கருப்பு + சிவப்பு = புரட்சி! திரைப்பட இயக்குநர் -வசனகர்த்தா லியாகத் அலிகான் (66)

ss

aa

(66) சக்கர கசந்தது!

"கட்டளை' படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தேதியை என்னிடம் சொன்ன சத்யராஜின் மேனேஜர் ராமநாதன், "இன்னும் இரண்டு வாரம் இருக்கு.… அதுக்குள்ள "கட்டளை' படத்தோட திரைக்கதைய முடிச்சிருங்க. வசனத்தைக் கூட நீங்க அப்பப்ப எழுதிக்கலாம்'' என்றார்.

நான் தேதியை மாற்றிக் கேட்டேன். ஆனால் பி.வாசு இயக்கத்தில் "உடன்பிறப்பு' படத்தில் சத்யராஜ் நடிக்க கொடுத்திருக்கும் தேதிகள் குழப்பும் எனக் கறாராகச் சொல்லிவிட்டார்.

ஏற்கெனவே "சக்கரைத் தேவன்' என்ற குண்டை என்மீது இப்ராகிம் ராவுத்தர் போட்டிருந்தார். இது சத்யராஜ் மேனேஜர் ராமநாதன் சார் போட்ட இரண்டாவது குண்டு.

நான் எதிர்பார்க்காத நிலையில்... மூன்றாவது குண்டை இப்ராகிம் ராவுத்தர் போட்டார்.

இப்ராகிம் ராவுத்தர் போட்ட அந்த மூன்றாவது குண்டு என் இதயத்திற்குள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. "அண்ணன் பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரிக்கும் "எங்க முதலாளி' படம் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு தேதி முடிவாகாமல் இருந்தது. அந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டுமென்று தேதி கேட்டார். நானும் ஒருவாரம் விஜியோட கால்ஷீட் கொடுத்துட்டேன். நீங்க உடனே அவரைப் போய் பார்த்து ஷூட்டிங் போவதற்கான வேலைகளைப் பத்திப் பேசுங்க'' என்றார்.

ஏற்கனவே "சக்கரைதேவன்' ஒரு இடியாக என் மீது விழுந்திருந்தது. அதனால் சத்யராஜின் "கட்டளை' திரைக்கதை வேலைகள் ஸ்தம்பித்துப் போயிருந்தது. இப்பொழுது இன்னொரு பக்க இடியாக "எங்க முதலாளி' ஷூட்டிங்.

இன்னும் "எங்க முதலாளி' கதை என்ன வென்றே எனக்குத் தெரியாது.

பஞ்சண்ணன் அவர்களைப் போய்ப் பார்த்தேன். "இப்ராகிம் ராவுத்தர் கால்ஷீட் கொடுத்த பிறகு படப்பிடிப்பை தள்ளி வையுங்கள்' என்று நான் எப்படி சொல்வது.

மறுத்துப் பேச முடியாத அளவுக்கு அவர் மாபெரும் லெ

மறுத்துப் பேச முடியாத அளவுக்கு அவர் மாபெரும் லெஜெண்ட்.… மிகவும் மரியாதைக் குரியவர். அவர்முன் வணக்கம் சொல்லி பணிவாக அமர்ந்தேன். "எங்க முதலாளி' கதையை சுருக்கமாகச் சொன்னார். "முதல் ஷெட்யூல் பொள்ளாச்சியில் வெச்சுக்கலாம் தம்பி'' என்று கூறி... யார் நடிகர், நடிகைகள் என்ற ஆலோசனையையும் கூறினார். கஸ்தூரி ஹீரோயின், அண்ணன் ராதா ரவி, நாகேஷ் சார், ஆர்.சுந்தர்ராஜன், தியாகு என்று முடிவு செய்தோம்.

"என்ன தம்பி முகம் டல்லா யிருக்கு'' என்று கேட்டார் பஞ்சண்ணன்.

"ரெண்டு, மூணு நாளா தூக்கமில் லேண்ணே'' என்றேன். என் துக்கத்தை மறைக்க தூக்கத்தின் மேல் பழியைப் போட்டேன். இனி எப்படி நான் கட்டளை படத்தின் கதையை சரி செய்வது, திரைக்கதை வேலையை முடித்துவிட்டு வசனம் எழுதுவது?

பல கேள்விகள் மனதிற்குள்

"பொறியில் தெரியாமல் போய் மாட்டிக் கொள்வது எலி,… தெரிந்தே பொறியில் மாட்டிக் கொண்டான் லியாகத் அலி' -இப்படி கமெண்ட் அடித்தார் இந்த விபரங்கள் அனைத்தையும் அறிந்த என் நண்பர் ஒருவர்.

