டக் கொடுமையே...

அந்தச் செய்தியைக் கேட்டதுமே எல்லோருமே உச்சரித்த வார்த்தை அதுவாகத்தானிருக்கும்.

உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட்டர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான "எம்.எஸ்.தோனி-அன் டோல்டு ஸ்டோரி' படத்தில் தோனியாக... தத்ரூபமாக நடித்து... உலகின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பீகார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த சுஷாந்த் 250 ரூபாய்க்கு மேடை நாடகங் களில் நடிக்கத் துவங்கி... சில ஆயிரம் ரூபாய்களுக்கு டி.வி. சீரியலில் நடித்து... பாலிவுட்டில் சுமார் ஏழு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோவாக உயர்ந்தவர். 34 வயது இளைஞ னான சுஷாந்த் கடந்த 14-ஆம் தேதி மும்பை யில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்த பெரும்பாலானவர்கள் "அடக் கொடுமையே' என்றுதான் அரற்றினார்கள்.

ss

Advertisment

ஒருவாரத்திற்கு முன் தனது முன்னாள் கால்ஷீட் மேனேஜர் பெண்மணியான திஷா, தன் வருங்கால கணவருடன் தங்கியிருந்த வீட்டில் 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டபோது... “அந்தப் பெண் ஏன் இப்படி செய்துகொண்டாள்?’’என திஷாவுக்காக வருந்திய சுஷாந்த் ஒரே வாரத்தில் தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

சுஷாந்த் ஏன் தற்கொலை செய்துகொண்டார்?

பிரபலமானவராகவும், சினிமா மூலம் சுமார் 60 கோடி ரூபாய் சொத்தும் வைத்திருந்த சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ள என்ன நிர்ப்பந்தம்? இரண்டு முறை காதல் தோல்வி கண்டாரே... அதுதான் காரணமா? சுஷாந்த்தின் தற்கொலைக்கும், அவரின் முன்னாள் மேனேஜர் திஷா தற்கொலைக்கும் சம்பந்தம் உண்டா? -இப்படி பல்வேறு சந்தேகங்களை சுஷாந்த்தின் மர்ம மரணம் ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

சுஷாந்த்தின் உறவினர்களோ... "சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளவில்லை... கொலை செய்யப்பட்டிருக்கிறார்' என்று குற்றம்சாட்டுகிறார் கள். அரசியல்வாதிகளும், சில சினிமா பிரபலங்களும்கூட சந்தேகம் எழுப்புகிறார்கள்.

சுஷாந்த் தீவிரமாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். அதற்கான மருந்து, மாத்திரைகள் மற்றும் டாக்டர்களின் பிரிஸ்கிரிப்ஷன்களும் சுஷாந்த் வீட்டிலிருந்து போலீஸாரால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. மன அழுத்தத்திற்கான மாத்திரைகளை முறையாக சாப்பிடாமல் சுஷாந்த் தவிர்த்து வந்ததும் தெரியவந்திருக்கிறது.

டி.வி. சீரியலில் நடித்தபோது... சக நடிகையுடன் ஏற்பட்ட காதல் பிரேக்-அப் ஆன நிலையில்... சினிமாவுக்கு வந்த பிறகு... நடிகை ரியா சக்ரபர்தியுடன் காதல் கொண்டார். சுஷாந்த்தின் மும்பை வீட்டில்தான் இருவரும் சேர்ந்து வசித்தனர்.

தன் காதலர் சுஷாந்த் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து... அவரை முறையாக மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்ள வற்புறுத்தியிருக்கிறார் ரியா. ஆனால் ரியாவின் கண்காணிப்பில் இல்லாத சமயங்களில் மருந்து சாப்பிடாமல் அலட்சியம் காட்டியிருக்கிறார். ஒருமுறை ரியாவுடன் வீட்டில் டி.வி.யில் பிரபல இயக்குநர் சுபாஷ் கை இயக்கிய படம் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்த சுஷாந்த்... ""நான் சுபாஷ்ஜியின் படம் ஒன்றில் நடிக்க மறுத்தேன். அதனால்... இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே வந்து என்னை கொலை செய்யப்போகிறார்''’எனச் சொல்ல... அதிர்ந்துபோன ரியா... ""அப்படியெல்லாம் நடக்காது...'' என சமாதானப்படுத்தி யிருக்கிறார்.

