உலகில் நடக்கும் ஒவ்வொரு போரும், பல உயிர்களைப் பலி கொள்வதோடு சில படிப்பினை களையும் விட்டுச்செல்கிறது. அதுமட்டுமல்லாது, ஏதோவொரு நாடு, மற்ற நாடுகளை நாட்டாமை செய்யு மிடத்துக்குச் செல்வதும், அதுவரை வலுவாக இருந்த சில நாடுகள் பின்னடைவைச் சந்திப்பதையும் போர்களின் விளைவாகப் பார்க்க முடிகிறது. அதேபோல இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஜப்பான், ஜெர்மன், இத்தாலி போன்ற நாடுகளெல்லாம் பலத்த அடிவாங்க, அமெரிக்கா, உலக நாடுகளின் தலைவனாக உயர்ந்தது. அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் சோவியத் ரஷ்யா உருவெடுத்தது. ஒரு கட்டத்தில் சோவியத் ரஷ்யா சிதறவும், அமெரிக்கா மட்டுமே தனித்த நாட்டாமைக்கார நாடாக வளர்ந்தது. இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்குப் போட்டியாக சீனா உருவெடுத்துவருகிறது. அதேபோல இந்தியாவும் அணு ஆயுதச் சோதனை, விண்வெளிச்சாதனை நடத்தி, "நான் வளர்ந்துட்டேன் மம்மி' என்று பெருமையுடன் சொல்லிக்காட்டுகிறது. இன்னொரு புறம் அமெரிக்காவின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும்விதமாக, அல்கொய்தா அமைப்பினர், கடந்த 2001-ல், அமெரிக்காவினுள் பட்டப்பகலில் நுழைந்து, அவர்களின் விமானங்களையே திட்டமிட்டுக் கடத்தி, இரட்டைக்கோபுரத் தாக்குதலை நடத்தினர்.
"குவாட்' உருவாக்கம்
இப்படியான பரபரப்பான அரசியல் சூழலில் தான், ஆசிய நாடுகளுடன் கைகோர்த்து, ஆசிய பசிபிக் கடல்பகுதிகளில் தங்களது ராணுவ வலிமையை அதிகரிப்பதன் அவ சியத்தை அமெரிக்கா உணர்ந் தது. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரைப்பகுதியிலிருந்து அமெரிக்காவின் மேற்கு கடற்கரை வரை, இந்தோலி பசிபிக் மண்டலத்தில் தனது வலிமையை அதிகரிப்பதற்காக இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் இணைந்து குவாட் (ணமஆஉ) என்ற அமைப்பை அமெரிக்கா உருவாக்கியது. இந்த நான்கு நாடுகளுக்கிடையே கடல்சார் பாதுகாப்
உலகில் நடக்கும் ஒவ்வொரு போரும், பல உயிர்களைப் பலி கொள்வதோடு சில படிப்பினை களையும் விட்டுச்செல்கிறது. அதுமட்டுமல்லாது, ஏதோவொரு நாடு, மற்ற நாடுகளை நாட்டாமை செய்யு மிடத்துக்குச் செல்வதும், அதுவரை வலுவாக இருந்த சில நாடுகள் பின்னடைவைச் சந்திப்பதையும் போர்களின் விளைவாகப் பார்க்க முடிகிறது. அதேபோல இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஜப்பான், ஜெர்மன், இத்தாலி போன்ற நாடுகளெல்லாம் பலத்த அடிவாங்க, அமெரிக்கா, உலக நாடுகளின் தலைவனாக உயர்ந்தது. அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் சோவியத் ரஷ்யா உருவெடுத்தது. ஒரு கட்டத்தில் சோவியத் ரஷ்யா சிதறவும், அமெரிக்கா மட்டுமே தனித்த நாட்டாமைக்கார நாடாக வளர்ந்தது. இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்குப் போட்டியாக சீனா உருவெடுத்துவருகிறது. அதேபோல இந்தியாவும் அணு ஆயுதச் சோதனை, விண்வெளிச்சாதனை நடத்தி, "நான் வளர்ந்துட்டேன் மம்மி' என்று பெருமையுடன் சொல்லிக்காட்டுகிறது. இன்னொரு புறம் அமெரிக்காவின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும்விதமாக, அல்கொய்தா அமைப்பினர், கடந்த 2001-ல், அமெரிக்காவினுள் பட்டப்பகலில் நுழைந்து, அவர்களின் விமானங்களையே திட்டமிட்டுக் கடத்தி, இரட்டைக்கோபுரத் தாக்குதலை நடத்தினர்.
