கனிமவளக் கொள்ளையைத் தடுப்பதற்காக மாநில, மாவட்ட எல்லைகளில் சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்தவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் மூன்றே ஆண்டுகளில் சட்டவிரோத மணல் குவாரிகள் மூலம் ரூ.4,730 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரிடம் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலும்கூட, இ.குமார லிங்கபுரம் கிராமத்தில் ஜவுளிப் பூங்கா அமையவிருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள பெரியகுளம் கண்மாயில் வண்டல் மண் அள்ள சிவரஞ்சனி என்பவருக்கு சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் உத்தரவு வழங்க, அந்த அனுமதிச் சீட்டை வைத்துக் கொண்டு விதிமீறலாக கிராவல் மண் திருடியதாக 2 பிரிவுகளின் கீழ் வச்சக் காரப்பட்டி காவல்நிலையத் தில் வழக்கு பதிவாகி, லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கனிமவளக் கொள்ளையைத் தடுக் கத் தவறிய சாத்தூர் தாசில்தார் ராமநாதன், துணை தாசில்தார் நவநீதன், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலு வலர் அஜீதா, கிராம உதவியாளர் குருசாமி ஆகிய வருவாய்த்துறை யினர் 5 பேரையும், உதவி வேளாண்மை அலுவலர் முத்துக் குருவையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவரஞ்சனி, "விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனைச் சந்தித்து “நான்தான் சிவரஞ்சனி. என்னுடைய ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். எனக்கும் கிராவல் மண் திருட்டுக்கும் துளியும் தொடர்பில்லை''” என்று முறையிட்டுள்ளார்.
சமூக ஆர்வலர் விடியல் வீரபெருமாளோ, "முக்கிய பிரமுகர்கள் இருவர் அந்தப் பகுதியில் இரவு பகலாக கிரா வல் மணலை அள்ளிவந்திருக் கிறார்கள். இந்த கனிமவளக் கொள்ளையில் வச்சக்காரப்பட்டி காவல்நிலைய இன்ஸ்பெக்டருக் கும் தனிப்பிரிவு காவலருக்கும் தொடர்பு இருப்பதாகப் பேசப்படுகிறது. விவசாயத்திற்கு மட்டுமே வண்டல் மண் அள்ள அனுமதி பெற்ற இடத்தில் கிராவல் மணல் அள்ளியதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? இந்தக் கண்மாயில் மணல் அள்ளுவதற்கு ஒரே புல எண்ணிற்கு 5 முறை வருவாய்த்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 10 மடங்கு மணல் திருட்டு நடந்திருக்கிறது. எங்கிருந்து அழுத்தம் வந்தது? சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசுத்துறையினர் தங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். கிராவல் மணல் திருட்டைத் தடுக்கத் தவறியவர்களாகவும், திருட் டுக்கு துணைபோனவர்களாகவும் இருப்பதால், அவர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்யக்கூடாது. இத்தகைய அலுவலர்கள் துறைரீதியாக பணி நீக்கம் செய்யப்படவேண்டும். இதுகுறித்து முதலமைச்சரி லிருந்து மாவட்ட ஆட்சியர் வரை கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாகப் பொதுநல வழக்கு தொடர்வேன்''’என்றார்.
இந்நிலையில், மணல் கொள்ளை மூலம் கோடிகளில் புரளும் அந்த மணல் மாஃபியாக்கள் மூலம் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக் கப்பட்டது என்ற விபரம், அரசியல் செலவு என்னும் தலைப்பில் தேதியிட்டு டைரியில் எழுதியிருந்தது லீக் ஆனது. துறை ரீதி யாகக் கொடுக்கப்பட்ட லஞ்சம், சம்பளம், டீசல் செலவு, சாப்பாடு செலவு உள்ளிட்ட வரவு, செலவு விபரங்கள் அடங்கிய அந்த டைரியின் 27 பக்கங்கள் நமக்கும் கிடைத்தன.
