மிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அதிரடியாக ஆய்வு செய்து வருகிறார்.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாக்கம், விஷார், களக்காட்டூர், சிறுகாவேரிபாக்கம், திருப்புக் குழி, கீரப்பாக்கம் உட்பட சில பகுதிகளில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த வாரம் அதிரடி ஆய்வு செய்தார் அமைச்சர்.

dd

Advertisment

அப்போது விஷார் கொள் முதல் நிலையத்தில் இருந்த விவசாயிகள், “இங்குள்ள அலுவலர்கள் நெல்மூட்டை கொள்முதல் செய்ய ஒரு மூட் டைக்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள்” என்று முறை யிட, இதனால் டென்சன் ஆன அமைச்சர், விவசாயிகளிடம் பணம் வாங்கிய நிலைய அலு வலர் மாலதி, கண்காணிப்பாளர் அன்பழகன், காவலர் முருகன் ஆகியோரை அப்போதே அதிரடி யாக தற்காலிகப் பணிநீக்கம் செய்தார்.

அதுபோல் நல் லான்பிள்ளை கொள் முதல் நிலையத்தில் பணிபுரிந்த எழுத்தர் ராஜா, வளத்தல், மதுராந்தம் ஆகிய பகுதி களைச் சேர்ந்த துரைமுருகன், குமார் ஆகியோரையும் சஸ் பெண்டு செய்தார். மேலும் தஞ்சை, சேலம், திருச்சி, தேனி, மதுரை உட்பட தமிழகத்தின் பல பகுதி களிலும் அமைச்சரின் அதிரடி நடவடிக்கைகள் அரங்கேறி இருக்கின்றன. இதுவரை இப்படி 56 பேருக்கு டிரான்ஸ்பர், 27 பேருக்கு சஸ்பெண்டு என்று அமைச்சர் அதிரடி கிளப்பியதால், துறையில் உள்ள ஊழல் பெருச்சாளிகள் எல்லாம் அரண்டுபோய் இருக்கின்றன.

இந்த அதிரடி நட வடிக்கைகள் குறித்து அமைச்சர் சக்கரபாணியிடமே நாம் கேட்டபோது...

”"கடந்த ஆட்சியில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் நெல் கொள்முதலே செய்து வந்தனர். இதுபோல் நடக்கக்கூடாது என்று நம் முதல்வர் சொல்லி இருக்கிறார். அதைத் தொடர்ந்து தான், நானும் கறார் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்த 313 கண்காணிப்பாளர்களைப் பல்வேறு மாவட்டங் களுக்கு மாற்றி இருக்கி றோம். இதனால் விவ சாயப் பெருமக்களுக்கு இந்த ஆட்சியின் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது'' ’என்றார் புன்னகை யோடு.

ஊழல்வாதிகளைக் கண்டால், சாட்டையை எடுக்கும் அமைச்சரை வியப்பாகப் பார்க்கிறார்கள் பொதுமக்கள்.