பிற மனிதர்கள், தனித்தோ அல்லது இணை யுடனோ இருக்கையில், அவர்களின் தனிப்பட்ட செய்கைகளை மறைந்திருந்தோ நேரடியாகவோ பார்த்து சந்தோஷமடையும் நிலையே Voyeurism. இந்த சந்தோஷத்திற்கு சாமியார்கள், கட்சித் தலைவர்கள் தொடங்கி துணைவேந்தர்கள் போன்ற பெரும் பொறுப்பில் இருக்கக்கூடிய மனிதர்கள்வரை அடங்குவர் என்கின்றது புள்ளிவிவரம். அதனை மெய்ப்பிக்கும் வகையில் "நல்ல வேலை தருகின்றேன்' என்று துபாய்க்கு அழைத்துச் சென்று செக்ஸ் பொம்மையாக்கி Voyeurism அடைந்திருக்கின் றார் தென்தமிழ்நாட்டிலுள்ள கல்வித் தந்தை.
"வயதில் மூத்தவராக இருக்கின்றார். அன்பும் அக்கறையும் காட்டுகின்றார். அவருடைய கம்பெனி என்பதால் எந்த பிரச்ச னையும் இருக்காது என நம்பித்தான் துபாய் வேலைக்குச் சென் றேன். விசாவில் குறிப்பிட்ட வேலை கொடுக்கவில்லை. பாஸ் போர்ட் பறிக்கப்பட்டு, மிரட்டப்பட்டு அந்த பெரிய மனிதருக்கு நிர்வாண செக்ஸ் பொம்மையாகத்தான் இருந்தேன். அவ ரால்தான் கொடுமைகள் என்றால் அவர் கைகாட்டும் பெரிய மனிதர்களுக்கும் நான் செக்ஸ் பொம்மைதான். ஒருவழியாகத் தப்பித்து மதுரை வந்துவிட்டேன். நான் அனுபவித்த கொடுமைகள் குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தால், விசாரிக்காமல் அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு, என்னை கைதுசெய்து சிறையில் தள்ளினர். என்னிடமுள்ள ஆதாரங்கள் இது. என்னைப்போல் எந்த பெண்ணும் அங்கு சிக்கிக்கொள்ளக் கூடாது'' என கண்ணீருடன் தன்னுடைய துயரத்தைப் பகிர்ந்தார் மதுரையைச் சேர்ந்த அந்த பெண்.
"என்னுடைய பெயர் சுபாஷிணி. பி.சி.ஏ. பட்டதாரியான நான் விமானம் மூலமாக சென்னையிலிருந்து மதுரை வந்த பொழுது என்னிடம் வலிய வந்து அறிமுகமானார் முகமது ஜலீல் என்பவர். அவருடன் பேசியதிலிருந்து அவருக்கு காரியா பட்டியில் ஒரு கல்லூரி, துபாயில் டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் மற்றும் இன்னபிற பிஸினஸ் இருப்பதாகக் கூறினார். ஒரு கட்டத்தில் "நீ இவ்வளவு கலராக இருக்கியே? என்ன சாதி?' எனக் கேட்டார். நான் மலையாள பிராமின் என பொய் சொல்லிவைத்தேன். "வேலையில் இருக்கின்றாயா..? இல்லை என்றால் கூறு, உன்னைப்போல் ஆள்தான் வேண்டும். சொந்தமாக துபாயில் இருக்கும் என் சேது டிரைனிங் இன்ஸ்டிடியூட்டில் மேனேஜராக பதவி தருகின்றேன்' என்றார். நானும் சாதாரணமாக விட்டுவிட்டேன். மதுரை விமான நிலையத்திற்கு வந்த பொழுதுதான் எனக்கென்று தனியாக காரை வரவழைத்து என்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். சிறிது நேரத்தில் எனக்கு போன் செய்த முகமது ஜலீல், ‘"நாளை காரியாபட்டி வந்து என்னைச் சந்தித்து வேலைக்கான ஆர்டர் வாங்கிக்கொள்'’என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/27/fatheofeducation1-2025-10-27-16-45-08.jpg)
