ருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ‘"மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. ஜூலை மாதம் துவங்கிய சுற்றுப்பயணத்தில் 4ஆம் கட்டமாக 9ஆம் தேதி - தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, 10ஆம் தேதி -பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை, 11ஆம் தேதி -மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம், 12ஆம் தேதி -திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், 13ஆம் தேதி -சிங்காநல்லூர், சூலூர், அவிநாசி ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து நிறைவுசெய்தார். அவருடன் பயணப்பட்டதிலிருந்து...

Advertisment

தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட மாதம்பட்டி சாலையில் மக்களை சந்தித்தபின், குனியமுத்தூர் பாலக்காடு பிரதான சாலையில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "எழுச்சிப் பயணத்தில் இதுவரை தமிழகத்தில் 139 சட்டமன்றத் தொகுதிகளில் பயணித்துவிட்டு, 140வது தொகுதியாக தொண்டாமுத்தூர் வந்திருக்கிறேன். இதுவரை எங்குமில்லாத அளவுக்கு இங்கு மிகப்பெரிய கூட்டம். தொண்டாமுத்தூர் என்றைக்குமே அண்ணா தி.மு.க.வின் கோட்டை. வேலுமணி இந்த தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டு, அம்மாவிடமும், என்னிடமும் குனியமுத்தூ ருக்கு நிறைய திட்டங்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார். எப்போது பார்த்தாலும் இந்தத் தொகுதியைப் பற்றித்தான் பேசுவார்.  இந்த தொகுதி, கொடுத்துவைத்த தொகுதி. ஒரு எம்.எல்.ஏ. எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வேலுமணி ஒரு உதாரணம். கடந்த ஆகஸ்ட் இறுதியில் கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட நரசீபுரம், வால்கரடு பிரிவு வனப்பகுதியில், சிறுத்தை இறந்துகிடந்தது. அதனை எரித்துவிட்டனர். பொதுவாக வன விலங்குகள் இறந்தால் குழிதோண்டி புதைக்கப்பட வேண்டும். அதற்கு மாறாக எரித்தது பொதுமக்களிடத்தில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கோவை மலையடிவாரத்தில் சுமார் 700 ஏக்கருக்கு மேல் தி.மு.க. குடும்பத்திற்கு பினாமியாக, நெருக்கமாக இருக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு வீட்டு மனையாகப் பிரித்து நகரமயமாக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள தாகத் தெரிகிறது. 

அவர்கள், வனத்திலுள்ள மரங்களை வெட்டி வீழ்த்தியதில் மான்கள் போன்ற வனவிலங்குகள் இறந்துள்ளன. அதுமட்டுமின்றி, வனத்தை அழிக்கும்போது காட்டு விலங்குகளால் பணியாளர்கள் தாக்கப்பட்டு இறந்துள்ளனர். இது வெளிவராமல் மூடி மறைக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது. சிறுத்தை இறந்ததற்கு ஜி ஸ்கொயர் காரணமாக இருக்கலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் உண்மை நிலையை வெளியிட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு இதெல்லாம் விசாரிக்கப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம், பைபை ஸ்டாலின்''’என்று கொளுத்திப் போட்டார்.

edappadi1

Advertisment

அடுத்ததாக கிணத்துக்கடவில் பேசியவர், "என் பஸ்ஸை சுந்தரா டிராவல்ஸ் என்றார் ஸ்டாலின். உங்களைப் போல ஹெலிகாப்டரிலா போக முடியும்? ஏழை, நடுத்தர மக்களை பார்க்க வேண்டுமென்றால் இந்த பஸ்ஸில் தான் வரமுடியும். விமானத்தில் வந்து பார்க்க முடியுமா? கிண்டல் கேலி பேசுகிறார். மக்களை நேரில் சந்தித்து புகாரைக் கேட்டு தேர்தலில் வென்று மக்களுக்கு நன்மை செய்வதுதான் எங்கள் எண்ணம். ஸ்டாலின் என்ன உழைத்து முதல்வரானாரா? அவங்க அப்பா முதல்வர், தலைவர், அவர் மூலம் தான் நீங்க வந்தீங்க. இங்கே வந்து நின்றால்தான் தெரியும். புரட்சித்தலைவர் எம்ஜிஆரைப் பார்க்கப் போவதற்கே கஷ்டப்பட்டு படிப்படியாக வளர்ந்து பொதுச்செயலாளர், முதல்வர் ஆகியிருக்கிறேன். உழைக்காத உங்களுக்கே இவ்வளவு தில்லு இருந்தால், உழைச்சு வந்த எங்களுக்கு எப்படியிருக்கும்? மக்கள் பிரச்சினையை நான் நன்றாக உணர்ந்தவன், கஷ்டம் தெரியும். ஸ்டாலின் போல ராஜ வாழ்க்கை வாழவில்லை. எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காகவே கட்சியைத் தொடங்கினார், அம்மா கட்டிக் காத்தார். மக்களுக்காக வாழ்ந்தவர்கள் நம் தலைவர்கள். எம்.ஜி.ஆர்., அம்மாவுக்கு மக்கள்தான் வாரிசு. வாரிசுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மக்களுக்குச் செய்தார்கள் நம் தலைவர்கள். ஆனால் கருணாநிதி, தன் குடும்பத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செஞ்சார். இதுதான் வித்தியாசம். ஸ்டாலின் அவர்களே, கிண்டல் கேலி பேசுவதை விட்டுவிடுங்கள். உங்கள் மகனை கொண்டுவரத் துடிக்கிறீர்கள், அது நடக்காது. ஸ்டாலின் மகன் என்பது தவிர்த்து உதயநிதிக்கு என்ன அடையாளம் இருக்கிறது?'' என சரவெடியாக வெடித்தார்.