புவியியல் மற்றும் சுரங்கத் துறையினர், தீயணைப்புத்துறையினர், தாலுகா அலுவலகம், எஸ்.பி. அலுவல கம், அரசு அலுவலகம், வச்சக்காரப்பட்டி காவல்நிலையம், வி.ஐ.பி. போலீஸ் போன்றோர் ரூ.50000 வரை மாமூல் பெற்று வந்திருக்கின்றனர். மகேஷ் சார், தங்கமணி, ஆசை, ஓவி ரெட்டி, எஸ்.பி. மூர்த்தி, காசிராஜன் எஸ்.ஐ. ஆகியோரின் பெயர் விபரங்களுடன் வாங்கிய தொகைகளும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஓவி ரெட்டி தனிப்பிரிவு எஸ்.ஐ. என்றும், சுந்தரமூர்த்தி எஸ்.பி. ஏட்டய்யா என்றும் கிசுகிசுக்கப்படும் நிலையில், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஓவி ரெட்டியைத் தொடர்பு கொண்டோம். "அய்யோ.. அது நான் கிடை யாது. அது வேற ஓவி ரெட்டி''’ என்று மறுத்தவ ரிடம் “அந்த வேற ஓவி ரெட்டி குறித்த விபரம் கைவசம் இருந்தால் தெரிவியுங்களேன்..” என்று கேட்டபோது, அவரிடமிருந்து தெளிவான பதிலைப் பெறமுடியவில்லை.
மணல் தொழிலில் புரோக்கராகச் செயல் பட்டுவரும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நபர், "இங்கே இ.குமாரலிங்கபுரத்திலும், விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேறு சில இடங்களிலும், மணல் கொள்ளைதான் சிலருக்கு முழுநேரத் தொழிலாக இருந்துவருகிறது. இவர்கள் ஒன்றும் தமிழ்நாடு அளவில் பிரபலமாக உள்ள ராமச்சந்திரன், கரிகாலன், ரத்தினம் அளவுக்கு பெரிய மணல் மாஃபியா கிடையாது. மணல் கொள்ளையும் துறை ரீதியான மாமூலும் தமிழ்நாட்டில் இல்லாத இடம் இல்லை. ஆனால், லஞ்ச விபரங்களை டைரியில் எழுதி மாட்டிக்கொண்டது விருதுநகர் மாவட்டம்தான். டைரியின் பக்கங்கள் லீக் ஆனதன் பின்னணியில் பணபேரம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. கேட்ட பெரும்தொகை கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்திலும், சிலரை மாட்டிவிடவேண்டும் என்ற உள்நோக்கத்திலும் சில பக்கங்களை மட்டுமே லீக் செய்திருக்கிறார்கள். மணல் குவாரிகளில் மாமூல் பெறுவது அரசுத்துறையினர் மட்டுமல்ல, உயிரைப் பறிக்கவும் அஞ்சாத மணல் கொள்ளையர்களையே மிரட்டிப் பணம் பறிக்கும் தில்லாலங்கடிகளும் உண்டு. அவர்கள் செய்த வேலைதான் இது.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மணல் கொள்ளையைத் தடுக்கவே முடியாது. வற்றாத ஜீவநதிபோல் பணம் பெருக்கெடுத்து ஓடும் மணல் தொழிலை விட்டுவிட யாருக்கும் மனசு வராது. ஏனென்றால், எத்தனை கோடானுகோடிகளைச் சேர்த்தாலும், எங்கெங்கும் சொத்துகளை வாங்கிக் குவித்தாலும், பணத்தேவை சிலருக்குத் தீர்ந்த பாடில்லை''’என்று யதார்த்தத்தைச் சொன்னார்.
இ.குமாரலிங்கபுரம் மணல் கொள்ளை விவ காரத்தை விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. மர்மங்கள் வெளிவருமா?
_________________
நேர்மையைச் சீண்டியதால் வந்த சிக்கல்!
இ.குமாரலிங்கபுரம் பெரியகுளம் கண்மாய், தமிழ்நாடு தொழில் முன்னேற்றக் கழகத்தின் (SIPCOT) பெயரில் பதிவாகி யுள்ள சுமார் 1500 ஏக்கர் நிலத்தில் உள்ளது. சுற்றிலும் வேலியிடப் படாத நிலையில், பெருவாரியாக கிராவல் மணல் கொள்ளை நடந்திருக்கிறது.