உண்மையோ...பொய்யோ... போய் பார்த்து விடுவோமே என்று காரியாபட்டி கல்லூரிக்குச் சென்றேன். என்னிடம் அவ்வளவு அக்கறையாக நடந்துகொண்டார். உடனடியாக விசாவிற்காக முன்தயாரிப்பு வேலைகள் நடந்தன. ஆனால் மேனே ஜர் பதவிக்கான விசா கிடைக்கவில்லை. இருப்பினும் என்னை துபாய்க்கு அனுப்பிவிடும் நோக்கில் டெலிகாம் அஸிஸ்டெண்ட் போஸ்ட் போட்டு விசா தயாரித்து அதற்கு அந்த நாட்டிடம் ஓ.கே.யும் வாங்கினர். விசாவில்தான் இந்தப் பதவி. ஆனால் நீதான் அங்கு மேனேஜர். உன்னுடைய சம்பளம் ரூ3 லட்சம் என்று என்னை உடனே துபாய்க்கு அனுப்பிவைத்தார். நானும் அங்கு சென்றேன்.
துபாய்க்கு சென்ற அந்த வாரத்திலேயே துபாய்க்கு வந்தார் முகமது ஜலீல். என்னைத் தேடிவந்தவர், "இங்க எங்கே தங்குகின்றாய்.? இதுமாதிரி இடமெல்லாம் உனக்கு வேண்டாம். எனக்குச் சொந்தமாக Sabkha -Deira 38-வது தெருவில் மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு இருக்கின்றது. அங்கேயே தங்கிக்கொள். நான் எப்பொழுதாவதுதான் துபாய் வருவேன். ஏற்கனவே இருந்த மேனேஜர் அங்குதான் தங்கியிருந்தார்' என அவர் கூற, அதனை நம்பி அவருடைய வீட்டிற்குச் சென்றதுதான் மிகப்பெரிய தவறு. அது விரல் ரேகை கொண்டு திறக்கும் பிளாட்! அவ ருடைய விரல்ரேகை கொண்டு திறந்தவர், உடனே என்னுடைய பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக்கொண்டு தன்னுடைய வேலையைக் காண்பிக்க ஆரம்பித்தார்'' என்றவர் பேச்சை ஆரம்பித்தார்.
"அன்றே சின்னச் சின்ன பாலியல் சீண்டல் களை ஆரம்பித்தவர், ஒழுங்காக சொன்னதைக் கேட்டு இருந்தால் நல்லபடியாக ஊர் போய்ச் சேரலாம் என மிரட்ட ஆரம்பித்தார். அதற்குப்பின் நடந்ததுதான் கொடூரம். நான் வேலைக்குச் செல்ல வில்லை. அந்த வீட்டிலேயேதான் இருந்தேன். அவருக்கு அதிக வயதாகிவிட்டதாலும், மருத்துவ ரீதியாக உடலில் அதிக அளவில் தொந்தரவுகள் உள்ளதால் ஒரு செக்ஸ் சைக்கோபோல் நடந்து கொள்வார். தினமும் அவரை இரண்டு மூன்று முறை ஆடையில்லாமல் குளிக்க வைக்கவேண்டும், அவர் வீட்டுக்குள் இருக்கும் நேரம் முழுவதும் நான் ஆடையில்லாமல் நிர்வாணமாகவே வீட்டுக்குள் சுற்றவேண்டும், இரவு முழுவதும் ஆடையில்லாமல் அவருடன் படுத்திருக்கவேண் டும். மேலும், வெளியில் சொல்லமுடியாத வகையில் அருவருப்பான செய்கைகள் செய்துகொண்டே இருப்பார். ஒருகட்டத்தில் இதனை சென்னையில் இருக்கும் என்னுடைய தோழியிடம் கூற... அவரோ, "அவர் சமூகத்தில் பெரிய மனிதர். அவருடைய செய்கைகளை ஆவணப்படுத்தி மதுரையிலுள்ள போலீஸ் கமிஷனருக்கும், துபாயிலுள்ள முகவரிக் கும் அனுப்பி வை'’ என்றாள். இந்த நிலையில் தனக்கு வேண்டப்பட்ட, அவருடைய வயதை ஒத்த சில பெரிய மனிதர்களையும் வீட்டிற்கு கூட்டிவந்து, அவர்கள் முன் 'செக்ஸ் பொம்மையாக" இருக்க வேண்டுமென்றும் வற்புறுத்துவார். ஒருகட்டத்தில் அவர் மறைத்துவைத்திருந்த இடத்திலிருந்து பாஸ்போர்ட்டை கைப்பற்றி அங்கி ருந்து தப்பித்து வெளியேறி சிலர் உதவியுடன் மதுரை வந்தேன். ஆனால் இங்கு வந்ததும் கதையே மாறியது. அவசர அவசர மாக என்னை மதுரை சைபர் க்ரைம் போலீ ஸார் கைது செய்து சிறை