ss

ஆனால்... தொடர்ந்து இதுபோலவே சுஷாந்த் ஏதேதோ பேச, பயந்துபோன ரியா... சுஷாந்த்தின் வீட்டாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு... உயிர் பயத்தில் சுஷாந்த்துடன் தங்குவதை தவிர்த்திருக் கிறார். அதன்பிறகும் சுஷாந்த் அதே நிலையில் இருந்து, தற்கொலை நோக்கித் தள்ளப்பட்டாரோ என்றும் யோசிக்க வைக்கிறது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுஷாந்த், பிரபல வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் ஸ்காலர்ஷிப் வாங்குகிற அளவிற்கு படிப்பில் திறமைசாலி. ஐ.ஐ.டி. அகில இந்திய தேர்வில் முதல் பத்து இடங்களுக்குள் வந்த மாணவர். இயற்பியல் குறித்து அதிக அறிவுவளம் அவரிடம் இருந்தது. சினிமா பற்றியும்... இதர துறைகள் பற்றியும் பேச்சாளரைப் போல பேசும் அறிவும் பெற்றிருந்தார் சுஷாந்த். சயிண்டிஸ்ட் ஆகியிருக்க வேண்டிய இளைஞன் ஆர்டிஸ்ட் ஆனார். தன் திறமையை நிரூபித்தும், மக்கள் அங்கீகரித்தும், திரையுலகம் அங்கீ கரிக்காததால் உண்டான அவமானம்... சுஷாந்த்தை மன அழுத்த நோயாளியாக மாற்றி... இன்று அவரின் உயிருக்கு உலை வைத்திருக்கிறது.

சுஷாந்த்திற்கு என்ன மாதிரியான அவமானங்கள் நேர்ந்தது?

பாலிவுட்டின் செல்வாக்கான நட்சத்திர குழுக்களும், வாரிசு நட்சத்திரங்களின் அரசியலும் சுஷாந்த்தை ஒரு நடிகராகவே பொருட்படுத்த வில்லை. காரணம், வடமாநிலத்தவர்களாலேயே தகுதிக் குறைவானவர்களாகக் கருதப்படும் பீகாரியாக சுஷாந்த் பிறந்ததுதான்.

இது பாலிவுட்டின் பல்லாண்டுகால வழக்கம். கமல்ஹாசன் இந்திப்படங்களில் நடிக்கச் சென்ற போது... அவரின் வளர்ச்சியைத் தடுக்க அமிதாப் உள்ளிட்ட பிரபலங்கள் பல சதி வேலைகளைச் செய்தார்கள். அமிதாப்பும், கமலும் நடித்த ஒரு படம் கிட்டத்தட்ட முக்கால்வாசி... அதாவது பத்தாயிரம் அடிக்குமேல் எடுக்கப்பட்டபிறகு... அந்தப் படத்தை கைவிடச் சொல்லி தயாரிப்பாள ரை நிர்பந்தித்து... அதற்குப் பதிலாக உங்களுக்கு தேவையான போதெல்லாம் கால்ஷீட் தருகிறேன்... என ஆசை காட்டி... ஆப்பு வைத்தவர் அமிதாப். ஒரு கட்டத்தில் இந்திப்படங்களில் ரஜினிக்கு சப்போர்ட் செய்து... கமலுக்கு எதிராக காய்நகர்த் தியதுடன்... கமல் பாலிவுட்டிலிருந்து வெளியேறிய தும்... ரஜினிக்கு எதிராகவும் காய் நகர்த்தினார் அமிதாப்.

கமல், ரஜினி இருவராலும் தாக்குப்பிடிக்க முடியாத பாலிவுட் அரசியலை... வளர்ந்து வந்த இளைஞான சுஷாந்த்தால் எதிர்கொள்ள முடியா மல்தான் மன உளைச்சலுக்கு ஆளாகி... அது நோயாகி... மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். மாஜி எம்.பி. யும், பிரபல அரசியல்வாதி யுமான சஞ்சம் நிருபம்... ""கடந்த ஆறுமாதங்களில் ஏழு படங்களில் நடிக்கும் வாய்ப்பை சுஷாந்த்திற்கு கிடைக்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள் இந்தி திரைப்பிரபலங்கள். அவர் களின் இரக்கமற்ற செயல்தான் அந்த இளைஞனை கொன்றிருக்கிறது'' எனச் சொல்லியிருக்கிறார்.

ss

ஒரு டி.வி. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலிவுட்டின் பிரபல வாரிசு நடிகை ஆலியா பட்... “""சுஷாந்த் ராஜ்புத்தா? அவர் யார்னு தெரியாதே'' எனச் சொன்னார். அது... எம்.எஸ்.டோனி படம் மூலம் சுஷாந்த் பிரபலமாகியிருந்த பின் நடந்த சம்பவம். இப்படி பல்வேறு வகைகளில் உதாசீனப்படுத்தப்பட்டி ருக்கிறார் சுஷாந்த்.

பொதுவாக பாலிவுட்டில்... அடிக்கடி விருது விழாக்களும், அதை யொட்டி விடிய விடிய மதுவிருந்து பார்ட்டிகளும் நடக்கும். இந்த பார்ட்டிகளில் தான் பிக்-அப், பிரேக்-அப், அட்ஜஸ்ட் மெண்ட்... புதிய பட வாய்ப்புகள், புதிய நட்பு வட்டங்கள் கிடைக்கும். ஆனால்... இப்படியான பார்ட்டிகளுக்கு தான் ஒரு போதும் அழைக்கப்படாததையும், திறமையை நிரூபித்த பிறகும் தன்னை அங்கீகரிக்க திரைத்துறையினர் மறுப்பதாகவும் தனக்கு நெருக்கமான சிலரிடம் சொல்லி வருத்தமடைந்திருக்கிறார் சுஷாந்த்.

""சுஷாந்த்திற்கு உரிய மரியாதையை இந்திப் படவுலகம் தரவில்லை. "கல்லிபாய்' போன்ற படங்கள் விருதுகளைப் பெறும்போது... சுஷாந்த்தின் "சிச்சோரே' படத்திற்கு விருதோ... அங்கீகாரமோ கிடைக்கவில்லை. தற்கொலை செய்யவேண்டும் என்கிற எண்ணத்தை விதைக்கிறார்கள். இது தற்கொலையல்ல... திட்டமிட்ட கொலை''’ என பாலிவுட்டின் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடும் வடகிழக்கிந்திய பெண்ணான நடிகை கங்கனா ரணவத் கூறியுள்ளார். இந்த முறை... பாலிவுட்டின் குழு மனப்பான்மையையும், வாரிசு அரசியலையும் பிரபலங்கள் மட்டும் கண்டிக்கவில்லை. சமூக வலைத்தளங்கள் புண்ணியத்தால்... ரசிகர்களும் கடுமையாக கண்டிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படியான ஒரு மாற்றத்தை சுஷாந்த்தின் உயிர்ப்பலி உண்டாக்கியிருக்கிறது. அதற்காக ஒரு சிறந்த கலைஞன் உயிர்ப்பலி ஆகணுமா?

தன் கடைசிப் படத்தில் தற்கொலைக்கு எதிராக பேசிய சுஷாந்த்... உள்ளூர மரணம் குறித்து சிந்தித்துக்கொண்டே இருந்திருப்பார்போல...

சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தின் முகப்பு புகைப்படமாக உலகப்புகழ்பெற்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த, பிரான்ஸில் வசித்த ஓவியர் வான் கோ வின் “ஸ்டாரி நைட்ஸ்’’ ஓவியத்தை வைத்திருந்தார் சுஷாந்த். இந்த ஓவியத்தை மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்றபோது வரைந்திருக்கிறார் வான் கோ. ஓவியர் வான் கோ 1890 ஆம் ஆண்டு, தன் 37 வயதில் மன அழுத்த நோயால் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் தன் 34 வயதில் மன அழுத்த நோயால் தற்கொலை செய்திருக்கிறார்.

""ஆண்கள் அழக்கூடாதுனுசொல்லி வளர்ப்பாங்க. அழுகையை அடக்கி வச்சு... நெஞ்சு வெடிச்சு செத்துப்போயிடக் கூடாது. அதனால் கஷ்டம் வந்தா மனம் விட்டு அழுதுருங்க...''னு கொஞ்சநாள் முன்ன அட் வைஸ் ட்வீட் போட்டாரு சுஷாந்த்.

நீயும் மனசுவிட்டு அழுதிருக்கலாமே ராசா...!

-இரா.த.சக்திவேல்