வ்வொரு நாளும் தமிழக மக்கள் மனதில் மரண பீதியைக் கிளப்பிவருகிறது கொரோனாவின் வேகமான பரவல். இரண்டாவது அலை தீவிரமாக இருப்பதால், 30,000-த்தை கடந்து வருகிறது தினசரி தொற்று எண்ணிக்கை. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மரண எண்ணிக்கையும் உயர்கிறது. "இந்தப் பேரிடர் சூழ லில் மக்களைப் பாதுகாப்பதில் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்துவரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசின் மொத்த நிர்வாகமும் தூய்மையாக இயங்க வேண்டும் என்பதிலும் தீவிர அக்கறை காட்டி வருகிறார். இதற்காக ஒரு நாளைக்கு 18-லிருந்து 20 மணி நேரம் உழைக்கிறார் முதல்வர்' என்கின்றனர் கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

cm

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோட்டையிலுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ’"தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள், டி.ஜி.பி. உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பரவலைத் தடுப்பது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்த 2 விசயங்கள்தான் முக்கியமாக அலசப்பட்டிருக்கிறது. நோய்த்தொற்றும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலை யில், "ஊரடங்கிலும் சாலைகளில் மக்களின் நடமாட்டம் அதிகளவில் இருப்பது கவலையளிக் கிறது. இதேநிலை நீடித்தால் பரவலை கட்டுப்படுத்துவது கடினம்' என சொல்லியிருக்கிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். இதனையடுத்தே "டீக்கடை, நடைபாதைக் கடைக்களுக்கு அனுமதியில்லை' என்பது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

"ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதும், அதை வாங்குவதற்காக முட்டிமோதுவதும், இந்தக் கூட்டநெரிசலே கொரோனாவைக் கூப்பிட்டு மக்களின் உயிரை விருந்து வைப்பதாகவும் அமைந்துவிடுகிறது' என பரவலான விமர்சனங்கள் வருவதைச் சுட்டிக்காட்டி, விற்பனையை முறைப்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் விசாரித்திருக்கிறார்.

Advertisment

vm

"தனியார் மருத்துவமனைகள் அதிகளவில் இந்த மருந்தைப் பரிந்துரைப்பதால், தேவை அதிகரித்திருக்கிறது; ஆனால் சப்ளை குறைவாக இருக்கிறது. சப்ளையாகும் எண்ணிக்கையை சென்னை மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களுக்கும் பிரித்தனுப்பு கிறோம். பற்றாக்குறையைத் தவிர்க்க முடியவில்லை. இந்த மருந்தை கள்ளச்சந்தையில் சிலர் பதுக்கி வைத்துக்கொள்கிறார்கள்' என அதிகாரிகள் விவரிக்க... "கள்ளச் சந்தையில் விற்பவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள்' என அழுத்தமாகச் சொன்னார் ஸ்டாலின்.

அதேபோல, ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்ட ஸ்டாலினிடம், அப்போது "ஆளும்கட்சியினரின் தலையீடுகள் இருப்பதை' அதிகாரிகள் சொல்ல, "சட்டத்தை மீறும் தி.மு.க.வினர் மீது தயவு தாட்சண்யம் காட்டாமல். சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். அமைச்சர்களோ எம்.எல்.ஏ.க்களோ உங்களிடம் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் அதை அனுமதிக்காதீர்கள். அதையும் மீறி உங்களுக்கு தொல்லை கொடுத்தால் என்னிடம் சொல்லலாம். தி.மு.க.வினரின் சிபாரிசுகளுக்கு எந்தச் சூழலிலும் முக்கியத்துவம் தரவேண்டாம். நீங்கள் சுதந்திரமாக இயங்கலாம். எனக்குத் தேவை சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும்'' என காவல்துறை அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தியிருக்கிறார் ஸ்டாலின். "முதல்வரின் இந்த அனுமதி ஐ.பி.எஸ். அதிகாரிகளை உற்சாகப்படுத்தியுள்ளது'‘என்கிறார்கள்.

Advertisment

cm

உயரதிகாரிகளுடனான ஆலோசனையை முடித்த பிறகு முதல்வர் ஸ்டாலின், தமிழகம் முழுவதுமிருந்து வருகிற கொரோனா பரவல் ரிப்போர்ட்டுகள் மீது கவனம் செலுத்தினார். இதனையடுத்து, மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து சில உத்தரவுகளைப் பிறப்பித் தார். இதனையடுத்து, கோவை மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வுகளை நடத்தினார் மா.சுப்பிரமணியன். முதல்வரும் நள்ளிரவு நேரத்தில் சென்னையில் உள்ள கொரோனா வார் ரூமுக்கு சென்று ஆய்வு செய்து, மக்களின் அழைப்புக்கு பதிலளித்தார். சமூக வலைத்தளம் மூலம் தனது அக்கவுண்டிற்கு டேக் செய்யப்படும் தகவல்களுக்கும், பிரச்சினை களுக்கும் முக்கியத்துவம் தந்து பிரச்சினைகளைத் தீர்த்து வருகிறார் ஸ்டாலின். போலீஸ் கெடு பிடிக்குள்ளாகி, தனது மகனுக்கு மருந்து வாங்க முடியாமல் திரும்பியவரின் ட்வீட்டைப் பார்த்து, போலீஸ் மூலமே அவரது வீட்டுக்கு மருந்தை அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.

இதற்கிடையே "இறப்பவர் களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாகவும், மயானங்களுக்கு வரும் பிணங்களின் எண்ணிக்கை உண்மையைக் காட்டிவிடும்' என்ற பா.ம.க. நிறுவனர் டாக் டர் ராமதாஸ், "ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்' என சுட்டிக்காட்டியது ஸ்டாலி னின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

கொரோனா நோயாளி களுக்குப் பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து விற் பனையை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 15-ந் தேதி துவக்கினர். இதற் காக 6 கவுண்டர்கள் திறக்கப் பட்டன. "ஒரு நாளுக்கு 300 டோஸ் மட்டுமே விற் பனைக்கு அனுமதிக்கப்படு கிறது' என்ற தகவலால் மருந்தை வாங்குவதற்காக மக்களின் கூட்டம் அலை மோதியது. முகக்கவசம் மூக்குக்கு கீழே இறங்க, சமூக இடைவெளி சிறிதும் இல்லை. போலீசாராலும் கட்டுப் படுத்த முடியவில்லை. அவர் களை கட்டுப்படுத்த போலீ ஸார் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். "ஒரு நாளைக்கு 300 டோஸ் மருந்து மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப் பட்டிருக்கிறது' என அறிவிக் கப்பட்டதால் ஏகத்துக்கும் தள்ளுமுள்ளுகள் ஏற்பட்டன. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது போலீஸ். மருந்து கிடைக் காதவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் நாம் பேசியபோது, கடுமையான கோபம் எதி ரொலித்தது. தமிழகம் தழுவிய அளவில் இதே நிலைதான்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணிய னிடம் நாம் பேசியபோது, "ரெம்டெசிவிர் மருந்து எல்லோருக்கும் தேவைப்படாது. அவசரத் தேவையிருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்தைப் பரிந்துரைக்க வேண்டும். தேவையற்றவர்களுக்கு பரிந்துரைக்கக்கூடாது. இதனை மருத்துவர்களுக்கு அறிவுறுத்த வல்லுநர் குழு ஓரிருநாளில் அமைக்கப்படும். சென்னையில் இருப்பதுபோல கோவை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்ட தலைநகரங்களிலும் கொரோனா கட்டளை மையம் ஏற்படுத்தப் படும். தடுப்பூசிகள், படுக்கைகள், ஆக்சிஜன்கள் ஆகியவை பற்றாக்குறையில்லாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன'' என்றார் உறுதியாக.

