவிலும் கிரிவலம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிரிவலப்பாதையில் நடைபெறும் கொள்ளை, குற்ற சம்பவங்கள்தான் தற்போது ஆன்மீகவாதிகளை கவலைப்படச் செய்துள்ளது.

tt

கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த சில தினங்களுக்குப் பின் விழுப்புரத்தைச் சேர்ந்த 9 இளைஞர்கள் கிரிவலம் வந்துள்ளனர். அவர்களை கிரிவலப்பாதையில் சிலர் வழிமடக்கி அடித்து செல்போனைப் பிடுங்கிக்கொண்டு துரத்தியுள்ளார் கள். பாதிக்கப்பட்ட நவீன் என்ற இளைஞரை நாம் தொடர்புகொண்டு

திருவண்ணாமலையை பிரபலப்படுத்துவது அண்ணாமலையார் கோவிலும், கிரி வலமும்தான். 14 கி.மீ சுற்றளவு கொண்ட மலையை வலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் லட்சக்கணக்கிலும், தினமும் ஆயிரக்கணக்கிலும் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

Advertisment

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2020 மார்ச் மாதம் முதல், பௌர்ணமியன்று கிரிவலம் வருவதற்கு தடை விதித்துவருகிறது மாவட்ட நிர்வாகம். இதனால் பௌர்ணமி தவிர்த்த மற்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம், இரவிலும் கிரிவலம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிரிவலப்பாதையில் நடைபெறும் கொள்ளை, குற்ற சம்பவங்கள்தான் தற்போது ஆன்மீகவாதிகளை கவலைப்படச் செய்துள்ளது.

tt

கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த சில தினங்களுக்குப் பின் விழுப்புரத்தைச் சேர்ந்த 9 இளைஞர்கள் கிரிவலம் வந்துள்ளனர். அவர்களை கிரிவலப்பாதையில் சிலர் வழிமடக்கி அடித்து செல்போனைப் பிடுங்கிக்கொண்டு துரத்தியுள்ளார் கள். பாதிக்கப்பட்ட நவீன் என்ற இளைஞரை நாம் தொடர்புகொண்டு பேசியபோது, "விழுப்புரம் முத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரியில் படிக்கும் 9 பேர் பைக்கில் கிரிவலத்துக்காக திருவண்ணாமலை வந்தோம். இரவு 10 மணிக்கு 3 பேர் ஃபைக்கில் கிரிவலம் வர்றோம்னு போய்ட்டானுங்க. மீதி 6 பேர் மூன்று மூன்று பேராக நடந்து கிரிவலம் வந்தோம்.

எமலிங்கம் சுடுகாடு அருகே வரும்போது எங்கள் வயதுடைய 3 பேர் வந்து தண்ணீர் கேட்டாங்க, நாங்கள் கையில் வைத்திருந்த வாட்டர்பாட்டிலை தந்தோம். ஒருவன் வாங்கிக் குடிக்க, திடீரென மற்றொருவன், என்னுடன் இருந்தவனை கழுத்தை இறுக்கிப் பிடித்து காம்பவுண்ட் சுவர் பக்கம் இழுத்துப்போய் அடிச்சான். கூரான மூங்கில் கம்பை அவன் தொண்டை யில் வைத்து செல்போன்களை தர்றீங்களா இல்லை போட்டுடவான்னு மிரட்டி 3 பேரின் செல்போனைப் புடுங்கிக்கிட்டு போய்ட்டானுங்க. போலீஸ்ல புகார் தந்திருக்கோம்''’என்றார்.

"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கிரிவலப்பாதை மேம்பாடு செய்யப்பட்டு, கிரிவலப்பாதையில் மட்டும் 55 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப் பட்டு சில நாட்கள் மட்டுமே இயங்கின. கேமராக்களுக்கான கேபிள் வெளிப்புறமாக அமைக்கப்பட்டதால் குரங்குகள் அதனை அறுத்ததால் ஒரே மாதத்தில் செயல்படாமல் போய்விட்டன. இதனால் கிரிவலப்பாதையில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் கண்டறியப்பட முடியாமல் உள்ளது'' என்கிறார்கள் விவரமறிந்த வர்கள்.