யில் அடைத் தார்கள். பெயி லுக்காக என்னிடம் கையெழுத்து வாங்க வழக்கறிஞர் வந்தபொழுது தான் தெரிந்தது. நான் முகமது ஜலீலின் வீடியோ கொண்டு அவரை மிரட்டியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. என்ன கொடுமை இது. துபாயில் அடிமைப்படுத்தப்பட்டு செக்ஸ் பொம்மையாக நடத்தப்பட்டது நான். அது போக 28 நாட்கள் சிறைத் தண்டனை வேறு. என்னைப் போல் பல பெண்களும் இவ்வாறு சிக்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்றவே தற்பொழுது பேச வேண்டியதாயிற்று'' என்றார் அவர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/27/fatheofeducation2-2025-10-27-16-45-17.jpg)
சுபாஷிணி மீது முகமது ஜலீலின் மகன் சீனி முகம்மது என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரால் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவலறிக்கையோ, "நான், எனது தந்தை மற்றும் மூத்த சகோதரருடன் இணைந்து விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, புல்லூர் கிராமத்தில் சேது பொறியியல் கல்லூரி நடத்திவருகின் றோம். எங்களுடைய கல்லூரியின் தலைமை அலு வலகம் மேற்கண்ட முகவரியில் இயங்கிவருகின்றது. மேற்கண்ட கல்லூரியை எங்களுடைய தந்தை நிறுவி கடந்த 31 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான முறையில் நடத்திவருகின்றார். இவ்வாறு இருக்கையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னால் என்னை 99ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்545 என்ற கைபேசி எண்ணிலிருந்து என்னுடைய கைபேசி எண் 978ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்00 என்ற எண்ணுக்கு ஒருவர் தொடர்பு கொண்டார். மேலும் அதே எண்ணிலிருந்து ஒரு வீடியோ வையும் அனுப்பிவைத்தார். மேற்கண்ட வீடியோவை திறந்து பார்த்தவுடன் வீடியோ டெலீட் ஆகிவிட்டது. அந்த வீடியோவில் ஒரு பெண் மேலாடையில்லாமல் நிற்பதுபோலவும், என்னுடைய தந்தையைப் போன்ற தோற்றமுள்ளவர் நிர்வாணமாக அமர்ந்து இருந்தது போலவும் இருந்தது. நாங்கள் மேற்கண்ட விஷ யத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஏனெனில் என்னுடைய தந்தை அவ்வாறான விஷயங்களில் ஈடுபடமாட்டார். மேலும் அவருக்கு தற்சமயம் 82 வயது ஆகின் றது. பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப் பட்டுக்கொண்டுள்ளார். ஆனால் என்னைத் தொடர்புகொண்ட நபர் தினமும் அடிக்கடி வாட்ஸப் செயலி மூலம் ஓயாமல் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துவருகின்றார். கடந்த 02.07.2025 அன்று என்னை மிரட்டும் விதமாக 36 வினாடிகள் ஓடக்கூடிய ஆடியோ வை அனுப்பிவைத்தார். என்னைத் தொடர்பு கொண்ட நபர் அவரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் எனவும், கல்லூரி விவகாரம் என்றும் மிரட்டும் தொனியில் பேசினார். இதைத் தொடர்ந்து 08.07.2025 தேதியன்றும் ஒரு ஆடியோ அனுப்பிவைத்து அதே போல் மிரட்டினார். இந்நிலையில் 13.07.2025 