மழலையர்களுக்கும் காலை உணவு! -முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கை

ss

""ஆயா, என் தம்பியும் சாப்பிடல. இன்னும் கொஞ்சம் பொங்கல் போடுங்க'' -ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள அந்த கிராமத்தின் தொடக்கப் பள்ளியில், காலை சத்துணவு வழங்கிக் கொண்டிருந்தவ ரிடம், ஒரு இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பரிதாபக்குரலில் கேட்க, அதைப் பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர், நம்மிடம்....

""அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளான எல்.கே.ஜி, யூ.கே.ஜி.யும் செயல்படுகிறது. மாணவர்களுக்கான காலை உணவு இந்த மழலையர் வகுப்பில் படிக்கும் குழந்தைகளுக்கு கொடுக் கப்படுவதில்லை. அதனால்தான் இப்படி ஒரு சிறுவன் தன் தம்பிக்காக கெஞ்சினான்’’ என்றார் கவலையாக, இது நம்மை அதிரவும் சிந்திக்கவும் வைத்தது.

aa

இது குறித்து பள்ளிக் கல்வித் துறையில் விசாரித்தபோது, ""இந்த கல்வியாண்டில் ஒவ்வொரு மாவட் டத்திலும் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 3 அல்லது 5 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் சில நூறு அரசு பள்ளிகளிலேயே மழலையர் வகுப்புகள் உள்ளன. மழலையர் வகுப்புகள் உள்ள பள்ளிகளில்தான் இப்படிப்பட்ட மனதை உருக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன'' என்கின்றனர்.

திருவண்ணாமலை ஒன்றியத்தில் 5 பள்ளிகளி

திருவண்ணாமலை ஒன்றியத்தில் 5 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதில் வெறையூர் ஆண்டியாபாளையம் கிராமத்திலுள்ள நடுநிலைப் பள்ளிக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி நேரடி விசிட் அடித்தோம். பள்ளிக்கு காலை 7.30 மணிக்கே பல குழந்தைகள் வருகை தந்துவிட்டன. அங்கிருந்த 90 சதவிகித குழந்தைகளின் காலில் காலணி இல்லை, அந்தளவுக்கு ஏழ்மை அவர்களிடம் தெரிந்தது.

ss

பள்ளிச் சமையலறையில் சேமியா உப்புமா, சாம்பார் தயாரித்துக் கொண்டிருந்தார் சமையல்காரப் பெண்மணி. 8 மணிக்கு அப்பள்ளியின் தலைமையாசிரியர் வந்து குழந்தைகளுக்காக தயாராகியிருந்த உணவை சாப்பிட்டுப் பார்த்தபின்பு, குழந்தைகளுக்கு தந்தனர். வரிசையில் நின்று உணவு வாங்கிக்கொண்டு போய் வகுப்பறை வராண்டாவில் அமர்ந்து குழந்தைகள் சாப்பிட துவங்கினார்கள்.

அப்போது கலர் உடை அணிந்திருந்த இரண்டு மழலையர் வகுப்புக் குழந்தைகள், மற்ற மாண வர்கள் சாப்பிடுவதை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தனர். அனைத்து பிள்ளைகளுக்கும் சாப்பாடு தந்து முடித்தபின், மீதியிருந்த உணவினை ஏக்கத் தோடு நின்றுகொண்டிருந்த குழந்தைகளின் அண்ணன், அவர்களுக்குக் கொஞ்சம் ஊட்டி விட்டான். இப்படி சுமார் 15க்கும் மேற்பட்ட மழலையர் வகுப்புக் குழந்தைகள் தனது அக்கா அல்லது அண்ணனோடு சேர்ந்து சாப்பிடுவதை அங்கே பார்க்க முடிந்தது.