போளூரில் இருந்து குடும்பத்தோடு கிரிவலம் வந்த கோகிலா, "கிரிவலப் பாதையிலுள்ள அனைத்து பாத்ரூம்களும் மூடியே இருக்கு. அவசரத்துக்கு ஒதுங்க முடியல. அதேமாதிரி குடிதண்ணீர் வசதி சுத்தமாயில்லை. காசு கொடுத்துதான் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டியதாயிருக்கு. எங்கயாவது உட்கார லாமான்னு பார்த்தால் எல்லா பெஞ்ச்லயும் சாமியார்ங்க படுத்துக்கிட்டு இருக்காங்க''’என்றார்.

உள்ளூர் இளைஞர் ஒருவரிடம் விசாரித்தபோது, "நகரத்தில் சில இடங்களில் கஞ்சா விற்பனை நடக்கிறது. முன்பெல்லாம் அவர்களே கொண்டுவந்து கஞ்சா வேண்டும் என நினைக்கும் சாதுக்களிடம் விற்பார்கள். இப்போது கஞ்சா பாக்கெட்களைக் கொண்டு போகும்போது வாகன சோதனையில் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதால் ரெகுலர் கஸ்டமராகவுள்ள சாதுக்களை ஏஜெண்டுகளாக்கி வைத்துள்ளார்கள். போலீஸ் சாதுக்களை செக் செய்வதில்லை''’என்றார்.

Advertisment

tt

ஆன்மீகவாதியும் வழக்கறிஞருமான லாயர் சந்திரமோகன், "ஆர்ட்ஸ் காலேஜ் முதல் அடி அண்ணாமலை வரை, பக்தர்கள் இளைப்பாறும் நிழற்குடைகளில் மண்ணாலான வரப்புகளால் இது உன் இடம், அது என் இடம்னு தங்களுக்குள் பாகம் பிரிச்சிக்கிட்டு, நடைபாதையில் டெண்ட் அடிச்சி தங்கியிருக்காங்க. இரவில் ஒவ்வொரு இடத்திலும் காவியுடை அணிந்த சாதுக்கள், விலையுயர்ந்த செல்போனில் படம் பார்த்துக்கிட்டும், சில இடங்களில் மதுபாட்டில்களோடும் இருக்காங்க.

சாதுக்களுக்காக அறநிலையத்துறையால் கட்டப்பட்ட கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் கடந்த பல ஆண்டுகளாக மூடியே வைக்கப்பட்டுள்ளன, இதற்றைத் திறந்துவைத்து அங்கே இந்த சாதுக்களை தங்கவைத்து அவர்கள் குறித்த முழு தகவல்களை பெற்று வைத்துக்கொள்ள வேண்டும் இது வருங்காலத்தில் பல பிரச்சனைகளை தடுக்க உதவும்''’என்றார்.

மாவட்ட எஸ்.பி. பவன்குமாரைத் தொடர்புகொண்டபோது அவரது எண் ஸ்விட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. குற்றப்பிரிவு போலீஸார் சிலரிடம் பேசியபோது, "கிரிவலப் பாதையில் வெளிமாவட்டம், வெளிமாநிலத்தைச் சேர்ந்த சாதுக்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். 7 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களை கணக்கெடுத்து ஐ.டி. கார்டு தரப்பட்டிருந்தது. கொரோனாவுக்கு பிறகு புதிதாக நூற்றுக்கணக்கானோர் வந்துள்ளனர், எங்கள் கணக்குப்படி தற்போது 1500-லிருந்து 2000 பேர் இருக்கிறார்கள். அவர்கள் குறித்த டேட்டாக்கள் யாரிடமும் இல்லை.

சிலர் மீது சந்தேகப்பட்டு விசாரித்தால் குடும்பப் பிரச்சினை... சாமியாராகிட்டேன் என்கிறார்கள். ஆனால் அவர்களின் பேச்சு, நடவடிக்கையெல்லாம் சந்தேகமாகவே உள்ளது. கேரளா, ஆந்திராவைச் சேர்ந்தவர்களும் சாதுக்கள் பெயரில் உலா வருகிறார்கள். இவர்களுக்கு உணவுக்கு பிரச்சினையில்லை. மற்ற ஆடம்பர செலவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என தெரியவில்லை. சாதுக்கள், பிச்சைக்காரர்கள் எனச் சொல்பவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும், இல்லையேல் வருங்காலத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும்''’என எச்சரிக்கிறார்கள்.

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்

nkn150122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe