உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையிலும், உடல் உறுப்பு தானத்திலும் முன்னோடியாகத் திகழ்வது தமிழகம். அந்த அளவிற்கு இதுகுறித்த விழிப்புணர்வை தமிழக அரசு மக்களிடையே கொண்டுசென்றுள்ளது. எதிர்பாராத விபத்துக்களால் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடல் உறுப்புகளைப் பெற்று, அதன் மூலமாகப் பல உயிர்களை வாழவைக்கும் உன்னதமான செயல், தற்போது வியாபார நோக்கில் செல்வது கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணை யத்தின் (TRANSTAN) உறுப்பினர் செயலராக என்.கோபாலகிருஷ்ணன் செயல்பட்டுவருகிறார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் “ இந்த அமைப்பு இயங்கிவருகிறது. தமிழகம் முழுவதுமுள்ள 341 அரசு மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து மூன்று மண்டலமாகப் பிரித்து, உடல் உறுப்பு தானம் கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இருதயம் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருக்கும் நபர்கள், எந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார்களோ, அந்த மருத்துவமனை சார்பாக, பாதிக்கப்பட்ட நபரின் பெயர், ரத்தக் குறிப்பு, மண்டலம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களை யும் கொண்டு டிரான்ஸ்டன் ஆன்லைன் தளத் தில் விண்ணப்பித்துவிட்டால், அவர்களுக்கு தேவைப்படும் உடல் உறுப்பு, பதிவு எண் வரி சையின்படி அவர்களுக்கு வழங்கப்படும். அதே போல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து அனைத்து உறுப்புகளையும் கொடையாகப் பெற, அதே மருத்துவமனையில் இருக்கும் டிரான்ஸ்டன் ஒருங்கிணைப்பாளர், மூளைச் சாவு அடைந்தவரின் குடும்பத்தாரிடம் உறுப்பு தானம் குறித்து எடுத்துரைத்து, அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், உடனடியாக தகவலைத் தெரிவித்து, மருத்துவர்களின் ஒருங் கிணைப்போடு, கொடையாகப் பெறப்பட்ட உறுப்புகள், வரிசைப்பட்டியலில் காத்திருப்பவர் களுக்கு வழங்கப்படும். அப்போதைக்கு தேவை யில்லையென்றால், டிரான்ஸ்டன் மூலமாக பாதுகாத்து வைக்கப்படும். இதிலும்கூட, எந்த மருத்துவவமனையில் மூளைச்சாவு ஏற்படு கிறதோ, அந்த மருத்துவமனைக்கே முன்னுரிமை வழங்கப்படும். பிறகு மற்ற மருத்துவமனை களுக்கு பதிவு எண் வரிசை அடிப்படையில் வழங்கப்படும்.
சிறுநீரக செயலிழப்பின்போது, டயா லிசிஸ் அ

சிறுநீரக செயலிழப்பின்போது, டயா லிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கலாம். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கு சிறு நீரகத்தை ஒருவர் கொடையாகக் கொடுக்க நினைத் தால், அதற்கு அவர் தகுதியான நபராக இருக்கவேண்டும். ரத்தவழிச் சொந்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அது சட்டத்திற் குப் புறம்பானது. மேலும், மூளைச்சாவு ஏற்படும் நபரிடமிருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகம், பாதிக்கப்பட்டவருக்கு ரத்தப் பிரிவோடு ஒத்துப்போகும்பட்சத்தில் அதனை பயன்படுத்தி பயன்பெற முடியும்.
அப்படி மூளைச்சாவு ஏற்பட்ட நபரை உண்மையாகவே மூளைச்சாவுதான் என உறுதிப்படுத்த ஆப்பினியா எனும் சோதனை செய்து, அது சரியாக வந்தால் மட்டுமே அதனை மூளைச்சாவு என ஏற்றுக்கொள்ள முடியும். அதோடு நிறுத்திக்கொள்ளாமல், 6 மணி நேரம் கழித்து மீண்டும் அதே சோதனை செய்து உறுதிப் படுத்தி, அதற்கு 4 மருத்துவர்கள் ஒப்புதல் கையொப்பமிட்ட பிறகே, அதனை மூளைச் சாவு என உறுதிப்படுத்துவார்கள். அதன்பிறகு பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திடம் ஆற்றுப் படுத்தும் திட்டம், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே, அந்த உடலிலிருந்து சிறுநீரகம், கல்லீரல், இருதயம், நுரையீரல், கணையம், சிறுகுடல், தோல், எலும்பு, கை உள்ளிட்ட இத்தனை உறுப்புகளையும் எடுத்து மற்றவர் களுக்கு மறுவாழ்வு கொடுக்கமுடியும்.
அதன்படி கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் உறுப்பு தானம் வழங்கியவர்களின் எண்ணிக்கை 178. அவர்களிடமிருந்து எடுக்கப் பட்ட உறுப்புகளின் எண்ணிக்கை 1000. அதில் இருதயம் 70, நுரையீரல் 110, கல்லீரல் 155, சிறுநீரகம் 313 உட்பட இன்னும் சில உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல 2024ஆம் ஆண்டு உறுப்பு தானம் வழங்கியவர்களின் எண் ணிக்கை 268. அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட உறுப்புகளின் எண்ணிக்கை 1,500. அதில் இருதயம் 268, நுரையீரல் 96, கல்லீரல் 210, சிறு நீரகம் 456 மேலும் மற்ற உறுப்புகள் எடுக்கப் பட்டுள்ளன. இதில் அதிகப்படியாக, 80 சதவீதம் தேவைப்படுவது சிறுநீரகம் தான். அதையடுத்து, கல்லீரல், தோல் ஆகியன அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன. 2023ஆம் ஆண்டைவிட அடுத் தடுத்த ஆண்டுகளில் விழிப்புணர்வு காரணமாக உடல் உறுப்புகள் தானம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழக முதல்வர் கொண்டுவந்த ஜி.ஓ. 331 மூலமாக, "ஹானர் வாக்' என்பது அறிமுகப் படுத்தப்பட்டு, உடல் உறுப்பு தானம் செய் பவர்களை கவுரவப்படுத்துகிறது. மூளைச் சாவடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவர் களின் இறுதி ஊர்வலத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் டி.ஆர்.ஓ. தலைமையில் மருத்துவர்களும் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செய்வார்கள். இப்படியெல்லாம் விழிப்புணர்வூட்டிய ஒரு மனிதநேய செயல் பாட்டில், மிகப்பெரிய கொள்ளை நடப்பதாக அதிர்ச்சித்தகவல் கிடைத்துள்ளது. அதாவது, அரசு மருத்துவமனையிலுள்ள நோயாளிக்கு கொடுக்காமல், அவர்கள் வேண்டாமெனக் கூறிய தாகக் கணக்குக்காட்டி, வெளி மாநிலங்களில் பல கோடிக்கு உடல் உறுப்புகளை விற்பனை செய்வதாகத் தெரியவந்துள்ளது!
அதேபோல், அரசு மருத்துவமனைகளுக்கு முக்கியத்துவம் தராமல், தனியார் மருத்துவ மனைகளுக்கு விற்கப்படு கிறதாம். உதாரணத்துக்கு, கடந்த ஆண்டில் மொத்தம் 456 சிறுநீரகங்கள் தானமாகப் பெறப் பட்டதில், அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு 178 சிறுநீரகங்களும், தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கு 278 சிறுநீரகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுபோல் 210 கல்லீரல் தானமாகப் பெறப் பட்டதில் இதுவரை அரசு மருத்துவமனையில் 7 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 39 பேருக்கும் பொருத்தப்பட்டுள்ளதாம்.
தமிழகத்திலிருக்கும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களிடம் படித்த மாணவர்கள், இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பணிபுரிகிறார்கள். அப்படி இந்தியாவில் ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் எனப் பல மாநிலங்களிலும் பணியாற்றுகிறார்கள். அவர்கள் மூலமாக உடல் உறுப்பு தானம் தேவைப்படுபவர்களை அங்கிருந்து ஏஜென்ஸி மூலமாக தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துவந்து, சில நாட்கள் சிகிச்சையில் உடல் உறுப்புகளைப் பொருத்தியபின் அவரவர் ஊர்களுக்கு செல்கிறார்கள். இப்படிச் செய்வதால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையெடுக்கும் ஏழை, எளிய மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
இதிலும் குறிப்பாக நுரையீரலுக்கு அதிகப்படியான தொகை கிடைப்பதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம். இதில், 1 லட்சம் தொடங்கி பல லட்சங்கள்வரை பெற்றுக்கொண்டு அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிறதாம். இதுபோல், சென்னை போரூரிலுள்ள மியாட் மருத்துவமனையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு டாக்டர் கார்த்திக், மதிவாணன் மற்றும் வடபழனி காவேரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சுவாமிநாதன் ஆகியோர் செய்துவருகிறார்கள்.
நுரையீரல் பாதிக்கப்பட்ட நபருக்கு, தேவையான நுரையீரல் தானமாகக் கிடைக்கும் பட்சத்தில் அதை பாதிக்கப்பட்ட நபருக்கு வைக்கலாமா, வேண்டாமா என்பதை அந்த மருத்துவரே முடிவு செய்வார். இந்த சூழ்நிலையில் தான் அந்த மருத்துவர் பணத்திற்காக அந்த நபருக்கு நுரையீரல் ஒத்துப்போகும் நிலையிலும் கூட, பொய்யாக, ஒத்துப்போகவில்லை எனச் சொல்லி, அந்த நபருக்கு பொருத்தவேண்டிய நுரையீரலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிவிடு கிறார்களாம். அங்கே வேறு மாநிலத்தவர் களிடம் அதிக பணத்தைப் பெற்றுக்கொண்டு பொருத்துகிறார்கள்.
அதேபோல் இன்னொரு வகை மோசடி எப்படியென்றால், தனியார் மருத்துவமனையி லுள்ள ஒருவருக்கு நுரையீரல் தேவைப்படும் நிலையில் அவரது பெயர் இறுதியில் இருந்தால் அவர் நுரையீரலுக்காகக் காத்துக்கிடக்க வேண்டும். அதே நபர் நுரையீரலுக்காக அதிக பணம் செலவழிக்கத் தயாராக இருந்தால், ப்ளாக்கில் விற்பனை செய்வதுபோன்ற வேலையும் செய்கிறார்களாம். அதாவது, எந்த மருத்துவமனை லிஸ்ட்டில் முன்னணியில் இருக்கிறதோ அந்த மருத்துவமனைக்கே குறிப்பிட்ட நோயாளியை அழைத்துச்சென்று, அந்த மருத்துவமனையில் வைத்து முன் கூட்டியே அறுவைச்சிகிச்சை செய்துவிடு கிறார்கள். அப்படித்தான் மியாட் மருத்துவ மனை மருத்துவர், மியாட் மருத்துவமனை யிலுள்ள நோயாளியை அழைத்துச்சென்று, கொளத்தூரிலுள்ள ஆர்.பி.எஸ். மருத்துவ மனையில் நுரையீரல் அறுவைச்சிகிச்சை செய்துள்ளார். அதற்கு பல லட்சங்களைப் பெற்றுள்ளனர்
.இப்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் மருத்துவர் ஆகியோர் கைகளைக் கோர்த்துக்கொண்டு ஒட்டுமொத்த மாக ஏமாற்றி, இந்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் பல கோடி சம்பாதித்து வருகிறார்கள். இப்படி ஈரோட்டிலுள்ள அபிராமி கிட்னி கேர் சென்டரில், இன்னொரு வருக்கு பொருத்தவேண்டிய நுரையீரலை வடமாநிலத்தை சேர்ந்த வேறொருவருக்கு பொருத்தியிருக்கிறார்கள். அதேபோல், ஆந்திராவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நாகராஜ் என்பவருக்கு, அரசு மருத்துமனையில் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய நுரையீரலை குறுக்குவழியில் பெற்று, அப்பல்லோ மருத்துமனையில் வைத்து சிகிச்சையளித்துள்ளனர். இப்படி தனியார் மருத்துவமனைகளிலும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இலவசமாகவே உடல் உறுப்பு மாற்றம் செய்யப்படுவதால் அவர்களுக்கு வருமானம் கிடைப்பதில்லை. ஆனால் வட மாநிலத்தவருக்கு பல லட்சத்தில் பேரம் பேசி ஒரு நபரிடம் அதிகபட்சமாக 15 லட்சம்வரை வசூலிப்பதால், இதுபோன்ற மோசடிகளில் இறங்குகிறார்கள். இப்படி தமிழகம் முழுவதுமுள்ள உடல் உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை எடுத்து, அதில் தமிழர்களுக்கு செய்யப்பட்ட அறுவைச்சிகிச்சை, வட மாநிலத்தவர்களுக்கு செய்யப்பட்ட அறுவைச்சிகிச்சை விவரங் களைத் திரட்டினால், இதில் நடக்கும் தில்லுமுல்லுவை நம்மால் கண்டறிய முடியும்.
இதுகுறித்து டிரான்ஸ்டன் செயலரான கோபாலகிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்டபோது, டிரான்ஸ்டனின் மற்ற தகவல்களைக் கொடுத்தவர், அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்களின் மாநிலம் குறித்த விவரங்களைக் கொடுக்க மறுத்து மழுப்பினார்.
உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இதுபோன்ற மோசடிகளில் தனியார் மருத்துவமனையிலுள்ள சில மருத்துவர்கள் ஈடுபடுவது ஒட்டுமொத்தமாக அனைவருக்குமே கெட்ட பெயரை ஏற்படுத்துவதோடு, உடல் உறுப்பு தானம் கொடுக்கும் பொதுமக்களுக்கு இதன்மீதான நம்பிக்கையை இழக்கவைக்கக் கூடும். இது தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
கடந்த கால ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பணத்தை பெற்றுக்கொண்டு தகுதியே இல்லாத மருத்துவமனைகளுக்கெல்லாம் அனுமதி வழங்கியதே இந்த ஒட்டுமொத்த முறைகேடு களுக்கு முதற்காரணமாக இருக்கிறது. எனவே நீங்கள் கேட்கும் தகவல்களை அவர்கள் உங்களுக்கு வழங்கமாட்டார்கள். ஏனென்றால் அனைவருமே கூட்டுக்களவாணிகள்தான். எனவே இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனிக்குழுவை நியமித்து விசாரணை நடத்தினால், ஒட்டுமொத்த மோசடிப் பெருச்சாளிகளும் சிக்குவார்கள் என்று அத்துறை சார்ந்தவர்களே நம்மிடம் கிசு கிசுத்தார்கள்.
-சே