நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து பெண்கள் காணாமல்போன வழக்கில், அகமதாபாத் உயர்நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை புளு கார்னர் அறிவிப்பு செய்யும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தன் சர்மா. நித்யானந்தாவின் ஆசிரமத்தில் வேலைபார்த்த இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். இவர்கள் நித்தியானந்தா வின் பெங்களூரு ஆசிரமத்தில் உள்ள பள்ளியில் படித்துவந்தனர். நித்தியானந்தாவின் பக்தராக இருந்த ஷர்மா ஆசிரமத்தில் உள்ள மாணவ- மாணவிகள் கடுமையாகச் சித்ரவதை செய்யப்படுவதாக சர்ச்சையெழுந்தபோது தனது மகனையும் மகள்களையும் அங்கிருந்து மீட்க விரும்பினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nithy_41.jpg)
ஆனால் அவரை பெங்களூரு ஆசிரமத்தின் உள்ளேயே அனுமதிக்காத நித்தியானந்தா, அவரது மகனையும், மகள்களையும் பெங்களூருவிலிருந்து அகமதாபாத் ஆசிரமத்துக்கு மாற்றினார். இதையடுத்து மாநில குழந் தைகள் உரி மை அமைப் பிலும், காவல் துறையிலும் முறையிட்டார் ஜனார்த்தன ஷர்மா. அதன் பேரில் ஷர்மாவின் மகனும், பதினெட்டு வயது நிறைவடையாத மகளும் மீட்கப்பட்டனர். மற்ற இருவரும் ஆசி ரமத்தைவிட்டு வர விரும்ப வில்லை எனக் கூறி, அவர் களை நித்தியானந்தா ஆசி ரமம் திரும்ப அனுப்பவில்லை.
தனது மகள்கள் லோப முத்ரா, நித்யநந்திதாவை கண்டு பிடித்துத் தரச்சொல்லி அவர்களது தந்தை ஜனார்த்தன் சர்மா, 2019-ஆம் ஆண்டு அகமதாபாத் உயர்நீதி மன்றத்தில் ஹேபியஸ்கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில் நித்தி யானந்தா மேல் தனது சிஷ்யையே பாலியல் வன்புணர்வு செய்த வழக் குடன், பெண்களைக் கடத்திய வழக்கும் சேர்ந்துகொள்ள, இந்தியாவிலேயே தங்கமுடியாத நிலைக்கு ஆளா னார் நித்தியா னந்தா. வழக்கு களில் கைதாவ திலிருந்து தப்பிக்க, ரகசியமாக நேபாள எல்லையை அடைந்து, அங்கிருந்து இந்தியாவை விட்டே தப்பியோடினார் நித்தியானந்தா.
நீண்டகாலமாக நிலுவையிலிருந்த இந்த வழக்கின் விசாரணை அகமதாபாத்தின் உயர்நீதி மன்றத்தில் ஜூன் 26 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தாமீது மீண்டும் புளு கார்னர் நோட்டீஸ் விடுக்க உமேஷ் திரிவேதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nithy1_18.jpg)
புளு கார்னர் நோட்டீஸ் என்பது என்ன?
ஒருவர் ஒரு நாட்டிலிருந்து தப்பியோடும் பட்சத்தில், அவர்மீது விசாரணையிருக்கிறது என்பதை சர்வதேச நாடுகளுக்கு அறிவிக்கவும், சம்பந்தப்பட்ட நபரைப் பற்றி கண்டறியவும், அடையாளம் காணவும், தகவல்களை வழங்கவும் இந்த புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு இடப்படு கிறது. இதன்மூலம் ஒரு குற்றவாளி குறித்த தகவல், பிற எந்த நாட்டு காவல் துறைக்குத் தெரியவந்தாலும், அதைப் பரிமாறிக்கொள்ளும்.
வழக்கு விசாரணையின் போது ஜனார்த்தன் ஷர்மா வின் வழக்கறிஞரான பிரித்தேஷ் ஷா, ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்து நான்கரை வருடங்கள் கடந்துவிட்டதாகவும், இத்தனை நீண்ட காலத்துக்குப் பின்னும் ஷர்மாவின் மகள்கள் கண்டுபிடித்து கொண்டுவரப்படவில்லை எனவும் வாதிட்டார். எனவே பொருத்தமான அதிகாரிகள் வசம் வழக்கு ஒப்படைக்கப்படவேண்டும் எனவும், காணாமல் போன ஷர்மாவின் மகள்கள் ஜமைக்காவில் இருப்பதாக செய்திகள் வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பான அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி, ஏற்கெனவே முன்பு புளு கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கச் சொல்லி யோசனை தெரிவித்திருந்தீர்கள்…. ஏன் இன் னொரு முறை புளு கார்னர் நோட்டீஸ் பிறப் பிக்கக்கூடாதென கேள்வியெழுப்பினார். மேலும் உரிய விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த இரு பெண்களையும் இந்தியா கொண்டு வருவதற்கான சட்ட வழிவகைகளை ஆராயும் படியும் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nithy2_7.jpg)
ஏற்கெனவே ஒரு முறை புளு கார்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் முறையும் புளு கார்னர் உத்தரவு பிறப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஜமைக்க அரசு, நித்தி யானந்தா குறித்த தகவல்களைத் தெரிவிக்கவோ, அல்லது இந்திய நீதிமன்றம் கேட்டுக்கொண்டபடி அந்த இரு பெண்களை வீடியோ கான்பரன்சில் தோன்றுவதற்கு உதவவோ செய்தாகவேண்டும். சர்வதேச ஒப்பந்தங்களுக்கு ஜமைக்க அரசு இணங்கியாகவேண் டும். இதனால் புதிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் நித்தி யானந்தா.
கோவை வேளாண் பல்கலைக்கழக முன் னாள் பேராசிரியர் காமராஜின் மகள்கள் ஜக்கியிடம் சிக்கியது முன்பு சர்ச்சையானது. ஜனார்த்தன் சர்மாவின் இரண்டு மகள்கள் நித்தியிடம் சிக்கிய பிரச்சனை இன்னும் தீரவில்லை. நீதிமன்றங்களையே திகைப்பில் ஆழ்த்தக்கூடிய அளவுக்கு அதிகார பலமிக்கவர்களாக சாமியார்கள் நீடிப்பதுதான் நமது ஜனநாயகத்தின் பலவீனம்!
இது ஒருபுறமிருக்க, சமீபத்தில் வேலை தேடுவதற்கான தளமும் செயலியுமான லிங்க்டு.இன் பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம், நித்யானந்தா மாயி சுவாமி என்ற தலைப்பில் இருக்க, அதன் கீழே கைலாசாவின் பிரதமர் எனக் குறிப்பிட்டிருந்தது. இயக்குநர் இமயம் என தமிழர்களால் பாராட்டப்படும் பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் படத்தில் அறிமுகமான ரஞ்சிதா, 20 படங்களுக்குப் பின் தன் கேரியரில் ஒரு தொய்வைச் சந்த்தித்தார். இந்த தொய்வு காலகட்டத்தில்தான் நித்தியானந்தாவுடனான அறிமுகம் ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் தமிழின் மற்றொரு இயக்குநரான மணிரத்னத்தின் "ராவணன்' படத்திலும் வாய்ப்பு கிடைத்தது ரஞ்சிதாவுக்கு. சினிமாவா… ஆன்மிகமா என்ற நிலை வந்தபோது, நித்தியானந்தா அளித்த நம்பிக்கையின் அடிப்படை யில் படவாய்ப்புகளை முற்றிலுமாக உதறித் தள்ளிவிட்டு நித்தியானந்தாவின் பிரதான சிஷ்யையாக மாறினார்.
காலம் நித்தியானந்தாவை உயரத்திலிருந்து பாதாளத்துக்குத் தள்ளி, நாடுவிட்டு நாடு ஓடவேண்டிய சூழல் உண்டான போது, கூடவே அவரது பிரதான சிஷ்யையாக ரஞ்சிதாவும் ஓடவேண்டியதானது. அப்போதெல்லாம் தான் இழந்த வாய்ப்பு களையும் உயரங்களையும் பற்றி குற்றம்சாட்டும் தொனியில் மீண்டும் மீண்டும் நித்தியானந்தாவிடம் பேசுவதை ரஞ்சிதா வழக்கமாக வைத்திருந்தார். அதற்குப் பரிசாகத்தான் கைலாசா வின் பிரதமர் பட்டத்தை ரஞ்சிதாவுக்கு அளித்திருக்கிறார் நித்தி.
லிங்க்டு இன் புரொபைலைத் தவிர வேறெந்த செய்தியும் ரஞ்சிதா குறித்து ஊடகங்களில் காணப்படாத நிலையில், நித்தியானந்தாவின் முன்னாள் சிஷ்யரும் தனது பழைய தர்மத்திலிருந்து ஒதுங்கிவாழும் ஒருவரைத் தொடர்புகொண்டு ரஞ்சிதா அலைஸ் நித்தியானந்தாமயி சுவாமி குறித்த விவரங்களைக் கேட்டோம்.
"நித்தியானந்தாவின் அடுத்தகட்ட தலைமைப் பொறுப்பு ரஞ்சிதாவிடம்தான் இருக்கிறது. டெக்னிக்கலாக கண்ட்ரோல் அவரிடம் வந்துவிட்டது. அங்கே உள்ளே இருப்பவர்களிட மிருந்து இப்போது வரும் தகவல் இதுதான். இதில் பழைய ஆட்களுக்குக் கொஞ்சம் வருத்தம் என்றாலும் நித்திக்கு அடுத்த இடத்தை அடைந்திருப்பது ரஞ்சிதாவுக்கு ஆதாயம்தான்'' என்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-07/nithy-t.jpg)