தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை அடுத்துள்ள மருத் துவக்குடி கிராமத் தைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். இவர் தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாள ராகவும், மாநில துணைச்செயலாள ராகவும், ஆடுதுறை பேரூராட்சித் தலைவராகவும் இருந்துவருகிறார். ஆரம்பத்தில் அன்புமணியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர், ராமதாஸ் அணி, அன்புமணி அணி என பிரிந்தபிறகு, ராமதாஸ் அணியின் முதல்வரிசை நிர்வாகிகளில் இடம்பிடித்தார்.
சமீபத்தில் பூம்புகாரில் நடந்த வன்னியர் சங்க மாநில மாநாட்டில் அவரது பங்கு அதிகம். இதனை ராமதாசும், கோ.க.மணியும் பாராட்டினர். அதேபோல கும்பகோணத்தில் வன்னியர் சங்க மாநாட்டை நடத்தி மொத்த பா.ம.க. பொறுப்பாளர்களையும் தன்பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தார்..
இந்தச் சூழலில் செப்டம்பர் 5-ஆம் தேதி காந்தி தலைமையில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து பாராட்டுவிழா நடத்துவதற்கு திட்டமிட்டு, அதுகுறித்தான ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகள் சிலரோடு ஆடுதுறையிலுள்ள பேரூராட்சி அலுவலகத்தில் நடத்திக்கொண்டி ருந்தார். பேரூராட்சி வாசலில் மஞ்சமல்லி அருண், களம்பரம் இளையராஜா ஆகியோர் நின்றுகொண்டி ருந்தனர். அப்போது பேரூராட்சி அலுவலகத்தின் முன்கதவு கண்ணாடிகள் நொறுங்கின. மதியம் ஒரு மணிவாக்கில் காரில் வந்த எட்டுபேர் கொண்ட மர்ம கும்பல், தாங்கள் கொண்டுவந்த சணல் வெடிகுண்டை வீசி, அரிவாளால் ஸ்டாலினை வெட்ட முயற்சித்தபோது அதிர்ஷ்டவசமாக கழிவறைக்குள் பதுங்கிவிட்டார்.
அவர் இருக்கையில் இல்லாததைக் கண்ட அந்த மர்ம கும்பல் பின்புறமாக தப்பி ஓடியிருப்பார் என அங்க

அவர் இருக்கையில் இல்லாததைக் கண்ட அந்த மர்ம கும்பல் பின்புறமாக தப்பி ஓடியிருப்பார் என அங்கும் ஒரு நாட்டு வெடிகுண்டை வீசினர். அவரோடு இருந்த இரண்டுபேர் அரிவாள் வெட்டோடு மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவத்தால் மாவட்டமே பரபரப்பானது.
ஸ்டாலின் ஆதரவாளர்களும், பா.ம.க. வினரும் ஆடுதுறை திரண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள் அவசர அவசரமாக மூடப்பட்டன. கடைவீதிகளில் கிடந்த டயர்களை கொளுத்த, பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள் பெண் எஸ்.ஐ. ஒருவர் துணிச்சலாக அதனைத் தடுத்தார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து கும்பகோணம், மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறை கடைவீதியில் பா.ம.க., வன்னியர் சங்க கட்சியினர் சாலைமறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். அதேபோல கல்லணை, பூம்புகார் சாலையிலும் திருமங்கலக்குடி கடைவீதியிலும் சாலைமறியல் போராட்டம் நடத்தியதால்... கும்பகோணம், மயிலாடுதுறை மார்க்கம் முற்றிலுமாக முடங்கியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம ஆசாமிகளை விரைவில் பிடித்துவிடுவோம் என்று போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
கொலை முயற்சிக்கான காரணம் என்னவென விசாரணையிலிருக்கும் காக்கிகளிடமே விசாரித்தோம், "ம.க. ஸ்டாலினுக்கு அரசியல்ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட விவகாரங்களிலும் நிறைய எதிரிகள். ஆரம்பத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த செல்வகுமாருக்கும், ஸ்டாலினுக்கும் பகையிருந்தது. ஒருகட்டத்தில் செல்வகுமாரை கும்பகோணத்தில் வைத்து ஒரு டீம் கொலைசெய்தது. அந்த கொலைக்கு பழிக்குப் பழியாக சாதிகடந்து செல்வகுமாரின் ஆதரவாளர்கள் அடுத்தநாளே சரவணன் என்பவரைக் கொலைசெய்தனர். அந்த வழக்கில் லாலி மணிகண்டன் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். செல்வகுமார் கொலை எதிரிகளுக்கு ஆதரவாக இருந்ததாக ம.க. ஸ்டாலினின் தம்பியான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜாவை 2015, ஏப்ரல் 3ஆம் தேதி இரவு வெட்டிக் கொலைசெய்தனர்.
வழக்கறிஞர் ராஜா தமிழகம் முழுவதிலும் நிறைய ரவுடிகளோடு நெருக்கமாக இருந்தார். திண்டுக்கல் மோகன்ராம், சிதம்பரம் சுரேந்தர் ராஜாவின் விசுவாசியாகவே இருந்தனர். சிதம்பரத்தில் நடந்த வெடிகுண்டு விபத்தில் பாதிப்படைந்த திண்டுக்கல் மோகன்ராமுக்கு மருத்துவம் மற்றும் சட்ட உதவிகளைச் செய்துகொடுத்ததால் அந்த விசுவாசம் தொடர்ந்தது. ராஜா கொலைசெய்யப்பட்ட வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக லாலி மணிகண்டன் என்பவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை சிறையிலிருந்து அவர் ஜாமீனில் வெளியே வருவதை எதிர்பார்த்து ஸ்கெட்ச் போட்டு காத்திருந்த திண்டுக்கல் மோகன்ராம் தலைமையிலான முப்பதுபேர் கொண்ட டீம், கோவை திருச்சி சாலையில் காத்திருந்து லாலி மணிகண்டனின் அண்ணன் மாதவன் உள்ளிட்ட இருவரை அடையாளம் தெரியாத அளவுக்கு வெட்டிச் சிதைத்து பழிதீர்த்தது. இதில் லாலி மணிகண்டன் தப்பித்தார்.
