டலூர் மாவட்டத்தின் மேற்கு கடைக்கோடியில் உள்ளது ராமநத்தம் காவல் நிலையம். கடந்த 6.3.25 அன்று ஆவட்டி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சங்கர் என்பவர் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகாரொன்றைக் கொடுத்துள்ளார். அந்த புகாரில், "அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் செல்வம் தன் மீது இரு சக்கர வாகனத்தைவிட்டு மோதினார். ஏன் என் மீது மோதுகிறாய் என்று கேட்டேன். உடனே அவரும் அவருடைய நண்பர்கள் பிரபு மற்றும் சிலர் சேர்ந்து என்னைக் கடுமையாகத் தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

Advertisment

bb

இந்த புகாரின் பேரில் போலீசார் செல்வத்தை விசாரணைக்காகத் தேடினர். செல்வம் சிக்கவில்லை. இந்த நிலையில் காவல்துறை யின் இன்ஃபார்மர் மூலம் 31-ஆம் தேதி செல்வம், அவரது கூட்டாளிகள் அதர்நத்தம் கிராமத்திற்கு வந்துள்ளதாகத் தகவல்கொடுத்துள்ளனர்.

Advertisment

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு காவலர் அருண் ஆகியோர் கொண்ட போலீஸ் டீம் அதர்நத்தம் கிராமத்திற்கு அதிகாலையிலேயே சென்றது. செல்வத்தின் நண்பன் நவீன்ராஜ் வீட்டுக் கதவைத் தட்டியது. வெளியே வந்த நவீன்ராஜை போலீஸ் வாகனத்தில் ஏற்றி விசாரித்தது. செல்வம், பிரபு ஆகியோர் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்க, செல்வத்தின் பண்ணை வீட்டில் பதுங்கியுள்ளனர் எனச் சொல்லியுள்ளார்.

உஷாரான போலீசார் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, செல்வத்திற்கு சொந்தமான நிலத்திலுள்ள பண்ணை வீட்டின் கதவைத் தட்டியது. கதவைத் திறந்த நபரிடம் செல்வம் எங்கே என்று கேட்டுள்ளனர். செல்வம் இங்கு வரவில்லை என்று கூறிவிட்டு பதட்டத்தோடு டக்கென்று கதவைச் சாத்தியுள்ளார் அவர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் கதவை மோதித் திறந்தனர். உள்ளே மற்றொரு வாலிபர் இருப்பதைப் பார்த்ததும் போலீசா ருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது. வீடு முழுவதும் சோதனை போடவேண்டும் என்று போலீசார் கூறியதும் அவர்கள் இருவரும் மிரண்டுபோனார்கள்.

Advertisment

vv

போலீசார் அங்கிருந்த சமையலறை, இரும்பு சீட் மூலம் தடுக்கப்பட்டிருந்த ரகசிய அறை ஆகியவற்றைத் திறந்துபார்த்தனர். அங்கே ஜெராக்ஸ் மெஷின், பிரிண்டர் மெஷின், பணம் எண்ணும் இயந் திரங்கள், லேப்டாப், ஏர்கன் துப்பாக்கி, போலீஸ் பயன்படுத்தும் வாக்கிடாக்கி, போலீஸ் சீருடை, அதோடு, கத்தையாக 500 ரூபாய் நோட்டுக்கள் (86 ஆயிரம் ரூபாய்), நோட்டுக்கள் அச்சடிப்பதற் கான இயந்திரம், நாலு பேப்பர் கட்டுகள், ரிசர்வ் வங்கியின் போலி முத்திரை, ரிசர்வ் வங்கி அதிகாரி ஆவட்டி பிரபு என்று குறிப்பிடும் ஆவணம் என அங்கிருந்த தள வாடங்கள் அனைத்தும் போலீசாரை கிறுகிறுக்க வைத்துள்ளது. இதன்மூலம் கள்ளநோட்டு அச்சடிக்கும் வேலை யைச் செய்துள்ளனர் என்பதைக் கண்டுபிடித்த போலீசார். போலீஸ் சீருடையில் ஏர்கன் துப்பாக்கி வைத்துக்கொண்டு பல்வேறு கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதை அறியவந்தனர். இதுகுறித்து உடனடி யாக மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நல்லதுரை, திட்டக்குடி டி.எஸ்.பி. மோகன், திட்டக்குடி இன்ஸ்பெக்டர், அருள்வடிவழகன், வேப்பூர் எஸ்.ஐ., கோபிநாத், ஜம்புலிங்கம் ஆகியோரை சம்பவ இடத்திற்கு அனுப்பினார்.

போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் செல்வத்தின் பண்ணை வீடு கொண்டுவரப்பட்டது. பண்ணை வீட்டில் கைதுசெய்யப்பட்ட நவீன்ராஜ், கார்த்திகேயன் ஆகி யோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இதில் ஈடுபட்டது சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த நவீன்ராஜ், அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் அதே கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த், சக்திவேல், அஜித், மப்புடையூர் வடிவேல் பிள்ளை என்பது தெரியவந்தது. மேலும் ஆவினங்குடி புல்லட் சுந்தர் உட்பட இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் தனிப்படை போலீசார் வலைவீசித் தேடிவருகிறார்கள். இவர்கள் கள்ள நோட்டு தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பியுள்ளனர். போலீஸ் உடையில் பல கிரிமினல் குற்றங்களை அரங்கேற்றி உள்ளனர். மேலும் தங்களின் அடுத்தடுத்த திட்டங்களை நடத்துவதற்கு திட்டம் போடும் இடமாக செல்வத்தின் பண்ணை வீடு இருந்துள்ளது.

