சங்கிகளின் முனை மழுங்கிய ஆயுதம் சீமான்! -மைனர், திராவிட இயக்க பேச்சாளர்

ssss

தீண்டத்தகுந்த மக்களின் சுயராஜ்யத்தை பற்றி தீண்டப்படாத மக்கள் கொண்டிருக்கும் அச்சத்தை மதிப்புமிக்க, நாட்டுப்பற்று கொண்ட தலைவர் ராமசாமி நாயக்கர் (பெரியார்) நேர்த்தியாக வெளிப்படுத்தினார்.…நம்முடைய முயற்சியும் அந்தத் திசையிலேயே இருக்கிறது.” -அண்ணல் அம்பேட்கர் -பகிஸ்கிருத் பாரத் (வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர், 1928)

தந்தை பெரியார் பற்றி அண்ணல் அம்பேத்கர் கூறிய கருத்துதான் மேற்கண்டது. தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கரை ‘தன்னுடைய தலைவர், ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அடைவதற்கு சரியான மருந்தை ஊட்டும் மருத்துவர்’ என்றார். அண்ணல் அம்பேத்கர் எழுதிய ‘"சாதி ஒழிக்கும் வழி'’நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார். இரட்டை வாக்குரிமை கோரிக்கையின்போது, ஒற்றை காந்தியின் உயிருக்காக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள் என்றார் பெரியார். பௌத்தம் தழுவிய அண்ணல் அம்பேத்கரின் முடிவை மனமுவந்து பாராட்டினார். அந்தளவுக்கு பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் கொள்கைரீதியாக நெருக்கமான உறவு இருந்தது.

ss

இந்த உண்மைகளை பொதுவெளியில் எண்ணற்றோர் எடுத்துச் சொல்லியும், சங்கிகள் எப்படியாவது, இந்த உறவுக்கு களங்கம் விளைவிக்க தொடர்பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். புரட்சி யாளர் அம்பேத்கரின் பார்ப்பன எதிர்ப்பு அரசியலை மறைக்க, ’மோடி யும் அம்பேத்கரும் ஒன்று’ என்ற பாணியில் நூலை வெளியிடுவது, அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை விலைக்கு வாங்குவது, பிரம்மாண்ட மான நினைவிடங்களை அமைப்பது என அண்ணலை வெறும் பூஜையறை படமாகச் சுருக்கி, பட்டியல் சாதி மக்களிடம் வாக்கு அறுவடை செய்ய வடநாட்டில் முயற்சித்துவருகிறது சங்கி கூட்டம். ஆனால், அம்பேத்கரு

தீண்டத்தகுந்த மக்களின் சுயராஜ்யத்தை பற்றி தீண்டப்படாத மக்கள் கொண்டிருக்கும் அச்சத்தை மதிப்புமிக்க, நாட்டுப்பற்று கொண்ட தலைவர் ராமசாமி நாயக்கர் (பெரியார்) நேர்த்தியாக வெளிப்படுத்தினார்.…நம்முடைய முயற்சியும் அந்தத் திசையிலேயே இருக்கிறது.” -அண்ணல் அம்பேட்கர் -பகிஸ்கிருத் பாரத் (வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர், 1928)

தந்தை பெரியார் பற்றி அண்ணல் அம்பேத்கர் கூறிய கருத்துதான் மேற்கண்டது. தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கரை ‘தன்னுடைய தலைவர், ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அடைவதற்கு சரியான மருந்தை ஊட்டும் மருத்துவர்’ என்றார். அண்ணல் அம்பேத்கர் எழுதிய ‘"சாதி ஒழிக்கும் வழி'’நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார். இரட்டை வாக்குரிமை கோரிக்கையின்போது, ஒற்றை காந்தியின் உயிருக்காக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள் என்றார் பெரியார். பௌத்தம் தழுவிய அண்ணல் அம்பேத்கரின் முடிவை மனமுவந்து பாராட்டினார். அந்தளவுக்கு பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் கொள்கைரீதியாக நெருக்கமான உறவு இருந்தது.