இந்த வழக்கில் ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த மோகன்ராமை, திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு குறித்தான குற்றவாளிகளை கைது செய்யும்போது 2018-ல் மும்பையில் வைத்து கைது செய்தனர்.
இந்தப் பகை ஒருபுறமிருக்க, பா.ம.க. மாநில துணைச்செயலாளராக இருந்த வெங்கட்ராமனுக்கும் ம.க.ஸ்டாலினுக்கும் மோதல் உண்டானது. வெங்கட்ராமனுக்கு ரவுடிகள் பின்புலமில்லாததால் அவருக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் குடைச்சல் கொடுத்துவந்தார் ம.க.ஸ்டாலின். இந்த நிலையில் ம.க.ஸ்டாலினிடமிருந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பு பிடுங்கப்பட்டு வெங்கட்ராமனுக்கு கொடுக்கப்பட்டது. பதவி பறிபோன ஆத்திரம் ஸ்டாலினை மீண்டும் கோபமடையச் செய்தது.
வெங்கட்ராமனுக்கு அடிக்கடி மர்ம நபர்களால் மிரட்டல் வந்தது. அன்புமணியையும், ராமதாஸையும் பார்த்து முறையிட, ம.க.ஸ்டாலின் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கப் பட்டார். (ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் பதவிக்கு வந்தார்.) இதனால் இருவருக்கும் இடையிலான பகை மேலும் அதிகமானது. ம.க.ஸ்டாலின் ஆதரவாளராக திண்டுக்கல் மோகன் ராமும், வெங்கட்ராமனுக்கு லாலி மணிகண்டனும் என களம் மாறியது. அதன் தொடர்ச்சிதான் பேரூராட்சி அலுவலகத்தில் நாட்டு குண்டுவீசி கொலைமுயற்சி செய்தது. இந்தப் பகை முடியாது தொடரும்'' என்கிறார்கள் விவரமாக.
ம.க.ஸ்டாலினிடம் இதுகுறித்து கேட்பதற்கு போன் செய்தோம். அவர் போனை எடுக்கவில்லை. அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் கேட் டோம். "பா.ம.க. அன்புமணி அணி, ராமதாஸ் அணி என இரண்டானதும் ஸ்டாலின் கை ஓங்கியது. இது பலருக்கும் பிடிக்கலை. கும்பகோணத்தில் கட்சி மாநாடு, பூம்புகாரில் மகளிர் மாநாடு என அதிரடிகாட்டி அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் திரும்பிப் பார்க்க வைத்து ராமதாஸின் கரங்களை வலுப்படுத்தி யுள்ளார். கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ- மாணவிகளுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி 5-ஆம் தேதி மாலை நடத்த விருந்த நிலையில்தான் இப்படியொரு அசம்பாவிதம் நடந்துள்ளது'' என்கிறார்கள்.
இதுதொடர்பாக திருவிடைமருதூர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “"எப்பவுமே ஸ்டாலினோடு முப்பது பேர் கொண்ட கூட்டம் இருக்கும். எங்கு சென்றாலும் மூன்று நான்கு கார்கள் முன்னும்பின்னும் செல்லும். விடுமுறை நாளில் எதற்கு பேரூராட்சி அலுவலகத்திற்கு வரவேண்டும். அதோடு பாதுகாப்புக்காக எப்போதும் வருவோர் ஏன் வரவில்லை என்பதற்கான காரணம் கேட்டாலும், வெடிகுண்டு வீச்சு தொடர்பாகவும் முன்னுக்குப்பின் முரணாக ஸ்டாலின் கூறுகிறார்.
வெங்கட்ராமனுக்கு ரவுடிகள் பின்புலம் கிடையாது. ஸ்டாலினை வெங்கட்ராமன் கொலைசெய்யவேண்டிய தேவையும் இல்லை. அதே நேரம் லாலி மணிகண்டன் சிறையிலிருக்கிறான். வெளியில் கூலிப்படையை ஏவிவிடும் அளவுக்கு பொருளாதார பின்புலமும் கிடையாது. சில மாதங்களாக லாலி மணிகண்டனின் அண்ணன் மாதவனின் மகன்கள் தனது தந்தையைக் கொலைசெய்ய காரணமான ஸ்டாலினைப் போட்டுத்தள்ள பலமுறை ஸ்கெட்ச் போட்டனர். அவர்களாக இருக்கலாமா என்ற ரீதியிலும் விசாரணை போகிறது.
ம.க.ஸ்டாலின் விளம்பரப் பிரியரும்கூட. ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அது வாபஸ் பெறப்பட்டது. அதனைப் பெறுவதற்காகச் செய்கிறாரா, அரசியல் வளர்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பிருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து நடந்ததா? தெரியவில்லை. ஏற்கெனவே செல்வகுமார் ஆதரவாளர்கள், லாலி மணிகண்டனின் ஆதரவாளர்களிடம் பேசி பெரிய அளவில் பணம்கொடுத்து சரிசெய்துவிட்டதாகவும் தகவலிருக்கிறது. ஆனாலும் லாலி மணிகண்டன் தரப்பிலிருந்து கொலைமுயற்சி நடந்துள்ளதா அல்லது இதற்கு வேறு அரசியல் காரணமா என்கிறரீதியில் விசாரணை நடத்திவருகிறோம்'' என்கிறார்.