"எங்க முதலாளி' படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் ஒரு வாரம் நடந்தது. படத்திற்கு நான் இயக்குநர் மட்டுமே. கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே பஞ்சண்ணன்தான்.

ஒரு வாரத்திற்குண்டான சீன்களையும், வசனங்களையும் மட்டும் அனுப்பி வைத்தார் பஞ்சண்ணன். படப்பிடிப்பு ஒருவாரம்தான். அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க சில நாட்கள். அந்த நாட்கள் "கட்டளை' பட வேலைகளை, குறிப்பாக திரைக்கதை, வசனம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்னொரு பக்கம் "சக்கரைதேவன்' படப்பிடிப்பு தொடங்க வேண்டும். அதற்கு நான் வசனம் எழுதிக் கொடுக்க வேண்டும்.

"கட்டளை' படத்தின் பாடல் காட்சி இர வெல்லாம் நடந்துகொண்டிருந்தது. அதற்கிடையே எப்படி "சக்கரைதேவன்' படத்திற்கு எழுத முடியும். "முதல் ஐந்து நாட்களுக்கு எழுதிக் கொடுங்கள்' என்றார் படத்தின் இயக்குநர் ஜெ.பன்னீர்.

எழுதிக் கொடுத்தேன். படப்பிடிப்பு லொகே ஷன் போனதும் ஷெட்யூல் மாறிவிட்டது. வேறு காட்சிகள் எடுக்க வேண்டும். "அதற்கான வசனங்கள் வேண்டும்' என்று போனில் சொன்னார். வேறு வழியில்லாமல் அதையும் எழுதி அனுப்பினேன். "மன மகிழ்ச்சியோடு உற்சாகத்தோடு வேலை செய்தால் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யலாம். மன உளைச்சலோடு பல பிரச்சினை களோடு எப்படி மூன்று பட வேலைகளைப் பார்ப்பது?'

மூன்றில் இரண்டு படங்கள் நான் இயக்குகிற படங்கள். எழுதுவது என்பது ஒரு தவம் மாதிரி. ஆனால் அதற்கான முறையான நேரம் ஒதுக்க வேண்டும். நேரமே இல்லாமல் எப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க முடியும்? இது விசுவாசத்தினால் எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்ட மனஅழுத்தம். "நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே' என்று துணிச்சலாகச் சொல்வதற்கு நக்கீரனாக இருக்கவேண்டும். நான் அப்பொழுது நக்கீரனாக இல்லை. அப்படி இல்லாமல் போனதால் ஏற்பட்ட இழப்புகளை இப்பொழுது நக்கீரனில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

aa

"எங்க முதலாளி' படத்திற்காக ஒரு வாரம் எடுத்த காட்சிகளை பஞ்சண்ணன் பார்த்துவிட்டுச் சொன்னார். "நல்லா இருக்கு. ஆனா கதைய கொஞ்சம் மாத்திப் பண்ணலாம்னு இருக்கேன். அதனால ஒரு வாரம் எடுத்ததை அப்படியே தூக்கி வச்சிருங்க. வேற கதை பண்ணிட்டு சொல்றேன்.''

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவர்தான் கதை, திரைக்கதை, வசனம், பணம் போட்டு எடுக்கும் தயாரிப்பாளரும் அவர்தான். அவரே அதைப்பற்றி கவலைப்படாமல் தூக்கி வைக்கச் சொல்லும்போது, என்னால் என்ன சொல்ல முடி யும். தூக்கி வைத்துவிட்டேன். ஆனால் "எங்க முத லாளி' வேலைகளால் "கட்டளை' படம் பாதித்தது. அந்த வேதனையைத் தூக்கி வைக்க முடியவில்லை.

"சக்கரைதேவன்' படத்திற்கு எழுத வேண்டும் என்று இயக்குநர் ஜெ.பன்னீர் வந்து நின்றார். அவரிடம் குமுறித் தீர்த்துவிட்டேன்.

"வேறு வசனகர்த்தா வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை. தேவையில்லாமல் உங்களுக்கும் சிரமம். என்னுடைய "கட்டளை' பட வேலைகளுக்கும் பிரச்சினை'' என்று நான் கோபப்பட்டேன்.

"லியாகத் சார்,… இவ்வளவு பிரச்சினை வரும்னு நான் நினைக்கவே இல்லை. ஒரு பாடல் காட்சி, ஒரு சண்டைக் காட்சியை படமாக்க ப்ளான் பண்ணியிருக்கேன். ஒருவாரத்திற்கு வசனக் காட்சி இல்லை. அதனால் நீங்கள் ரிலாக்ஸாக எழுதுங்கள். ஒரு வாரத்திற்குள் வசனங்களை எழுதி அனுப்புங்கள்'' என்று சொன்னார். கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

"சக்கரைதேவன்' சண்டைக் காட்சிக்காக சென்னையிலிருந்து இரண்டு கேமராக்கள் போனது. அப்பொழுது சண்டைக் காட்சிகளுக்காக இரண்டு கேமராக்கள் பயன்படுத்துவது உண்டு. சண்டைக் காட்சிகளில் விஜயகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய ஞானம் உண்டு. ஃபைட் மாஸ்டருக்கே ஆலோ சனைகள் சொல்லுமளவுக்கு அறிவாற்றல் மிக்கவர்.

சக்கரைதேவன் சண்டைக்காட்சிக்கு இரண்டு கேமராக்கள் வந்திருப்பதைப் பார்த்து "இந்த ஆக்ஷன் பிளாக் எடுக்க ஒரு கேமரா போதும். ஸ்டண்ட் மாஸ்டர் இதை எடுக்கட்டும். இன்னொரு கேமராவை வைத்து வசனக் காட்சிகள் எடுங்கள்' என்று கூறியிருக்கிறார். "ஒரு வாரத்திற்கு வசனக் காட்சிகள் எடுக்கவில்லை. நீங்கள் ரிலாக்ஸாக வசனம் எழுதி அனுப்புங்கள் என்று லியாகத் சாரிடம் நான் சொல்லியிருக்கிறேன்' என்று இயக்கு நர் ஜெ.பன்னீர் சொல்லியிருந்தால் பிரச்சினை வந்திருக்காது. ஆனால் அவருக்கு முதல் படம். பதட்டத்தோடு பயமும் சேர்ந்துகொண்டது. "லியாகத் அலிகான் வசனம் எழுதிக் கொடுக்க வில்லை. அதனால் சீன்கள் எப்படி சார் எடுக் கிறது?' என்று இயக்குநர் கூறியதும், கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார் விஜயகாந்த்.

"வசனம் எழுதிக் கொடுக்கலியா?''

"ஆமா சார்...'' என்றதும்...

அன்றைய படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு ஃப்ளைட் பிடித்து சென்னை வந்து விட்டார் விஜயகாந்த்.

இப்ராகிம் ராவுத்தருக்கு அதிர்ச்சி.

"என்னாச்சு… ஏன் திடீர்னு வந்துட்டே''

"லியாகத் அண்ணன் வசனம் எழுதிக் கொடுக்கல... அதான் வந்துட்டேன்''

"அதுக்காகவா ஷூட்டிங்கை விட்டுட்டு வர்றது. என்கிட்ட போன்ல சொல்லியிருந்தா நான் லியாகத் அண்ணன்கிட்ட பேசியிருப் பேன்ல'' எனச் சொல்லியிருக்கிறார் ராவுத்தர்.

நான் சத்யராஜ் சாருக்கு முக்கியத்துவம் கொடுத்து "கட்டளை' பட வேலைகளைப் பார்ப்பதால் "சக்கரைதேவனுக்கு' வசனம் எழுதிக் கொடுக்கவில்லை என்று தவறாகப் புரிந்து கொண்டு ஒரு தவறான முடிவெடுத்தார்கள். அந்த முடிவை தம்பி எஸ்.கே.சுப்பையாவிடம் சொல்லி அனுப்பினார்கள்.

எஸ்.கே.சுப்பையா, விஜயகாந்த்திடம் டச்அப் பாயாக சேர்ந்து உதவியாளராக உயர்ந்து 90 படங்களின் படப்பிடிப்புகளிலும், மற்ற நேரங்களிலும் அவருடன் நிழலாக இருந்தவன். 10 படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகப் பணி யாற்றியவன். கடும் உழைப்பாளி. விசுவாசத்துக்கு இன்னொரு பெயர். அவனுடைய விசுவாசத்திற் காகவே எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் விஜய காந்த் நடித்த "பெரியண்ணா' படத்தின் மூலம் தயாரிப்பாளராக்கினார் விஜயகாந்த். எஸ்.கே. சுப்பையாவைப் பற்றி ஒரே வரியில் சொல்வ தென்றால் ஸ்ரீராமனுக்கு அனுமன் போல என்று சொல்லலாம். அந்த சுப்பையா, பானுப்பிரியா அலுவலகத்தில் வந்து என்னை சந்தித்தான்.

"அண்ணே விஜயகாந்த் உங்கமேல கோபப்பட்டு ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு சென்னை வந்துட்டாரு. உங்களுக்குப் பதிலா வேற வசனகர்த்தாவை "சக்கரைத்தேவன்' படத்துக்கு போடலாமான்னு கேட்டுட்டு வரச் சொன்னாங்க'' என்றான்.

(வளரும்...)

படம் உதவி: ஞானம்

nkn211023
இதையும் படியுங்கள்
Subscribe