கூட்டம் கூடி கும்மியடிக்கும் கொரோனாவைக் கூப்பிடுவதைத் தவிர்க்கும் வகையில் ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவமனைகளிலேயே பெற்றுக் கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. முதல்வர் ஸ்டா-ன் கோரியபடி, தினசரி தேவைக்கான ரெம்டெசிவரை 7,000 என்பதிலிருந்து 20,000 என உயர்த்தி அறிவித்தது மத்திய அரசு. தமிழகம் எப்போது மீளும் என மக்கள் அச்சப்படும் பேரிடர் போர்க்களத்தில் சளைக்காமல் போராடிக்கொண்டிருக்கிறது ஸ்டாலின் அரசு. மக்களின் பாதுகாப்புதானே அரசின் முதல் கடமை!

___________________

நோயாளிகளின் கழுத்தை நெரித்த மருத்துவமனைகள்

தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவர் மருந்தை அதிகளவில் பரிந்துரைத்தாலும் நாளொன்றுக்கு 300 பேருக்கு மட்டுமே ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்துகள் வழங்கப்பட்டன. அத்துடன் அரசு மருத்துவமனைகளிலும் தேவைப் படும் நோயாளிகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்தி வந்ததால், டிமாண்ட் அதிகமானது.

cm

தனியார் மருத்துவமனைகள் தங்களுடைய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகளின் முழு விவரங் களையும் சேகரித்து தங்களுடைய மருத்துவமனை ஊழியர்களைக் கொண்டு தினந்தோறும் அரசு விற்பனை செய்யும் இடத்தில் நோயாளிகளின் உறவினர்களை போல வரிசையில் நின்று கொண்டு மருந்துகளை வாங்கிச் சேகரித்து வைத்துக்கொள்ளும் பணியைத் தொடர்ந்து செய்து வந்த அவலமும் நடந்தது.

சில தனியார் மருத்துவமனைகள் இப்படி வாங்கி வந்த ரெம்டெசிவரை தங்களிடம் அட்மிட்டாகியுள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்தவும் இல்லை. நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்தை அவர்களின் உறவினர்களிடம் சொல்லி மருந்தை நீங்களே வெளியில் வாங்கித் தாருங்கள் என்று அவர்களை ஒரு நாள் முழுவதும் அலைக்கழிப்பது வழக்கமாக இருந்தது. அப்படி அலைந்தும் கிடைக்கவில்லை என்று நோயாளிகளின் உறவினர்கள் திரும்பிவரும்போது அவர்களிடம் மருத்துவமனை நிர்வாகம், நாங்களே அந்த மருந்தைப் போடுகிறோம் என்று கூறி 2 டோஸ் மருந்துகளை தனியார் மருத்துவமனைகளில் நோயாளி களுக்கு போட்டுவிட்டு அவர்களிட மிருந்து 34 ஆயிரம் ரூபாய் வசூ லிப்பதும் சில இடங்களில் நடந்தது.

இந்த மருந்து வெளியே கள்ள சந்தையில் விற்பனையானது. அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபிறகு அப்படி விற்பனையாவதில்லை. தனியார் மருத்துவமனைகளே தங்களுடைய ஊழியர்களை கொண்டு நோயாளிகளின் மொத்த தகவல்களையும் அரசிடம் காட்டி மருந்துகளை மொத்தமாக வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இத்தகைய புகார்கள் குவிந்த நிலையில், ரெம்டெசிவர் மருந்து விநியோகத்தில் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றம், கூட் டத்தையும் அலைக்கழிப்பையும் தவிர்க்கும் என்றாலும், தனியார் மருத்துவமனைகளுக்கான நேரடி சப்ளை, அங்குள்ள நோயாளிகளுக்கு உரிய முறையிலும் உரிய விலையிலும் கிடைக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதையும் அரசு கண்காணிக்க வேண்டியது அவசியம்.

-துரை.மகேஷ்