Advertisment

மக்களைக் குற்றவாளியாக்கும் ரத்தக் காட்டேரி அரசு! -சிறை மீண்ட மன்சூர் அலிகான் ஆவேசம்!

mansooralikhan

னதில் தோன்றிய கருத்துகளை தடாலடியாக பேசக் கூடியவர் நடிகர் மன்சூர் அலிகான். சேலம் டூ சென்னை பசுமைவழிச்சாலை திட்டத்திற் கெதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு, ‘"8 வழிச்சாலை போட்டால் 8 பேரை வெட்டுவேன்'’ என்று பேசியதற்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளி வந்திருக்கும் அவரை பல்வேறு கேள்விகளுடன் சந்தித்தோம்..

Advertisment

மக்கள் பலமாக எதிர்ப்புணர்வைக் காட்டியும் எட்டுவழிச்சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என எடப்பாடி சொல்கிறாரே?

மன்சூர்: பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசி எடப்பாடி பழனிசாமி கமிட்டாகி விட்டார். அதுமட்டுமின்றி, சேலத்தைச் சுற்றியுள்ள போக்குவரத்து, கட்டுமான வாகனங்கள் அனைத்தும் அவரது உறவினர்களுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. அவற்றை இயக்க, லாபம் பார்க்க சாலை வேண்டாமா? எடப்பாடி அவர் ஊர்தானே.. ஓட்டுக்கேட்டு வந்ததைப் போல போலீஸ் இல்லாமல் மக்களை நேரில் சந்திக்க முடியுமா அவரால்? தூத்துக்குடிக்கு சென்று யார் உங்களைத் தூண்டியது என்று மக்க

னதில் தோன்றிய கருத்துகளை தடாலடியாக பேசக் கூடியவர் நடிகர் மன்சூர் அலிகான். சேலம் டூ சென்னை பசுமைவழிச்சாலை திட்டத்திற் கெதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு, ‘"8 வழிச்சாலை போட்டால் 8 பேரை வெட்டுவேன்'’ என்று பேசியதற்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளி வந்திருக்கும் அவரை பல்வேறு கேள்விகளுடன் சந்தித்தோம்..

Advertisment

மக்கள் பலமாக எதிர்ப்புணர்வைக் காட்டியும் எட்டுவழிச்சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என எடப்பாடி சொல்கிறாரே?

மன்சூர்: பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசி எடப்பாடி பழனிசாமி கமிட்டாகி விட்டார். அதுமட்டுமின்றி, சேலத்தைச் சுற்றியுள்ள போக்குவரத்து, கட்டுமான வாகனங்கள் அனைத்தும் அவரது உறவினர்களுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. அவற்றை இயக்க, லாபம் பார்க்க சாலை வேண்டாமா? எடப்பாடி அவர் ஊர்தானே.. ஓட்டுக்கேட்டு வந்ததைப் போல போலீஸ் இல்லாமல் மக்களை நேரில் சந்திக்க முடியுமா அவரால்? தூத்துக்குடிக்கு சென்று யார் உங்களைத் தூண்டியது என்று மக்களிடம் கேட்பாரா? பசுத்தோல் போர்த்திய ரத்தக் காட்டேரிகளின் ஆட்சி இது.

தொடர்ந்து போராட்டங்கள் நடந்தவண்ணம் இருக்கும் சூழலில், மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவதுபோல் நீங்கள் பேசியது சரியா?

Advertisment

மன்சூர்: கல்லையும், மலைகளையும் கடவுளாக வணங்கியவர்கள் ஆதித்தமிழர்கள். பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அந்த மலைகளை அளித்து-அழித்து, கனிமவளங்களை கடத்திச் செல்பவர்களின் கைக்கூலியாக ஆட்சி யாளர்கள் இருக்கிறார்கள். இந்த அராஜகத்தைத் தட்டிக்கேட்பது ஜனநாயக உரிமை. அரிவாள் கையோடு நான் பேசவில்லை. வளர்மதி எனும் கல்லூரி மாணவியை போராட்டத்தைத் தூண்டியதாக கைது செய்கிறார்கள். ஒரு மாணவி பிரச்சாரம் செய்து தூண்டிவிட்டுத்தான் இந்த ஆட்சி கலையப் போகிறதா? பிரசுரம் கொடுத்தது, மேடையில் பேசியதற் கெல்லாம் எஃப்.ஐ.ஆர். போடுவதற்கு வெட்கப்பட வேண்டாமா?

இந்தத் திட்டத்தில் பல்வேறு நன்மைகள் இருப்பதாக அரசு சொல்கிறதே?

