Advertisment

அபாயத்தில் பேருந்து நிலையம்! -உயிர் பயத்தில் புதுக்கோட்டைவாசிகள்!

ss

கராட்சியாக இருந்து மாநகராட்சியாக தகுதி உயர்வு பெற்றிருக்கும் புதுக்கோட்டையை, ரொம்பவே பயமுறுத்தி வருகிறது அங்குள்ள பழமையான பேருந்து நிலையம். ஊரின் மையப் பகுதியில் உள்ள அந்த பேருந்து நிலையத்தைக் கட்டி 40 வருடங்கள் கடந்துவிட்டன. இதை ஏகத்துக்கும் நிதி ஒதுக்கி அவ்வப்போது புனரமைத் தனர். குறிப்பாக, கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலும் அதிக அளவில் நிதி ஒதுக்கி புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்டனர். எனினும், அது அடிக்கடி இடிந்தும், காரை பெயர்ந்து கொட்டியும், அங்கு வரும் பயணிகளை ரத்தக் களறியாக்கித் தொடர்ந்து மிரட்டிவருகிறது.

Advertisment

bb

இதனால், ’பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல வேண்டாம். ஆபத்தான நிலையில் உள்ளது’ என்று நுழைவாயில்களில் எச்சரிக்கைப் பதாகை

கராட்சியாக இருந்து மாநகராட்சியாக தகுதி உயர்வு பெற்றிருக்கும் புதுக்கோட்டையை, ரொம்பவே பயமுறுத்தி வருகிறது அங்குள்ள பழமையான பேருந்து நிலையம். ஊரின் மையப் பகுதியில் உள்ள அந்த பேருந்து நிலையத்தைக் கட்டி 40 வருடங்கள் கடந்துவிட்டன. இதை ஏகத்துக்கும் நிதி ஒதுக்கி அவ்வப்போது புனரமைத் தனர். குறிப்பாக, கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலும் அதிக அளவில் நிதி ஒதுக்கி புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்டனர். எனினும், அது அடிக்கடி இடிந்தும், காரை பெயர்ந்து கொட்டியும், அங்கு வரும் பயணிகளை ரத்தக் களறியாக்கித் தொடர்ந்து மிரட்டிவருகிறது.

Advertisment

bb

இதனால், ’பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல வேண்டாம். ஆபத்தான நிலையில் உள்ளது’ என்று நுழைவாயில்களில் எச்சரிக்கைப் பதாகைகளை வைத்த அதிகாரிகள், அனைத்துப் பேருந்துகளையும் அந்த டேஞ்சரஸ் பேருந்து நிலையத்திற்குள் இன்னும் அனுப்பிக் கொண்டி ருக்கிறார்கள். எனவே, ரத்தக்களறி சம்பவங்கள் அங்கு தொடர்கதையாகவே இருக்கிறது.

Advertisment

இப்படிப்பட்ட பேருந்து நிலையத் திற்குள், அடிக்கடி மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் உள்ளிட்ட பவர் புள்ளிகள் கலந்துகொள்ளும் அரசு விழாக்களும் நடந்துவருவது மக்கள் மத்தியில் திகிலை ஏற்படுத்துகிறது.

அண்மையில் கூட இந்தப் பேருந்து நிலைய கட்டடத்தில் இயங்கும் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி துணி விற்பனையை மாவட்ட ஆட்சியர் அருணா தொடங்கி வைத்திருக்கிறார்.

மாநகராட்சி நிர்வாகமே பயணிகளை உள்ளே வராதீர்கள் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே, இப்படி விழாவையும் அங்கே நடத்த அனுமதிப்பது கேலிக் குரியதாக இருக்கிறது. பகீரூட்டும் அந்தக் கட்டடத்தை நம்பி, எப்படி அங்கே போய் துணி வாங்குவது என்று பொதுமக்கள் திகைத்துப்போய் கை பிசைகிறார்கள்.

இதற்கிடையே, புதிய பேருந்து நிலையத்தைக் கட்ட ரூ.18.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டரும் விடப்பட்டி ருக்கிறது. அது கட்டிமுடிக்கப்படும் வரை, தற்காலிகப் பேருந்து நிலையத்தை அமைக்க, மாற்று இடம் கிடைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

bs

இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம், மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் ரகுபதி முன்னிலையில் அமைச்சர் நேரு கலந்து கொண்டார். முத்துப்பட்டினம் மணல் ராமச்சந்திரன் வழங்கிய மேயருக்கான தங்க நகைகளையும், புதுக்கோட்டை நகைக்கடைக்காரர்களால் வழங்கப் பட்ட வெள்ளிச் செங்கோலையும் முதல் மேயர் திலகவதியிடம் வழங்கிய அமைச்சர் நேரு, புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பதாகையை திறந்து வைத்தார்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஊர் பிரமுகர்கள், "அமைச்சர் நேரு புதிய பேருந்து நிலையத்துக்கான பணிகளைத் தொடங்கிவைத்திருக்கிறார். எனினும் மாநகராட்சி நிர்வாகம் இன்னும் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க, இடத்தைத் தேர்வு செய்து முடிக்கவில்லை. அரசு பணிமனையைப் பார்த்தார்கள். அந்த இடம் போதாது என்று சொல்லி விட்டு விட்டார்கள். இப்போது அருகில் உள்ள பழைய அடுக்குமாடிக் குடியிருப்பை இடித்துவிட்டு, அந்த இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கலாமா? என்று ஆய்வுகள் நடந்துவருகிறது. அந்தக் குடியிருப்பை எப்போது இடிப்பது? அங்கே தற்காலிக பேருந்து நிலையத்தை எப்போது கட்டுவது என்று மாநகராட்சியில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால், பேருந்து ஏற வரும் பயணிகள் அங்குள்ள எச்சரிக்கைப் பதாகையை பார்த்துட்டு, உயிர் பயத்துடன் தான் பேருந்து நிலையத்திற்குள்ளேயே போகிறார்கள். பெரும் விபத்துகள் ஏதும் நடந்துவிட்டால் மாநகராட்சி அதிகாரிகள் தப்பித்துக் கொள்ளத்தான் அந்த எச்சரிக்கைப் பதாகையை வைத்திருக்கிறார்கள். பொது மக்களின் பாதுகாப்பு மீது அக்கறை இருந்தால் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் அத்தனை கடைகளையும் முதலில் மூடுவதோடு, அங்கே நிறுத்தப்படும் பேருந்துகளையும் வெளியே நிறுத்தவேண்டும்.''’என்கிறார்கள் கொஞ்சம் காட்டமாகவே.

nkn161024
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe