நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கவிருக்கிறது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம். எடப்பாடி அரசை பாதுகாக்கும் நோக்கத்துடன் கூட்டணி பேர அரசியலில் உளவுத்துறை அதிகாரிகளும் குதித்திருப்பதுதான் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.
வட தமிழகத்தில் வலிமையாகப் பார்க்கப் படும் பா.ம.க. இரண்டு பெரிய கட்சிகளிடமும் பேரம் பேசுவதும், இரு கட்சிகளும் கரிசனம் காட்டுவதும்தான் தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இழுபறியாகக் காரணம்.
அ.தி.மு.க. கூட்டணியில் என்ன நடக்கிறது? என கட்சியின் சீனியர்களிடம் பேசியபோது...‘’ ""பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம் என அ.தி.மு.க. எம்.பி.க்கள், மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் வலியுறுத்திய நிலையிலும் பா.ஜ.க.வின் மிரட்டலுக்குப் பயந்து அக்கட்சியுடன் கூட்டணி வைக்க ஒப்புக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதனைத்தொடர்ந்து கே.பி.முனுசாமி தலைமையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளடங்கிய பேச்சு வார்த்தைக் குழுவினரோடு பா.ஜ.க.வின் மூத்த தலைவர் பியூஷ்கோயல் கடந்தவாரம் பேச்சு வார்த்தை நடத்தினார். 20 சீட்டுகளில் பா.ஜ.க. கணக்கு தொடங்கியது. "பா.ஜ.க.வுக்கு அதிகபட்சம் 6 சீட்டுகள் ஒதுக்க முடியும். 2 தொகுதிகளை நீங்களே செலக்ட் செய்யலாம். மற்ற 4 தொகுதிகளை நாங்கள்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கவிருக்கிறது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம். எடப்பாடி அரசை பாதுகாக்கும் நோக்கத்துடன் கூட்டணி பேர அரசியலில் உளவுத்துறை அதிகாரிகளும் குதித்திருப்பதுதான் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.
வட தமிழகத்தில் வலிமையாகப் பார்க்கப் படும் பா.ம.க. இரண்டு பெரிய கட்சிகளிடமும் பேரம் பேசுவதும், இரு கட்சிகளும் கரிசனம் காட்டுவதும்தான் தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இழுபறியாகக் காரணம்.
அ.தி.மு.க. கூட்டணியில் என்ன நடக்கிறது? என கட்சியின் சீனியர்களிடம் பேசியபோது...‘’ ""பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம் என அ.தி.மு.க. எம்.பி.க்கள், மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் வலியுறுத்திய நிலையிலும் பா.ஜ.க.வின் மிரட்டலுக்குப் பயந்து அக்கட்சியுடன் கூட்டணி வைக்க ஒப்புக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதனைத்தொடர்ந்து கே.பி.முனுசாமி தலைமையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளடங்கிய பேச்சு வார்த்தைக் குழுவினரோடு பா.ஜ.க.வின் மூத்த தலைவர் பியூஷ்கோயல் கடந்தவாரம் பேச்சு வார்த்தை நடத்தினார். 20 சீட்டுகளில் பா.ஜ.க. கணக்கு தொடங்கியது. "பா.ஜ.க.வுக்கு அதிகபட்சம் 6 சீட்டுகள் ஒதுக்க முடியும். 2 தொகுதிகளை நீங்களே செலக்ட் செய்யலாம். மற்ற 4 தொகுதிகளை நாங்கள் ஒதுக்குவோம்' என அ.தி.மு.க. தரப்பில் விவரிக்கப்பட்டது.
அப்போது, "தி.மு.க. கூட்டணியில் காங் கிரசுக்கு ஒற்றை இலக்கத்தில் சீட் ஒதுக்கப்பட விருக்கிறது. அதனால் எங்களுக்கு இரட்டை இலக்கத்தில் வேண்டும்' எனச்சொல்லி 10 தொகுதிகளை டிக் பண்ணினார் கோயல். அதற்கும் அ.தி.மு.க. அமைச்சர்கள் ஒப்புக்கொள்ளாததால் நள்ளிரவைத் தாண்டியும் பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டிருந்த நிலையில், அரசுக்கும் அமைச்சர்களுக்கும் எதிராக இருக்கும் பிரச்சனை களை சுட்டிக்காட்டி பா.ஜ.க. தரப்பில் முன்வைக்கப்பட்ட போது, 6-ஐ 8 ஆக உயர்த்தியது அ.தி.மு.க. அதேசமயம் 10-க்கு பிடிவாதம் காட்டினார் கோயல். இந்த நிலையில், "கூட்டணியில் சேர்க்கப்படும் கட்சிகள் தேர்தல் செலவுக்கு நிதி கேட்கின்றன. அதனை நாம்தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதனால் பா.ஜ.க. தரப்பிலிருந்து 250 கோடி ரூபாய் கொடுத்து உதவ வேண் டும்' என அ.தி.மு.க. சொல்ல, யோசித்த கோயல் "அமித்ஷா விடம் விவாதித்துவிட்டு சொல் கிறேன்' என்றார். "ஜூலையில் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒரு சீட் ஒதுக்கப் பட வேண்டும்' என்கிற கோரிக்கை வைத்ததை அ.தி. மு.க.வினர் ரசிக்கவில்லை. இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில், தற்போது நிதி தருவதில் கருணை காட்டுவதாக சொல்லியுள்ள பா.ஜ.க., இறுதிக் கட்ட பேரத்தை துவக்கியிருக் கிறது. அதனடிப்படையில் 10 இடங்களிலும் அதற்கான தொகுதிகளிலும் விடாப்பிடியாக பேசி வருகிறது. நாங்களும் கறார் காட்டுகிறோம்'' என்கின்றனர் மூத்த தலைவர்கள்.