பல மாவட்டங்களிலும் சுலபமாக அமுக்கப்படும் மணல் கொள்ளை விவகாரம், விருதுநகர் மாவட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்ததற்கு முழுமுதல் காரணம், இளநிலைப் பொறியாளர் (சிப்காட்) மாரிமுத்துதான். லஞ்சம் கரை புரண்டு ஓடும் நெடுஞ்சாலைத் துறையில் நேர்மையைத் தீவிர மாகக் கடைப்பிடித்து வந்ததா லேயே பந்தாடப்பட்டார் மாரிமுத்து. நெடுஞ்சாலைத்துறை தனக்குக் கொஞ்சம்கூட சரியாக வராது என்பதாலேயே, விரும்பி சிப்காட் பணிக்கு மாறுதல் பெற்றார். ‘லஞ்சம் தவிர்த்து! நெஞ்சம் நிமிர்த்து!’ என்ற வாசகம் பொறிக் கப்பட்ட டூவீலரில் சிப்காட் பகுதியைப் பார்வையிட மாரிமுத்து வந்தபோது கிராமவாசி ஒருவர், "உங்க வண்டியில வாசகம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. நீங்க சிப்காட் அதிகாரிதான? இங்கே கிராவல் மண்ணை கொள்ளை யடிச்சு லாரி லாரியா கொண்டு போறாங்க. உங்க கண்ணுக்கு தெரியலியா? அவங்க போக்குவரத் துக்கு வசதியா சிப்காட்ல ரோடு வேற நல்லா போட்டுக் கொடுத் திருக்கீங்க? நேர்மை எழுத்துல மட்டும் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்ல''” என்று கிண்டலடித் திருக்கிறார்.
அடுத்து என்ன நடந்தது?’ தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பட்டயப் பொறியாளர்கள் சங் கத்தின் பொதுச்செய லாளராகவும் உள்ள மாரிமுத்துவிடமே கேட்டோம்.
"அந்தப் பகுதிக்குப் போய் பார்த்தேன். பெரிய, பெரிய பள்ளங்களா இருந்துச்சு. சில லாரிகள்ல லோடு ஏத்திக்கிட்டிருந்தாங்க. அங்கே இருந்தவங்க நான் யாருன்னு தெரிஞ்சதும், "இந்த பகுதி உங்க சிப்காட் எல்லைக்குள்ள வராது. நீங்க இங்கே வரவேண்டிய அவசியம் இல்ல'ன்னு கொஞ்சம் முரட்டுத்தனமா பேசுனாங்க. அதுல ஒருத்தர் யாருக்கோ போன் போட்டு, என்கிட்ட கொடுத்து மறுமுனைல இருந்தவர்கிட்ட பேசச் சொன்னார். நான் மாட்டேன்னு சொன்னேன். அவங்க விடறதா இல்ல. அப்புறம்தான்... "என் பெயர் மாரிமுத்து, இளநிலைப் பொறியாளர், சிப்காட். என்கிட்ட பேசணும்னு சொன்னவர்கிட்ட இந்த விபரத்த சொல்லுங்கன்னு சொல்லிட்டு, அங்க இருந்து வெளியேறிட்டேன். மறுநாள் காலை 10 மணிக்கெல்லாம் மேல்நடவடிக்கைக் காக, இ.குமார லிங்கபுரம் சிப்காட் அலுவலர் கிட்ட என்ன நடந்துச் சுங் கிறத கைப்பட எழுதிக் கொடுத் தேன்''’ என்றார்.
எழுத்துப்பூர்வமான புகார் மூலம் மாரிமுத்து பிள்ளையார்சுழி போட, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் சம்பந்தப்பட்ட அலுவலர்களை சஸ்பெண்ட் பண்ண, வருவாய் துறையினர் போராட, மாமூல் டைரி வேறு லீக்காகி பரபரப்பு தொடர்ந்தபடியே உள்ளது.