கொரோனாவின் கோரக்கரங்களில் பல உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. திரைத்துறையினரும் விதிவிலக்கல்ல. ஏற்கனவே இயக்குனர்கள் தாமிரா, கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பலர் மறைவால் அதிர்ச்சியில் இருக்கும் திரையுலகத்துக்கு, மேலும் அதிர்ச்சியை தந்திருக்கின்றது இரண்டு இளம் உயிர்களின் இழப்பு. "கனா' படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா. முப்பதுகளின் கடைசியில் இருந்த இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

c

அருண்ராஜாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் முழு பாதுகாப்பு கவச உடையுடன், தனது மனைவியின் உடலை கடைசியாகப் பார்க்க வந்தது பெரும் துயரமான காட்சியாக இருந்தது. அருண்ராஜா, இயக்குனராகும் முன்பே பாடகராகவும் பாடலாசிரியராகவும் புகழ் பெற்றவர். நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர். "கனா' படத்தின் வெற்றிக்குப் பிறகு உதயநிதி நடிப்பில் "ஆர்டி கள் 15' இந்தி திரைப் படத்தின் தமிழ் ரீ-மேக்கை இயக்கிவந்தார். தனது கணவரின் கனவுப் பயணத்தில் துணையாய் நின்ற சிந்துஜாவின் மறைவு அருண்ராஜாவை இடிந்து போகச் செய்துள்ளது.

c

Advertisment

புதுப்பேட்டை, காலா, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் தான் நடித்த பாத்திரங்கள் சிறியதோ பெரியதோ அதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நிதிஷ் வீரா. நீண்ட காலமாக சினிமாவில் ஒரு இடத்தைப் பிடித்துவிடலாம் என்ற கனவில் தொடர்ந்து முயன்று வந்தவருக்கு "அசுரன்' அடையாளம் கை கொடுத்தது. எதிர்மறை பாத்திரத்தில் அவர் நடித்தவிதம் மக்களின் ஆத்திரத்தைத் தூண்டியது. அந்த அளவுக்கு தேர்ந்த நடிப்பை அளித்திருந்தார். அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்துகொண்டிருந்த நிலையில்... கடந்த ஆண்டு கொரோனா வந்தது, படப்பிடிப்புகள் தடைபட்டன, தள்ளிப்போயின. திரையுலகம் மீண்டுவிடும், வெற்றிக்கோட்டைத் தாண்டிவிடலாம் என்று இருந்த நிதிஷை இரண்டாம்அலை கொரோனா தாக்கியது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்கள் அனைவரும் சொன்னது இதுதான்... "இதோ வந்துவிட்டோம், சினிமாவில் வென்றுவிடலாம்' என்ற நம்பிக்கையுடன் இருந்தவரின் உயிரை கொரோனா பறித்து விட்டதே. "ஆதிவாசி' என்ற அடைமொழியுடன் "கில்லி' படம் மூலம் நமக்கு அறிமுகமானவர் துணைநடிகர் மாறன். பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ள அவர், பா.ரஞ்சித் இயக்கத்தில் "சார்பட்டா பரம்பரை' படத்தில் குறிப்பிடத்தகுந்த நல்ல பாத்திரத்தில் நடித்திருக் கிறார். வெளிச்சம் வந்துவிட்டது என்ற நம்பிக்கை யில் இருந்த அவரும் கொரோனாவால் மறைந் தார். இப்படி பல நம்பிக்கைகளை உடைத்து உயிர்களைப் பறித்துள்ளது கொரோனா.

c

ரு புறம் இப்படி மனதை பதறச் செய்யும் மரணங்களென்றால்... இன்னொருபுறம் மனதை நெகிழச் செய்யும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இயக்குனர் வசந்தபாலன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அபாய கட்டத்திற்குச் சென்று மீண்டுவந்துள்ளார். அவர் பாதிக்கப்பட்டதில் இருந்து மீண்டு வந்ததுவரை பல நண்பர்களின் உதவி இருக்கிறது. அதில் முக்கியமானவர் அவரது கல்லூரி நண்பர் வரதன் எனக் குறிப்பிடும் அவர், தன் பொருளாதார நிலை காரணமாக பெரிய மருத்துவமனையில் சேரமுடியாமல் உடல்நிலை மோசமானபோது, "மருத்துவர் கு.சிவராமன், எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோரின் உதவியைப் பெற்று பலரை அணுகி பணத்தை ஏற்பாடு செய்து தன்னை சரியான மருத்துவ மனையில் சேர்த்து தனது குடும்பத்தையும் பாதுகாத் தது வரதன்தான்' என்கிறார் வசந்தபாலன், மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது, அவரைப் பார்க்க வேண்டு மென்று பலமுறை மருத் துவர்களை வேண்டிக் கேட்டு, சில நாட்களுக்குப் பிறகு முழு கவசஉடையுடன் சென்று பார்த்துள்ளார் அவரது நண்பரான இயக்குனர் லிங்குசாமி. "டேய், பாலா'' என்ற 'லிங்குசாமியின் குரலைக் கேட்டுக் கலங்கியுள்ளார் வசந்தபாலன். இப்படித் தெரிந்த, தெரியாத பலரின் உதவியும் அன்பும் தன்னை மீட்டுக்கொண்டுவந்து வீட்டில் சேர்த்திருப்பதாகக் கூறும் வசந்தபாலன், இன் னும் ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு பணிகளைத் தொடர லாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Advertisment

வசந்தபாலன் விஷயத் தில் மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள பலரும் அவர் களுக்குத் தெரியாதவர்களுக் கும் பல வகைகளிலும் உதவி வருகின்றனர். ஒரு பக்கம் கனவுகளை உடைத்தும் மறு பக்கம் அன்பையும் மனிதத் தையும் மலரவைத்தும், மனித வாழ்க்கையில் விளை யாடி வருகிறது கொரோனா.

-வீபீகே