"குவாட்' உருவாக்கம்
இப்படியான பரபரப்பான அரசியல் சூழலில் தான், ஆசிய நாடுகளுடன் கைகோர்த்து, ஆசிய பசிபிக் கடல்பகுதிகளில் தங்களது ராணுவ வலிமையை அதிகரிப்பதன் அவ சியத்தை அமெரிக்கா உணர்ந் தது. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரைப்பகுதியிலிருந்து அமெரிக்காவின் மேற்கு கடற்கரை வரை, இந்தோலி பசிபிக் மண்டலத்தில் தனது வலிமையை அதிகரிப்பதற்காக இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் இணைந்து குவாட் (ணமஆஉ) என்ற அமைப்பை அமெரிக்கா உருவாக்கியது. இந்த நான்கு நாடுகளுக்கிடையே கடல்சார் பாதுகாப்பு, கோவிட் தொற்றுநோய் மேலாண்மை, பேரழிவுத் தருணங் களில் உதவிக்கரம் நீட்டுவது மற்றும் இணையப் பாதுகாப்பு போன்றவற்றில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை வழங்குவது குறித்து புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன்படி, இந்த நாடுகளின் கடற்படைக்குத் தேவையான பயிற்சிகள், கூட்டுப்பயிற்சியாக நடத்தப்பட்டு, கடற் படையை பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தங்களோடு கரம்கோர்க்க விரும்பும் மற்ற நாடுகளையும் இணைத்துக்கொண்டு வலுவான அமைப்பாக இதனை வளர்த்தெடுக்க அமெரிக்கா விரும்பியது. இதற்கு முக்கியமான காரணம், இம்மண்டலத்திலுள்ள தனது போட்டியாளரான சீனாவைத் தனிமைப்படுத்துவதேயாகும். ஒருபுறம் இந்தியாவோடு நட்புறவு கொள்வதோடு, இன்னொருபுறம், ஆஸ்திரேலியாவையும் வளர்த்துவிடுவதில் அமெரிக்கா ஆர்வம்காட்டிவருகிறது.
ஆஸ்திரேலிய - அமெரிக்க நட்புறவு
ஆஸ்திரேலியாவை வளர்த்துவிடுவதில் அமெரிக்கா ஆர்வம் காட்டுவதன் பின்னணியில், ஆஸ்திரேலியா -சீனா இடையிலான வர்த்தகப்போர் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து சீனாவுக்கு நிலக்கரி, இறால், உணவுப்பொருட்கள், மரங்கள் அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன. கொரோனா பரவலின் தொடக்கத் தில், சீனா தான் கொரோனா வைரஸ் பரவலுக்குக் காரணமென்றும், சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதென்றும் அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி, இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்தவேண்டுமென் றார். அவரது குற்றச்சாட்டுக்கும், சர்வதேச விசாரணைக் கும் ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவித்தது. இது சீனா வுக்குக் கடுப்பைக் கிளப்பியதும், ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, இறால் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தடை விதித்தது. தடைக்கான காரணங் களாக ஏதேதோ தெரிவித்தது. இந்த தடையையடுத்து, தனது ஏற்றுமதி வர்த்தகத்தை மற்ற நாடுகளுக்கு மாற்றும் முயற்சியில் ஆஸ்திரேலியா இறங்கினாலும், இந்த தடையால் குறிப்பிட்ட அளவு பாதிப்பை எதிர்கொண்டது. இந்த நிலையில் தனது 'கொம்பு சீவும்' அரசியலை ஆஸ்திரேலியா பக்கம் திருப்பியது அமெரிக்கா.
"ஆக்கஸ்' உருவாக்கம்
ஏற்கனவே, ஆப்கானிஸ் தானில் எதிர்பார்த்த ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்த முடியா மல், அங்கிருந்து அமெரிக்கா வெளியேறியபோது, சீனா, தாலிபான்களுக்கு ஆதரவாகக் கருத்துக்களை வெளியிட்டது. இந்நிலையில், "ஆக்கஸ்' (ஆமஃமந) என்ற பெயரில் கூட்டுத் திட்டத்தின்படி, சீனா வைச் சீண்டும் நடவடிக்கைகளில் பிரிட்டனுடன் சேர்ந்து அமெ ரிக்கா இறங்கியது. இதன் முதல்கட்டமாக, ஆஸ்தி ரேலியாவின் அடிலெய்டில், அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல்களை உருவாக்குவதற்கான தொழில் நுட்ப உதவியை அமெரிக்காவும், பிரிட்டனும் ஆஸ்திரேலியாவுக்கு வழங்குவதாக உடன்பாடு ஏற்பட்டு, அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இடையே ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டது. உடனடியாக, "இது பொறுப்பற்ற செயல். குறுகிய மனப்பான்மையுடன் எடுக்கப்பட்ட முடிவு'' என்று சீனா தனது கடுமையான எதிர்ப் பைப் பதிவுசெய்தது. இதை... இதை... இதைத்தானே அமெ ரிக்காவும் எதிர்பார்த்தது!