ss

இதுபற்றி அப்பள்ளியின் தலைமை யாசிரியர் பச்சையப்பனிடம் கேட்டபோது, ""எங்கள் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 115 குழந்தைகள் படிக்கிறார்கள். மழலையர் வகுப்பில் 42 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் ஏழை விவசாயிகள். தினமும் காலை 7 மணிக்கே வயல் வேலை மற்றும் கூலி வேலைக்குப் போய்விடுவார்கள். சில குழந்தைகளின் தாயார் கள் ஏதாவது சாப்பாடு செய்து தந்துவிட்டுப் போவார்கள், பல குழந்தைகள் சாப் பிடாமலே மதிய உணவை நம்பி இங்கே வருகிறார்கள். இதனால் மதிய உணவு தயாரான தும் உடனே அவர்களை சாப்பிடச் செய்து விடுவோம். சாப்பிட்ட பின்புதான் அவர்களின் முகத்தில் தெளிவிருக் கும், அதன்பின் பாடத்தை நன்றாக கவனிப்பார்கள். இந்த காலை உணவு திட்டத் தினை கொண்டுவந்த முதலமைச்சரை புகழ்ச் சிக்காகச் சொல்ல வில்லை. உண்மையில் வள்ளலாராகப் பார்க்கிறேன்''’’என்றவர்...

""இந்த காலை உணவுத்திட்டத்தை மழலையர் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு செய்தால், சின்னக் குழந்தைகள் தவிப்பதைத் தவிர்க்கலாம். மழலையர் வகுப்பில் படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு மட்டும் கொடுத்தால்கூடப் போதும்''’என்றார் வேண்டுகோளாக.dd

ஆசிரியை தாஜ்மஹாலோ, ""குழந்தைகளுக் கான காலை உணவுத் திட்டதைக் குறை சொல்பவர்கள் கிராமப்புற பள்ளிகளுக்கு வந்து பார்க்கட்டும். எத்தனை, எத்தனை குழந்தை களின் பசியைப் போக்கும் திட்டம் இது என்பது தெரியும். காலையிலேயே பசி மயக்கத் தில் வந்து வகுப்பறையில் அமரும் குழந்தைகள், பசியால் சமையலறையை ஏக்கத்தோடு பார்ப்பது எங்களைப் போன்ற ஆசிரியர் களுக்குத்தான் தெரியும். அதையெல்லாம் சொன்னால் புரியாது. உணர்ந்தால் மட்டுமே குழந்தைகளின் வேதனை புரியும்''’என்றார் கவலையாக. அக்கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள், ""என் மகனும், மருமகளும் வெள்ளனவே வேலைக்கு போய்டுவாங்க. பேரப்பிள்ளைங்களுக்கு நான்தான் எதையாவது சாப்பிட வச்சி அனுப்புவேன். உடம்புக்கு முடியாம பலநாள் செய்யமுடியாது. புள்ளைங்க பட்டினியாவே போய் பள்ளியில் மதியம் சோறு வாங்கிச் சாப்பிடுவாங்க. காலையில பால்வாடி புள்ளைங்களுக்கு சாப்பாடு போடறதில்லை யாம். எல்லா புள்ளைங்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் சோறு போட்டாருன்னா மகராசன் நல்லாயிருப்பாரு''’என்றார் நம்பிக்கையாக.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அரசுப்பள்ளி ஆசிரியர் ஆ.மணி கண்டன் நம்மிடம், ""மதிய உணவுத் திட்டம் தொடங்கிய பிறகே கிராமப்புற ஏழை மாணவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள் என்பது வரலாறு. இதை இந்தியாவே பாராட்டியது. அதன் பிறகு அந்தத் திட்டம் விரிவு செய்யப்பட்டது. விரிவுபடுத்தப்பட்ட திட்டம் 10ஆம் வகுப்போடு நிறுத்தப்பட்டுள்ளது. 11, 12வது படிக்கும் ஏழை மாணவர்கள் பசியோடு வகுப்பறையில் சோர்வாக அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். எனவே அவர்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இவர் களுக்கு சத்தான மதிய உணவு கொடுத்தால் பசியில்லாமல் பாடத்தை புரிந்து படிப்பார்கள். எனவே மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கடந்த ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்ததை அப்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த அரசாங்கமாவது இதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். இது சம்பந்தமாக அமைச்சர் கீதாஜீவன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத் துள்ளோம்''’’ என்றார் ஆர்வமாக. அனைவர் மத்தியிலும் வலுத்துவரும் இந்தக் கோரிக்கைகளை தமிழக முதல்வர் கவனிப்பாரா?

-து. ராஜா, பகத்சிங்

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்

nkn130923
இதையும் படியுங்கள்
Subscribe