கருப்பு + சிவப்பு = புரட்சி! -ரைட்டர், டைரக்டர் லியாகத் அலிகான் (2)

dd

dd

(2) திராவிட ரத்தம்!

லியாகத்...

லியாகத் அலி...

லியாகத் அலிகான்...

நான் திரையுலகிற்கு வருவதற்கு முன் என் ஊரில் என்னை சிலர் "லியாகத்' என்று அழைப்பார்கள். சிலர் "லியாகத் அலி' என்று அழைப்பார்கள். எனது பெரியப்பா மட்டும்தான் "லியாகத் அலிகான்' என்று முழுப்பெயரையும் சொல்லி அழைப்பார். அப்படி அவர் அழைக்கும் பொழுதெல்லாம் எனக்கு வித்தியாசமாகத் தெரியும். திரை யுலகிற்கு வந்த பிறகும்கூட இதேபோல்தான் லியாகத்... லியாகத் அலி... லியாகத் அலிகான் என்று அவரவருக்கு பிடித்த மாதிரி அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். (நடிகர் அண்ணன் செந்தில் அவர்கள் எப்பொழுதுமே வாய் நிறைய "லியாகத் அலி' என்றுதான் அழைப்பார்.) நான் நேசிக்கின்ற இயக்குநர், தென்னிந்திய தொழிலாளர் சம்மேளனத் தலைவர், என் உடன்பிறவா சகோதரர் ஆர்.கே. செல்வமணி அவர்கள் என்னை பிரியமுடன் "லீ' என்று அழைப்பார்.

தொடரின் ஆரம்பத்திலேயே எதற்காக பெயரைப் பற்றிய ஆராய்ச்சி என்று நீங்கள் நினைக்கலாம். அதற்குக் காரணம் இருக்கிறது.

ஒரு காலத்தில், அதாவது நான் திரையுலகிற்கு வருவதற்கு முன்பும், வந்த பிறகும் கூட, இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தயாரிப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களே பணம் போட்டு படம் எடுத்ததால் அவர்கள் இஸ்லாமியப் பெயர்களிலேயே இருந்தார்கள். விளம்பரங் களிலும் அந்தப் பெயர்களே இருந்தன.

ஆனால் தொழில்நுட்பக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் தங்களுடைய இஸ்லாமியப் பெயரை மறந்துவிட்டு, அப்படி சொல்லக்கூடாது மறைத்துவிட்டு

dd

(2) திராவிட ரத்தம்!

லியாகத்...

லியாகத் அலி...

லியாகத் அலிகான்...

நான் திரையுலகிற்கு வருவதற்கு முன் என் ஊரில் என்னை சிலர் "லியாகத்' என்று அழைப்பார்கள். சிலர் "லியாகத் அலி' என்று அழைப்பார்கள். எனது பெரியப்பா மட்டும்தான் "லியாகத் அலிகான்' என்று முழுப்பெயரையும் சொல்லி அழைப்பார். அப்படி அவர் அழைக்கும் பொழுதெல்லாம் எனக்கு வித்தியாசமாகத் தெரியும். திரை யுலகிற்கு வந்த பிறகும்கூட இதேபோல்தான் லியாகத்... லியாகத் அலி... லியாகத் அலிகான் என்று அவரவருக்கு பிடித்த மாதிரி அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். (நடிகர் அண்ணன் செந்தில் அவர்கள் எப்பொழுதுமே வாய் நிறைய "லியாகத் அலி' என்றுதான் அழைப்பார்.) நான் நேசிக்கின்ற இயக்குநர், தென்னிந்திய தொழிலாளர் சம்மேளனத் தலைவர், என் உடன்பிறவா சகோதரர் ஆர்.கே. செல்வமணி அவர்கள் என்னை பிரியமுடன் "லீ' என்று அழைப்பார்.

தொடரின் ஆரம்பத்திலேயே எதற்காக பெயரைப் பற்றிய ஆராய்ச்சி என்று நீங்கள் நினைக்கலாம். அதற்குக் காரணம் இருக்கிறது.

ஒரு காலத்தில், அதாவது நான் திரையுலகிற்கு வருவதற்கு முன்பும், வந்த பிறகும் கூட, இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தயாரிப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களே பணம் போட்டு படம் எடுத்ததால் அவர்கள் இஸ்லாமியப் பெயர்களிலேயே இருந்தார்கள். விளம்பரங் களிலும் அந்தப் பெயர்களே இருந்தன.

ஆனால் தொழில்நுட்பக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் தங்களுடைய இஸ்லாமியப் பெயரை மறந்துவிட்டு, அப்படி சொல்லக்கூடாது மறைத்துவிட்டு, அப்படியும் சொல்லக்கூடாது வாய்ப்புக் கொடுப்பவர்களின் நிர்ப்பந்தத்தால் இஸ்லாமியப் பெயரை மாற்றிக்கொண்டு "ராஜா', "பாபு...' இதுபோன்ற பல பெயர்களில் பணியாற்றுவார்கள்.

சிலர் வாய்ப்புக்கேட்டு வரும்போதே இஸ்லாமியப் பெயர்களை சொல்வதில்லை. காரணம்... "இஸ்லாமியர்கள் என்றால் சினிமாவில் வாய்ப்புக் கொடுக்கமாட்டார்கள்' என்று நினைத்து பெயரை மாற்றிக்கொண்டார்கள். சிலர் அவர்களாகவே விரும்பி பெயரை மாற்றிக்கொண்டதும் உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன். யார், யார் அப்படி மாற்றிக்கொண்டார்கள் என்பதெல்லாம் எனக்கு முழுமையாகத் தெரியாது. அந்தப் பட்டியல் மிகவும் நீளமாக இருக்கும் இருந்தாலும் உதாரணத்துக்காக சிலரைச் சொல்கிறேன்.

ll

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சொந்தக் கம்பெனியான எம்.ஜி.ஆர். பிக்சர்ஸில் ரவீந்தர் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் இருந்தார். அவர் ஒரு இஸ்லாமியர். அவரது சொந்தப் பெயர் காஜாமொய்தீன் அதற்கு அடுத்த காலகட்டங்களில் தேவர் பிலிம்ஸ் படங்கள், முக்தா பிலிம்ஸ் படங்கள், அதுதவிர பல கம்பெனிகளுக்கு ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனமெல்லாம் எழுதியவர் தூயவன். தேவர் பிலிம்ஸ் தயாரித்த "தெய்வம்', "துணைவன்' போன்ற பக்திப் படங்களுக்கும் அவர்தான் வசனம் எழுதினார்.

தூயவன் -ஒரு இஸ்லாமியர், முருகப் பெருமானின் பெருமைகளைச் சொல்லும் பக்திப் படத்திற்கு சிறப்பாக வசனம் எழுதியதற்காக தூயவனின் வீட்டிற்கே சென்று நிறைய பணம் கொடுத்தாக சொல்வார்கள். இப்படி பலரைச் சொல்லலாம்.

நான் எழுதிய படங்களில் கேமரா அஸிஸ்டன்ட் ஆகப் பணியாற்றியவர் ராஜா என்பவர். மூன்று வருட பழக்கம். மூன்று படங்களில் பணியாற்றியிருக்கிறார். அவரது தங்கையின் திருமணப் பத்திரிகை கொடுப்பதற்காக என் வீட்டுக்கு வந்தார். பத்திரிகையை வாங்கிப் பார்த்த பொழுதுதான் தெரிந்தது அவர் ஒரு இஸ்லாமியர் என்று.

"மூன்று ஆண்டுகள் என்னிடம் பழகிக்கொண்டி ருக்கிறீர்கள். நான் உங்களை ஒரு இந்து சகோதரர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இஸ்லாமியர் என்று கூறவில்லையே'' என்று கேட்டேன்.

நான் முன்னால் சொன்ன காரணத்தைத்தான் சொன்னார். "இஸ்லாமியர்கள் என்றால் வாய்ப்புக் கொடுக்கமாட்டார்கள்' என்று.

யாரோ ஒன்றிரண்டு பேர் இஸ்லாமியராக இருந்தால் வாய்ப்புக் கொடுக்கமாட்டேன் என்று சொல்லியிருக்கலாம். அது பரவிப்போய் சிலர் அவர்களாகவே பெயரை மாற்றிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன்.

ஜாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் வாழ்ந்துவந்த தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் திரையுலகில் இப்படி இருந்திருக்கிறதே என்று அப்பொழுது வேதனைப்பட்டேன்.

காரணம், நானும் அப்படி வாழ்ந்தவன்தான் என்னிடம் பழகியவர்களிடமோ, பணிபுரிந்த வர்களிடமோ, என்னிடம் வந்து சேர்ந்த எனது உதவியாளர் களிடமோ எந்த மதம், எந்த ஜாதி என்று நான் கேட்டதே இல்லை. நான் எப்படி மசூதிக்குச் செல்வேனோ அதேபோல கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். சர்ச்சுக்கும் சென்றிருக்கிறேன்.

ll

நாகூர் தர்காவுக்கும் சென்றிருக்கிறேன் வேளாங்கண்ணிக்கும் சென்றிருக்கிறேன். திருச்செந்தூருக்கும் சென்றிருக்கிறேன். இந்து, கிறிஸ்துவ திருத்தலங்களுக்குச் செல்லும்போது மனதில் எனது இறைவனை நினைத்துக்கொள்வேன். மதங்கள் வேறு வேறாக இருந்தாலும் மனங்கள் ஒன்றாக இருக்கவேண்டும். கோவில்கள் வேறு வேறாக இருந்தாலும் கொள்கைகள் ஒன்றாக இருக்கவேண்டும். பாதைகள் வேறுவேறாக இருந்தாலும் பயணங்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். தெய்வங்கள் வேறு வேறாக இருந் தாலும் நமது உணர்வு கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வன் நான்.

என் கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் வெளி வந்த "ஏழை ஜாதி' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜயகாந்த் அவர்கள் பேசுவது போல ஒரு வசனம் எழுதியிருப்பேன்.

"உணர்வுல தமிழனா இருக்கணும்... ஒற்றுமையில இந்தியனா இருக்கணும்... மொத்தத்துல மனுஷனா இருக்கணும்'' என்று பேசியதோடு படம் முடியும்.

"இந்த விளக்கமெல்லாம் இப்பொழுது எதற்கு?' என்று நீங்கள் நினைக்கலாம். என்னை முதன்முதலாக அவரது படத்துக்கு வசனம் எழுத அழைத்த ஒரு தயாரிப்பாளர், கதை விவாதமெல் லாம் முடிந்த பிறகு, என்னுடைய இஸ்லாமியப் பெயரை மாற்றி "வேறு பெயர் வைத்துக்கொண் டால்தான் வசனம் எழுத வாய்ப்புத் தரமுடியும்' என்று கூறினார். நான் அதிர்ச்சியடையவில்லை.

"என்ன காரணம்'' என்று கேட்டேன்...

"காரணம் கூறமுடியாது. மாற்றமுடியுமா, முடியாதா?'' என்று கேட்டார்.

"படம் பார்க்க வருபவர்கள் வசனம் நன்றாக இருந்தால் கை தட்டுவார்களா, எழுதியவர் இஸ்லாமியரா, இந்துவா, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவரா என்று பார்த்து கை தட்டுவார்களா?'' என்று கேட்டேன். அவரிடமிருந்து பதில் இல்லை.

வசனம் எழுதியவர் இஸ்லாமியர் என்றால் வினியோகஸ்தர்கள் படத்தை வாங்கமாட்டார் களா, திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை திரையிடமாட்டார்களா... ரசிகர்கள் படம் பார்க்க வரமாட்டார்களா? என்று கேட்டேன். எதற்குமே அவரிடமிருந்து பதில் இல்லை.

என்று நான் இந்த மண்ணில் பிறந்தேனோ அன்றிலிருந்தே என் உடலில் திராவிட ரத்தம் ஓடு கிறது என்பதை உணர்ந்தவன் நான். அது சுயமரி யாதை கலந்த ரத்தம். ஒரு இனம் தெரியாத ஈர்ப்பு தந்தை பெரியார் மீது... ஒரு பைத்தியக் காரத்தனமான பற்று. பேரறிஞர் அண்ணா வின் தமிழ் மீது கணக் கிட முடியாத காதல், அளவிட முடியாத ஆனந்தம், எழுத்திலே சொல்ல முடியாத உற்சாகம். நரம்புகளை முறுக்கேறச் செய்யும் எழுச்சி, பேசிப் பேசி ரத்தத்தை சூடேற்றும் புரட்சி... இவையெல் லாம் கலந்த கலைஞரின் வசனத்தின்மேல் ஒரு வெறித்தனமான ஈடுபாடு. அப்படி வளர்ந்தவன் நான். வாய்ப்புக்காகவோ, பணத்துக்காகவோ தன்மானத் தை இழந்துவிடாத பாதையிலே பயணித்தவன் நான். அந்த தயாரிப்பாளரிடம் உறுதியாகச் சொன்னேன். "என் தாய், தந்தை வைத்த பெயர் லியாகத் அலிகான். அந்தப் பெயரில் எழுதுவதாக இருந்தால் உங்கள் படத்தை ஏற்றுக்கொள்கிறேன். இல்லையென்றால் உங்கள் படமே வேண்டாம்'' என்று சொன்னேன். இன்னொன்றையும் அவரிடம் அழுத்தமாகச் சொன்னேன்.

அது என்ன?

எம்.ஜி.ஆரின் வெறித்தனமான ரசிகரான விஜயகாந்த், அதை ஏற்பாரா?

(வளரும்...)

nkn110323
இதையும் படியுங்கள்
Subscribe