லோ தலைவரே, இலங்கை இன அழிப்புப் போரின் அடையாளமாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண், இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டமா ஆக்கப்பட்டிருக்கு.''

""ஆமாம்பா... தமிழகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவிச்சிருக்காங்களே...''

ra

""தலைவரே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூன்று நாள் பயணமாக இலங்கை சென்று 7-ந் தேதிதான் இந்தியா திரும்பினார். திரும்பியவர், இனி தமிழர்களுக்கு அங்கே நல்லதே நடக்கும்னு நம்பிக்கையோடு சொன்னார். அவர் அப்படிச் சொன்ன அன்றே, ராஜபக்சே சகோதரர்கள் இப்படியொரு கொடூரத்தை அரங்கேற்றியிருக்காங்க. அரசு நிலத்தில் rrஅனுமதியின்றி கட்டப்பட்டதால அதை இடிச்சோம்னு பல்கலைக்கழகத் துணை வேந்தர் சொல்றாரு.''

Advertisment

""ராஜபக்சே சகோதரர்கள், தமிழினத்தின் மீது கடும் வன்மத்தைத் தொடர்ந்து காட்டறாங்க. இதை உலக நாடுகளும் கவனிச்சி கிட்டுதான் இருக்கு. இதுக்கெல்லாம் ஒரு நாள் காலமே தண்டனை கொடுக்கும்னு நாம் ஆறுதலடைய வேண்டியதுதான். இப்ப தமிழக அரசியலுக்கு வருவோம். கவர்னர் மாளிகையில் சலசலப்பு தெரியுதே?''

""ஆமாங்க தலைவரே, எடப்பாடி அரசின் அத்தனை தவறுகளுக்கும் ராஜ்பவன் பாதுகாப்பாக இருப்பதாகவும், எடப்பாடியின் ஊழல் விவகாரங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் டெல்லி நினைச்சதால, அவரை மாற்றிவிட்டு, அவருக்கு பதில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பிரபலத்தை கவர்னராக்கும் முடிவிற்கு மத்திய அரசு வந்திருக்கு. இதையறிந்த கவர்னர், முதல்வர் எடப்பாடிக்கு எதிரானவராகத் தன்னைக் காட்ட ஆரம்பிச்சதோடு, அவருக்கு அப்பாயின்ட்மெண்ட் கூட கொடுக்காமல் இழுத்தடிக்கிறார். கவர்னருக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இருப்பதால், அவர் தனது பதவியைப் போராடித் தக்கவைத்துக் கொண்டுவிட்டாராம்.''

governor

Advertisment

""முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் இணக்கமாக வெளியில் காட்டிக் கொண்டாலும், திரைமறைவில் இவர்களுக்கிடையில் பவர் யுத்தம் தீவிரமாக நடக்குதே?''

""உண்மைதாங்க தலைவரே, எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்தில்கூட தன் பெயரை உச்சரிப்பதில்லை என்றும், தான் மட்டுமே ஆட்சியின் கதாநாயகனாக காட்டிக்கொள்கிறார் என்றும் ஓ.பி.எஸ். கொதித்துக்கொண்டிருக்கிறார். எடப்பாடியோ, சசிகலா, திவாகரன், தினகரன் என மன்னார்குடித் தரப்பினர் அனைவரோடும் பகிரங்கமாகவே ஓ.பி.எஸ்.சும் அவர் குடும்பமும் உறவுகொண்டாடுவதாகவும், அதேபோல் பா.ஜக.வின் மேலிடத்துடன் வலிமையான நட்பை ஏற்படுத்திக்கொண்டு, அவர் முதல்வர் பதவியைக் குறிவைக்கிறார் என்றும் கொந்தளிக்கிறாராம். அதனால் இவர்களுக் கிடையே ரகசிய யுத்தம் தொடர்ந்தபடியே இருக்கிறது. இதைப்பார்த்த கட்சியின் சீனியர்கள், யார் கை வலுக்கிறதோ அவர்களுக்கு ஜே’ போடலாம். அதுவரை இருவரிடமும் சமமாக நட்பு பாராட்டலாம் என்று நினைக்கிறார்களாம்.''’’