அ.தி.மு.க.வுடன் பா.ம.க. பேசிவந்த நிலையில்... பா.ம.க. இருக்கும் கூட்டணி வட தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என் கிற உளவுத்துறையின் அறிக்கை, தி.மு.க. தரப்புக்கும் எட்டியது. "பா.ம.க. தனித்து நின்றால் பிரச் சினை இல்லை. ஆனா, அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. நகர்ந்து விட்டால் அது தி.மு.க. கூட்ட ணிக்கு பெருத்த பாதிப்பை ஏற் படுத்தும். விடுதலைச் சிறுத்தை களை விட பா.ம.க. பெட்டர் என இரண்டாம் நிலை தலைவர்கள் பலரும் மு.க.ஸ்டாலினிடம் கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, ""ஸ்டாலின் மருமகன் சபரீசனும், அவரது ஓ.எம்.ஜி.யும் பா.ம.க. ஆதரவு நிலை எடுத்தனர். அதற் காக, பல புள்ளிவிபரங்களும் தரப்பட்டன. பா.ம.க.வைச் சேர்க்க வலியுறுத்தி காங்கிரஸ் தரப்பிலிருந்து ராகுல்காந்தியும் அழுத்தம் கொடுத்தார். இதனை யடுத்து, பா.ம.க.விடம் தி.மு.க. நடத்திய பேச்சுவார்த்தை சுமுக மாக இருந்தது. 3-ல் தொடங்கி 5 தொகுதி தருவதாக ஒப்புக் கொண்டது தி.மு.க. இடைத் தேர்தல் வரும் பட்சத்தில் அதில் போட்டியிட விரும்புவதை பா.ம.க. சொன்னபோது, "இடைத் தேர்தல் தொகுதிகளை எதிர் பார்க்காதீர்கள். எங்களின் வெற்றிக்கு உதவுங்கள். அதற்காக ராஜ்யசபா சீட் தருகிறோம்' என தி.மு.க. தரப்பில் சொன்னதை பா.ம.க. ஏற்றுக்கொண்டது. அதேசமயம், தேர்தல் செலவுக்கான நிதி பெறுவதில்தான் சிக்கல். இதனால் ஊசலாட்டத்தை தொடர்ந்தபடி இருக்கிறது பா.ம.க.'' என்கிறார்கள்.
காங்கிரசுக்கான தொகுதி களை முதலில் க்ளியர் செய்து விட நினைத்த மு.க.ஸ்டாலின், முன் னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு வையும், கனிமொழியையும் டெல்லிக்கு அனுப்பி வைத்தார். காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் எண்ணிக்கை மற்றும் தொகுதி களுக்கான பட்டியலை ராகுல் காந்தியை சந்தித்து கொடுத்தனர். அவர்களிடம், பா.ம.க.வை சேர்ப்பது குறித்தும் விவாதித்தார் ராகுல்காந்தி. இதனையடுத்து ராகுலின் உத்தரவின்படி, கே.எஸ் .அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக் கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.ஆர்.ராமசாமி மற்றும் முகுல்வாஸ்னிக், சஞ்சய்தத் ஆகி யோருடன் அவசர ஆலோசனை நடத்தினார் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல்.
இந்த ஆலோசனை குறித்து விசாரித்தபோது, ""பாண்டிச்சேரி உட்பட 7 தொகுதிகள் என ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின் படி தொகுதிகள் பட்டியலை அனுப்பி வைத்திருக்கிறது தி.மு.க. தமிழக காங்கிரஸ் தலைவர்களோ, "குறைந்தது 12 அல்லது 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும். அதனால், ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டிருந்தாலும் அதனை மறுபரிசீலனை செய்து இரட்டை இலக்கத்தில் தொகுதி களைப் பெற வேண்டும். தி.மு.க. அனுப்பியுள்ள பட்டியலில் காங்கிரசுக்கு வெற்றிவாய்ப்புள்ள சில தொகுதிகள் காணாமல் போயிருக்கிறது. அதனால் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும்' என தெரிவித்திருக் கிறார்கள். எல்லாவற்றையும் குறித்துக்கொண்டார் அகமது படேல். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பா.ம.க. தங்கள் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பதை டெல்லியிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஜி.கே.வாசனின் த.மா.கா. வருவதை எவரும் விரும்பவில்லை.
இதற்கிடையே, தி.மு.க.- பா.ம.க. பேச்சுவார்த்தை பற்றி எடப்பாடியின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறது உளவுத்துறை. இதுபற்றி அ.தி. மு.க.விலிருந்து டெல்லிக்கு தகவல் தரப்பட்ட நிலையில், அன்புமணியை தொடர்பு கொண்டு பேசிய அமித்ஷா, ""மீண்டும் பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும். இந்தமுறை உங்கள் விருப்பத்தை டபுள் மடங்காக நிறைவேற்றுகிறோம்'' என வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், நாடாளு மன்றத் தேர்தலுடன் இடைத் தேர்தலும் வரும் என்ற கிலி ஏற் பட்டிருப்பதால், "இடைத் தேர் தலில் ஜெயித்து எடப்பாடியின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண் டும்' என விரும்பும் உளவுத்துறை அதிகாரிகள், பா.ம.க.விடம் ரகசிய பேர அரசியலை துவக்கி யிருக்கிறார்கள்.
-இரா.இளையசெல்வன்