ss

இந்த உண்மைகளை பொதுவெளியில் எண்ணற்றோர் எடுத்துச் சொல்லியும், சங்கிகள் எப்படியாவது, இந்த உறவுக்கு களங்கம் விளைவிக்க தொடர்பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். புரட்சி யாளர் அம்பேத்கரின் பார்ப்பன எதிர்ப்பு அரசியலை மறைக்க, ’மோடி யும் அம்பேத்கரும் ஒன்று’ என்ற பாணியில் நூலை வெளியிடுவது, அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை விலைக்கு வாங்குவது, பிரம்மாண்ட மான நினைவிடங்களை அமைப்பது என அண்ணலை வெறும் பூஜையறை படமாகச் சுருக்கி, பட்டியல் சாதி மக்களிடம் வாக்கு அறுவடை செய்ய வடநாட்டில் முயற்சித்துவருகிறது சங்கி கூட்டம். ஆனால், அம்பேத்கருடைய நூல் தொகுப்பை காப்புரிமையை காரணம் காட்டி முடக்கி வைத்திருக்கிறார்கள். அறிவாயுதத்தை விட்டுச்சென்ற அம்பேத்கரை வெறும் சிலையாகச் சுருக்கும் இந்த சதியை வட நாட்டிலும் பட்டியல் சாதி மக்கள் ஓரளவு புரிந்துகொண்டதன் விளைவு 2024 நாடாளுமன்ற தேர்தலில், பெரும்பான்மை பலத்தோடு ஆட்சிசெய்ய முடியாமல் போனது. சங்கிகளின் இந்த குறுக்கு புத்தி வேலைத் திட்டத்தை, தமிழ்நாட் டிலும் நடைமுறைப்படுத்த பா.ஜ.க. சங் பரிவார கூட்டம் கையிலெடுத்திருக்கும் முனை மழுங்கிய ஆயுதம்தான் சீமான்.

தன்னுடைய எஜமானர் களின் வக்கிர அதிகார வெறிக்கு இணங்கி, பெரியாரை குறித்து அவதூறு பேசக் கிளம்பிய சீமான்... பெரியாரையும், அம்பேத் கரையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பது அயோக்கியத்தனம் என்று கூச்சலிட்டார். சீமானுக்கு அம்பேத்கர் மீது என்ன திடீர் பாசம்? அம்பேத்கரின் ஒன்றி ரண்டு மேற்கோளைத் தவிர, அம்பேத்கர் குறித்து தெரியாம லேயே, அம்பேத்கரை தலைவராக ஏற்க முடியாது. ஏனென்றால், அவர் மராத்தியை தாய்மொழி யாக கொண்டவர் என்று அம்பேத்கருக்கே யூரின் டெஸ்ட் எடுத்தவன்தானே இந்த சீமான் வகையறா. அம்பேத்கர் மீது பாசமிருந்தால், அம்பேத்கரின் நூல்களை பதிப்பிக்கும்படி பா.ஜ.க.விடம் கேட்டாரா சீமான்? இல்லையே? மாறாக, பெரியார் குறித்து இழிவான அவதூறு களை பேசிவிட்டு, ஆதாரம் கேட்டால், பெரியார் எழுத்துக்களை நாட்டுடைமை யாக்காததால், ஆதாரம் இல்லை என்று அந்தர்பல்டி அடித்தார் சீமான்.

பா.ஜ.வு.க்கு நடந்ததைப் போல, சீமானுக்கு ஈரோடு இடைத்தேர்தல் பதிலளித்தது. டெபா சிட் கூட வாங்கமுடி யாத அளவுக்கு ஈரோட்டு இடைத் தேர்தலில் நாம் தமிழ ருக்கு விளக்குமாற் றாலேயே நல்ல விளக் கம் கொடுத்துவிட் டார்கள்.

minorஆனால், சீமா னின் வக்கிரமான செயல்பாடு தமிழ் நாட்டுக்கு புதிதா? சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் -பெரியார் ஸ்டடி சர்க்கிளுக்கு எதிராக பேசிய சங்கிகள், ஏன் பெரியார் பெயரை, அம்பேத்கர் பெயரோடு சேர்க்கிறீர்கள் என்று பொங்கி னார்கள். அதே டெய்லர், அதே வாடகை. சில ஆண்டுகளுக்கு முன்பு, சேலம் பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் ராமன் படத்தை பெரியார் செருப்பால் அடித்தார் என்று சூப்பர் ஸ்டார் ரஜினியை பேசவைத்து ஆழம் பார்த்தது சங்கி கூட்டம். அது பா.ஜ.க.வின் செயற் திட்டம் என பட்ங் சங்ஜ் இஓட என்று சஹப்ண்ய் ஙங்ட்ற்ஹ எழுதிய நூலில் வாக்குமூலம் போலவே பதிவாகியிருக்கிறது. எந்த துக்ளக் கின் ஆதரவோடு சூப்பர் ஸ்டார் பேசினாரோ, அந்த துக்ளக்கின் நிறுவனர் சோ.ராமசாமியே ‘ஜனசங்கத்தினர் சொன்னதை நம்பி கார்ட்டூன் வெளியிட்டுவிட்டேன்”என்று மன்னிப்பு கேட்டார் என்று மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி பேட்டியில் குறிப்பிட்டி ருக்கிறார்.

அதேபோல, “"மாற்றான் மனைவியை அபகரித்துக்கொண்டு போனால் அதை தவறாகக் கருதக்கூடாது'”என சேலம் மாநாட்டில் திராவிடர் கழகம் தீர்மானம் போட்டதாக சீமான் பாணியில் திரித்து செய்தி வெளியிட்டது "தி இந்து' நாளிதழ். திராவிடர் கழகத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் "தி இந்து' தரப்பில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப்பட்டது.

பழைய பொய்களை, பழைய வாந்திகளை எடுத்துக் கொண்டு பொதுவெளியில் வீசியெறிந்து சீமான் உருவாக்கும் அடியாள் வேலையை தவிர, சீமானிடம் வேறு சரக்கில்லை என்பதை தெரிந்துகொள்வது எளிது. இதேபோன்ற அவதூறுகளை வலதுசாரிகள் உலகெங்கிலும் ஒரு உத்தியாகவே வைத்திருக் கிறார்கள். ’கம்யூனிசம், பெண்களை பொது மகளிராக்கிவிடும்’ என்று கம்யூனிச எதிர்ப் பாளர்களின் அவதூறுகளுக்கு பதிலளித்த காரல்மார்க்ஸ், “"கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் பெண்களைப் பொதுவாக்கிவிடுவீர்கள்' என்று ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கமும் ஒரே குரலில் கூக்குரலிடுகிறது.

முதலாளித்துவவாதி தன் மனைவியை வெறும் உற்பத்திக் கருவியாகவே பார்க்கிறான். உற்பத்திக் கருவிகள் அனைவருக்கும் பொது வாகப் பயன்படப் போகின்றன என்று கேள்விப் படுகிறான். அனைவருக்கும் பொதுவாகிப் போகும் அதே கதி, பெண்களுக்கும் நேரும் என்கிற முடிவுக்கு வருகிறான். இயல்பாகவே, இந்த முடிவைத் தவிர வேறெந்த முடிவுக்கும் அவனால் வர இயலாது'' என்கிறார்.”

சீமானுக்கு சொன்ன பதில் போலவே இருக்கிறதா? காரல்மார்க்ஸை எல்லாம் மேற் கோள் காண்பித்து சீமானுக்கு, பதில் எழுத வேண் டுமா என்று வாசிப்போருக்கு தோன்றலாம். ஆனால், சீமான் என்ற வலதுசாரி, பெரியார் குறித்த மட்டமான அவதூறு இந்த ரகம்தான் என்பதை சுட்டிக்காட்டவே இந்த மேற்கோள்.

பெரியார் சொன்னதாக கேவலமான செய்தி ஒன்றை சீமான் பேசியதால்தான் இந்த கொதிப்பு ஏற்பட்டது என்பதை புரிந்துகொள் வது எளிது. ஆனால், கடைசியாக சீமான் பேசியதுதான் பெரியார் குறித்த ஆகப்பெரும் அவதூறா? பெரியார் தமிழர்களின் தலைவரல்ல, அவர் (பிறமொழியாளர் என்பதால்) வழிகாட்டி மட்டுமே என்று கூறியது கேவலமான அவதூறில்லையா? பெரியாரிஸ்டுகளும், தமிழர்களும் கொதித்தெழுந்து சீமானின் சதியை முன்னரே அம்பலப்படுத்தியிருக்க வேண்டும் தானே. இன்ற், ண்ற்ள் ர்ந்ஹஹ், கஹற்ங் ஆனாலும், இனி அடி பலமாக இருக்கவேண்டும்... ரைட்!

பெரியாரை பற்றிப் பேசும்போது மிகுந்த மகிழ்ச்சியும் தன்மானமும் ஏற்படும். அவர் எந்த சாதி சங்கத்திலும் போய், "நீங்கள் முதலில் வந்தவர்கள், நீங்கள் அந்த ’மன்னர்’ பரம்பரை' என்று சீமான் பாணியில் கதை பேசிக்கொண்டி ருக்கவில்லை. சாதி சங்க மாநாடுக்கு போய் “"பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதிப் பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றதுமான பெருமை பாராட்டிக் கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக் கூடாது'’என்றார். “சத்ரியர் பட்டத்திற்கு சண்டை கொள்வதால் ஒரு பலனும் இல்லை, மாறாக, எச்சில் கிண்ணம் கழுவுபவனுக்கும், பிச்சை எடுத்து வாழுபவனுக்கும், தரகு வேலை செய்பவனுக்கும் நோகாமல் பிராமணப் பட்டம் கிடைத்து விட்டது. அப்படி கிடைக்கப் பெற்ற அந்தப் பிச்சைத்தொழில் பார்ப்பான் உங்களிடம் பணமும் வாங்கிக் கொண்டு மகாநாடு கூட்டி, "க்ஷத்திரியன் உலகத்திலேயே கிடையாது' என்று விளம்பரப்படுத்தி சொல்லிவிடுகிறான் என்று பட்ன்ஞ் கண்ச்ங்-ஆய் துணிச்சலாய், தான் நேசித்த மக்களுக்கு மானம் வரவேண்டும் என்று உழைத்த பெரியாரை அவதூறுக் கணைகளிலிருந்து காப்பாற்றி ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிளாய் வைத்திருக்க போகிறோமா? அது தேவையில்லை. ”

"இன்னும் 50 ஆண்டுகளுக்குத்தான் என்னுடைய தேவை இருக்கும். அதற்குப் பிறகு ஈ.வெ.ராமசாமி என்ற மூடக்கொள்கைக்காரன் இருந்தான் என்று உலகம் பேசும்'’என்று சொன்ன பெரியார் காலங்கடந்து நிற்க விரும்பிய தலைவரல்ல, முற்போக்காக சிந்தித்து "என்னை காலாவதியாக்குங்கள்' என்றுதான் பெரியார் கேட்டுக்கொண்டார். சீமான் போன்ற தற்குறி வலதுசாரிகளின் வசைகளால் பெரியாரை ஒருக்காலும் காலாவதியாக்க முடியாது.

நாம் நம்முடைய முன்னேற்றமான செயல் பாடுகளால் பெரியாரை காலாவதியாக்குவோம். அதுதான் பெரியார் தொண்டு... வாழ்க பெரியார்!

nkn080325
இதையும் படியுங்கள்
Subscribe