லேரியாவால் உலகம் பெருவாரியாகப் பாதிக்கப் பட்டபோது, மனித உடலில் ஏற்பட்ட ஒரு மரபணு மாற்றம் பாதிக்கப்பட்டவர்களின் சந்ததியினருக்கு, மலேரியா வராமல் பாதுகாப்பான அரணாக நின்றது. அன்று வரமாகத் திகழ்ந்தது இன்று சாபமாக மாறியிருக்கிறது.

"பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் நிகழ்ந்த இந்த மரபணு மாற்றம் எனும் "சிக்கில் செல் அனீமியா' நோய் டிராபிக்கல் பாரஸ்ட் ஏரியா எனப்படும் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா காடுகள், இந்தியாவில் நீலகிரி, மத்தியப்பிரதேசம், குஜராத், ஒடிஸா மற்றும் மகாராஷ்டிரா காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களிடையே இருக்கலாம். ஆய்வில், 1980-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடிகளுக்கு இருப்பதாக கண்டறியப்பட்டது. இதில் இருளர், குரும்பர், பனியர் மற்றும் காட்டுநாயக்கர் சமூக மக்களிடம் மட்டுமே பெருமளவில் மரபணுமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது.

cell

Advertisment

இந்த "சிக்கில் செல் அனீமியா' நோய் பாதிக்கப்பட்டவர்களின் உடலிலுள்ள ரத்த சிவப்பணுக்கள் வழக்கமான வட்டவடிவத்திற்குப் பதிலாக கதிர் அரிவாள் வடிவத்திற்கு மாறியிருக்கும். இதனால் ஆக்ஸிஜன் தடைப்படுவதால் சுவாசிப்பு குறைந்து மூட்டு வலியும், மூச்சுத்திணறலும் அதிகமாகும். சராசரியாக ஒரு மனிதனுக்கு 12 சதவிகிதத்தில் இருக்க வேண்டிய இரத்த சிவப்பணுக்கள் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறும் 6 சதவிகிதத்திற்கும் கீழே இருக்கும். நமக்கு ஏற்பட்டால் அடுத்த அடியைக்கூட வைக்கமுடியாது. ஆனால், இவர்கள் மலைப் பகுதிகளில் வாழ்வதால், தங்களுடைய மனஉறுதி மூலம் வலிகளுடனே அன்றாட வேலை களைச் செய்துவருகின்றனர்.

"இந்த நோயால் பெண் குழந்தைகள் சராசரி வயதில் பூப்பெய்துவதில்லை. மாதந்தோறும் முறையாக மாதவிடாயும் வருவ தில்லை. நீண்ட நாட்களாக தங்களது பெண் பூப்பெய்தாமல் இருக்கின்றார் என எங்களிடம் ஆலோசனை கேட்டு சிகிச்சை எடுத்துவந்த சிறுமிகள், தான் பூப்பெய்திவிட்டேன் என அவர் களாகவே தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்ளும் சம்பவமும் இங்கே உண்டு. நோய் பாதிக்கப்பட்டவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்று ஆலோ சனை கொடுத்தாலும், திருமணம் செய்வதில் ஆர்வம்காட்டி அடுத்த சந்ததியினரையும் "சிக்கில் செல் அனீமியா' நோய்கொண்டவராக பிறக்கவைக்கின்றனர். இதில் குழந்தைகளுக்காக ஏங்குபவரும் உண்டு'' என்கின்றார் லேப் டெக்னீசியனான ஷோபனா.

1996-ஆம் ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் "சிக்கில் செல் அனீமியா' நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தெரிய நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் (சஆரஆ) அமைப்பின் துணையோடு 4000 சாம்பிள்கள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், குஞ்சப்பனை, சேரம்பாடி, முதுமலை, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளோர்களுக்கு பாதிப்பு அதிகம் என கண்டறியப் பட்டது. இந்த நோயை குணமாக்க மருந்து இல்லை. சத்தான உணவுகளோடு, ஹைட்ராக்ஸி யூரியா மாத்திரைகளை உட்கொண்டால் நோயின் தீவிரம் குறையும் என்கின்றது ஆய்வு. கடந்த ஆண்டு வரை பாதிக்கப்பட்டோர்களுக்கு மாநில அரசு மாதந்தோறும் ரூ.1000 பணமும், முட்டைகளும் வழங்கியது. இந்த உதவித்தொகையும், முட்டைகளும் இப்பொழுதும் தொடர் கின்றதா என்றால் கேள்விக்குறியே?

cell

Advertisment

நீலகிரி ஆதிவாசிகள் நலசங்கத்தின் இயக்குநரான விஜயகுமாரோ, "சாலிட்டரி, எலக்ட்ரோ மற்றும் ஐடகஈ ஆகிய மூன்று கட்ட இரத்தப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஆய்வுகளின் அடிப்படையில் ஆந, நந, ஆஆ என வகைப்படுத்துவோம். இதில் ஆந எனப்படுபவருக்கு "சிக்கில் செல் அனீமியா'வால் ஒரு செல் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை பாதுகாப்பான லிஸ்டில் சேர்த்து அவரை தொடர் கண்காணிப்பிலே வைத்திருந்து அவருக்குத் தேவையான மாத்திரைகளையும் சத்தான உணவுகளையும் கொடுப்போம். அவர் திருமண வயது என்றால் அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று ஆலோசனை கூறுவோம்.

மீறி திருமணம் செய்தால், அடுத்த தலைமுறைக்கும் இந்த நோய் பரவுகின்றது. அடுத்துள்ள நந என்பவர் முற்றிலும் பாதிக்கப்பட்டவர். அதற்கடுத்துள்ள ஆஆ என்பவர் மரபணு மாற்றமான "சிக்கில் செல் அனீமியா' பாதிக்கப்படாதவர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மண்ணீரலும், கல்லீரலும் பாதிக்கப்பட்டு, மனித ஆயுளின் சராசரி வயதைக் காட்டிலும் குறைவாக 45 முதல் 50 வயதுக்குள் மரணமடைவர். துவக்கத்தில் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடிகள் மத்தியில் காணப்பட்ட இந்த நோய் தற்பொழுது கிடைத்த ஆய்வுகளின்படி பழங்குடியல்லாத பிற சமூகங்களிடமும், கோவை, தர்மபுரி, சேலம் மாவட்டங் களிலும் கண்டறியப்பட்டுள்ளது'' என்கின்றார்.

மருத்துவக் காப்பீட்டில் அடங்காத "சிக்கில் செல் அனீமியா' நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 60 சதவிகித ஊனம் என்கின்றன மருத்துவ ஆய்வுகள். சத்தீஸ்கர், நாக்பூர் மற்றும் வயநாடு போன்ற பகுதிகளில் "சிக்கில் செல் அனீமியா' நோய் சிகிச்சைக்கென தனியாக சிறப்பு மருத்துவமனைகள், ஆய்வு நிலையங்கள் செயல்படுகின்றன. அதேபோல தமிழ்நாட்டிலும் இந்த நோய்க்கென சிறப்பு மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கை.