தேதி காலை 12.02 மணியளவில் 99ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்358 என்ற எண்ணிலிருந்து அதே ஆபாச வீடியோவை என்னுடைய வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பி நான் கேட்ட பணத்தை மட்டும் தரவில்லை என் றால் நான் இதை இணையதளத்தில் போடு வேன். அதோட உங்க அப்பா மேல கேஸ் கொடுப்பேன். நீங்க சொசைட்டியில் கவுரவமாக வாழ்ற வாழ்க்கையை நான் ஒண்ணுமில்லாமல் பண்ணுவேன். அதுமட்டுமில்ல நீங்க நடத்துற காலேஜோட மதிப்பையும் நான் ஒண்ணுமில்லா மல் பண்ணி ஒருத்தனும் படிக்க முடியாதபடி பண்ணுவேன் என்று மிரட்டினார்'' என்றது.
குறிப்பிட்ட செல் நம்பரிலிருந்து மிரட்டல் கள் வந்ததாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளார் களே, இது உண்மையா? என சுபாஷிணியிடம் கேட்டபோது...
"எஒதல் குறிப்பிட்டு இருப்பது ஒரு புனைவு கதை. என்னை வீட்டில் இருந்து அரைகுறை ஆடையுடன் போலீஸ் தூக்கி செல்லும் பொழுதே என்னுடைய மொபைலை கைப்பற்றி விட்டனர். எதற்காக சைபர் கிரைம் போலீசார் தூக்கிச் சென்றனர் என்பதுகூட எனக்குத் தெரியாது. ஜெயிலில் இருக்கும் பொழுது பெயிலுக்காக வழக்கறிஞர் கூறிய பிறகு தெரியும் நான் அவர்களை மிரட்டிய வழக்கு என்று. நான் எதுவும் பேசவில்லை. பேசினால் ஆதாரங்களை காட்டுங்கள். மொபைலை கைப் பற்றிய பிறகு என்னுடைய எண்ணை அதில் சேர்க்கலாம் என்பது யாருக் குத்தான் தெரியாது'' என்றார்.
சுபாஷிணியின் வழக்கறிஞ ரோ, "துபாயிலிருந்து மதுரை கமிஷனருக்கு அனுப்பிய புகார் என்னவாயிற்று? திருப்பாலை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி புகார் கொடுத்தது என்ன வாயிற்று? அதுபோக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு ஐ.ஜி.யிடம் கொடுத்த புகாரின்மீதான நட வடிக்கை என்ன? அதையெல்லாம் விடுத்து தன்னுடைய பணபலத்தை யும் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி, மதுரை சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பாபு என்பவருக்கு 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, முன்தேதியிட்ட ஒரு பொய்ப் புகார் கொடுத்து பாதிக்கப்பட்ட பெண்மீது முகமது ஜலீல் மகன் சீனிமுகம்மது அலியார் மரைக்காயர் புகார் கொடுத்ததாக எஃப்.ஐ.ஆர். (குற்ற எண். 83/2025) போட்டு எந்தவிதமான விசாரணையும் மேற்கொள் ளாமல், பாதிக்கப்பட்ட பெண்ணின் பழைய முகவரிக்கு அனுப்பியதுபோல் மோசடியாக ஒரு சம் மன் தயார்செய்து வைத்துக்கொண்டு விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறி, கடந்த 06.08.2025 அன்று மாணிக்க வாசுகி என்ற எஸ்.ஐ. வீட்டிற்கு வந்து மொபைல் போனை பிடுங்கி வைத்துக் கொண்டு ரிமாண்ட் செய்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விட்டனர். இதுகுறித்து நீதித்துறையிடம் முறை யிட்டுள்ளோம். அவங்களோட எண்ணம் வீடியோ, புகைப்படங்கள் இருக்கும் மொபைலை பறித்து விட்டால் போதும் என்பதுதான்'' என்றார் அவர்.
