Advertisment

பட்ஜெட் சிக்ஸர்! பெண்களுக்கு மாதம் ரூ.1,000! சாதகமா? சவாலா?

budget

டப்பு நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை, 20ஆம் தேதி திங்களன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அவர் பேசத் தொடங்கியதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடு பட்டனர். அந்த அமளிகளுக்கு இடை யிலும் தனது உரையை நிறுத்தாமல் பட்ஜெட் தாக்கலில் கவனமாக இருந்தார் நிதியமைச்சர். இருப்பினும் கூச்சலும் அமளியும் தொடர்ந்தபடியே இருந்தது. சபாநாயகர் எச்சரித்தும் அமளி அடங்க வில்லை. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

Advertisment

budget

"கடும் நிதி நெருக்கடியிலும், மிகக் கடினமான சீர்திருத்தங்களை மேற் கொண்டு, வருவாய்ப் பற்றாக்குறையை ரூ.30,000 கோடியாகக் குறைத்துள்ளோம

டப்பு நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை, 20ஆம் தேதி திங்களன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அவர் பேசத் தொடங்கியதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடு பட்டனர். அந்த அமளிகளுக்கு இடை யிலும் தனது உரையை நிறுத்தாமல் பட்ஜெட் தாக்கலில் கவனமாக இருந்தார் நிதியமைச்சர். இருப்பினும் கூச்சலும் அமளியும் தொடர்ந்தபடியே இருந்தது. சபாநாயகர் எச்சரித்தும் அமளி அடங்க வில்லை. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

Advertisment

budget

"கடும் நிதி நெருக்கடியிலும், மிகக் கடினமான சீர்திருத்தங்களை மேற் கொண்டு, வருவாய்ப் பற்றாக்குறையை ரூ.30,000 கோடியாகக் குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் இது மேலும் குறைக் கப்படும்'' என்பதை பெருமையாகச் சொன் னார் தியாகராஜன். இந்த பட்ஜெட்டில், இந்தித் திணிப்பு எதிர்ப்புக்காக உயிர்நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம். அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும். நாட்டுப்புற கலை களையும், கலைஞர்களையும் பாதுகாக்க 11 கோடி ஒதுக்கீடு. வயது முதிர்ந்த 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம். தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும். தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி, 40 லட்சமாக அதிகரிப்பு உள்ளிட்டவற்றை அறிவித்தார்.

மேலும், இலங்கை மறுவாழ்வு முகாம் களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட, வரும் நிதியாண்டில் 223 கோடி ஒதுக்கீடு. சென்னை கிண்டியில் கட்டப்படும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக் கப்படும். தொழிற்சாலைகளில் பணியாற்று வோருக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவு செய்யப்படும். பாளையங் கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு. மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு. இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் ஆகியவற்றை நிதியமைச்சர் அறிவித்தார்.

Advertisment

budget

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும் என்பதைப் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். சென் னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் அமைக்கப்படும். பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ரூ.200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சிப்காட் வளாகத்தில் ரூ.80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் உள்பட, மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளையும், ஒவ்வொரு துறைகளின் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடுகளையும் செய்திருக்கிறார் நிதியமைச்சர்.

அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பினை நிதியமைச்சர் வெளியிட்டது பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன்படி, தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், செப்டம்பர் 15ஆம் தேதி, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்காக இந்த பட்ஜெட்டில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பணிக்குச் செல்லாமல் இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்களுக்கு உதவிகரமாகவும், வீட்டை நிர்வகிப்பதற்கான அங்கீகாரமாகவும் இந்த உரிமைத்தொகை அமையும். ஒரு கோடி குடும்பத்தலைவிகள் வரை இந்த உரிமைத்தொகையைப் பெறக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான தகுதிவாய்ந்த பெண்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்வார்கள் என்பதுதான் பலரது கேள்வியாகவும், சவாலாகவும் உள்ளது. இதனை நன்முறையில் செயல்படுத்தும்பட்சத்தில், வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை தி.மு.க. கூட்டணி எதிர்கொள்வதற்கு மிகவும் சாதகமாக இருக்கக்கூடும். ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட், மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட்டாக இருக்கிறது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

-இளையர்

nkn220323
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe