காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொலை வழக்கில் பல்வேறு மர்மங் களும் புதிர்களும் புயலாய்ச் சுற்றியடிக்கிறது.

மே-2 அன்று மாலை தன் காரில் கிளம்பிய ஜெயக்குமார், நேராக திசையன்விளை சென்று பின்பு அங்கிருந்து மன்னார்புரம் விலக்கு சென்று, பெட்ரோல் பங்கில் தனது காருக்கு டீசல் போட்டிருக்கிறார். இதிலும் அவரது காரில் சிலர் இருந்ததும் பல்க்கிலுள்ள சி.சி.டி.வியில் பதிவாகி யிருக்கிறது. பின்பு அணைக்கரை, அங்கிருந்து உறுமன்குளம், பெட்டைகுளம் சென்றவர், நவ்வலடி அருகிலுள்ள குட்டம் போயிருக்கிறார். இந்தக் குட்டம் ஜெயக்குமார் வசிக்கும் கரைச்சுத்துபுதூரிலிருந்து ஐந்தே கிலோமீட்டர் தொலைவில் தானிருக்கிறது. பின்பு அங்கிருந்து தோப்புவிளை சென்றபோது இரவு 9 மணிக்கு மேலாகியிருக்கிறது. அதன்பின் திசையன்விளை யிலுள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குப் போயிருக் கிறார் ஜெயக்குமார். ஐந்து மணிக்கு மேல் இப்படி 45 கி.மீ தொலைவு இரவு வெகுநேரம் சுற்றவேண்டிய அவசியமென்ன? காரில் சென்றவர்கள் யார்? என்ற விசாரணையைத் தொடங்கியுள்ளது தனிப்படை.

dd

"ஜெயக்குமாருக்கு வரவேண்டியதைவிட கொடுக்கவேண்டிய கடன் அதிகமிருக்கிற தாம். தொகுதி சீட் பெறுவதற்காக “"சி'“ அளவு மதிப்புள்ள தொகையை ஜெயக்குமாரிடம் ஒருவர் கொடுத்திருக்கிறராம். ஆனால் அவரால் சீட் வாங்கமுடியாமல் போனதால் அதற்கான தொகையை அவர் திரும்பக் கொடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடி. அதுபோக பிற கடன் நெருக்கடி களும் சேர, மனஉளைச்சல், கடன் நெருக்கடிகளால் திணறியிருக்கிறார் ஜெயக்குமார்'' என்கிறார் ஏரியா புள்ளி ஒருவர்.

Advertisment

"தனது உயிருக்கு ஆபத்து என்று இப்படி ஒரு மரண வாக்குமூலக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, தற்கொலையோ அல்லது கொலை செய்யப்பட்ட தாகவோ நம்பக்கூடிய வகையில் இப்படி ஒரு எரிப்பு சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம். அதற்காக வேறொருவரின் பாடியைப் பயன்படுத்தியிருக்கலாம். அப்படியான ஒரு சந்தேகமும் எங்களுக்கு உண்டு'' என்று சொல்கிறார் அந்த புலனாய்வு அதிகாரி.

"ஜெயக்குமார் அன்றைய தினம் வீட்டை விட்டு வெளியே சென்றபோது காக்கி பேண்டுடன் வெள்ளைச் சட்டையை இன் பண்ணியிருந்தார். காலில் ஷூ இடுப்பில் பெல்ட் அணிந்திருந்தார். ஆனால் எரிந்துகிடந்த உடலின் காலில் ஷூ எரிந்தநிலையில் காணப்பட்டாலும், அவர் அணிந்திருந்த பெல்ட்டின் ஸ்டீலினான கிளிப் எரிய வாய்ப்பில்லை. நிச்சயம் சம்பவ இடத்தில் அது கிடந்திருக்கும். இரண்டு பிரிவு தடயவியல் துறையின் எக்ஸ்பர்ட்கள் சம்பவ இடத்தை ஆராய்ந்தும் இடுப்பு பெல்ட்டின் கிளிப் கிடைக்கவில்லை. இதனால்தான் கிடந்தது ஜெயக்குமாரின் பாடியா. டம்மி பாடியா என்ற சந்தேகம் எங்களுக்குண்டு'' என்கிறார்கள்.

அதேவேளையில் ஜெயக்குமாரின் குடும்பத்தார்களும் அந்த உடல் ஜெயக்குமாரின் உடலா என்று கேள்வியெழுப்பியுள்ளார்கள். அதற்கு விடைகாணும் பொருட்டே ஜெயக் குமாரின் மகன் கருத்தையா ஜெப்ரினுக்கு டி.என்.ஏ. பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. "புனே அனுப்பப்பட்டுள்ள சாம்பிள்களின் ஆய்வறிக் கையின் முடிவு வந்தால்தான் அசல் பாடியா? டம்மி பாடியா? என தெரியவரும்'' என்கிறார் அந்த அதிகாரி.

Advertisment

-பி.சிவன்

படங்கள்: ப.இராம்குமார்