கடலூரிலுள்ள தற்போ தைய பேருந்து நிலையம் போக்கு வரத்து நெரிசலில் சிக்கியுள்ள தால் புதிய பேருந்து நிலையம் அமைக்கக் கடந்த 2021-ல் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை யடுத்து, கடலூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மெகா பேருந்து நிலையம் அனைத்து வசதிகளுடன் அமைப் பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான தொடக்க விழாவும் நடைபெற்றது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடலூர் மாநகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சுந்தரிராஜா பொறுப்பேற் றார். அதனைத் தொடர்ந்து, கடலூர் பேருந்து நிலையத்துக்கு ஏற்கெனவே முடிவுசெய்த இடத்தை மாற்றி, தமிழக வேளாண்துறை அமைச்சரின் தொகுதியான குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எம்.புதூரில் அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இதற்கு அ.தி. மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பலரும் எதிர்ப் புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில், செப்டம்பர் 20ஆம் தேதி கடலூரில் நடைபெற்ற திட்டக்குழுக் கூட்டத்தில், எம்.புதூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அரசாணை வரவுள்ளதாகவும், அங்கு பேருந்து நிலையம் அமைந்தால் மாநகரம் வளர்ச்சி பெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பேசியுள்ளார். இத னையறிந்த கடலூர் அனைத்து குடியிருப் போர் நல சங்கங் களின் கூட்டமைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டோர், பேருந்து நிலை யத்தை சட்டமன்றத் தொகுதிக்குள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி செப்டம்பர் 30ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சிறப்பு தலைவர் மருதவாணன் கூறுகையில், "கட லூர் புதிய பேருந்து நிலையத்தை கடலூரிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் அமைக்கவுள்ளார்கள். இதனால் வணிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார் கள். அங்கு செல்வதற்கே அரை மணி நேரத்துக்குமேல் ஆகும். எனவே புதிய பேருந்து நிலையத்தை கடலூர் சட்டமன்றத் தொகுதிக்குள் அமைக்க வேண்டும்'' என் றார். இதுகுறித்த ஆலோ சனைக் கூட்டத்தில், வரும் 30-ந் தேதி கடலூரில் வணி கர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒருங் கிணைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கடலூருக்கு வருகை தந்த நகராட்சி நிர்வாகம் மற் றும் நகர்ப்புற வளர்ச்சி குடி நீர் வழங்கல்துறை அமைச் சர் நேரு கூறுகையில், "கடலூர் புதிய பேருந்து நிலையம் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்தால் அது புதுச்சேரி அருகிலும் கடல் பகுதிக்கு அருகிலும் வருகிறது. எனவே கடலூர் மேற்கு பகுதியை நோக்கி பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள் ளது'' என்றார்.
-காளிதாஸ்