சிதைக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தை தத்தெடுக்கும் தொழில் அதிபர்! நக்கீரன் செய்தி எதிரொலி!

formers

தயம் உள்ள எவரையும் உறைய வைக்கும் கொடூரம் அது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னம்மாள். இவருக்கு மூன்று மகள்கள்; இரண்டு மகன்கள். மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருடைய கணவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

பொன்னம்மாள், மல்லூரிலுள்ள ஒரு தனியார் சேகோ ஆலையில் தினக்கூலியாக வேலைசெய்கிறார். குடிசையில் சிறுமிகளும் சிறுவர்களும் மட்டுமே இருந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த காமக்கொடூரன்கள் 12 பேர் தின்பண்டங்களை வாங்கித் தந்து ஆசைகாட்டி சூறையாடி இருக்கிறார்கள். இவர்களில் இருவர் 75 வயது முதியவர்கள். இருவர் பள்ளியில் படிக்கும் விடலைப் பையன்கள்.

formers

கடந்த அக். 9-ஆம் தேதிவாக்கில் இந்த விவகாரங்கள் அரசல்புரசலாகத் தெரியவர... ராசிபுரம் மகளிர் காவல் ஆ

தயம் உள்ள எவரையும் உறைய வைக்கும் கொடூரம் அது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னம்மாள். இவருக்கு மூன்று மகள்கள்; இரண்டு மகன்கள். மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருடைய கணவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

பொன்னம்மாள், மல்லூரிலுள்ள ஒரு தனியார் சேகோ ஆலையில் தினக்கூலியாக வேலைசெய்கிறார். குடிசையில் சிறுமிகளும் சிறுவர்களும் மட்டுமே இருந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த காமக்கொடூரன்கள் 12 பேர் தின்பண்டங்களை வாங்கித் தந்து ஆசைகாட்டி சூறையாடி இருக்கிறார்கள். இவர்களில் இருவர் 75 வயது முதியவர்கள். இருவர் பள்ளியில் படிக்கும் விடலைப் பையன்கள்.

formers

கடந்த அக். 9-ஆம் தேதிவாக்கில் இந்த விவகாரங்கள் அரசல்புரசலாகத் தெரியவர... ராசிபுரம் மகளிர் காவல் ஆய்வாளர் இந்திரா, துரிதமாகச் செயல்பட்டு அனைவரையும் கைது செய்தார்.

இச்சம்பவம் குறித்து நேரடி கள ஆய்வுடன், கடந்த அக். 24-27 நக்கீரன் இதழில், 'நொறுக்குத் தீனியால் சிறுமிகளை சீரழித்த 11 கொடூரன்கள்' என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம். அந்தக் கட்டுரையைப் படித்த திருச்செங்கோடு அருகேயுள்ள மல்லசமுத்திரம் அவினாசிப் பட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் முருகேசன்-தமிழ்ச் செல்வி தம்பதியினர், பாதிக்கப்பட்ட சிறுமிகளையும், குடும்பத்தினரையும் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்தனர். முருகேசன், உள்ளூரில் பேப்பர்கோன் மில் நடத்திவரு கிறார். அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி, தி.மு.க. சார்பில் மல்லசமுத்திரம் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.

முதல்கட்டமாக ராசிபுரம் காப்பகத்திலுள்ள சிறுமிகளின் தாயாரைச் சந்தித்து, அவர்களுக்கு என்னென்ன தேவை என்பது குறித்து அடிப்படை விவரங்களை அறிந்து வருவதற்காக முருகேசன் தம்பதியினர் நவ. 17-ஆம் தேதி வந்திருந்தனர். இரு தரப்பையும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம். நம்முடன் கூனவேலம்பட்டி தி.மு.க. பிரமுகர்கள் சரவணன், பூபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோரும் வந்திருந்தனர்.

இதுதொடர்பாக முருகேசன் கூறுகையில், ""ராசிபுரம் சிறுமிகள் சீரழிக்கப்பட்டது குறித்து நக்கீரனில் விலாவாரியாக செய்தி வந்ததைப் படித்ததுமே பகீரென்று இருந்தது. ஏற்கனவே தந்தையை இழந்து, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் அந்தப் பிள்ளைகளுக்கு எங்களால் ஆன எல்லா உதவிகளையும் செய்ய வேண்டுமென்று அப்போதே தீர்மானித்துவிட்டோம்.

formers

சிறுமிகளின் தாயாரிடம் பேசியபோது, "சொந்தமாக ஒரு வீடு இருந்தால் பரவாயில்லை' என்றார். "அரசு அவர்களுக்கு வீடு ஒதுக்கித்தர நடவடிக்கை எடுப்பதாக அறிந்தோம். அரசு ஒதுக்கினாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் விரும்பும் இடத்தில் வீடு கட்டிக்கொடுக்க தயாராக இருக்கிறோம். அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு வசதிகளும், நான்கு பிள்ளைகளின் முழுகல்விச் செலவையும் ஏற்கத் தயாராக இருக்கிறோம். எதிர் காலத்தில், பெண் பிள்ளைகள் இருவரின் திருமணச் செலவுகளை முழுமையாக ஏற்கவும் முடிவு செய்திருக்கிறோம்' என சிறுமிகளின் தாயாரிடம் உறுதியளித் திருக்கிறோம்'' என்றார்.

இதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜை, ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் வைத்து சந்தித்துப் பேசினோம். “""பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு முதல்கட்டமாக 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி கிடைக்கவும், குடிசை மாற்று வாரியம் சார்பில் அவர்களுக்கு வீடு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதத்திற்குள் அவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுவிடும். அப்போது பயனாளி தரப்பில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம்வரை டெபாசிட் செலுத்தவேண்டும். அந்த உதவி செய்தால்கூட போதுமானது. மற்ற உதவிகள் உங்கள் விருப்பம்தான்'' என ஊக்குவித்துப் பாராட்டினார் ஆட்சியர்.

அதைத்தொடர்ந்து, முருகேசன் தம்பதியினர் ராசிபுரம் மகளிர் காவல் ஆய்வாளர் இந்திராவைச் சந்தித்து தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க... அவரும் அதை வரவேற்றார். சமூக அவலங்களை அம்பலப்படுத்துவதன் மூலம் சிலருக்கேனும் விழிப்புணர்வையும், சிலருக்கேனும் உதவும் மனப்பான்மையையும் ஏற்படுத்திவருவதில் நக்கீரனுக்கு மகிழ்ச்சிதான்.

-இளையராஜா

nkn251120
இதையும் படியுங்கள்
Subscribe