மன்சூர்: என்னைக் கைதுசெய்து ஆத்தூரிலிருந்து சேலம் அழைத்துச்சென்றபோது, வழிநெடுக பசுமை எழில் கொஞ்சியதைப் பார்த்தேன். செங்கல்வராயன், ஜவ்வாது என ஏராளமான மலைகள் இருக்கின்றன. அவற்றிற்கடியில் ப்ளாட்டினம் போன்ற கனிமவளங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யாமல் டாஸ்மாக், குட்கா என எல்லா அழிவு வேலைகளையும் செய்யும் இந்த அரசு, நான்கு வழிச்சாலைகளின் மூலம் ஏற்படுத்தாத வேலை வாய்ப்பை, எட்டுவழிச்சாலை மூலமாக ஏற்படுத்தப் போகிறதா? ஈரோட்டில் மலைகளை உடைத்து பாறைகளைத் தூக்கிச்செல்ல ஜப்பான் நிறு வனத்துடன் 36 லட்சம் கோடி ரூபாய்க்கு ஒப் பந்தம் போட்டிருக்கிறார்கள். மிகப்பெரிய வளத்திருட்டில் ஈடுபடப் போகிறார்கள். இங்கிருக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் இந்த பூமி சொந்தமானதுதானே.

"காப்பர், நாட்டிற்கு மிகவும் அத்தியாவசிய மானது' என்று ஜக்கி வாசுதேவ் கூறுகிறாரே?

மன்சூர்: மனைவியின் மரணம் தொடர்பாக அவர்மீது கூடத்தான் குற்றச்சாட்டு இருக்கிறது. ஏன் இன்னும் கைது செய்யவில்லை. அடுத்த வீட்டுப் பெண்பிள்ளைகளுக்கு மொட்டையடித்து சன்யாசி களாக ஆக்கிவிட்டு, தன் மகளுக்கு திருமணம் செய்துவைத்தார். யானை வழித்தடங்களை அழித்து 600 ஏக்கர் நிலப்பரப்பில் ஆசிரமம் அமைத்தார். மன்சூர்அலிகான் ஆசிரமம் தொடங்க இந்த அரசு நிலம் கொடுக்குமா? ஜக்கிவாசுதேவ், பதஞ்சலி, பாபாராம்தேவ் போன்ற சாமியார்கள் எல்லாம் லட்சம், கோடிக்கு சொத்து சேர்க்கத்தான் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பியூஷ்மனுஷ், வளர்மதி போன்ற சமூக ஆர்வலர்களை தொடர்ந்து கைது செய்து சிறையிலடைப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

மன்சூர்: தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொல்ல யார் அதிகாரம் கொடுத் தது? முதல்வரே எனக்குத் தெரியாது டி.வி.யில் பார்த்துதான் தெரிந்துகொண் டேன் என்கிறார். ஜல்லிக்கட்டு போராட் டத்தின் கிளைமாக்ஸிலும் இதை யேதான் செய்தார்கள். இயக்கு நர் அமீர், மக்கள் சபையில் நியாயமான கருத்தைப் பதிவு செய்தார். அதற்காக ஆபாச வார்த்தைகளில் பேசிய சிலர் கொலை முயற்சியில் ஈடுபட்டார்கள். அவருக்கு பாதுகாப்பளித்த எம்.எல்.ஏ. தனியரசு வின் காரை அடித்து நொறுக்கினார்கள். கவர்னரின் மீது பாலியல் குற்றச்சாட்டு இருக்கிறது. அதை விசா ரிப்பதற்கான ஆணையத்தை அவரே அமைக்கிறார். இவ்வளவு குற்றம் செய்தவர்களை உடனே கைது செய்து சிறையில் அடைக்காததற்குப் பெயர்தான் ஜனநாயகமா? ஜனநாயகத்தைத் தூக்கி அவர்கள் மண்டையில் போட்டுதான் உடைக்கவேண்டும். நாட்டு மக்களை குற்றவாளிகளாக ஆக்கியதே ஆளுகின்ற அரசுகள்தான்.

தமிழகத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவி இருப்பதாக தமிழக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டுகிறார்களே?

மன்சூர்: தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் எதிரான திட்டங்களை தொடர்ந்து கொண்டுவந்து மத்திய அரசுதான் நம்மை அழிக்கிறது. வியர்வை சிந்தி உழைத்தவர்களின் பணம்தான் சுவிஸ் வங்கியில் இருக்கிறது என்று அரசே சொல்வதைவிட கொடுமை என்ன இருக்க முடியும்? என்னை சிறையில் அடைப்பதையெல்லாம் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய ஏழுபேரின் கருணை மனுவை, குடியரசுத்தலைவர் நிராகரிப்பாரா? சட்டத்தெளிவு இருந்தால் இப்படி நடக்குமா? இப்ப டிப்பட்ட நாட்டில் யார் சமூகவிரோதி என்று சொன்னால் தெளிவாகி விடும்.

-சந்திப்பு : ஃபெலிக்ஸ்

தொகுப்பு: -ச.ப.மதிவாணன்

Mansoor Ali Khan nkn13.07.2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe