ந்தியாவில் தினமும் கோடிகளில் வருமானம் வரும் கோவில் திருப்பதி ஏழுமலையான் கோவில். உலகம் முழுவதும் இதற்கு பக்தர்கள் இருப்பதால் திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இடம்பிடிக்க பலத்த போட்டியிருக்கும். நியமிக்கப்படும் குழுவின் தலைவர், உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள். இந்தக்குழுவில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுவை மாநிலங்களின் அரசு பிரதி நிதி களுக்கும் இடம் வழங்கப்படும். 2021 - 2023-ஆம் ஆண்டுக்கான அறங் காவலர் குழுவின் தலைவராக தனது சித்தப்பா சுப்பாரெட்டியை இரண்டாவது முறையாக ஆகஸ்ட் 8- ஆம் தேதி நியமனம் செய்தார் முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி. செப்டம்பர் 15-ஆம் தேதி உறுப்பினர்கள் நியமன அறிவிப்பு வெளியானது.

tt

ஆந்திரா சார்பில் போகலஅசோக் குமார், பிரசாந்திரெட்டி, எம்.எல்.ஏ. கட்டசானி ராம்பூபால் ரெட்டியென 10 பேரும், தெலுங்கானா சார்பில் ஜீப்லி ராமேஸ்வரா ராவ், மன்ன ஜீவன் ரெட்டி, லஷ்மிநாராயாண ரெட்டி, பார்த்தசாரதி ரெட்டியென 7 பேரும், தமிழ்நாடு சார்பில் அணைக்கட்டு எம்.எல்.ஏ.வும், வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான நந்தகுமார், இந்தியா சிமெண்ட்ஸ் சீனுவாசன், கர்நாடகா சார்பில் சசிதர், எம்.எல்.ஏ விஸ்வநாத ரெட்டி, மகாராஷ்டிரா வின் சிவசேனா செயலாளர் மிலின்ட், புதுவை சார்பில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் என 24 நபர்களும், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் 4 பேரென 28 பேர் நேரடி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பதி எம்.எல்.ஏ கருணாகர்ரெட்டி, சந்திரகிரி எம்.எல்.ஏ பாஸ்கர்ரெட்டி, தென்னிந்திய ரயில்வே யூனியன் தொழிலாளர் தலைவர் கண்ணையா, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு என 53 நபர்களை அறிவித்துள்ளது. மொத்தமாக 81 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுவரை அதிக பட்சமாக 37 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர். தற்போது இந்த மெகா நியமனத்தை எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன.

இதுகுறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பானுபிரகாஷ் கூறுகையில், "தேவஸ்தான உறுப்பினர் களுக்கு சம்பளம் எதுவும் தரவில்லையென்றாலும் போக்குவரத்து செலவு, தங்கும் விடுதிக்கான கட்டணம், உணவுக்கட்டணம் என ஒரு தொகையை வழங்குகிறது. இதற்காகவே நபருக்கு மாதம் 2.5 லட்சம் வரை செலவிடுகிறது தேவஸ்தானம். தினமும் ஒரு உறுப்பினருக்கு 20 வி.வி.ஐ.பிக்கான சிறப்பு தரிசனம், 30 சிறப்பு தரிசனம், பங்களா ஒன்றும் ஒதுக்கப்படுகிறது. அனைத்து உறுப்பினர்களும் இதனை பயன்படுத்தினால் தினசரி 1620 மற்றும் 2430 டிக்கட்கள் வழங்கவேண்டி வரும். இதனால் போர்டுக்கு எவ்வளவு இழப்பு, பொதுமக்களுக்கு எவ்வளவு நெருக்கடி அதனால்தான் இந்த மெகா நியமனத்தை எதிர்க்கிறோம்'' என்கிறார்.