போலீசார் தனது பண்ணை வீட்டை முற்றுகையிட்டுள்ள தகவல் தெரிந்த செல்வம், அவரது கூட்டாளிகள் தலைமறைவாகிவிட்டனர். செல்வம் குறித்து போலீசார் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. செல்வம் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கட்டடம் கட்டும் கொத்தனார் தொழிலைச் செய்துவந்தவர். திடீரென பிரமாண்டமான வளர்ச்சியடைந்துள்ளார். அதர்நத்தம் கிராமத்தில் தனது குடும்பத்தினர் வசிக்க 50 லட்சம் மதிப்பில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, ஆவட்டி பகுதியில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, இவை தவிர வீட்டு மனைகள், அதர்நத்தத்தில் ஒரே இடத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கே பண்ணை வீடு என வளமாக மாறியிருக்கிறார். கொத்தனார் வேலை செய்துவந்த செல்வத்திற்கு இத்தனை பணம் எப்படி?

vv

தொடக்கத்தில் மண்ணுளிப் பாம்பு, கோபுரக்கலசம் விற்பனை போன்ற வேலைகளில் ஈடுபட்ட செல்வம், அதில் சில லட்சத்தை சம்பாதித்து இரண்டு டிப்பர் லாரிகள் வாங்கி அதன்மூலம், மணல்கடத்தல் தொழிலைச் செய்துவந்துள்ளார். சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்த செல்வம், கள்ள நோட்டுகள் அச்சடித்து அதன்மூலம் அதிவேக மான வளர்ச்சி கண்டுள்ளார்.

சென்னையில் மேடவாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் பரமசெல்வம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். சவுதியில்கூட ஒரு நிறுவனம் வைத்துள்ளாராம். அடிக்கடி பெங்களூர், கோவை, சென்னை என காரிலும் விமானத்திலும் பறந்துள்ளார். இவ ரிடம் விலையுயர்ந்த 10 கார்கள், டிப்பர் லாரிகள், பொக் லைன் இயந்திரம், பல கோடிக்கணக்கான வாகனங்கள் ,சொத்துக் கள் எப்படி வந்தன? என அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் கேள்விகளை ஏற்படுத்திவந்துள்ளது.

செல்வம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். பணம் வந்தபின் கடலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளராக பதவி கிடைத்துள்ளது. கட்சிப் பொருளாளராக பதவியேற்ற பிறகு கட்சிப் பிரமுகர்களுக்கு தாராள மாக பணத்தை வீசி ஏகப்பட்ட விசுவாசிகளை உருவாக்கிக் கொண்டுள்ளார். அவர் வாரி வழங் கியது கள்ள நோட்டு என்பது இப்போது பலரை யும் திடுக்கிட வைத்துள்ளது. விஷயம் பெரிதான தும் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது கட்சித் தலைமை. தற்போது தலைமறைவாக உள்ள செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவருகிறார் கள். செல்வம் சிக்கினால் இவரது பின்புலம் என்ன? அவருக்கு துணையாக இருந்த புள்ளிகள் யார்? யார்? என்பது வெளிவரும் என்கிறது காவல்துறை.

சமீபகாலமாக செல்வம் மலேசியா உட்பட பல நாடுகளுக்கு அவ்வப்போது உல்லாசப் பயணம் சென்றுவந்துள்ளார். தன்னோடு இவர் தனது ஆதரவாளர்கள் பலரையும் வெளிநாடுகளுக்கு ஜாலியாக டூர் அழைத்துச்செல்வாராம். இப்படி பல நாடுகளுக்கு பலமுறை சுற்றுப்பயணம் செய்துள்ளனர் செல்வமும் அவரது கூட்டாளி ஆவட்டி பிரபுவும்.

ss

ஆவட்டி பிரபு, ஆர்.பி.ஐ. ஆபீஸர் என்ற பெயரில் போலி அடையாளச் சான்று வைத்துக் கொண்டு, போலீஸார் பயன்படுத்தும் வாக்கி டாக்கியுடன் போஸ் கொடுத்துள்ளார். ஆவட்டி பிரபுவும் செல்வமும் ஆர்.பி.ஐ. ஆபீஸர்போல் டிப்டாப் உடையுடன், கள்ளநோட்டு டீலிங்கில் ஈடுபட்டுள்ளனர். செல்வமும், பிரபுவும், கடந்த மாதம் மும்பை தாஜ் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அப்போது அரபு நாட்டைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தற்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலரை தனிப்படை போலீசார் தேடிவருகிறார்கள். செல்வம் பிற மாநிலங்களுக்கோ, பிற நாடுகளுக்கோ தப்பிச் செல்லாத வகையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, சாதாரண சில்லறை வழக்கை விசாரிக்கக் கிளம்பிய போலீஸ், ஒரு கள்ளநோட்டுக் கும்பலையே வளைத்துப் பிடித்து ஜாக்பாட் அடித்துள்ளது.