ந்நிய முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டுவருகிறோம் என்று அமைச் சர்கள் சகாக்களுடன் பதிமூன்று நாட்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பிய வேகத்தி லேயே ‘"எங்களது வெளிநாட்டுப்பயணம் தொடரும். அடுத்து, நீர் சிக்கனம் பற்றி அறிந்து வர இஸ்ரேல் செல்கிறோம்'’என்றார் முதல்வர்.

fr

"அக்கரையில் காட்டும் அக்கறையை முதல்வர் இக்கரையிலும் காட்டவேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் காட்டி உள்நாட்டு முதலீட்டையும் ஊக்குவிக்க வேண்டும்' என்று பொருளாதார மந்தநிலையில் தவிக்கும் தொழில் நிறுவனர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

""கட்டிங்’ அடிப்பதிலேயே குறியாக இருந்து கால்வாய்கள் சரியாக தூர்வாராமலும், தடுப்பணைகள் அமைக்காமலும் இருப்பதால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்பட வேண்டிய நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. சிறந்த பொறியாளர்கள் இருந்தும், வழிமுறை கள் இருந்தும் உள்ளூர் நீரை சேமிப்பதில் அக்கறை இல்லாமல் இஸ்ரேல் போய் நீர்ச்சிக்கனம் கற்பது வேடிக்கையாக இல்லையா'' என்று கேள்வி எழுப்புகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஆனாலும், "சொட்டு தண்ணீர்கூட வீணாகக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். அதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள் ளோம்'’என்று இஸ்ரேல் பயணத்தை உறுதிப் படுத்துகிறார் முதல்வர்.

நீர்ச்சிக்கனத்தில் இஸ்ரேல் எந்த அளவிற்கு முன்னோடியாக இருக்கிறது?

Advertisment

ffr

பாலைவன தேசமான இஸ்ரேலில் ‘கலிலீ (ஞ்ஹப்ண்ங்ங்)’ என்ற ஒரே ஒரு நன்னீர் ஏரி மட்டுமே உள் ளது. இந்த ஏரியிலிருந்து குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அந்த சொட்டுநீர் பாசனத்தின் மூலமே அந்நாட்டின் மொத்த வேளாண் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. கழிவுநீரை மறுசுழற்சி செய்து அந்த நீரையும் வேளாண்மைக்குப் பயன் படுத்துகிறார்கள். இஸ்ரேல் வேளாண்மைக்கு பயன் படுத்தப்படும் நீரில் 75 சதவிகிதம் சுத்திரிகரிக்கப்பட்ட நீர். நம்மூர் மாதிரி அங்கே குளங்களோ, குட்டை களோ, கால்வாய்களோ கிடையாது. முழுக்க முழுக்க சொட்டுநீர் பாசனம்தான். ஏரியிலிருந்தும், கழிவு நீரிலிருந்தும் நீர் பெறப்படுவதால் ஒவ்வொரு நிலத் திலும் இரண்டு குழாய் இணைப்புகள் செல்லும். ஒரு சொட்டு தண்ணீர் கூட இலவசம் கிடையாது. பயன்படுத்தப்படும் நீரின் அளவை மீட்டர் அளவுகள் காட்டும். அதற்கேற்ப அரசு கட்டணம் வசூலிக்கும். நம்மூரில் மின்சாரக் கட்டணம் போலவே அங்கே நீர் கட்டணம். ஆகவேதான் ஒரு சொட்டு நீரைக்கூட வீண்செய்யாமல் நீர் சிக்கனத்தின் சிகர மாக இருக்கிறார்கள் இஸ்ரேல் மக்கள். குடிநீருக்கும் இதே நிலைமைதான். குடிநீரின் தேவைக்கு கலிலீ மட்டுமே போதுமானதாக இல்லாததால் கடல்நீரை குடிநீராக மாற்றிக்கொள்கிறார்கள்.

ffr

இஸ்ரேலில் விவசாயம் செய்யும் யாருக்கும் சொந்தமாக நிலம் கிடையாது. 50 ஆண்டுகளுக்கு அரசு தரும் குத்தகை நிலத்தில்தான் விவசாயம் செய் கிறார்கள். அதிலும், இத்தனை நீர் கட்டுப்பாட்டுக் குள் இருந்துகொண்டுதான் உலகம் வியக்கும்வண்ணம் வேளாண்மையில் புரட்சி செய்கிறார்கள். நம்மால் ஒரு ஏக்கரில் 5 டன் தக்காளி விளைவிக்க முடிகிறது என்றால் அவர்கள் ஒரு ஏக்கரில் 50 டன் தக்காளி விளைவிக்கிறார்கள். ஒரு நிலத்தில் ஒரே பயிரை மீண்டும் இவர்கள் பயிரிடுவதில்லை. பயிர் சுழற்சி முறையில் பல தாவரங்களை பயிரிடுகிறார்கள். சோளம், கோதுமை, தக்காளி, சுரைக்காய், வெள்ளரி, வாழை, பேரீட்சை, ஆப்பிள், செர்ரி, பேரிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, பருத்தி, லில்லி மலர்கள் உள்ளிட்டவற்றை விளைவிக்கிறார்கள். ஆரஞ்சு, எலுமிச்சை ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது இஸ்ரேல். ஒயின் மற்றும் பருத்தி உற்பத்தியிலும், பால் உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கிறது.

