Advertisment

பூலித்தேவன் விழாவில் சலசலப்பு! -ஓ.பி.எஸ். ஆதரவாளர் கைது!

ff

ருடம்தோறும் செப்டம்பர் முதல் தேதியன்று தென்காசி மாவட்டத்தின் நெல்கட்டும் செவலில், சுதந்திரத்திற்காக முதல் குரல் கொடுத்த மன்னன் பூலித்தேவனின் பிறந்த நாள் விழா அமர்க்களப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தம் ஆட்சிக்காலத்தில் நெல்கட்டும் செவலில் மணிமண்டபம் கட்டி அதில் அவரது வரலாற்றுச் சிறப்புக்களை ஓவியங்களாக பதிவு செய்து, மணிமண்டபத்தில் பூலித் தேவனின் பெரிய சிலையையும் அமைத்துக் கௌரவித்தார்.

Advertisment

பூலித்தேவனுக்கு மாலை மரியாதை செய்யும் பொருட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக வந்தால், தேவையற்ற சலசலப்பு ஏற்படுமென்பதால், அவர்களுக்கென்று ஒதுக் கப்பட்ட வேளையில்தான் வர வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது.

Advertisment

dd

நெல்கட்டும் செவல் அமைந் திருக்கிற கிராமப்பகுதிகள் மட்டுமல்லாது, அண்டையிலுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் முக் குலத்தோர் சமூகம் மெஜாரிட்டி யாக உள்ளது.

இந்தச் சூழலில் நெல்கட்டும் செவல் பூலித்தேவனின் 307-வது பிறந்தநா

ருடம்தோறும் செப்டம்பர் முதல் தேதியன்று தென்காசி மாவட்டத்தின் நெல்கட்டும் செவலில், சுதந்திரத்திற்காக முதல் குரல் கொடுத்த மன்னன் பூலித்தேவனின் பிறந்த நாள் விழா அமர்க்களப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தம் ஆட்சிக்காலத்தில் நெல்கட்டும் செவலில் மணிமண்டபம் கட்டி அதில் அவரது வரலாற்றுச் சிறப்புக்களை ஓவியங்களாக பதிவு செய்து, மணிமண்டபத்தில் பூலித் தேவனின் பெரிய சிலையையும் அமைத்துக் கௌரவித்தார்.

Advertisment

பூலித்தேவனுக்கு மாலை மரியாதை செய்யும் பொருட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக வந்தால், தேவையற்ற சலசலப்பு ஏற்படுமென்பதால், அவர்களுக்கென்று ஒதுக் கப்பட்ட வேளையில்தான் வர வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது.

Advertisment

dd

நெல்கட்டும் செவல் அமைந் திருக்கிற கிராமப்பகுதிகள் மட்டுமல்லாது, அண்டையிலுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் முக் குலத்தோர் சமூகம் மெஜாரிட்டி யாக உள்ளது.

இந்தச் சூழலில் நெல்கட்டும் செவல் பூலித்தேவனின் 307-வது பிறந்தநாளை முன்னிட்டு ஓ.பி.எஸ். அணியும், எடப்பாடி அணியும் தனித்தனியே மரியாதை செலுத்த வந்தன. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர் ஒருவர், பாடை கட்டி மாலையோடு காத்திருக்கோம் என்கிற தொனியில் எச்சரிக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

அந்த ஆடியோ விவகாரம் என்னவென விசாரித்தோம்.

சங்கரன்கோவில் தொகுதியில் வரும் மகேந்திரவாடி கிராமத்தின் கூட்டுறவு சங் கத்தின் தலைவராக இருப்பவர் சரவணபாண்டியன். ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளர்.

அ.தி.மு.க.வின் எடப்பாடி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான உதயகுமாரை கைபேசியில் தொடர்புகொண்ட சரவணபாண்டியன், “உதயகுமாரிடம் "வணக்கண்ணே. நான் சங்கரன்கோவி லிலிருந்து பேசுறேன். நீங்க பேசியது நல்லா இருந்துச்சி. இங்கே நடக்கிற விழாவிற்கு (நெல்கட்டும்செவல் விழாவை மனதில் வைத்து) எப்ப வர்றீங்க? பேட்டியும் அருமையா இருந்திச்சி. ஓ.பி.எஸ். கட்சியில் இணைந்தால் நான் தற்கொலை பண்ணிக்குவேன்னு பேட்டியில் சொன்னீங்களே. இப்ப ஒரு பேட்டியில, ஓ.பி.எஸ். நிலைப்பாட்டை அப்போதைக்கப்போது மாத்திக்கிட்டு இருக்கார்னு சொன்னதையும் பார்த்தோம். எல்லா பேட்டியும் நல்லாயிருக்குண்ணே. அப்புறம் என்னைக்கு இங்க வருவீங்க''’என்று கேட்கிறார்.

d

உதயகுமார், "நாளைக்கு நைட் வந்துடுவோம்.''

