வெளிநாடுகளில் இருந்து கப்பலின் மூலமாக சென்னை துறைமுகத்திற்கு வந்தடையும் கண்டெய்னர்களை, துறைமுக குடோனான சி.எப்.எஸ்.ஸுக்கு கொண்டுசெல்லும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை எடுத்துச்செல்வதில் அங்கிருக்கும் இரு தரப்புக்கு இடையே பழையபடி மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் மீண்டும் துறைமுகம் ரத்தவெள்ளத்தில் மிதக்குமோ என்ற அச்சநிலை அங்கே நிலவுகிறது.

Advertisment

hh

சென்னை துறைமுகத்தில் ஆரம்பகட்டத்தில் இருந்து, இன்றுவரை அப்பகுதியைச் சேர்ந்த நாயக்கர்களுக்கும், மீனவர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்துக்கொண்டே இருக்கிறது. ஆரம்பகட்டத்தில் மீனவர்களிடம் குறைந்த அளவுக்கு கண்டெய்னர்களை எடுத்துச் செல்லும் டிராக்டர்கள் இருக்க, நாயக்கர்களிடம் அவை அதிகமாகவே இருந்தன. இதனால் கொடுக்கும் இடத்தில் இவர்களும், வேலை செய்யும் இடத்தில் மீனவர்களும் இருப்பார்கள். இதிலிருந்துதான் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்தன.

துறைமுகத்தில் முதன்முதலாக 1975-ஆம் ஆண்டில் 32 பேரை கொண்டு இயங்கும் ’ட்ரைலர் ஓனர் அசோஷியேசனை’ வாசுதேவர் நாயக்கர் என்பவரும், சந்தானகிருஷ்ண ஐயர் என்பவரும் ஆரம் பித்தனர். இரு தரப்பினரும் அதன்மூலம் கண்டெய்னர்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்து வந்தனர். இதில் அதிகமாக நாயக்கர் தரப்பு ஏற்றுமதி செய்துவந்த நிலையில்... மீனவர் தரப்பைச் சேர்ந்த பாண்டியன், வெற்றி, குவார்ட்டர்ஸ் குப்பன் ஆகியோருக்கும் வாசுதேவன் நாயக்கருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Advertisment

hh

இதைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வாசுதேவன் திணறிய நிலையில்... 1985-இல் ஏழுமலை நாயக்கர் என்பவர் அங்கே சங்கத்தலைவராக எண்ட்ரி ஆனார். அவர் வந்த சில வருடங்களிலேயே... ஏழுமலை நாயக்கர் தரப்பு, எதிர்தரப்பைச் சேர்ந்த பாண்டியனை, ரவுடி வெல்டிங்குமார் டீம் மூலம் 1987-இல் துறைமுக கேட்டின் முன்பாகவே சராமரியாக வெட்டிச் சாய்த்தது. பிறகு சங்கத்தின் உரிமையாளர் எண்ணிக்கை 32-ல் இருந்து 160 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் 1994 ஏப்ரல் 18 அன்று, ஏழுமலை நாயக்கரை அ.தி. மு.க.வைச் சேர்ந்த டீக்காராம் என்பவர் போட்டுத் தள்ளி னார். அப்போது ம.தி.மு.கவில் இருந்தார் ஏழுமலை. ம.தி.மு.க. தொடங்கப்பட்ட காலம் என்பதால் அரசியல்ரீதியாக இந்தக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏழுமலை கொலை செய்யப்பட்டதால், அவர் வகித்த தலைவர் பதவியில் யார் அமர்வது என்ற போட்டி உருவானது. சங்கத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.ராஜா என்பவர், அந்தப் பதவியை எதிர்பார்த்திருக்க, நாயக்கர் தரப்பைச் சேர்ந்த மனோகரன் தலைவர் பதவியில் அமர்ந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, மனோ கரனுக்குத் துணையாக இருந்த ஜி.வி.சிவாவை 1997 ஜனவரி 22-இல் போட்டுத் தள்ள... அந்த வழக்கில் எர்ணாவூர் நாராயணன் சிறைக்குச் செல்கிறார்.

Advertisment

-இப்படி அடுத்தடுத்த கொலைகள் அரங்கேறிய நிலையில், மனோகரன் தன் பதவியை விட்டு வெளியே செல்ல, எஸ்.ஆர். ராஜா தலைவர் பதவியில் அமர்ந்தார்.

1999-ஆம் ஆண்டு எஸ்.ஆர்.ராஜா தலைமையிலான ’ட்ரெய்லர் அசோஷி யேசனில்’ இருந்த பிரிந்து வந்த ராயபுரம் சுரேஷ், மனோ, எம்.எம்.கோபி, சாந்தன் ஆகியோர் சேர்ந்து தனியே ‘"ஆர்கனைசர் அசோஷி யேசன்'’என்ற அமைப்பைத் தொடங்கி ராயபுரம் சுரேஷ் தலைமையில் இயங்கத் தொடங்கினர். மீண்டும் 2000-இல் சுரேஷ் பழைய சங்கத்துக்கே செல்ல, ஏழுமலையின் அண்ணன் மகனான எம்.எம்.கோபி தலைமையில் அந்த ‘"ஆர்கனைசர் அசோஷி யேசன்' தொடர்ந்து இயங்கியது. இதன்பின் 12 ஆண்டுகளாக எந்தப் hhபிரச்சனையும் இல்லாமல் அமைதியான முறையில் சென்று கொண்டிருந்த நிலையில்... ’’மீண்டும் எஸ்.ஆர். ராஜா பிரச்சினை செய்ய ஆரம்பித்தார். "பல சங்கங்களைப் பின் னணியில் இருந்து உருவாக்கி, அந்த சங்கங்கள் மூலமாக கலாட்டா செய்யத் தொடங்கிவிட்டார்' என்கிறார்கள்’ ஏரியா வாசிகள்.

இதில் 2013-ல் அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த தலைவர் வினோத் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு, மத்திய பா.ஜ.க. அரசு, "துறைமுகப் பணிகளில் ஓவர்லோடு ஏற்றக்கூடாது' என்று அறிவித்தது.

இந்தச்சூழலில் எம்.எம்.கோபி, தன்னுடைய வாகனத்தில் இரண்டு கண்டெய் னர்களை ஏற்றிச் செல்வதாகவும், தாங்கள் ஒரு கண்டெய்னரை மட்டுமே எடுத்துச் செல்வ தாகவும் கூறிய ராஜா, "அனைவருமே இதையே கடைபிடிக்கவேண்டும்' என்று அறிவித்தார்.

ஆனால் கோபியோ, உங்களது லாரி தரம் குறைவாக இருந்தால் நாங்கள் என்ன செய்யமுடியும்?. ""நீங்களும் முடிந்தால் தரம் உயர்ந்த வாகனத்தை வாங்கிக்கொண்டு இரண்டு கண்டெய்னர்களை எடுத்துச் செல்லுங்கள்... நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம்?'' என்று சொல்ல... கோபியின் சங்கத்திலுள்ள வண்டிகளையும் டிரைவர்களை யும் குகன் எனும் ரவுடி மூலம் எதிர்தரப்பு தாக்கியது. இது தொடர்பான வழக்கு மீஞ்சூர், ராயபுரம் போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகியிருக்கிறது.

இந்தக் கலவரத்தால் டிரைவர்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு வருவார்களா என்ற நிலை ஏற்பட்டது. இதைக் காரணமாக வைத்து கோபியே அனைத்து வேலைகளையும் எடுத்துச் செய்யக் களமிறங்கலாம் என்று கருதி, அவருக்கு குறிவைக்கும் எண்ணத்திற்கு எதிர்தரப்பு வந்துவிட்டதாம்.

hh

ஆரம்பகட்டத்திலிருந்து தாமே அங்கு முடிசூடா மன்னனாக இருக்கவேண்டும் என நினைத்துவந்த எஸ்.ஆர்.ராஜாவுக்கு, பதிலடி கொடுக் கும்படி... ஏழுமலை நாயக்கரின் அண்ணன் மகனான இந்த எம்.எம். கோபி களத்தில் நிற்பதை ராஜா தரப்பால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. அதனால் "எந்த நேரத்திலும் கோபிக்கு ஆபத்து வரலாம் என்றும், இதையொட்டி சில தலைகளும் உருளலாம்' என்றும் துறைமுகத் தரப்பு பதட்டத்தில் இருக்கிறது. க்ரைம் திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டதாகவும் சொலப்படுகிறது.

நம்மிடம் பேசிய வடசென்னையின் அந்த நிழலுலக நபர்...

""கடந்த ஜனவரி மாதம் ஈ.சி.ஆர். சாலையிலுள்ள ரிசார்ட்டில் ஒரு சந்திப்பு நடந்தது. எஸ்.ஆர்.ராஜா தலைமையில் சிறு, சிறு சங்கங்களை இணைத்த முன்னாள் வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டரான இப்போதைய ஏ.சி.யும் அதில் இருந்தார். அவர்களுடன் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ரவுடி ஒல்லி சுரேஷ், மற்றும் நாகேந்திரன் ஆட்களான குகன், டில்லி, உள்ளிட்ட hhரவுடிகளும் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார்கள். இவர்களுக்கு எல்லாவகையிலும் உறுதுணையாக அந்த ஏ.சி. இருப்பதால், அவரது மகன் பிறந்தநாளுக்கு கால்பந்து விளையாட்டையும் நடத்தினார்கள். எதற்கும் தயார் நிலையிலுள்ள இந்த ரவுடிகள் குருப், எந்த நேரத்திலும் கோபியைப் பொலிபோட காத்திருக்கிறது''’என்று நம்மிடம் கிசுகிசுத்தார்.

காவல்துறை, ராஜா தரப்புக்குச் சாதகமாகவே செயல்படுவதாச் சொல்லும் கோபி தரப்பினர், ""லாரி ஓட்டுநர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஜே.சி. பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இது வரையில் எடுக்கவில்லை''’ என்கிறார்கள்.

இது தொடர்பாக ஜே.சி.பால கிருஷ்ணனிடம் நாம் கேட்ட போது, ""அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம். குற்றங்கள் நடக்காத வகையில் நிலமையை சீரமைத்து வருகிறோம்''’என்றார்.

இதுபோன்ற பிரச்சினைகளை முன் கூட்டியே உளவுத்துறை கண்காணித்து க்ரைம்களைத் தடுத்து நிறுத்தவேண்டியது அவசியம். ஆனால், இந்த விவகாரத்தில் உளவுத்துறை, உறங்கும் துறையாக உள்ளது.

இனியேனும் நடக்க இருக்கும் கொலைகளை காவல்துறை தடுக்கப்போகிறதா? இல்லை கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கப் போகிறதா?

-அ.அருண்பாண்டியன்