Advertisment

பா.ஜ.க.வின் எதிர்ப்புகண்டு கடுப்பான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள், "மெகா போர்டு என கண்டனம் செய்ய உங்களுக்கு தகுதியில்லை. எங்காளுங்களுக்கு போர்டில் பதவி தரவேண்டும் என சிபாரிக் கடிதம் தந்து பதவி வாங்கிவிட்டு, இப்போது எங்களை விமர்சிப்பது நியாயமா என கேள்வி எழுப்பினர். இது ஆந்திரா அரசியலில் பரபரப்பை உருவாக்கியது.

tt

யார் கடிதம் தந்தது என கேள்வி எழுப்பியதும், ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சரான ஆந்திராவை சேர்ந்த கிஷன்ரெட்டி, எலிசலா ரவிபிரசாத் என்பவரை போர்டு உறுப்பினராக்க சிபாரிசு கடிதம் தந்ததன் அடிப்படையி லேயே அவர் சிறப்பு அழைப்பாளராக்கப்பட்டார் என்கிற தகவல் வெளியானது. இதனைக்கேட்டு அதிர்ச்சியான அமைச்சர் கிஷன்ரெட்டி,tt "நானோ, எனது அமைச்சகமோ யாருக்கும் சிபாரிசு செய்யவில்லை, கடிதமும் தரவில்லை. நான் சிபாரிசு செய்ததாக சொல்லப்படும் நபர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்'' என அறிவித்துள்ளார்.

Advertisment

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, வெங்கடேசப்பெருமாளை வைத்து பணம் பார்க்கிறது ஜெகன்மோகன் ரெட்டி அரசாங்கம். கொள்ளைக்காரர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர் களை அதிகளவில் சிறப்பு அழைப்பாளர் களாக நியமித்துள்ளனர். இந்த நிய மனங்களை உடனடியாக நீக்கவேண் டும், போர்டை கலைக்க வேண்டும்'' என்றார். இந்த விமர்சனங்களுக் கெல்லாம் பதிலளித்துள்ள ஆந்திரா வின் இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் வாணிமோகன், "சிறப்பு அழைப்பாளர்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையில்லை, சுற்றுலாவை வளர்ப்பதற்காக பெரியளவில் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.

உயர்நீதிமன்றத்தில் தெலுங்குதேசம் உமாமகேஸ் வர நாயுடுவும், பா.ஜ.க. பானுபிரகாஷும் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். நீதிமன்ற விசாரணை ஒருபுறமிருந்தாலும் 81 பேர் என்பது அதிகம்தான் என்கிற பேச்சு ஆந்திரா முழுவதுமே ஒலிக்கிறது.

தமிழ்நாட்டு பக்தர்கள் திருமலையில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். குறிப்பாக தங்கும் விடுதி. மலையில் நூற்றுக்கும் அதிகமான விடுதிகள் இருந்தாலும் தமிழக பக்தர்களுக்கு அறைகள் தருவதில் பாகுபாடு காட்டப்படுகிறது. கர்நாடகா பக்தர்களுக்கும் இந்த சிக்கல் வந்தது, அரசின் கவனத்துக்கு சென்றதும் திருமலையில் சுமார் 10 ஏக்கர் நிலத்தினை தேவஸ்தானத்திடமிருந்து குத்தகைக்கு வாங்கி 200 கோடி ரூபாய் செலவில் விடுதி கட்டுகிறது. தமிழகத்தின் சார்பில் நான்காவது முறையாக குழுவில் இடம்பெற்றுள்ள இந்தியா சிமெண்ட் சீனுவாசன் உட்பட இதற்கு முன்பிருந்த தமிழக பிரதிநிதிகள் யாரும், விடுதி கட்ட தமிழகத்துக்கு இடம் தாருங்கள் என்றோ, தமிழக பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்குங்கள் என அறங்காவலர் குழு கூட்டத்தில் கேட்டதில்லை. தற்போதைய உறுப்பினர் நந்தகுமார், தமிழக பக்தர்களின் குரலாக பேசுவாரா என எதிர்பார்ப்பில் உள்ளனர்.