அடுத்த நாளான 10ஆம் தேதியன்று பொள்ளாச்சி மாதவ் ஹோட்டலில் விவசாயி கள் மற்றும் பல்வேறு சங்கங்களுடன் கலந்துரையாடினார் எடப்பாடி. இதில், "நீரா பானத்துக்கு அனுமதி கொடுத்தோம்… கள்ளு இறக்குவது தொடர்பாக ஆலோசிக்கப் படும்''”என தென்னை விவசாயிகளிடம் வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக வால்பாறை சென்றவர், "இந்த தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவர் இருக்கும்போது இத்தொகுதிக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். நல்லவர், வல்லவர், திறமையானவர். அனைவரிடமும் அன்பாகப் பழகுபவர். அவர் தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்கள் வருவதற்கு முயற்சித்தார். மறைந்தாலும் உங்களுக்காகப் பாடுபட்டவர், அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். அவருக்கு எப்போதும் புகழ் சேர்க்கும் வகையில் அ.தி.மு.க. செயல்படும். அ.தி.மு.க. ஒன்றாக இருக்கிறது என்பதை தேர்தல் வெற்றி நிரூபிக்கும்'' என்றார்.

அடுத்ததாக மடத்துக்குளத்தில் இ.பி.எஸ். எடுத்த ஆயுதம் தான் முற்றிலும் ஹைலைட்டே! "ஏழை, விவசாயத் தொழிலாளிகள், அருந்ததியர் மக்கள், பட்டியலின மக்கள், மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று அருந்ததியர் மக்கள் கோரிக்கை வைத்தால் பல லட்சம் மதிப்புள்ள வீடுகளை கட்டிக்கொடுப் போம்'' என்றாரே பார்க்கலாம். மேற்கு மண்டலத்தின் ஒட்டு மொத்த அருந்ததியர் சமூக மக்களும் இ.பி. எஸ்.ஸை கண் கொட் டாமல் பார்த்தனர்.

Advertisment

edappadi2

தாராபுரத்தில் பேசிய இ.பி.எஸ்.ஸோ, "சதுரங்க வேட்டை திரைப்படத்தில், ஒரு வரை ஏமாற்ற வேண்டு மெனில் ஆசையைத் தூண்ட வேண்டும் என வரும். அதுபோல் மக்களின் ஆசையைத் தூண்டி வாக்குகளைப் பெறும் தி.மு.க. அரசை மக்கள் கண்டு கொள்ள வேண்டும்" என்றார். திருப்பூரிலோ, "டாலர் சிட்டி என்று புகழ்பெற்ற திருப்பூர் இன்று பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது, நீங்கள் மனு வழங்காவிட்டாலும் இந்த ஊரின் நலன் கருதி வளர்ச்சிப்பாதைக்கு நான் எடுத்துச்செல்வேன். ஏனென்றால், பல லட்சம் கோடி அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது. பல லட்சம் தொழிலாளர் கள் வேலைவய்ப்பு பெறுகின்றனர், அந்த அளவிற்கு திருப்பூர், கோவை மாவட்டங்கள் தொழில்துறை நிறைந்த மாவட்டங்களாக விளங்குகின்றன. திருப்பூரை நம்பி பலரது குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது. இன்றுவரை நான் விவசாயி. விவசாயம் என் உயிர். தொழிலும் வளர வேண்டும், விவசாயமும் வளர வேண்டும், ஆட்சிக்கு வந்த பிறகு உங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப் பட்டு படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும்'' என்றார்.

இடையில் பல இடங்களில் நினைவுப் பரிசுகள் கொடுத்ததை மறுக்காமல் ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, அவர்களோடு உரையாற்றியதும் குறிப்பிடத் தக்கது. 4ஆம் கட்ட சுற்றுப்பயணத்தில் ஒவ்வொரு தடவையும் அவர் பேசி முடிக்கும் போது "பை பை ஸ்டாலின்'' என்பதனை மறவாமல் அழுத்தந்திருத்தமாகக் குறிப் பிட்டது புத்துணர்வை கொடுக்கின்றது என்கின்றனர் தொண்டர்கள்.

-வேகா