""அரசுத்துறைகளில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துதாமே?''’

""பெரும்பாலான அரசுத் துறைகளில், பவர் புள்ளிகளுக்கு நெருக்கமான நிறுவனங்களும் தொழிலதிபர்களும் ஆதிக்கம் செலுத்தறதா பரவலா புகார்கள் இருக்கு. குறிப்பா சொல்லனும்னா, அரசின் வீட்டுவசதித் துறையைப் பிரபல கட்டுமான நிறுவனமான பாஷ்யம் பில்டர்ஸ் ஆட்டிப் படைக்குதுன்னு கோட்டைத் தரப்பே முணுமுனுக்குது. அமைச்சர்கள் பலரின் முதலீடுகள் இந்த பாஷ்யம் பில்டர்சில் கொட்டிக்கிடப்பதால், இந்த நிறுவனத்தின் ஆக்டோபஸ் கரங்கள் வீரியமாக நீளுதாம். எனினும், தலைமைச் செய லாளர் சண்முகத்துக்கும் பாஷ்யம் பில்டர்சுக்கும் ஏழாம் பொருத்தமாயிடுச்சாம். அதனால் சண்முகம் மூன்றாம் முறையாக பணி நீட்டிப்பு பெறுவதைத் தடுக்க, இந்த நிறுவனம் டெல்லிவரை சென்று பிரேக் பிடிக்குதாம். இதுதான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பின் இப்போதைய ஹாட் டாக்.''

""அதிருக்கட்டும், தமிழக காங்கிரஸ் நிலவரம், அதன் அகில இந்தியத் தலைமையை ரொம்பவே கலவரப்படுத்துதாமே?''

dd

""உண்மைதாங்க தலைவரே, அண்மையில் தமிழகம் தழுவிய அளவில் 400-க்கும் மேற்பட்ட பதவிகளில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டாங்க. இதில் கரன்ஸி விளையாட்டு அதிகமா நடந்திருப்பது பற்றியும் நாம் ஏற்கனவே பேசியிருக்கோம். பதவிகளைக் கொடுக்க மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஹெவியா வசூலித்திருப்பதாகவும், அதற்கு மேலிடப் பார்வை யாளர்களான தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்லபிரசாத், சஞ்சய்தத் ஆகியோர் உடந்தையாக இருப்ப தாகவும் ராகுல்காந்தி வரை புகார்கள் தெரிவிக்கப்பட்டிருக்கு. குறிப்பா, அழகிரிக்கு எதிரா இருக்கும் கோஷ்டித் தலைவர்கள் அத்தனை பேரும் டெல்லியிடம் போட்டுக் கொடுத்திருக்காங்க. இதைக்கேட்டு அகில இந்திய அளவிலான சீனியர்கள் அனைவரும் டென்ஷன் ஆயிட்டாங்களாம்.''’

""சத்தியமூர்த்திபவனில் புரோக்கர்களின் நடமாட்டம் இப்போதும் அதிகமாக இருக்குன்னு செய்திகள் அடிபடுதே?''

""ஆமாங்க தலைவரே, இந்த புரோக்கர்கள் மூலம் பலரும் கரன்ஸிகளைக் கொட்டிக்கொடுத்து பதவிகள் வாங்கியதாகவும் சொல்கிறார்கள். இப்ப அந்த புரோக்கர்கள், சட்டமன்றத் தேர்தலில் சீட் வாங்கித் தர்றதாவும் கட்சி நிர்வாகிகளிடம் டீலிங் பேசறாங்களாம். இதுவும் டெல்லித் தலைமையின் கவனத்துக்குப் போயிருக்கு. அதனால், தமிழக, புதுவை சட்டமன்றத் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க அமைக்கப்பட்டிருக்கும் வீரப்ப மொய்லி, பல்லம்ராஜூ, நிதின் ராவத் ஆகியோர் அடங்கிய குழுவிடம், தமிழக காங்கிரஸில் நடக்கும் வசூல் விவகாரங்கள் குறித்து ரகசியமாக விசாரிக்கும் பொறுப்பை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்படைச்சிருக்குதாம். கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 மாதங்கள் இருந்த நிலையில், அப்போதைய காங்கிரஸ் கமிட்டித் தலைவரா இருந்த திருநாவுக்கரசர் மாற்றப் பட்டது போல், கே.எஸ்.அழகிரியும் விரைவில் மாற்றப்படலாம்ங்கிற பேச்சு டெல்லியிலேயே அடிபடுது. இந்த நிலையில் இங்கே அழகிரி நடத்திய மாவட்ட, மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால், நிர்வாகிகள் பலரும் கூட்டத்தைப் புறக்கணிச்சிட்டு எஸ்கேப் ஆயிட்டாங்களாம்.''

