சென்னையைச் சேர்ந்த, தமிழக அரசின் முறைசாரா கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், அவருடைய மனைவி அகிலாண்டேஸ் வரி, மாமனார் அறிவுடைநம்பி, மாமியார் ஆனந்தி, மங்கையர்க்கரசி, ஆனந்த், சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்த மாணிக்கம், அவருடைய மனைவி பொன்லதா, மச்சினன் சுரேஷ் போன்றோரின் பெயர்கள், ரூ.22 கோடி கொடுக்கல்-வாங்கல் வழக்கில் பலமாக அடிபடுகின்றன.
அகிலாண்டேஸ்வரியும் அடியாட்களும்!
திருத்தங்கல்லில் ஐந்து பள்ளிகளின் தாளாளர்’ என்று அறியப்படும் அரசியல் பிரமுகர் மாணிக்கம் தரப்பில், பள்ளிக் கல்வித்துறையில் பல ஆண்டுகளாக முக்கிய பொறுப்புகள் வகித்துவரும், தற்போதைய முறைசாரா கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், "என்னிடம் கணக்கில் வராத பல கோடி ரூபாய் ரொக்க மாக இருக்கிறது. அதனை, உங்கள் பகுதியில் ரூ.100-க்கு 2 ரூபாய் வட்டிக்கு விட்டு, மாதம்தோறும் வசூல் செய்து கொடுக்கவேண்டும். தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் பல பெரிய அதிகாரிகள், காவல் துறையில் உயர் பதவி களில் உள்ளவர்களிடம் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. அதனால், எந்த பயமுமின்றி, வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யலாம். ஒருவேளை கடன் வாங்கியவர்கள் பணம் தரவில்லையென்றால், அடியாட்கள் மூலம் வசூல் செய்துவிட முடியும்'' என்று சட்ட விரோதச் செயலுக்கு மாணிக்கத்தை வற்புறுத்தி, ரூ.12 கோடியே 30 லட்சத்தை 14 பேரிடம் கொடுக்கச் செய்து, வசூல் பண்ணி வந்தார்.
கடன் வாங்கிவிட்டு, வட்டியும் அசலும் செலுத்தாதவர்களின் சொத்துகளை அபகரித்து, மனைவி மற்றும் மாமனார் பெயர்களில் பதிந்தார். மேலும், ‘கடன் வாங்கியவர்களிடம் வட்டி வசூல் பண்ண முடியாவிட்டால், நீதான் வட்டிப் பணம் செலுத்தவேண்டும்.’ என்று மாணிக்கத்தை மிரட்டி ரூ.30 கோடி வரையிலும் பறித்து, அவரைப் பெரும் கடனாளியாக்கிவிட்டார். சென்னையில் உள்ள மாணிக்கத்தின் உறவினரான வைரக்கனி தர வேண் டிய பணத்துக்காக, அடியாட்களை ஏவி அவரை இழுத்துவந்து, சொத்தை மனைவி அகிலாண்டேஸ்வரி பெயரில் கிரையம் செய்துவிட் டார். இந்தக் கொடூரச் செய லால், வைரக்கனியும் அவரது குடும்பத்தினரும் உயிருக்கும் உடமைக்கும் பயந்து, எங்கோ காணாமல் போய்விட்டனர். இவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கிய சிவகாசியைச் சேர்ந்த ஆசீர்வாதம் என்பவரும் திருத்தங்கல்லைச் சேர்ந்த எல்.ஐ.சி. மாரியப்பன் என்பவரும் தற்கொலை செய்துகொண்டார்கள்.
சிவகாசி வட்டத்தில் மட்டும், ராமேஸ்வர முருகனின் மனைவி அகிலாண்டேஸ்வரியும் அவருடைய பினாமிகளும், கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் பெறுமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். இதுபோல், தமிழகம் முழுவதும் வாங்கிய பல சொத்துகள் இவர்களிடம் உள்ளன. இத்தனை கோடி பணம் இவர்களுக்கு எப்படி வந்தது? வாங்கிய கடனை திரும்பச் செலுத்திவிட்டு, கொடுத்த பத்திரங்களைத் திருப்பிக்கேட்டபோது, 25 அடியாட்களை வைத்து மாணிக்கத்தை மிரட்டி னார்கள். கடத்திச்சென்று, சிவகாசி ஸ்பார்கில்- இன் ஹோட்டல் அறையில் சட்டவிரோதமாக அடைத்து வைத்தனர். அருவருக்கத்தக்க வார்த்தை களில் திட்டினார்கள். அரிவாளை ஓங்கிய அடி யாட்கள் ‘"உன்னை இங்கேயே வெட்டிக் கொன்று விட்டு எந்தவொரு வழக்கிலும் சிக்காமல் தப்பிச் செல்ல எங்களால் முடியும்'’என்று கொலை மிரட் டல் விடுத்தனர். திருத்தங்கல்லில் உள்ள மாணிக் கத்தின் வீட்டுக்கும் வந்து இதேரீதியில் அச்சுறுத்தி னர்'' எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.
