2011, 2016, 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ. ஆன விஜயதாரணி சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்ததால், காலியாக இருந்த அந்தத் தொகுதிக்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்ட மன்றத் தொகுதிகளில் விளவங்கோடு தொகுதி மட்டும் சற்று வித்தியாச மாகவே உள்ளது. தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் கொண்ட இந்தத் தொகுதி யில் 10 முறை காங்கிரசும் 5 முறை கம்யூனிஸ்ட்டும் வென்றுள்ளன. கேரள எல்லையை ஒட்டியிருக் கும் இந்தத் தொகுதியில் ஜாதிவாரியாக மலையாள மொழி பேசும் சிறுபான் மையின மக்கள் 70 சதவிகிதம் பேர் உள்ளனர். இதனால் இங்கு வேட்பாளர்களும் கட்சியினரும் மலையாளத்தில் பேசியே பிரச்சாரம் செய்கின்றனர்.

ff

இந்த நிலையில் 67 ஆண்டுகளில் முதல்முறை யாக இந்தத் தொகுதி இடைத் தேர்தலைச் சந்திப்பதால் சூடுபிடிக்கத் தொடங்கி யிருக்கும் விளவங்கோடு தொகுதியின் மக்களோ, “"கூட்டணி பலத்தால் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ. ஆக வந்த வெளி யூர்வாசியான விஜயதாரணி சென்னையைத் தாண்டி தொகுதிப் பக்கமே வந்த தில்லை. கடந்த 13 ஆண்டுகளாக தொகுதியில் எந்தத் திட்டமும் இல்லை. வளர்ச்சியும் இல்லை. இதனால் எந்தக் கட்சியாக இருந்தாலும் உள்ளூர்வாசிக்கு மட்டும் சீட் கொடுங்கள். வெளியூர் ஆட்களுக்கு சீட் கொடுத்தால் அந்த வேட்பாளரை ஊருக்குள் ளேயே நுழைய விடமாட்டோம் என அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையோடு ஒரு முடிவை எடுத்திருக்கிறோம்'”என்கின்றனர். இதனால் தொகுதிக்குட்பட்ட கட்சியின் பிரமுகர்கள் சீட்டுக்காக முட்டி மோதி வருகிறார்கள்.

Advertisment

அந்த வகையில், தி.மு.க. கூட்டணியில் தொகுதி காங்கிரசுக் குத்தான் என்பது பெரும்பாலும் உறுதி யான நிலையில், காங் கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங், மூத்த காங்கிரஸ் தலைவரான எம்.டி.எம். ஜேம்ஸின் மகளான மா.செ.யும் வழக்கறிஞருமான ஷீலா பிரியதர்ஷினி, காங்கிரஸ் எக்ஸ் எம்.பி. டென்னிஸின் மகன் தம்பி விஜயகுமார், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், மகிளா காங் கிரஸ் தலைவி ஷர்மிளா ஏஞ்சல், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், கடந்தமுறை சீட் கொடுக்காததால் விஜய தாரணியை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்ட சாமுவேல் ஜார்ஜ் போன்றோர் போட்டியில் இருக்கிறார்கள்.

இதேபோல் கம்யூனிஸ்ட் தரப்பில் எக்ஸ் எம்.எல்.ஏ. லீமாரோஸ், மா.செ. செல்லசாமி இரு வரையும் தோழர்கள் கணக்கில் வைத்திருக்கிறார் கள். பா.ஜ.க.வில் கடந்தமுறை விஜயதாரணியை எதிர்த்து நின்று 58,804 வாக்குகள் பெற்ற ஜெயசீலனுக்குதான் மீண்டும் வாய்ப்பு என தாமரை தரப்பில் பேசப்பட்டாலும் 2016-ல் போட்டியிட்டுத் தோல்வியடைந்த மாவட்ட தலைவர் தர்மராஜும் எதிர்பார்ப்பில் இருக்கிறார். இடைத்தேர்தலுக்கு காரணமான விஜயதாரணியும் இந்தமுறை தாமரையைக் காட்டினால் எனக்கு ஓட்டுப் போடுவார்களா? அப்படியென்றால் நானும் களத்தில் நிற்கத் தயார் என்று பா.ஜ.க. வட்டாரத்தில் பேசிவருகிறார்.

அ.தி.மு.க.வில் மேற்கு மாவட்டச் செயலாளர் ஜாண்தங்கம், மேல்புறம் ஒன்றியச் செயலாளர் உதயகுமார், திருவட்டார் ஒ.செ. ஜெயசுதர்சன் மற் றும் காங்கிரசில் டாக்டர் செல்லகுமாருக்கு மாநில தலைவர் பதவி கொடுக்காததால் அந்த அதிருப்தி யில் அவரின் தீவிர ஆதரவாளராக இருந்த எட்வர்டு சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவரும் காங். அதிருப்தி ஓட்டை வாங்கி நான் வெற்றிபெறுவேன் என்று சீட் கனவில் உள்ளார்.

Advertisment

மக்களவை, சட்டமன்றத் தேர்தல் ஒருசேர நடப்பதால் கட்சிக்காரர்களை குஷியுடன் பார்க்கமுடிகிறது.

-மணிகண்டன்

_________

இறுதிச் சுற்று!

dddd

வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ், ம.தி.மு.க. கட்சிகள் போட்டியிடவுள்ள தொகுதிப் பட்டியல், 18ஆம் தேதி திங்களன்று வெளியிடப்பட்டது. அதன்படி திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக் கப்பட்டது. தி.மு.க., வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், ஆரணி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர், தூத்துக்குடி, தென்காசி, தேனி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஆரணி, திருச்சிக்கு பதில் தி.மு.க. வெற்றிபெற்றிருந்த கடலூர், மயிலாடுதுறை ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே காங்கிரஸ் போட்டியிட்டு தோல்வியடைந்த தேனி தொகுதியை தி.மு.க. பெற்றுள்ளது. இதன்மூலம், தி.மு.க. கூட்டணி யில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்தது.

-கீரன்

தெலுங்கானாவின் ஆளுநராகவும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் இருந்து வந்த தமிழிசை சௌந்திரராஜன், தனது பதவியை 18-ந் தேதி திங்களன்று ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை முறைப் படி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் தமிழிசை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக இந்த முடிவை எடுத்திருக்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழிசை, தேர்தலில் போட்டியிடும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதனை அங்கீகரித்தார் அமித்ஷா. (இந்த தகவலை முதன்முதலில் நக்கீரன்தான் எழுதியது). இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அமித்ஷாவுடன் தனது விருப்பம் குறித்து தமிழிசை விவாதிக்க, ராஜினாமாவுக்கு அனுமதித்துள்ளார் அமித்ஷா. அதன்படி ராஜினாமா செய்திருக்கும் தமிழிசை எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்கிற பரபரப்பு தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடவிருப்பதால் அந்த தொகுதியில் தமிழிசை களமிறக்கப்படுவாரா? அல்லது 2019-ல் கனிமொழியை எதிர்த்து தூத்துக்குடியில் போட்டியிட்டது போல, மீண்டும் அங்கு போட்டியிடுவாரா? அல்லது தி.மு.க.வின் தமிழச்சி தங்கபாண்டியனின் தென் சென்னையில் போட்டியிடுவாரா? என்ற கேள்வி பா.ஜ.க.வில் எதிரொலிக்கிறது.

-இளையர்