""சசிகலா விடுதலை விவகாரம் எந்த நிலையில் இருக்கு?''

sasirelatives

""சசிகலா ஜனவரி 27 வாக்கில் விடுதலை ஆகலாம்னு எதிர்பார்க்கப்படுது. அவரோடு இளவரசியும் வெளியே வருகிறார். அதே சமயம் சசியுடன் கைதான ஜெ.வின் முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரனுக்கு மட்டும் அவருக்கான அபராதத் தொகை கட்டப்படவில்லையாம். அவரை மெதுவாக வெளியில் வந்தால் போதும்னு சசிகலா சொல்லிவிட்டாராம். இந்த நிலையில் வெளியில் வரும் சசிகலாவை, எந்தெந்த ஆளும்கட்சிப் பிரமுகர்கள் சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும் துடிக்கிறாங்கன்னு கவனிக் கும்படி உளவுத் துறைக்கு உத்தரவிட்டி ருக்கிறாராம் எடப்பாடி. அதேபோல் மன்னார்குடித் தரப்பையும் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பிச்சிருக்கு உளவுத்துறை.''

""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். சசிகலா வெளியில் வர இருக்கும் இந்த நேரத்தில், இளவரசியின் மகனான விவேக் ஏக உற்சாகத்தில் இருந்தார். இந்த நிலையில் இவரது மாமனாரான பாஸ்கரன் என்கிற கட்டை பாஸ்கரை, 8-ந் தேதி இரவு அவரது அண்ணா நகர் வீட்டில் வைத்து முற்றுகையிட்டது ஆந்திர போலீஸ். வசமாக சிக்கிக்கொண்ட அவரை தமிழக போலீஸின் உதவியோடு இரவோடு இரவாகக் கைதுசெய்து, ஆந்திராவுக்கு அள்ளிக்கொண்டு போய்விட் டார்கள். செம்மரக் கடத்தல் விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்கிறது காவல்துறைத் தரப்பு.''

__________

புதுச்சேரி ஃபைட்!

pondy

துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டதிலிருந்தே அவருக்கும் புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே ஃபைட்தான். பா.ஜ.க.வால் நியமிக்கப்பட்ட கிரண் பேடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மதிப்பதில்லை- அதிகாரத்தில் தலையிடுகிறார் என்பது முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டு. யூனியன் பிரதேசத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரங்கள் அதிகம் என்பது கிரண்பேடியின் நிலைப்பாடு. அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஆளுநருக்கும் முதல்வருக்கும் மோதல் வலுத்து வந்த நிலையில், உண்ணாவிரதம்-தர்ணா எனப் பல போராட்டங்களை காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி நடத்தினார். அவருக்கு எதிராக பா.ஜ.க.வினரும் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

தமிழகத்துடன் புதுச்சேரிக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கிரண்பேடியை மத்திய பா.ஜ.க .அரசு திரும்பப்பெற வேண்டும் என ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தது காங்கிரஸ் கட்சி. அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி அண்ணா சிலை அருகே முதல்வர் நாராயணசாமியும் காங்கிரஸ் அமைச்சர்கள்-எம்.எல்.ஏக்கள் உள் ளிட்டோரும் ஜனவரி 8ந் தேதி சாலையில் உட்கார்ந்து, சாப்பிட்டு, இர வில் அங்கேயே உறங்கும் போராட்டத்தை தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர்-முதல்வர் இடையிலான பவர் ஃபைட்டின் அடுத்த கட்டம் இது.

-சுந்தரபாண்டியன்