காவல்துறை அதிகாரிகள் தொழிலதிபரைக் கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக எழுந்த புகாரில் இரண்டுகட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் முகாந்திரம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisment

cbcid

சென்னை அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷும் தேனாம் பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசனும் இணைந்து தொழில் செய்துவந்தனர். தொழில் நடத்த பாதுகாப்பு உறுதித் தொகையாக 10 லட்சம் வழங்கி (நங்ஸ்ரீன்ழ்ண்ற்ஹ் உங்ல்ர்ள்ண்ற்) வெங்கடேசன் நடத்தி வந்த மென்பொருள் நிறுவனத்துக்கு தேவையான ப்ராஜெக்டுகளை தனது நிறுவனம் மூலம் செய்து கொடுத்து வந்துள்ளார் ராஜேஷ். இவர்களது தொழில் சுமுகமாகச் சென்றுகொண்டிருக்க 2015-ஆம் ஆண்டுக்குமேல் பணத்தட்டுப்பாடு காரணமாக தொழில் நஷ்டம் ஏற்பட்டு வெங்கடேசன், ராஜேஷுக்கு 5.5 கோடி ரூபாய்வரை பணம் தரவேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் பல நாட்களாக பணத்தை தராமல் தட்டிக்கழித்து வந்த வெங்கடேசனிடம் "பணத்தைத் தராவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன்' என ராஜேஷ் மிரட்டியதையடுத்து படிப்படியாக ராஜேஷுக்கு தரவேண்டிய பணம் 5.5 கோடி ரூபாயை வெங்கடேசன் திருப்பிக் கொடுத்துள்ளார். பிறகுதான் இந்த விவகாரத்தில் சில அதிரடித் திருப்பங்கள் ஏற்பட்டன.

அது குறித்து கூறும் ராஜேஷ், "தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட வெங்க டேஷ் தொழில் நடத்துவதற்காக குண்டூர் ஆந்திராவைச் சேர்ந்த சிவாராவ், சீனிவாசராவ் ஆகிய இருவரிடம் ரூ 15 கோடி கடன் வாங்கியிருந்தார். அவர்கள் அந்த பணத்தைக் கேட்கும் நிலையில் வேறு வழியில்லாமல் வெங்கடேஷ், "எனக்கு ராஜேஷ் பணம் தரவேண்டியுள்ளது. அவரிடம் நான் வாங்கிக் கொடுக்கிறேன்' என்று என்னைக் கைகாட்டி யுள்ளார்.

Advertisment

இந்த பணத்தை எப்படி வாங்குவது என்று தெரியாமலிருந்த சீனிவாசராவ் தனது சொந்தக்காரரான திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ராஜா என்பவரிடம் சொல்லியுள்ளார். அவர் பணத்தை வாங்கித்தரும் பணியை கோடம்பாக்கம் ஸ்ரீயிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில்தான் கோடம்பாக்கம் ஸ்ரீ கடந்த 2019-ஆம் ஆண்டு சி.பி.ஐ.யில் இருந்து பேசுவதாகக் கூறி என்னிடம், "வெங்கடேசன், சிவா இருவரையும் ரூ.20 கோடிவரை நீங்கள் ஏமாற்றியுள்ளீர்கள். அதுகுறித்து விசாரிக்கவே பேசியதாக'க் கூறி பின்னர் இணைப்பைத் துண்டித்தார்.

cdcid

திருமங்கலம் ஏ.சி. சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்டோர் என்னைத் தாக்கி அயனம்பாக்கத்திலிருந்த என் சொத்தை சிவா பெயருக்கு பவர் ஆப் அட்டர்னி எழுதிவாங்கினர்.

இதன்பிறகு போலீஸ் கண்ட் ரோல் ரூமைத் தொடர்புகொண்டு பெயர் சொல்லாமல் "திருமங்கலம் காவல் நிலையத்தில் போலீசார் மிரட்டி இடத்தைப் பிடுங்கியுள்ள னர்' என தகவல் கொடுத்தேன். அந்த தகவல் கமிஷனர்வரை சென்று கமிஷனர், அண்ணா நகர் டி.சி.யிடம் சொல்ல, அண்ணா நகர் டி.சி, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் டீம் அமைத்தார். எதிர்த்தரப்புக்கு சாதகமாகவே நடந்துகொண்டனர்.

இதனையடுத்து பிரச்சினைகள் வேண்டாம் என ஒதுங்கி, என் வருங்கால மனைவியுடன் கோயம்புத்தூருக்குச் சென்று தங்கினேன். அப்போது அங்குவந்த திருமங்கலம் எஸ்.ஐ. பாண்டியராஜன் உள்ளிட்ட காவலர்கள் மற்றும் குண்டர்கள் என்னையும் எனது வருங்கால மனைவியையும் சென்னைக்கு கடத்திவந்து செங்குன்றத்திலுள்ள தி.மு.க. முக்கிய பிரமுகர் ஒருவரின் பண்ணை வீட்டில் அடைத்துவைத்தனர்.

அங்குவந்த திருமங்கலம் ஏ.சி. சிவகுமார், எஸ்.ஐ. பாண்டியராஜன், போலீஸ் கிரி, பாலா, இன்ஸ்பெக்டர் சரவணன், கோடம்பாக்கம் ஸ்ரீ, தொழிலதிபர் ஸ்ரீனிவாசராவ், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த குண்டர்கள் சிலர் என்னைத் தாக்கி, கொலை மிரட்டல், வருங்கால மனைவிக்கு கற்பழிப்பு மிரட்டல், கஞ்சா வழக்கு போடுவோமென பலவிதத்திலும் மிரட்டி என் சொத்துக்கள் அனைத்தையும் எனது உறவினர் ரிஷப்பில்லா பாக்கியராஜ் பவர் ஆப் அட்டர்னி கொடுத்தது போலவும், அதன்பிறகு இவர்கள் அந்த நபரிடமிருந்து எழுதி வாங்குவதுபோல செட் செய்து எழுதி வாங்கினர். தொடர்ச்சியாக புகார் தந்தும் நடவடிக்கை இல்லாததால், 2020 டிசம்பர் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகாரளித்தேன்''’என்றார்.

தமிழக டி.ஜி.பி. திரிபாதி இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க ஜனவரி மாதம் உத்தரவிட்டதோடு, அறிக்கை அளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி இயக்குநர் பிரதீப் வி.பிலிபுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

முதல்கட்ட விசாரணை முடிந்துள்ள நிலையில், "இவ்வழக்கில் போலீசாரின் தொடர் பிருப்பது உண்மையே' என்றும் "பாதிக்கப் பட்டவரிடமிருந்து ஒண்ணேகால் கோடி பிடுங்கியுள்ளதாகவும்' சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஏ.சி சிவகுமாரிடம் கேட்டபோது, "என்னிடம் இந்த விஷயம் வந்தபோது 13 லட்சம் வரை செட்டில் மெண்ட் நடந்தது தெரியுமே தவிர, மற்றபடி எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்ஸ்பெக்டர் சரவணனிடம் விசாரணையை ஒப்படைத்தேன். திருமங்கலம் ஸ்டேஷன் விசாரணையின்போது ஆந்திராவைச் சேர்ந்த நபர்களுடன் கோடம்பாக்கம் ஸ்ரீ வந்திருந்தார். "சி.பி.ஐ. விசாரணையில் என்னை அழைத்து விசாரித்தார்கள் அதற்கான பதிலைக் கொடுத் தேன்' என்றார். மற்ற இன்ஸ் சரவணன், ராஜேஷ் கண்ணன், கோடம்பாக்கம் ஸ்ரீ ஆகியோரை தொடர்புகொண்டபோது பதிலளிக்க மறுத்து விட்டனர்.