நம்மூரைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக வேளாண்மையில் புரட்சி செய்வதால் இந்தியாவில் இருந்து தமிழகம், கர் நாடகம், ஜார்கண்ட் உள்ளிட்ட அரசுகள் அங்கே குழுக்களை அனுப்பி ஆய்வு செய்திருக்கின்றன. கடந்த 2009-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின்போது ஒரு குழுவை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தார் கலைஞர். 21 பேர் கொண்ட அக்குழுவில் அப்போது தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல மேம்பாட்டு வாரியத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த கே.பி.ராமலிங்கமும் ஒருவர். அவரிடம் இது குறித்து நாம் பேசியபோது, ""இஸ்ரேலில் எட்டு நாட்கள் இருந்து நீர் மேலாண்மையிலும், வேளாண்மையிலும் அவர்கள் காட்டிய உக்தி களையும், அந்த உக்திகளால் அவர்கள் அடைந்த வளர்ச்சியையும் அறிக்கையாக கலைஞரிடம் கொடுத்தோம். சொட்டுநீர் பாச னம்தான் இஸ்ரேலின் வேளாண் புரட்சிக்கு காரணமாக இருப்பதை அறிந்து, இங்கேயும் சொட்டு நீர் பாசனத்தை ஊக்கப்படுத்த, சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக மானியம் கொடுப்பது என்று முடிவெடுத்து, முதற்கட்ட மாக ஐம்பது சதவிகித மானியத்தை அறி வித்தார். இதன் பின்னர்தான் தமிழகத்தில் சொட்டுநீர் பாசனம் அதிகரிக்கத் துவங்கியது. தமிழகத்திற்கு பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்தே சொட்டு நீர் பாசனத்தில் அக்கறை காட்டினாலும் மகாராஷ்டிரா இன்று சொட்டுநீர் பாசனத்தில் முத லிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்த படியாக தமிழகம் இருக்கிறது.

ffr

கழிவுநீரை மறுசுழற்சி செய்து பாசனத்திற்கு பயன்படுத்தும் திட்டம் கொண்டுவரவும் கலைஞர் ஆலோ சனை நடத்தினார். அப்போது அது குறித்த போதிய புரிந்தறிதல் மக்களிடையே இல்லாத தாலும், இத்திட்டத்திற்கு ஆகும் செலவும் அதிகம் என்று அதிகாரிகள் தயக்கம் காட்டியதாலும் அத்திட்டம் நிறை வேறவில்லை. பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னர் மக்க ளிடையேயும் மனமாற்றம் வந்திருக்கிறது. அத்திட்டம் கொண்டுவருவதற்கான அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. சென்னை மாநகரத்தின் கழிவுநீரை மறுசுழற்சி செய்தால் 10 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு பயன்படும். இதே போல் ஒவ் வொரு நகராட்சியிலும் செய்தால் சுற்றியுள்ள கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு உதவும்''’’என்கிறார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்கள் பாசன முறையில் சிறந்து விளங்கியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகளாகவே முப்போகம் பாசனம் பெற்று "சோழ வளநாடு சோறுடைத்து' என்று பெயர் பெற்றது. காவிரிநீரை தேக்கி சிறு ஆறுகளுக்கு பிரித்து தர கல்லணை யை கட்டி உலக்கு வழிகாட்டினர். மழை இல்லாத காலங் களிலும் பாசனம் தொடர, ஏரி, குளங்களை மன்னர்கள் அமைத்ததால் விவசாயம் செழித்தது. பிற்காலங்களில், நீர் பற்றாக்குறைக்கு மாற்று ஏற்பாடாக நிலத்தடிநீரைக் கொண்டும் விவசாயம் செய்வது தொடங்கியது. அரசும் இதை ஊக்குவிக்க பம்புசெட்டுகளுக்கு 12 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்குகிறது. நீர் பற்றாக்குறையினை போக்கும் இன் னொரு மாற்று நட வடிக்கையாக நேரடி நெல் விதைப்பும் செய்யப்பட்டது.

""வேளாண் உற்பத்தியை பெருக்கு வதற்காக இஸ்ரேல் என்ன இஸ்ரேல் நிலாவிலிருந்து கூட நீர் எடுத்து வருகிறேன் என்று முதல்வர் சொன்னாலும் சொல்லுவார். அவர் எங்கே போனாலும் விவசாயிகள் இருப்பது இங்கேதான் என்பதை புரிந்துகொண்டு அவர்களின் தேவைகளை காது கொடுத்துக் கேட்க வேண்டும்'' என்று புலம்பித்தவிக்கிறார்கள் விவசாயிகள்.

""காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவரிடம் விவசாயிகள் ஒரு கருத்தை முன்வைத்தால் அது சரி என்று தோன்றி னால் உடனே அதை செயல்படுத்த உத்தரவிடுவார். அந்த வகையில், நீரை சேமித்து விவசாயிகளுக்கு தருவதற்காக காமராஜர் அளித்த சிறிய, பெரிய அணை கள் பலப்பல. இஸ்ரேல் செல்லுவதற்கு முன்பாக காவிரி பாசன பகுதிகளில் முதல்வர் 10 நாள் நடைபயணம் மேற்கொண்டால் நீர் மேலாண்மை வெற்றி பெறும்''’என்கிறார் காவிரிநீர் பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் மகாதான புரம் ராஜாராம்.

"மனித உடம்பில் காய்ச்சல் வருவது போல முக்கொம்பு அணை திடீரென உடைந்தது' என்று விளக்கம் சொல்லி அதிர வைத்தவராயிற்றே; அதனால், "விவசாய பிரதிநிதிகள், தொழில்நுட்ப அறிவிய லாளர்கள், அதிகாரிகள் என்று மூன்று குழுக்களுடன் முதல்வர் செல்ல வேண்டும். இந்த பயணத்தின் மூலம் இங்கு என்னென்ன நன்மைகளை செய்ய முடியும் என்று கருத்தரங்கங்களையும், நீண்ட ஆய்வு களையும் முதல்வர் மேற்கொள்ள வேண் டும்' என்று விவசாயிகள் எதிர்பார்க் கிறார்கள்.

-ஜெ.டி.ஆர்., கதிரவன்