"எந்த ரூட்டுண்ணே.''”

"தென்காசிலிருந்து போகலாம்னு சொல்லி யிருக்காங்க. பத்தரை மணிக்கு டைம் தந்திருக்காங்க'' என்ற உதயகுமாரிடம்... சரவணபாண்டியன், "அப்போ 11 மணிக்கு ரெடியா இருக்கோம். உங்க ளுக்காக மாலையோடு காத்திருக்கோம் வாங்க'' என்று சொல்ல, "எதுக்கு''’என்ற உதயகுமாரிடம், "உங்களைப் பாடையில தூக்கிட்டுப் போறதுக்கு. சாகணும்னு முடிவு எடுத்திருக்கீங்கள்ல. நீங்கதானே தற்கொலை பண்ணிக்கிறேம்னு சொல்லியிருக்கீங்க. ஓ.பி.எஸ். தலைமை ஏத்துட்டாருன்னு நாங்க ரெடியா இருக்கோம்''’இப்படி இவர்களின் பேச்சு முடிகிறது.

அ.தி.மு.க. தொண்டர், முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்துப் பேசிய இந்த ஆடியோ அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது. இதையடுத்து மதுரை அ.தி.மு.க. நிர்வாகியான ராமதுரை ‘அய்யாபுரம் காவல் நிலையத்தில், முன் னாள் அமைச்சர் உதயகுமாருக்கு சங்கரன்கோவி லைச் சேர்ந்த சரவணபாண்டியன் போனில் மிரட்டல் விடுத்துள்ளார். அது வைரலாகியுள்ளது. இதனால் சங்கரன்கோவில் அருகே நிகழ்ச்சியில் பங்கேற்க உதயகுமார் வரும் நிலையில் அவரின் உயிருக்குப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று புகார் செய்ய, வழக்குப் பதிவாகியுள்ளது.

சங்கரன்கோவில் பகுதி வடக்கு ஒ.செ. மகாராஜனும் புகார் செய்ய, சரவணபாண்டியனை கைது செய்து பாளை. சிறையில் அடைத்துள்ளனர் போலீசார். இந்த கைது சம்பவம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடையே டென்ஷனை ஏற்றியுள் ளது. செப்-01 அன்று நெல்கட்டும்செவல் பகுதி ஏக பரபரப்பாக, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கோஷ்டிக ளிடையே மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

dd

காலை 11 மணிக்கு பூலித்தேவன் சிலைக்கு மாலை மரியாதை செய்ய உதயகுமாருக்கு நேரம் ஒதுக்கப்பட்டாலும், மாஜிக்களான நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜு உள்ளிட்டவர்களுடன் உதயகுமாரும் இணைந்து மதியம் 12 மணிவாக்கில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்துக் கொண்டிருந்தபோது, ஓ.பி.எஸ்.சின் வரவுக்காகக் காத்திருந்த அவரின் ஆதர வாளர் ஒருவர், எடப்பாடி ஆதரவாளர்களை நோக்கி "தகுதியில்லாதவங்க மன்னனுக்கு மாலை போட வரக்கூடாது, கௌம்புங்க''’என சவுண்ட் விட்டவாறு ஆவேசமாய் வர, எடப்பாடி அணி யினர் ஜெர்க் ஆனார்கள். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட மேற்கொண்டு எதுவும் நடந்து விடக்கூடாது என போலீசார் அந்த ஆதரவாளரை வளைத்துப் பிடித்து இழுத்துச்சென்றனர். திகைத்துப் போன உதயகுமார் உள்ளிட்ட எடப்பாடி அணியினர் பதட்டமாய்க் கிளம்பினர்.

பதிலுக்கு எடப்பாடியின் ஆதரவாளர்களால் இடையூறு வரக்கூடாது என அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. மதியம் இரண்டு மணிக்கு தொண்டர்களின் ஆரவாரத்துடன் மாலை அணிவிக்க வந்த ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டவர்களை பத்திரமாக அனுப்பி வைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டது போலீஸ்.

nkn070922
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe