ஒரு கண்ணில் வெண்ணெய்! ஒரு கண்ணில் சுண்ணாம்பு! -முதல்வருக்கு எதிராக விவசாயிகள்!

gg

"நானும் ஒரு விவசாயி என்ற நிலையிலே இருந்து, விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது'’என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறேன்.

அதாவது, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற விழாவில் அறிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக எத்தனையோ தொடர் போராட்டங்கள் நடந்தபோதெல்லாம் கண்டுகொள்ளாத முதல்வரின் இந்த அறிவிப்பு நெடுவாசல் போராட்டக்காரர்களை சற்றே ஆறுதல்படுத்தியிருக்கிறது.

முதல்வராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் முழுவதுமாக ஓடியபிறகு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்பின் பின்னால் உள்ள அரசியல் புரிந்தாலும், சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைப் பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தையும் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை உடனே எழுந்திருக்கிறது.

ff

அதேசமயம் "விவசாயிகளை ஏமாற்றவே எடப்பாடி இந்த

அதேசமயம் "விவசாயிகளை ஏமாற்றவே எடப்பாடி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பை மத்திய அரசுதான் வெளியிட வேண்டும். வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. இதுவரை ஹைட்ரோ கார்பன் கிணறு களுக்கு கொடுத்துள்ள அனு மதியையும் ரத்து செய்ய வேண்டும்' என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் அறிவிப்பு தொடர்பாக எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக களமாடி வரும் சேலம் மாவட்டம் பூலாவரியைச் சேர்ந்த விவசாயி மோகன சுந்தரம் நம்மிடம் பேசினார்... “""எடப்பாடி பழனிசாமி, மேடைக்கு மேடை நானும் ஒரு விவசாயி என்று பேசி ffவருகிறார். அவர் கரும்புக் காட்டுக்கு தண்ணீர் காட்டி யிருக்கிறார். வயலில் இறங்கி வேலை செய்ததெல்லாம் உண்மைதான். அதில் எங்க ளுக்கு மாற்றுக்கருத்து இல்லை. எட்டுவழிச்சாலைத் திட் டத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணா மலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் (5800 ஏக்கர்) விளைநிலங்கள் முற்றிலும் பாழாகும் என்பதை மட்டும் ஏன் அந்த விவசாயி மகன் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்?

மீத்தேன் உள் ளிட்ட எந்த ஒரு திட்டத்துக்கும் மக்கள் கருத்து அறிய தேவையில்லை என்று அமைச்சர் கருப் பணன் கடிதம் எழுதும் போது, அவர் விவசாயி மகன் என்பதை மறந்துவிட்டாரா? மக்களவைத் தேர்தலின்போது கருமந்துறையில் பிரச்சாரத்தை துவக்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எட்டுவழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்றார். ஆனால், ஏப்ரல் மாதம் பிரச்சாரத்திற்கு வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகி யோரை ஒரே மேடையில் வைத்துக்கொண்டே எட்டுவழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார். அப்போது அவர்கள் இருவரும் மறுப்புக்கூட சொல்லாமல் கள்ள மவுனம் சாதித்தனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் மட்டுமின்றி, எட்டுவழிச்சாலையும் அழிவுத் திட்டம்தான். இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால், சாலை அமைக்கப்படும் பகுதிகள் மட்டுமின்றி அதைச்சுற்றியுள்ள விளைநிலங்களும் வீட்டு மனை நிலங்களாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. அதேபோல், விவசாயத்தை பாழாக்கி வரும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, விவசாயிகளை வாழ வைக்க வேண்டும். எதுவும் சட்டமாக வரும் வரைக்கும் முதல்வரின் பேச்சை நம்ப முடியாது''’என்றார்.

எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப் பாளர்களான திருவண்ணாமலை அருள், சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி பன்னீர்செல்வம் ஆகியோர்…""எட்டுவழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து, கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் இத்திட்டத்துக்காக கையகப்படுத்திய விவசாய நிலங்களை உரிய விவசாயிகளிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருந்தது. அதை இன்று வரை தமிழக அரசு செய்யவில்லை. இப்பொழுது டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பதை மட்டும் எப்படி உறுதியாக செயல்படுத்துவார் என்று நம்ப முடியும்?

முதல்வரின் அறிவிப்புக்கு இரண்டு நாள் முன்னதாகத்தான் (பிப்.7), அமெரிக்காவைச் சேர்ந்த ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் 50 ஆயிரம் கோடி ரூபாயில், கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். அடுத்த ஆண்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாக்குகளை குறிவைத்தே இந்த அறிவிப்பை வெளி யிட்டிருக்கிறார். டெல்டா மாவட்ட விவசாயிகளின் கண்ணில் வெண்ணெய்யும், எட்டுவழிச்சாலைத் திட்டம் அமையவுள்ள சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் கண்ணில் சுண்ணாம்பையும் தடவுகிறாரா தமிழக முதல்வர்? வாக்கு வங்கிக்காக பா.ஜ.க.வை எதிர்த்து இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று கருதுகிறோம்''’என்றனர்.

நெடுவாசல் விவசாயிகளுக்காக தலைவாசலில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி, சேலம் நெடுஞ்சாலை நகரில் வசிக்கிறார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எட்டுவழிச்சாலைத் திட்டத்தையும் கைவிடுவாரா?

-இளையராஜா

nkn190220
இதையும் படியுங்கள்
Subscribe