சென்னையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக் கெதிரான குற்றங்கள் தடுப்பு ஐ.ஜி.யிடம் கொடுத்த புகாரோ அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி.க்கு வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்த ஏ.எஸ்.பி. தரப்பு, "ஜலீல் தரப்பில் ஏற்கனவே விசா ரணை செய்துவிட்டதாகக் கூறி, காரியாபட்டியி லுள்ள ஜலீல் நிறுவனத்தின் வளாகத்தில் எந்தவிதமான பாலியல் தொந்தரவும் நடைபெறவில்லை என்று எழுதிக்கொடுக்கு மாறு கட்டாயப்படுத்தியது குறிப்பிடத் தக்கது.
மதுரை சைபர் க்ரைம் இன்ஸ்பெக் டர் பாபுவோ, "மிரட்டியதன் அடிப் படையிலேயே சுபாஷிணி மீது வழக்குப் பதிவு செய்திருக்கின்றோம். வீடியோவில் இருப்பதை ஆய்வுகள் முடிவுசெய்யும்' என்றார்.
இதுகுறித்துக் கருத்தறிய மதுரை சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகாரளித்த சீனி முகம்மதுவைத் தொடர்பு கொண்டோம். பதிலில்லை. ஆகையால் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவேண்டி அவருடைய எண்ணிற்கு செய்தி அனுப்பிக் காத்திருந்தோம். தகவல் இல்லை. இந்த நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளான முகமது ஜலீலைத் தொடர்புகொண்டோம். அழைப்பை ஏற்கவில்லை. அவருடைய எண்ணிற்கு செய்தி அனுப்ப, வாட்ஸ்ஆப்பிலேயே பதிலளித்தார் அவர். அதிலிருந்து, "அவள் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவள் என்பதை பின்னர்தான் அறியமுடிந் தது. அவளுக்குப் பின்னால் இரு வழக்கறிஞர்கள் மற்றும் ஒரு கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே சைபர் செக்யூரிட்டி விங்கிற்கு புகார் கொடுத்து அதன் அடிப்படையில் அவளும் அவளுடைய அசோசியேட் ஒருவனும் கைதுசெய் யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 15 நாட் கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வந்துள்ள னர். என்னைத் தவறாக சித்தரித்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் பல்வேறு ஊடகங்களில் பதிவுகள் வந்துள்ளன. அவள் என்மீது புகார் ஒன்று கொடுக்கப்பட்டு அதன்மீது அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி.யின் விசாரணை நடந்தது. எப்படியாவது எனக்கு மன உளைச்சலை உருவாக்க முயற்சிக் கிறாள். என்னுடைய பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் செயல்படுவது தெரிகிறது. நீதிமன்ற விசாரணை முடியும்வரை நான் பொறுமை காக்கின்றேன்'' என்கின்றது அவரது பதிவு.
முகமது ஜலீலால் செக்ஸ் பொம்மையாக, அடிமையாக சுபாஷிணி நடத்தப்பட்டார் என்ற புகாருக்கு ஏன் இன்றுவரை நட வடிக்கை எடுக்கவில்லை காவல்துறை? ஆனால் ஜலீல் மகன் புகாருக்கு உடனடியாக கைது செய்யவேண்டிய காரணம் என்ன? என்கின்ற கேள்வி அனைவரிடமும் இருக்கின்றது. தெளிவுபடுத்துமா காவல்துறை..?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/27/fatheofeducation-2025-10-27-16-44-57.jpg)