அடைத்து வைத்து அடித்து சித்ரவதை!
நாம் மாணிக்கத்தை தொடர்புகொண்டோம். "கல்வித்துறை அதிகாரி ராமேஸ்வர முருகனோட மனைவி அகிலாண்டேஸ்வரி, பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தியதால், சம்மனே இல்லாம, தீவிரவாதி மாதிரி என்னை இழுத்துட்டு போயி போலீஸ் காரங்க விசாரிச்சாங்க. குற்றப் பிரிவு ஆபீஸ்ல போலீஸ்காரங்க முன்னால அகிலாண்டேஸ்வரி ‘உனக்கு அரசியல் வாழ்க்கையே இல்லாம பண்ணிருவேன். எல்லா கட்சிலயும் எங்களுக்கு ஆள் இருக்கு. இப்ப இருக்கிற 34 அமைச்சர்களும் நாங்க சொன்னா கேட்பாங்கன்னு என்னை மிரட்டினாரு. ஆசீர்வாதம் தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சரோட பேரு, ராமேஸ்வர முருகன், அகிலாண்டேஸ்வரி பேரெல் லாம் இருந்துச்சு. அப்ப இன்ஸ் பெக்டரா இருந்த பாஸ்கரன் இவங்க மூணு பேரையும் கழட்டி விட்டுட்டு, என்னைச் சேர்த்துட்டாரு. அந்தம்மா எங்கெங்கே சொத்து வாங்கி னாங்கன்னு சர்வே விபரத்தோட என்கிட்ட இருக்கு. ராமேஸ்வர முருகனுக்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தம் இல்லைங்கிற மாதிரி கொண்டுவரப் பார்க்கிறாங்க. அவரு என்கிட்ட பேசி மிரட்டியதை ரெகார்ட் பண்ணி வச்சிருக்கேன்.
கருணாஸ் கட்சியான முக்குலத்தோர் புலிப்படையில், முக்கிய பொறுப்புல இருக்கிற தாமோதர கிருஷ்ணன், அடியாட்களோட என் வீட்டுக்கே வந்து எங்கள அசிங்கப்படுத்தினாரு. என்னை சித்ரவதை பண்ணுனாங்க. என் பொண் டாட்டி புள்ளைங்கள்லாம் ஓடி ஒளிஞ்சிக்கிட் டாங்க. சிவகாசில ஆர்.எஸ்.ஆர்., ஸ்பார்கில்-இன், பெல் ஓட்டல்ன்னு மூணு பெரிய ஸ்டார் ஓட்டல்ல அகிலாண்டேஸ்வரியோட அடியாட்கள் தங்கியிருந் தாங்க. வீட்ல இருக்கிற பத்திரத்த எல்லாம் எடுத்துட்டு போயி, ரெண்டு நாள் பெல் ஓட்டல்ல வச்சி என்னை அடிச்சு, எல்லாத்தயும் வாங்கிட்டு போயி, என்னை நடுத்தெருவுக்கு கொண்டுவந்துட் டாங்க...''” என்று குரல் உடைந்துபோய் பேசினார்.
ஃபைனான்ஸ் பரம்பரை!
முறைசாரா கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகனைத் தொடர்புகொண்டோம். "மாணிக்கம் வேணும்னே என் பெயரைச் செல்றாரு. பணத்த வாங் கிட்டு கொடுக்காம இருக்கிறது தப்பில்லையா? அது என் பணம் இல்ல. என் மனைவி ஃபைனான்ஸ் கன்சல்டன்டா இருக்காங்க. எங்க தாத்தா, எங்க அப்பா ஃபைனான்ஸ் வச்சிருந்தாங்க. எங்க மாமனார் குடும்பத்துல மொத்த பேரும் ஃபைனான்ஸ் கன்சல்டன்டா இருக்காங்க. அப்ப டின்னா.. வட்டித் தொழில் பார்க்கத்தானே செய்வாங்க. அதான் விஷயம். மாணிக்கம் எது வேணாலும் சொல்லு வாரு. என்னுடைய பெயரை இந்த விவகாரத்துல இழுக் கிறது தவறான செயல்''’என்று சன்னமான குரலில் பேசினார்.
தற்கொலையின் பின்னணி!
நம்மிடம் ராமேஸ்வர முருகனின் மனைவி அகிலாண்டேஸ்வரி, "மாணிக்கம் மொதல்ல சாருக்கு (ராமேஸ்வர முருகன்) ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாரு. அப்பதான் எனக்கே தெரிஞ்சது. இது ஏமாத்துற மாதிரி இருக்கேன்னு. நானே மத்தவங்ககிட்ட வட்டிக்கு வாங்கித்தானே மாணிக்கம் மாதிரி ஏஜெண்டுங்ககிட்ட கொடுக்கிறேன். போலீஸ் சம்மன் கொடுத்த பிறகுதான் மாணிக்கம் வந்தாரு. அவரே இதை எழுதிக் கொடுத்திருக் காரு. எந்த இன்ஃப்ளூயன்ஸும் பண்ணல. மாணிக்கம் மகள் டாக்டருக்கு படிக்கிறதுக்கு 27 லட்ச ரூபாய் கேட் டாரு, கொடுத்தேன்ல. நான் ஒண்ணும் அன்றாடங்காய்ச்சி இல்ல. எட்டாவது படிக்கும்போதே எங்க அப்பாவோட வட்டிக்கடைல உட்கார்ந்திருக்கேன். அப்ப இருந்தே எனக்கு டிரெயினிங் கொடுத்தாங்க. என்னோட சொத்து விபரம் எல்லாத்தயும், வருவாய் ஆதார (ள்ர்ன்ழ்ஸ்ரீங் ர்ச் ண்ய்ஸ்ரீர்ம்ங்) விபரத்தையும் போலீஸ்கிட்ட தந்துட்டுத்தான் மாணிக்கம் மேல போலீஸ்ல புகார் கொடுத்தேன். அவங்க என் மேல வைக்கிற குற்றச்சாட்டு. அப்புறம் வக்கீல் மூலமா அனுப்பிய நோட்டீஸ்ல இருந்த அத்தனையும் பொய்ங் கிறத, சாட்சிங்க மூலமாவே நிரூபிச்சிட்டேன். ஆனா... எங்ககிட்ட கடன் வாங்கிட்டு, திரும்ப கொடுக்க வர்றவங்கள பணம் கொடுக்கவிடாம மிரட்டுறாங்க மாணிக்கத்தோட ஆளுங்க.
எங்க ஆபீஸுக்கு பாண்டிங்கிற ஒரு ரவுடிய கூட்டிட்டு வந்து, வாங்கிய பணத்தை கொடுக்காம பத்திரத்தை கேட்டு மிரட்டினாங்க. அந்த ரவுடி என்கிட்ட பத்து கொலை பண்ணிருக்கேன்னு சொன்னான். எதுக்கு ரிஸ்க்குன்னு டாகுமென்ட அவங்க கையில கொடுத்தேன். பிறகும், பாண்டி பேரைச் சொல்லி தொடர்ந்து போன்ல மிரட்டினாங்க. ஆசீர்வாதம் இறந்தப்ப.. அப்புறம் எல்.ஐ.சி. மாரியப்பன் இறந்தப்ப.. எனக்கு மிரட்டல் அதிகமாயிருச்சு.
ஒருநாள் திருத்தங்கல் வந்து மாணிக்கத்திடம் பணத்தைக் கேட்டபோது ‘நீ உயிரோடு இருக்கணும்னா.. என்கிட்ட கொடுத்த பணத்தை (ரூ.22 கோடியே 10 லட்சம்) திரும்ப கேட்கக் கூடாது. மீறி கேட்டால், உன்னை மட்டு மில்ல. உன் குடும்பத்தையே கூலிப்படை ஆட்களை வச்சு க்ளோஸ் பண்ணி தடயம் இல்லாம அழிச்சிருவேன்னு கடுமையா மிரட்டினான். அப்புறம்தான் மாணிக்கம் வீட்டுக்கு வழக்கறிஞர் தாமோதர கிருஷ்ணனை கூட்டிட்டுப் போனேன். அவருகூட கோகுல கிருஷ்ணனும் பாஸ்கரும் வந்தாங்க. அவங்களும் வக்கீல்தான். மத்தபடி அடியாளு யாரும் எங்ககிட்ட இல்ல.
நான் விடறது ஒரு ரூபாய் வட்டிக்கு. கடன் கொடுத்தவங்ககிட்ட மாணிக்கம் வசூல் பண்ணுனது அதிக வட்டி போல. ஆசீர்வாதமும் எல்.ஐ.சி. மாரியப்பனும் தற்கொலை பண்ணுனதுக்கு நாங்க காரணம் இல்ல. திருத்தங்கல்ல ஒருத்தர் வீட்ல வட்டி வசூல் பண்ணும்போது, அவரு மிஸஸ்கூட, இந்த ஆளு தகாத உறவு வச்சி, அதை அந்தம்மா கணவர் நேர்ல பார்த்து, அசிங்கத்த தாங்க முடியாம உடம்புல பத்த வச்சிட்டாரு. இறக்கிறதுக்கு முன்னால ஜட்ஜ்கிட்ட அவரு வாக்குமூலமே கொடுத்திருக்காரு. இதுக்கெல்லாம் சாட்சி சொல்லுறதுக்கு ஒருத்தர் வர்றேங்கிறாரு. நான் யாருகிட்டயும் மனசாட்சிக்கு விரோதமா நடந்தது இல்ல''” என்று நீண்ட விளக்கம் தந்தார்.
கணக்கில் வராத பணம்!
வழக்கறிஞர் தாமோதர கிருஷ்ணன் நம்மைத் தொடர்புகொண்டார் -
நான் முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச் செயலாளர் தான். கட்சி வேற.. அட்வகேட் ப்ரொபஷன் வேற. 25 அடியாட் களோட வந்தோம்னு சொல்லுறாரு. அதுக்கு ஏன் அவரு அப்பவே நடவடிக்கை எடுக்கல? 10 லட்ச ரூபாய் தரணும்னு போலீஸ்ல பொய்யா புகார் கொடுத்து, 10 கோடி ரூபாய் வசூல் பண்ணுற தப்பான வேலை நாங்க பார்க்கல. ஆக்சுவல் அமவுண்ட் எவ்வளவு வரணுமோ, அதைத்தான் பெட்டிஷன்ல க்ளியரா போட்டிருக்கோம். ஒருத்தர் (ராமேஸ்வர முருகன்) அரசுத்துறையில் வேலை பார்க்கிறார் என்பதற்காக, அவரோட மாமனார், மாமியார், அப்பா, அம்மா, மனைவின்னு யாரும் பிசினஸ் பண்ணக்கூடாதுன்னு சட்டத்துல இல்ல. அவரை அடைச்சு வச்சு அடிக்கிற அளவுக்கு நாங்க ஒண்ணும் மட்டமான ஆளுங்க கிடையாது. மாணிக்கம் சீட்டிங் பண்ணுனது நூற்றுக்கு நூறு உண்மை.
வீட்ல வச்சி.. ஹோட்டல்ல வச்சி மாணிக்கத்துகிட்ட நாங்க பேச்சுவார்த்தை நடத்தினத, அப்படியே வீடியோல ரெகார்ட் பண்ணிருக்கோம். கணவர் (ராமேஸ்வர முருகன்) டிபார்ட் மென்ட்ல இருக்காரு. மனைவி ஃபைனான்ஸ் பண்ணுறாங்க. இதெல்லாம் கணக்குல வராத பணம்னு சொன்னா, பயந்து ஓடிருவாங்கன்னு மாணிக்கம் இந்தமாதிரி பண்ணுறாரு. அவரை மிரட்டி நாங்க எந்த டாகுமெண்டும் வாங்கல''’என்று மறுத்தார்.
மாணிக்கம் தரப்பிலும், ராமேஸ்வர முருகன் தரப்பிலும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்கிறார்கள். அதிகார துஷ்பிர யோகம் -கோடிகளில் ஊழல் பணம் -கூலிப்படை -கடத்தல்-சித்ரவதை -கொலை மிரட்டல் என சட்டவிரோத காரியங்கள் அத்தனையும் நடந்திருப்பதாக பீதியுடன் விவரிக்கிறார்கள். வட்டி வசூலிப்பதற்கு வீடுகளுக்குச் செல்லும்போது, குடும்பப் பெண்களை மிரட்டி உறவு வைத்ததும், அவமானத்தால் தற் கொலை செய்துகொண்டதும்கூட நடந்திருக்கிறது. சட்டத்தின் ஓட்டைகளில் தப்பிவிடாதபடி, இவையனைத்தும் தீர விசாரிக்கப்பட்டு, குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும்.