காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் தேர்தல் என்பதால் முதல் பெண் மேயர் என்று வரலாற்றில் இடம்பெற தி.மு.க.வில் கடும்போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 51 வார்டுகளில் 26 சீட்டைப் பிடிக்கும் கட்சிக்கு மேயர் வாய்ப்பு கிடைக்கும். அந்த பதவியைப் பிடிக்க, கட்சிகளைத்தாண்டி இரு சமூகத் திற்கிடையே போட்டி நடப்பதுதான் இதில் ஹைலைட்டே! காஞ்சிபுரத்தை பொறுத்த வரையில் நகர்ப்பகுதியில் முதலியார் சமூகத்தினரும், நகரத்தை ஒட்டியுள்ள பகுதியில் வன்னியர் சமூகத்தினரும் பெரும்பான்மையாக இருப்பதால் இவர்களிடையே வாக்கு வங்கி சம பலத்தில் உள்ளது. இச்சமூகங்களைச் சேர்ந்த தி.மு.க.வினரின் போட்டி கடுமையாக உள்ளது.

hh

முதலியார் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட அவைத்தலைவர் சேகரின் மனைவி விமலாதேவி, 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சோபன் குமாரின் மனைவி சூர்யா 8-வது வார்டு தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடுகிறார்,

முதலியார் சமூகத்தைச் சேர்ந்த, மேலிடச் செல்வாக்குடைய நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகத்தின் மகள் சசிகலா 17-வது வார்டு வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவரது மருமகளுக்கு வாய்ப்பு தரப்படாதது குடும்பத்துக்குள் அதிருப்தி யாக உள்ளது.

இளைஞரணி துணை அமைப்பாளராகவுள்ள, முதலியார் சமூகத்தைச் சேர்ந்த யுவராஜின் மனைவி மஹாலட்சுமி, 9 வார்டு தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். முதலியார் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் தா.மோ.அன்பரசனின் உறவினர் ராமகிருஷ் ணன், வர்த்தக அணி துணை செயலாளரான இவரது மனைவி மல்லிகா 18-வது வார்டு தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். தலைமைச் செயற்குழு உறுப்பினரான எஸ்.கே.பி.சீனிவாசனின் மனைவி சாந்தி 32-வது வார்டு தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தன் மனைவியை மேயராக்கும் கனவிலிருக்கிறார் இவர்.

Advertisment

gg

அ.தி.மு.க. தரப்பில் 35-வது வார்டு வேட்பாளரான 35 வயது ஜானகிராமன், கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்ததை தி.மு.க.வின் மிரட்டலால் தற்கொலை என்று குற்றம் சாட்டி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் விசாரணையில், தனக்காக வாக்கு சேகரிக்கும் தொண்டர்களுக்குச் செலவழிக்கவே பணமில்லாத விரக்தியில் தற்கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது. சில அ.தி.மு.க. வினர் மட்டும் சொந்த செல்வாக்கால் வெற்றிபெறக்கூடும்.

23-வது வார்டில் பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி பொய்யாக்குளம் தியாகுவுக்கு தி.மு.க.வில் சீட்டு மறுக்கப்பட்டதால், மிரட்டல் விடுத்த அவரையும், அவரது தாயாரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அந்த வார்டில் தற்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் காஞ்சி தீனனின் தாயார் மஞ்சுளா, உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிடுகிறார், காஞ்சியில் ஆறு முனைப்போட்டி களைகட்டியுள்ளது.

Advertisment