akilesh yadav

கிட்டத்தட்ட 24 ஆண்டுக்காலம் ஒடிஸôவின் முதல்வராகத் தொடர்ந்துவந்த நவீன் பட்நாயக்கின் பயணத்துக்கு இடைக்காலத் தடையை ஏற்படுத்தியுள்ளது பா.ஜ.க.வின் வெற்றி.

Advertisment

மக்களவைத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து நடந்த மாநிலங்களில் ஒன்று ஒடிஸா. இங்கு நான்கு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 74 தொகுதிகளை வென்றால் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில் நடந்துமுடிந்த தேர்த-ல் 78 தொகுதிகளில் வென்று பா.ஜ.க. ஆட்சியமைக்கவுள்ளது.

செயல்பாடுகளில் எளிமை, மக்கள் நல அரசாட்சி, பழங்குடியினர் முன்னேற்றம் என தொடர்ச்சியாக ஒடிஸôவை முன்னேற்றப் பாதையில்தான் நவீன் பட்நாயக் செலுத்திவந்தார். ஆனாலும் 2014-ல் 10, 2019-ல் 23 என ஒடிஸôவில் தன் செல்வாக்கை விரிவுபடுத்தி வந்த பா.ஜ.க. இந்த முறை ஆட்சியையே பிடித்துவிட்டது. மாறாக, 2014#ல் 16, 2019#ல் 9 என பின்னடைவைச் சந்தித்த காங்கிரஸ், இந்த முறை கூடுதலாக ஐந்து தொகுதிகளுடன் 14 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

Advertisment

மக்களவைத் தேர்தலை எடுத்துக்கொண்டாலும், பா.ஜ.க. மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 19 தொகுதியை அள்ளியெடுத்துக்கொண்டு, பிஜு ஜனதா தளத்துக்கும், காங்கிரஸýக்கும் தலா ஒரு தொகுதியை மட்டுமே விட்டுக்கொடுத்திருக்கிறது.

வியூக ரீதியில் பார்த்தால், எதிர்க்கட்சி என்பதால் பா.ஜ.க. ஆரம்பம் முதலே அடித்து ஆடும் தாக்குதல் பிரச்சாரத்தை மேற்கொண்டது. ஒடிஸô முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து, கட்சியின் முக்கியப் பொறுப்புக்கு வந்த கார்த்திகேயப் பாண்டியன் குறிவைக்கப்பட்டார்.

முத-ல் அவரை அந்நியனாகச் சித்தரித்து, அவர் தமிழ்நாட்டி-ருந்து வந்து, ஒரிய மாநிலத்தின் ஆளும் கட்சியின் முக்கியப் பொறுப்புகளை வகிப்பதாகவும், ஒரிய மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் பிரச்சாரம் முழுவதிலும் தொடர்ந்து சித்தரித்தார்.

மோடி, தான் ஒரு தேசத்தின் பிரதமர் என்பதை மறந்து, பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் கருவூலச் சாவி தமிழகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக கொஞ்சமும் கூச்சமின்றிப் பிரச்சாரம் செய்தார். கட்சியின் முக்கிய நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தமிழன் மூலம், ஒடிஸô ஜெகந்நாதரின் கருவூலங்கள் தமிழகத்துக்குச் செல்வதாக திருட்டுப் பழி சுமத்தினார். உள்துறை அமைச்சரான அமித்ஷா, ஒரிய அரசிய-ல் ஒரு தமிழன் உயர் பதவி வகிக்கலாமா என மோடிக்கு ஒத்தூதினார்.

அதையும் தாண்டி, மாநிலத்தின் முதல்வரான நவீன் பட்நாயக் உடல்நலமில்லாமல் இருப்பதாகவும், அதைப் பயன்படுத்திக்கொண்டு மாநில நிர்வாகம் உள்ளிட்ட அரசியல் செயல்பாடுகளில் கார்த்திகேயப் பாண்டியன் செல்வாக்கு செலுத்துவதாகப் பேசுமளவுக்கு தரம் தாழ்ந்த விமர்சனத்துக்கும் பா.ஜ.க. சென்றது.

