ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. வாக்கு சதவீதம் மிகவும் குறையும் என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்ட நிலையில் 68% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
சென்ற முறை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டபோது நடந்த இடைத்தேர்தலில் 74% வாக்குகள் பதிவானது. அப்போது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. போட்டியிட்டது. இந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்த நிலையில் 6 சதவீத வாக்குகளும் குறைந்திருக் கின்றது. தேர்தல் களத்தில் கடந்த 15 நாட்களாக தி.மு.க.வை மிகக்கடுமையாக எதிர்த்ததோடு, தந்தை பெரியார் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களையும், கேவலமான பல்வேறு கருத்துகளையும் பொதுவெளியில் பேசி பிரச்சாரம் செய்துவந்தார் சீமான்.
அவர் சென்ற இடங்களில் எல்லாம் அந்த பகுதி பொதுமக்கள் யாரும் அவரது கூட்டத் திற்கு வரவில்லை. சீமான் கட
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. வாக்கு சதவீதம் மிகவும் குறையும் என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்ட நிலையில் 68% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
சென்ற முறை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டபோது நடந்த இடைத்தேர்தலில் 74% வாக்குகள் பதிவானது. அப்போது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. போட்டியிட்டது. இந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்த நிலையில் 6 சதவீத வாக்குகளும் குறைந்திருக் கின்றது. தேர்தல் களத்தில் கடந்த 15 நாட்களாக தி.மு.க.வை மிகக்கடுமையாக எதிர்த்ததோடு, தந்தை பெரியார் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களையும், கேவலமான பல்வேறு கருத்துகளையும் பொதுவெளியில் பேசி பிரச்சாரம் செய்துவந்தார் சீமான்.
அவர் சென்ற இடங்களில் எல்லாம் அந்த பகுதி பொதுமக்கள் யாரும் அவரது கூட்டத் திற்கு வரவில்லை. சீமான் கட்சி நிர்வாகிகள், பல்வேறு ஊரிலிருந்து வந்தவர்கள் மட்டுமே திரும்பத் திரும்ப அவரது கூட்டத்தில் கலந்துகொண்டு கைதட்டி விசிலடித்தார்கள்.
சீமானின் பேச்சைக் கண்டுகொள்ளாமல் இந்த தேர்தல் களத்தில் தொடர்ந்து வாக்கு சேகரிப்புப் பணியை நடத்தினர் தி.மு.க.வினர். தி.மு.க.வின் மூத்த அமைச்சரான ஈரோடு முத்துசாமியும், வேட்பாளர் சந்திரகுமாரும் தி.மு.க. நிர்வாகிகளும் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்தனர்.
வாக்குப்பதிவு நாளான 5-ஆம் தேதி அனைத்து பூத்களிலும் தி.மு.க.வினர் சுறு சுறுப்பாக இயங்கினர். காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களிப்பதைக் காணமுடிந்தது. குறிப்பாக பெண்கள் ஏராள மான பேர் வரிசையில் நின்று வாக்களித்தார்கள். தேர்தல் களத்தில் கடும் பிரச்சாரத்தையும் விமர்சனத்தையும் வைத்த நாம் தமிழர் கட்சி சீமான், ஈரோடு கிழக்கு தொகுதியிலுள்ள 237 பூத்களிலும் கட்சி ஆட்களை ஏஜெண்டாக நியமிக்க போதுமான ஆட்கள் இல்லாததைக் காணமுடிந்தது.
237 பூத்களில் மொத்தம் 29 பூத்களில் மட்டுமே நாம் தமிழர் கட்சி ஏஜெண்டுகள் காணப் பட்டார்கள். அந்த 29 பேரிலும் 7 பேர் பா.ஜ.க.வினர்.
தேர்தலுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு ஒவ்வொரு பூத்களிலும் ஆட்களை நியமிக்க அந்தந்தப் பகுதியிலுள்ள அ.தி.மு.க.வினரிடம் பேசி பார்த்தார்கள். அ.தி.மு.க.வினர் முடியாது என்று அனுப்பிவிட்டார் கள். வேறு வழியில்லாமல் ஒரு நபருக்கு 5000 ரூபாய் என்று பேசி ஒவ்வொரு பூத்களிலும் அமரவைக்க ஆட்களைப் பிடித்தார்கள். அப்படி பிடிக்கப்பட்ட ஆட்களும் முழுமையாக தேர்தல் பணியில் ஈடுபடாமல் வாக்குச்சாவடிக்குச் சென்றுவிட்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். இருப்பினும் தேர்தல் மிக அமைதியான முறையிலேயே நடந்தது.
தேர்தலை நடத்திய அதிகாரிகள் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அனைவருமே எந்தக் கட்சி யினரும் கூட்டமாக கூடுவதற்கு இடம்கொடுக்காமல் முறையான ஆவணங்கள் கொண்டுவந்தால் மட்டுமே உள்ளே அனுமதித்தார்கள். எந்த குற்றச்சாட்டுக்கும் இடமில்லாமல் தேர்தல் நடைபெற்றதைக் காணமுடிந்தது. சில இடங்களில் திட்டமிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போடுவதாகக் குற்றம்சாட்டினார்கள். பதிவான 68% வாக்குகளில் தி.மு.க. மட்டும் குறைந்தபட்சம் 60% வாக்குகளைப் பெறும் என தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்தனர். வாக்களித்த மக்களும் பெரும்பான்மையாக தி.மு.க.வுக்கே வாக்களித்ததாகத் தெரிவித்தனர்.
தந்தை பெரியார் குறித்து அவமரியாதையாக பேசுவதற்கான களமாக இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தை பயன்படுத்திய சீமான், வாக்கு எண்ணிக்கை முடிந்தபிறகு அவருக்கான மக்கள் செல்வாக்கு என்ன என்பதை அறிந்துகொள்வார். தேர்தலுக்காக சீமானை விட்டுவைத்த தி.மு.க., தேர்தல் முடிவுக்குப் பிறகு சட்டப்படி என்ன செய்யப்போகிறது என பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினரே கேள்வியெழுப்புகிறார்கள்.
இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி அமைச்சர்கள் முகாமிடுவது, வாக்காளர்களைக் கவர்வது வழக்கம். ஆனால் இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. அமைச்சர்களில் உள்ளூர் அமைச்சரான சு.முத்துசாமியைத் தவிர யாருமே தொகுதிக்குள் வரவில்லை. அதேபோல் வீதிக்கு வீதி கூட்டங்கள் நடைபெறவில்லை. தமிழக முதல்வர் அல்லது துணை முதல்வர் யாருமே நேரில்வந்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கவில்லை.
வாக்கு எண்ணிக்கை 8ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சீமான் கட்சி நிர்வாகிகள் பலர், இந்த இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிரடியான பல முடிவுகளை எடுத்து சீமானுக்கு அதிர்ச்சியைக் கொடுப் பார்கள் என்று அக்கட்சியினரே கூறுகிறார்கள்.