இந்த ஒப்பந்தம் குறித்து விளக்கமளித்த ஆஸ்திரேலியப் பாதுகாப்பு நிபுணர் மைக்கேல் ஷூபிரிட்ஜ், இவை அணு ஆயுத நீர்மூழ்கிக்கப்பல்கள் என்று முதலில் வெளிவந்த தகவல்களை மறுத்ததோடு, அணுசக்தியை எரிபொருளாகக்கொண்டு இயங்கக்கூடிய நீர்மூழ்கிக்கப்பல் கள் இவை என்றும், வழக்கமான நீர்மூழ்கிக்கப்பல்களைவிட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அதிகத் திறன் வாய்ந்தவை என்றும் குறிப்பிட்டார். மேலும், இவ்வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், எதிரிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத சக்தி வாய்ந்தவை. எதிரிகளின் கடற்பரப்புக்குள் ஊடுருவிச் செல்லும் வலிமை வாய்ந்தவை. மற்றபடி, இவற்றில் அணு ஆயுதங்கள் இருக்காது. அணு ஆயுதமாக இல்லாத, மிகப்பெரிய தடுப்பு ஆயுதமாக இதனைப் பயன்படுத்துவோம் என்றும் தெரிவித்தார். இத்திட்டத்தின்படி ஆஸ்திரேலியாவில் 8 நீர்மூழ்கிக் கப்பல்கள்வரை உருவாக்கப்படும், எனினும் அதற்கேற்ற கட்டுமான வசதிகளை உருவாக்கக் காலதாமதம் ஏற்படுமென்று தெரிகிறது.
பிரான்சுடன் மோதல்
இத்திட்டத்தில் இன்னொரு மிகமுக்கிய குளறுபடியாக, பிரான்ஸ் நாட்டோடு இம்மூன்று நாடுகளும் பகையைச் சம்பாதித்துள்ளன. கடந்த 2016-ம் ஆண்டிலேயே ஆஸ்திரேலியாவுக்கு 12 டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக்கப்பல்களை வழங்கு வதற்கான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் கையெழுத்திட்டி ருந்தது. ஆனால் அந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வர தாமதமாகிவந்த சூழலில், தற்போது திடீரென, அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடனான ஒப்பந்தம் செய்ததோடு, பிரான்சுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. இந்த அறிவிப்பைக் கேட்டுக் குழப்பமடைந்த பிரான்ஸ், அதற்கான காரணத்தைக் கேட்கும்போதே, அமெ ரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்மூலம், பிரிட்டனுக்கு அடுத்தபடியாக, அணுசக்தி நீர் மூழ்கிக்கப்பல் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை, அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் இரண் டாவது நாடாக ஆஸ்திரேலியா விளங்குகிறது.
இங்கிலீஷ் பேசக்கூடிய மூன்று நாடுகளும் இணைந்து தங்களுடைய முதுகில் குத்திவிட்ட தாகக் குறிப்பிட்ட பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான தங்கள் தூதர்களைத் திரும்பப்பெற்றுக்கொண்டது. பிரிட்டனை ஒரு சந்தர்ப்பவாத நாடாகக் குற்றம்சாட்டியது. அமெரிக்கா, பிரான்ஸ் இடையிலான நட்பின் அடையாளமாக, வாஷிங்டன் மற்றும் பால்ட்டிமோர் நகரங்களில் நடத்தத் திட்டமிட்டி ருந்த நிகழ்ச்சிகளையும் பிரான்ஸ் ரத்து செய்தது. இதுகுறித்து விளக்கமளித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், "நாங்கள் எங்கள் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை, தேவை தான் மாற்றியுள் ளது. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு கருதியே இத்தகைய நடவடிக்கையை நான் எடுத்துள்ளேன். பிரான்சும்கூட எனது நிலையிலிருந்தால் இப்படித்தான் செயல்பட்டிருக்கும்'' என்றார். "தேவை' என்று அவர் சுட்டிக்காட்டுவது, சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் தேவையாகும்.
மோடி அமெரிக்க பயணம்
பிரான்ஸின் நட்பு நாடான அமெரிக்கா, கூடிய விரைவில் பிரான்ஸை சமாதானப்படுத்திவிடும் என்று தெரிகிறது. ஆஸ்திரேலியாவுடன் அமெரிக்கா காட்டிவரும் நெருக்கம், இந்தியாவை எவ்விதத்திலும் பாதிக்காது என்றே சர்வதேசப் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஏனெனில், "குவாட்' அமைப்பு நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஓர் அங்கமாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் கடற்படைக்குக் கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப உதவி, விரைவில் இந்தியாவுக்கும் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தற்போது, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பானுடன் இந்தியாவும் அங்கம்வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்க ஒன்றிய பிரதமர் மோடி அங்கே சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பும், பேச்சுவார்த்தையும் மற்ற விவகாரங்களை உறுதிசெய்யும்.
ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பம் கிடைப்பது, அதன் நேச நாடுகளில் ஒன்றாக இருக்கும் நமது கடற்படைக்கும் வலுச்சேர்க்க உதவக்கூடுமென்றே தெரிகிறது. இதன்மூலம், சீனாவின் மிரட்டல் போக்கு குறையுமெனில், சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் நன்மையாகவே அமையக்கூடும் என்று அமெரிக்காவும் இந்தியாவும் கணக்குப் போடுகின்றன.