ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழக மக்கள் முன்னின்று நடத்திய போராட்டங் களில் மிக முக்கியமான போராட்டங்களாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தையும் குறிப்பிடலாம்.
2016-ஆம் வருடம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என பீட்டா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியது. 2017-ல் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கவேண்டும் என மதுரையில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க, அதற்கு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டம் தீயாய்ப் பரவியது. சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் கூட்டம் போராட்டத்தை முன்னெடுத்தது. வேறு வழியில்லாமல், அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டிற்கான அவசர சட்டத்தை சட்ட சபையில் இயற்றி, மத்திய அரசு மற்றும் ஜனாதி பதியிடம் ஒப்புதல்பெற்று தடையை நீக்கினார். பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு மிக விமர்சையாக ஜல்லிக்கட்டுப் போட்டி களை நடத்தத் தொடங்கியது.
இவ்வாண்டு தமிழர் திருநாளான பொங்கலன்று மதுரையில் கோலாகலமாக மாவட்ட ஆட்சியர், அமைச் சர்கள், ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் முறையே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் அவனியாபுரத்தில் சிறந்த காளையாக சசிகலா என்பவர் வளர்த்த காளை தேர்வுசெய்யப்பட்டு, முதல் பரிசாக டிராக் டரும் கூடவே பசுவும் கன்றும் வழங்கப்பட் டது. அதிக காளைகளை அடக்கிய வீரர் கார்த்திக்குக்கு நிசான் காரும், பசுவும் கன்றும் வழங்கப்பட்டது. அதேபோன்று பாலமேட்டில் ச
ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழக மக்கள் முன்னின்று நடத்திய போராட்டங் களில் மிக முக்கியமான போராட்டங்களாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தையும் குறிப்பிடலாம்.
2016-ஆம் வருடம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என பீட்டா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியது. 2017-ல் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கவேண்டும் என மதுரையில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க, அதற்கு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டம் தீயாய்ப் பரவியது. சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் கூட்டம் போராட்டத்தை முன்னெடுத்தது. வேறு வழியில்லாமல், அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டிற்கான அவசர சட்டத்தை சட்ட சபையில் இயற்றி, மத்திய அரசு மற்றும் ஜனாதி பதியிடம் ஒப்புதல்பெற்று தடையை நீக்கினார். பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு மிக விமர்சையாக ஜல்லிக்கட்டுப் போட்டி களை நடத்தத் தொடங்கியது.
இவ்வாண்டு தமிழர் திருநாளான பொங்கலன்று மதுரையில் கோலாகலமாக மாவட்ட ஆட்சியர், அமைச் சர்கள், ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் முறையே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் அவனியாபுரத்தில் சிறந்த காளையாக சசிகலா என்பவர் வளர்த்த காளை தேர்வுசெய்யப்பட்டு, முதல் பரிசாக டிராக் டரும் கூடவே பசுவும் கன்றும் வழங்கப்பட் டது. அதிக காளைகளை அடக்கிய வீரர் கார்த்திக்குக்கு நிசான் காரும், பசுவும் கன்றும் வழங்கப்பட்டது. அதேபோன்று பாலமேட்டில் சிறந்த காளையாக சத்திரப்பட்டியை சேர்ந்த தங்கபாண்டியனின் காளையும், சிறந்த வீரராக பார்த்திபனும் தேர்வுசெய்யப்பட்டனர். அலங்காநல்லூரில் சேலத்தைச் சேர்ந்த பாகுபலி சிறந்த காளையாக டிராக்டரைத் தட்டிச்சென் றது. அதிக காளைகளை அடக்கிய பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தருக்கு கார் பரிசளிக்கப்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தமி ழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்து, களத்தில் மிகச் சிறப்பாக மாடுபிடித்த வீரர்களை அழைத்து ஸ்பாட்டி லேயே தங்க மோதிரம் அணிவித்தது பார்வையாளர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்தியது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வெளிநாட்டைச் சேர்ந்த கொன் ஆண்டனி கொல்னன் என்பவர் திடீரென உற்சாகமாகி தானும் ஜல்லிக்கட்டில் இறங்கி காளையை அடக்கப்போகிறேன் என்று உணர்ச்சிவசப்பட்டுக் கிளம்ப, அங்கிருந்த அதிகாரிகள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள் மருத்துவப் பரிசோதனையில் தகுதி இல்லை என்று தவிர்த்ததன் பின்புதான் கொஞ்சம் ஆசுவாசப்பட்டனர். இப்படி ஜல்லிக்கட்டுக்கு நடுவே பல சுவாரசியமான சம்பவங்களும் நடந்தேறின.
சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சோகமான நிகழ்வுகளுக்கும் குறைவில்லை. 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அவனியாபுரத்தைச் சேர்ந்த நவீன்குமார் மாடு முட்டியதில் மரணமடைந்தார். அந்த குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, அரசு இழப்பீடாக ரூ.3 லட்சம் அறிவித்தது. மேலும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலைதருவதாக வாக்குறுதியளித்தது.
பாலமேட்டில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த வீரரை சாதிப் பாகுபாடால் களம் காண விடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதை அந்த வீரரே மறுத்தார். தத்தனேரியைச் சேர்ந்த கடந்த ஆண்டு முதல் பரிசை வென்ற வீரர் கார்த்தி, “"நான் களமிறங்கியபோது மாடு மிதித்ததில் என் எலும்பில் அடிபட்டதால் தொடர்ந்து விளையாடமுடியாமல் வெளியேறினேன். இதை ஊதிப் பெரிதாக்குகின்றனர்''’ என்றார்.
ஜல்லிக்கட்டு ஆர்வலரான கதிர், “"தமிழ் மரபுவழி அடையாளத்தை போராடி வென்றெடுத்த இந்த வீர விளையாட்டை இன்னும் ஒழுங்குகளுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை 23 வீரர்கள் மரணம் அடைந் துள்ளனர். மற்ற விளையாட்டுபோல் இல்லை ஜல்லிக்கட்டு. ஒவ்வொரு வீரனும் உயிரைப் பணயம்வைத்து களத்தில் விளையாடுகிறான். இவர்கள் போர்வீரர்களுக்குச் சமமானவர்கள். ஒவ்வொரு வீரருக்கும் அரசு காப்பீடு செய்யவேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். அதேபோன்று ஒவ்வொரு ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்திலும் மருத்துவ உதவி மையம் முழுமையாகச் செயல்படவேண்டும்.
மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளைத்தான் முக்கியத்துவம் கொடுத்து செய்தி நிறுவனங்கள் ஒளிபரப்புகின்றன. கார், டிராக்டர், தங்கக் காசு, பைக் என்று பரிசும் புகழ்வெளிச்சமும் இங்கு இருப்பதால் இந்தமுறை இந்த மூன்று போட்டிக் களத்தில் பங்கேற்க மட்டும் ஆன்லைனில் பதிவு செய்த காளை கள் 7000-க்கும் அதிகம். அதனால் போட்டிகளை அனைத்து மாவட் டங்களிலும் அரசு ஒழுங்குமுறைபடுத்தி நடத்தவேண்டும். அதேபோன்று ஜல்லிக் கட்டில் ஏற்கனவே பங்குபெற்று பரிசுபெற்ற வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது பெயர்களைப் பதிவுசெய்யவேண் டும்''’என்றார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் இந்தமுறை பெரும்பாலும் ஜல்லிக்கட்டு காளைகளை பிடித்தபடி வீரத்தமிழச்சிகள் நடமாடியதை மைதானங்களில் அதிகமாகக் காணமுடிந்தது. அப்படி நாம் சந்தித்த வலசையைச் சேர்ந்த மூக்கம்மாள், "அண்ணே ஜல்லிக்கட்டு போராட் டத்திற்கு பிறகு எங்க வீட்டில் கருப்பனை (காளை) நானே கவனிக்க ஆரம்பித்தேன். என் அண்ணனைவிட என்னிடம்தான் அவன் அடங்கு வான். களத்தில் அடங்கமறுப்பான். இவன் ஆட் டத்தை களத்தில் பார்க்கவேண்டும் என்றுதான் நேரில் வந்தேன். என் காளையை ஒரு வீரர்கூட அடக்கவில்லை''” என்றார் பெருமையாக.
அதேபோன்று அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சிதா, “"நான் கடந்த 7 வருடமா இவனை வளர்க்கிறேன். இப்ப கல்லூரியில் படிக்கிறேன். இவன் என் தம்பி. இவன்கிட்ட யாரும் அவ்வளவு எளிதில் நெருங்கமுடியாது... முட்டித் தூக்கிருவான்''’என்றார் பெருமிதமாக.
மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி யான திவ்யதர்ஷினி பெரிய கொம்புகளோடு, ஓங்கிய திமில் சிவந்த கண்களோடு வெறியுடன் இருந்த காளையை, அசால்ட்டாக கொஞ்சமும் பயமின்றிப்பிடித்து வாடிவாசல் நோக்கி இழுத்து வந்தவர் நம்மிடம்... "எங்க தாத்தாவுக்கு தாத்தா காலத்திலிருந்து ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறோம். எங்க அண்ணன், என் அப்பா ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரராக பல பரிசுகள் வாங்கியிருக்கிறார்கள். எங்க அம்மா காளைக்கு உணவு வைப்பார், பார்த்திருக்கிறேன். மற்றபடி தோட்டத்தில் வைத்துதான் ஆண்கள் பயிற்சி கொடுப்பார்கள். இப்ப அந்த காலம் மலையேறிவிட்டது. நான் சின்ன குழந்தையாக இருக்கும்போது ஜல்லிக்கட்டுக்கு போயிட்டு வந்தபின்பு இரண்டு நாளைக்கு மூர்க்கமா இருப் பான் என்று ஆண்களே தள்ளித்தான் நிற்பார் கள். ஆனால் ஒருமுறை குழந்தையாக நான் அதனருகில் போய் நிற்க, அவன் என்னை நாக்கால் துழாவி அன்பைக் காட்டினான். மரபு வழியாக வந்த சொந்தம் இது. நான் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து இவனைப் பார்க்காமல் இருந்தால் எப்படியோ தெரிந்துகொண்டு சத்தம் கொடுக்க ஆரம்பிக்கும்''’என்று சொல்லியபடியே தன் செல்லத்தம்பிக்கு அன்பு முத்தம் கொடுக்க... நாம் அதை புகைப்படமாக எடுத்தோம்.
அடுத்து காளையோடு வந்த பிரியா, “"களத்தில் திமிலோடு நிமிர்ந்து நிற்கும் எங்கள் காளைகளை நேருக்கு நேர் சந்திக்கும் வீரனுக் கும், அவனுடன் வீரத்துடன் மோதத் தயா ராக்கிய வீரத் தமிழச்சிகளான எங்களுக்கும்தான் போட்டியே. வீரனுக்கு நிகராக களத்தில் பரிசு களை அதிகமாகக் குவித்தது நாங்களும்தான். சினிமாவிலும் கதைகளிலும் காளையை அடக்கும் வீரனையே பெரிதாகக் காண்பிக் கிறார்கள். ஆனால் உண்மையில் பெண்க ளாகிய நாங்கள்தான் முரட்டுக் காளைகளாக உருவாக்குவது. உண்மையில் பரிசு எங்களுக்குத்தான் கொடுக்கவேண்டும்''’என்று சொல்லிய அவர், "ஆவேசம் கொண்டாலே பொல்லாதது... அஞ்சாத சிங்கம் என் காளை'’என்று பாடிக்கொண்டே இழுத்துச்சென்றார்.