அதற்குப் பதிலடி தந்த நவீன் பட்நாயக், "எனக்கு உடல்நலமில்லையென்றால் ஒரு போன் செய்து விசாரித்தால் போயிற்று. அதற்கு மோடிக்கு நேரமில்லையா?' என்று கேள்வியெழுப்பினார். அதன் பொருள், "எனக்கு உடல்நலமில்லையென்றால்… என்னைச் சுற்றி சதிவலை பின்னப்படுகிறது எனில் ஒரு பிரதமராக அதைக் கவனித்து சரிசெய்வது பிரதமராக உங்கள் பணிதானே… நீங்கள் அதைச் செய்வதை விடுவித்துவிட்டு, மேடையில் மட்ட ரக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறீர்கள்...' என்ற ரீதியில் சூசகமாக பதிலடி தந்தார்.

ஆனால் வெற்றிக்கான ஏக்கத்தி-ருந்த பா.ஜ.க. அறத்தையோ, நியாயத்தைப் பற்றியோ சிறிதும் கவலைப்படவில்லை. வெற்றிக்காக எதையும் செய்யலாம் என்ற கொள்கையோடு, கார்த்திகேயப்பாண்டியனைப் போன்ற தோற்றமுடையவரைப் பிடித்து அவரை இழிவுபடுத்தும் விதமான பிரச்சார வீடியாக்களை சமூக ஊடகங்களில் பரப்ப ஆரம்பித்தது. அது, கார்த்திகேயப் பாண்டியனைத் தாண்டி, ஒரு மாநில மக்களையே இழிவுபடுத்துகிறது என்கிற கவலைகூட தேசியக் கட்சியான பா.ஜ.க.வுக்கு இல்லை.

பா.ஜ.க.வின் அரசியல் தொடக்கமே பிரிவினை, துருவப்படுத்தல் போன்றவற்றையே மையமாகக் கொண்டது என்பதால், ஒரிஸô தேர்த-லும் அந்தத் துருவப்படுத்தலையே மையமாகக் கொண்டு பிரச்சாரம் செய்து வெற்றியும் பெற்றிருக்கிறது பா.ஜ.க.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஒடிஸôவைப் பற்றி பேசிய மோடி, ஜெய் ஜெகந்நாத் என முடித்தார். ராமர் கைவிட்டதால், ஜெகந்நாதரின் கையைப் பிடித்திருக்கிறாரா?

யார் முதல்வர்?

வெற்றிபெற்ற கையோடு ஒடிஸôவின் முதல்வராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க. ஒடிஸô பா.ஜ.க.வின் ஆறு தலைவர்கள் முதல்வர்கள் கனவில் உள்ளனர். ஆனால் பா.ஜ.க. சிட்டிங் எம்.பி. ஜுவல் ஓரம், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, பா.ஜ.க. தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பண்டா, தர்மேந்திர பிரதான் ஆகிய நான்கு பேரே இந்த ரேஸில் முன்னணியில் உள்ளனர்.

"பூரி ஜெகந்நாதரே மோடியின் பக்தர்தான்'’என பிரச்சாரத்தில் பேசியவர் சம்பித் பத்ரா. தன்னைத் தானே கடவுளின் அவதாரம் என சொல்-க் கொண்டவர் மோடி. இதனால் மோடியின் அருட்பார்வை சம்பித் பத்ரா பக்கம் திரும்புமா அல்லது ஆர்.எஸ்.எஸ்.ஸின் முடிவுதான் ஒடிஸô முதல்வரைத் தீர்மானிக்கப்போகிறதா என்பது மெல்ல மெல்ல தெரியவரும்.

ஒடிஸô பா.ஜ.க.வுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் தந்த மாநிலம் என்றால், கசப்பான அதிர்ச்சி வைத்தியம் தந்த மாநிலம் உத்தரப்பிரதேசம். மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணி மட்டும் 45 தொகுதிகளில் வெற்றிபெற, பா.ஜ.க.வுக்கு வெறும் 33 தொகுதிகளே கிடைத்துள்ளது. ஆனால் 2019 தேர்த-ல் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. 62 இடங்களை வென்றெடுத்ததை ஒப்புநோக்க, பாதிக்குப் பாதியாக அதன் வெற்றி சதவிகிதம் சரிந்துள்ளது.

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான மோடியே, வாரணாசி தொகுதியில் முதல் மூன்று சுற்றுகளின்போது காங்கிரஸ் வேட்பாளரைவிட பின்தங்கியது பரபரப்பாகப் பேசப்பட்டது. அத்துடன் 2019#ல் நாலரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற மோடி, இந்த முறை வெறும் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்திலேயே வென்றிருக்கிறார். இது தொகுதி மக்கள் மத்தியில் பிரதமரின் ஆளுமை சரிந்திருப்பதற்கு வெளிப்படையான சான்று.

அடுத்ததாக, ராகுலை கடந்த முறை அமேதி தொகுதியில் ஸ்மிர்தி ரானி வென்றார். இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிர்தி, தேர்த-ன் ஆரம்பகட்டம் முதலே சர்ச்சையாகப் பேசிவந்தார். அமேதி தொகுதியில் போட்டியிடாத ராகுலை சீண்டிச் சீண்டி சர்ச்சைக்கு இழுத்தார். வயநாடு தொகுதியில் ராகுல் வேட்புமனு தாக்கல் செய்தததும், அமேதி தொகுதியைப் போலவே, வயநாடு தொகுதியி-ருந்தும் அத்தொகுதி மக்கள் விரட்டுவர் எனப் பேசினார்.

மாறாக, அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.ஷர்மா 1 லட்சத்து 67 ஆயிரம் வாக்குகள் ஸ்மிர்தியை விட அதிகமாகப் பெற்று ஸ்மிர்தி ரானியைத் தோல்வியைத் தழுவச் செய்துள்ளார்.

இந்தத் தேர்தல் முழுவதும் பா.ஜ.க. பிரச்சாரத்தின் மைய முடிச்சாக இருந்த நாலைந்து கருப்பொருட்களில் ஒன்று ராமர் கோவில். ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு எதிர்க்கட்சியினர் வரவில்லை என திரும்பத் திரும்ப பா.ஜ.க. குற்றம்சாட்டியது. ஆனால் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைஜாபாத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் லல்லு சிங்கை, சமாஜ்வாடி வேட்பாளர் தோற்கடித்துள்ளார்.

வழக்கமாக, உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி வியூகம் என்னவெனில் பெரிய கட்சியான சமாஜ்வாடியின் இடைநிலை வாக்குகளைப் பிரிப்பதாகும். இதன்மூலம், யாதவர்களின் வாக்கு சமாஜ்வாடிக்குச் சென்றுவிடும். யாதவர்கள் தவிர்த்த பிற ஓ.பி.சி.யினருக்கு அதிக வேட்பாளர்கள் வாய்ப்பை அளித்து ஓ.பி.சி. ஓட்டு வங்கியைப் பிரித்து வெற்றிபெறுவதை கடந்த இரு தேர்தல்களாக பா.ஜ.க. வியூகமாக வைத்திருந்தது.

அதனால் இந்த முறை சுதாரித்துக்கொண்ட அகிலேஷ் யாதவ், தனது யாதவ சமூகத்தினருக்கு குறைவான சீட்டுகளைக் கொடுத்து பிற ஓ.பி.சி. சமூகத்தினர், முஸ்-ம்கள், உயர் ஜாதியினர் என கலவையாக வேட்பாளர்களைத் தேர்வுசெய்திருந்தார். தவிரவும், பா.ஜ.க.வுக்குப் போட்டியாக அதிகளவில் பேரணிகளை நடத்தி, ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்தும் பிரச்சாரம் செய்தார்.

அந்த வியூகம் பலனளித்திருப்பது பளிச்சென்று தெரிகிறது. மொத்தத்தில் புல்டோசர் அரசியலை மட்டுமே நம்பியிருந்த யோகியின் கோட்டையை மோதிச் சரித்திருக்கிறது சைக்கிளும் கையும்!