"இந்தியாவின் நகை' நவரத்னங்களின் மாநிலம் என்ற பெருமை பெற்றது மணிப்பூர். துடிப்பான பழங்குடி கலாச்சார பாரம்பரியமிக்க பூமி. ஆண்களும் பெண்களும் சமம் எனும் உன்னதக் கொள்கை கொண்ட மக்கள் மணிப்பூர் மாநிலத்தின் அடையாளம். மணிப்பூரி நடன நாடகங்கள், வாள், கேடயம் மற்றும் ஈட்டிகளுடன் தொடர்புடைய தற்காப்புக்கலை வடிவமான தாங்லிதா போன்ற எண்ணற்ற வரலாற்று, பண்பாட்டுத் தளங்களைக் கொண்டு வெளிநாட்டுப் பயணிகளைக் கவர்ந்த மணிப்பூரில்தான் தற்போது அதிபயங்கரமான கலவரங்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manipur_0.jpg)
பசுமையான மலைப்பகுதிகள், பள்ளத்தாக்கு களால் சூழப்பட்ட இயற்கைவளமிக்க மணிப்பூர் பகுதியில், சுமார் 40% மக்கள் மலைப்பகுதிகளி லேயே வசித்துவருகிறார்கள். இம்மக்கள் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் சேர்க்கப்பட்டவர்கள். பெரும்பாலும் நாகா, குகி, மிஸோ பழங்குடியினத் தவர்கள் இங்கே அதிகம் வசித்துவருகிறார்கள். கிறிஸ்தவப் பாதிரியார் களால் அடிப்படைக் கல்வி பெற்ற மலைவாழ் பழங்குடி மக்கள், அவர்களால் கிறிஸ் தவர்களாகவும் மதமாற்றம் செய்யப்பட்டதால், பெரும் பாலான மலைவாழ் பழங் குடியினர் கிறிஸ்தவர்களாக உள்ளனர். பழங்குடியினர்களின் வாழ்வியல் பண் பாட்டு முறையை சிதைக்கக்கூடாது என்பதற்காக, அவர்களின் வாழ்விடங்களில் மற்றவர்கள் இடம் வாங்குவதற்கு தடை செய்யும் சிறப்புச்சட்டம் அமலில் உள்ளது.
மணிப்பூரின் சமவெளிப்பகுதிகளில் மெஜாரி ட்டியாக மைதேயி சமூகத்தைச் சேர்ந்த 53% மக்கள் வசித்துவருகிறார்கள். மணிப்பூர் இந்தியாவில் இணைவதற்கு முன்பாக மைதேயி சமூக அரசர் களால் ஆளப்பட்டு வந்ததால், இச்சமூகத்தினர் முன்னேறிய வகுப்பினராக உள்ளனர். தற்போது முதல்வராக உள்ள பிரேன் சிங், மைதேயி இனத் தைச் சேர்ந்தவர்தான். மைதேயி இனத்தவர்கள், தங்களுக்கும் அரசின் வேலைவாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு வேண்டுமென்பதற்காக, கடந்த 2013 முதலாகவே தங்களையும் பட்டியலின பழங்குடி யாக சேர்க்க வேண்டுமெனக்கூறி போராடி வருகிறார்கள். மைதேயி சமூகத்தினரை பழங்குடி யின பட்டியலின சமூக மாகச் சேர்த்தால் தங்களுக்கான உரிமை பாதிக்கப்படலாமென்ற அச்சத்தின் காரணமாக, இந்த இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், மைதேயி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாமென்று மத்திய அரசும் பரிந்துரைத் திருந்த நிலையில், அதனை செயல்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manipur1_0.jpg)
இதன்பிறகுதான் இங்குள்ள இனக்குழுக் களுக்கிடையே பிரச்சனை பூதாகரமாகி இரத்தக் களரிக் காடாகிப் போனது மணிப்பூர் மாநிலம். கடந்த சில நாள்களுக்கு முன்பு மைதேயி சமூகத்தவ ரான மாநில முதல்வர் பேசவிருந்த மேடைக்கு தீவைக்கப்பட்டது. இச்சம்பவத்துக்கு பழங்குடியினர் தான் காரணமென்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட் டது. இப்படியாக பதட்டச் சூழல் அதி கரித்த நிலையில், மைதேயி சமூகத்தின ரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே 3ஆம் தேதி, சராசந்தூர் மாவட் டத்தில் மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பாக, பழங்குடியின மக்கள் ஒற்றுமைப் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த பேரணிக்காக மாநிலம் முழுக்க ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியில், மைதேயி சமூகத்தினருக்கும், மற்ற பழங்குடியின சமூகத்தினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இம்பால், சராசந்தூர், கங்போக்பி மாவட்டங்களில் வெடித்த வன்முறையில் வீடுகள், கடைகள், வாகனங்கள், தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழர்கள் மிகுதியாக வசித்த பகுதிகளில், தமிழர்களின் வீடுகள், உணவகங்களும் சேதப்படுத்தப்பட்டன. கலவரம் குறித்த தகவல் பரவியதால் அண்டை மாவட்டங்களிலும் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கலவரத்தில் இதுவரை 54 பேர் பலியானார்கள். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manipur3.jpg)
கடந்த மே 3ஆம் தேதி, புதனன்று, மணிப் பூரின் எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கலவரப் பகுதிகளில் மொபைல் சேவைகளும் நிறுத்தப்பட்டன. கலவரப்பகுதிகளிலிருந்து இதுவரை 9,000 பேர் மீட்கப்பட்டு
பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். மணிப்பூரிலிருந்து வெளியேறும் குடிமக்களுக்கு ஓர் உதவி எண்ணை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நிலைமை சீராகும் வரை ரயில் சேவையை நிறுத்துமாறு மணிப்பூர் அரசு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, வடகிழக்கு ரயில்வே சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கலவரம் தொடர்பாக முதல்வர் பிரேன் சிங்கை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித் துள்ளார். கலவரத்தைக் கட்டுப் படுத்த போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட கவர்னர் அனுஷ்யா உய்கே உத்தரவிட்டுள்ளார். இந்துக்கள் பெரும்பான்மை யாக உள்ள மைதேயி சமூகத் தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தொடக்கம் முதலே ஆதரவு தெரிவித்துவந்தது.
ஓட்டு அரசியலுக்காக இப்பிரச்சினை மதவாதப் பிரச்சினையாக மடைமாற்றப்படு கிறதோ என்ற சந்தேகமும் அரசியல் பார்வை யாளர்களால் எழுப்பப்படுகிறது. எனவே இப்பிரச்சனையின் தீவிரத்தைக் குறைத்து சுமூக முடிவு எட்டுவதற்கு, பிரிவினைவாத அரசிய லைக் கைவிட்டு மணிப்பூர் மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க மத்திய அரசு ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதுவரை அங்கே நெருப்பு அணைக்கப்படவில்லை.
-சுந்தர் சிவலிங்கம்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-05/manipur-t.jpg)