Advertisment

கருப்பு + சிவப்பு = புரட்சி! -திரைப்பட இயக்குநர் -வசனகர்த்தா லியாகத் அலிகான் (97)

ss

ss

(97) கவிஞரின் மனசு!

ங்களுக்கு முந்தைய தலைமுறை யில் வாழ்ந்த கவி. கா.மு.ஷெரீப் அவர் களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர். பல திரைப்படங்களுக்கு நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார். அத்தனையும் சாகாவரம் பெற்ற பாடல்கள்.

Advertisment

"முதலாளி' படத்தில் "ஏரிக்கரை மேலே… போறவளே பெண் மயிலே', "பணம் பந்தியிலே' படத்தில் "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி' "அன்னையின் ஆணை' படத்தில் "அன்னையைப் போல் ஒரு தெய்வ மில்லை', "நான் பெற்ற செல்வம்' படத்தில்... "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா...' இதைப்போல எத்தனையோ பாடல்கள் எழுதியவர். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த "திருவிளையாடல்' படத்தில் "பாட்டும் நானே பாவமும் நானே' என்ற பாடல் அவர் எழுதியதுதான். ஆனால் படத்தில் அவரது பெயர் டைட்டிலில் வராது என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். மிகச்சிறந்த சாதனையாளர். பல்வேறு இலக்கியங்களையும் படைத்தவர்.

Advertisment

அவரது வாழ்க்கையில் ஒரு சம்பவம். விஜயகாந்த்துடன் எனக்கு அறிமுகம் ஏற்படக் காரணமாக இருந்த புகழேந்தி அண்ணன் சொன்னது.

கவி.கா.மு.ஷெரீப் அவர்களுக்கு தெரிந்த ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த நண்பர் அவரைப் பார்க்க வந்தார்.

"உங்களிடம் மனம்விட்டு ஒரு உண்மையைப் பேசவேண்டும்'' என்று அழுதிருக்கிறார்.

"என்னவென்று அழாமல் சொல் லுங்கள்''

"என் பொண்ணு ஒருத்தனை நம்பி ஏமாந்து போயிட்டா. கர்ப்பமா வேற ஆயிட்டா. ஏமாத்துனவன் எங்க போனான்னே தெரியல.… எங்களுக்கு இப்பத்தான் தெரிஞ்சது. கர்ப்பத்தை கலைச்சிர லாம்னு டாக்டர் கிட்ட கூட் டிட்டுப் போனோம். கரு நல்லா வளர்ந்திருச்சு.… இப்ப கலைச்சா பொண்ணோட உயிருக்கே ஆபத்து வந்திரும்னு சொல்லிட்டாரு. வெளிய தெரிஞ

ss

(97) கவிஞரின் மனசு!

ங்களுக்கு முந்தைய தலைமுறை யில் வாழ்ந்த கவி. கா.மு.ஷெரீப் அவர் களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர். பல திரைப்படங்களுக்கு நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார். அத்தனையும் சாகாவரம் பெற்ற பாடல்கள்.

Advertisment

"முதலாளி' படத்தில் "ஏரிக்கரை மேலே… போறவளே பெண் மயிலே', "பணம் பந்தியிலே' படத்தில் "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி' "அன்னையின் ஆணை' படத்தில் "அன்னையைப் போல் ஒரு தெய்வ மில்லை', "நான் பெற்ற செல்வம்' படத்தில்... "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா...' இதைப்போல எத்தனையோ பாடல்கள் எழுதியவர். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த "திருவிளையாடல்' படத்தில் "பாட்டும் நானே பாவமும் நானே' என்ற பாடல் அவர் எழுதியதுதான். ஆனால் படத்தில் அவரது பெயர் டைட்டிலில் வராது என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். மிகச்சிறந்த சாதனையாளர். பல்வேறு இலக்கியங்களையும் படைத்தவர்.

Advertisment

அவரது வாழ்க்கையில் ஒரு சம்பவம். விஜயகாந்த்துடன் எனக்கு அறிமுகம் ஏற்படக் காரணமாக இருந்த புகழேந்தி அண்ணன் சொன்னது.

கவி.கா.மு.ஷெரீப் அவர்களுக்கு தெரிந்த ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த நண்பர் அவரைப் பார்க்க வந்தார்.

"உங்களிடம் மனம்விட்டு ஒரு உண்மையைப் பேசவேண்டும்'' என்று அழுதிருக்கிறார்.

"என்னவென்று அழாமல் சொல் லுங்கள்''

"என் பொண்ணு ஒருத்தனை நம்பி ஏமாந்து போயிட்டா. கர்ப்பமா வேற ஆயிட்டா. ஏமாத்துனவன் எங்க போனான்னே தெரியல.… எங்களுக்கு இப்பத்தான் தெரிஞ்சது. கர்ப்பத்தை கலைச்சிர லாம்னு டாக்டர் கிட்ட கூட் டிட்டுப் போனோம். கரு நல்லா வளர்ந்திருச்சு.… இப்ப கலைச்சா பொண்ணோட உயிருக்கே ஆபத்து வந்திரும்னு சொல்லிட்டாரு. வெளிய தெரிஞ்சாலும் அவமானம்.… குழந்தைய பெத்துக்கிட்டா அதை விட அவமானம். பேசாம குழந்தையோட செத்திரலாம்னு நெனைக்கிறோம்'' என்று கூறிவிட்டு அழுதிருக்கிறார்.

ஒரு பெண் கெட்டுப் போய்விட்டாள் என்பதெல்லாம் மிகப்பெரிய அசிங்கமாகப் பேசப்பட்ட காலம் அது. திருமணத்திற்கு முன்பே ஒருவனுடன் தொடர்பு ஏற்பட்டு குழந்தை பெற்றுக்கொள்வது என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாத காலம் அது.

ஆறுதல் சொல்கிறார் கவி.கா.மு.ஷெரீப். "யாரும் சாக வேண்டாம். சாகறதுக்கா நாம பொறந்திருக்கோம். உன் பொண்ணு தலையிலே ஆண்டவன் இப்படி எழுதிட்டான். என்ன பண்றது. நான் ஒரு யோசனை சொல்றேன். ஏத்துக்குவியா?'' என்று கேட்டார்.

ss

"என் குடும்ப மானம் போகாம இருக்கணும். நீங்க எது சொன்னாலும் ஏத்துக்கறேன்'' என்றார் அவர்.

அந்த இந்து நண்பரின் மகளை கவி. கா.மு.ஷெரீப் தன் மனைவியுடன் வெளியூருக்கு அனுப்பி வைத்தார். அந்த ஊரில் இருவரும் தங்குவதற்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். சில மாதங்கள் இருவரும் அங்கே தங்கியிருந்தார்கள். அந்த ஊரிலேயே அந்தப் பெண்ணை டாக்டரிடம் அழைத்துப் போய் காட்டி பிரசவம் பிரச்சினையில்லாமல் நடப்பதற்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் செய்தார். அந்த ஊரிலேயே இந்து நண்பரின் மகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சில நாட்கள் அந்த ஊரில் தங்கியிருந்து விட்டு சென்னைக்கு வந்தார்கள். இந்து நண்பரின் மகளுக்குப் பிறந்த பெண்குழந்தையை தன் மனைவிக்கு பிறந்ததாக வெளி உலகிற்குச் சொன்னார். இந்து நண்பரின் மகளை பத்திரமாக அவருடன் அனுப்பிவைத்தார்.

அவர் மகளுக்குப் பிறந்த குழந்தையை தனது மகளாகவே வளர்த்தார் கவி.கா.மு.ஷெரீப். அவள் வளர்ந்து ஆளானதும் அவளுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துவைத்தார். இதுதான் மனிதாபிமானம். இதுதான் மனித தர்மம். இதுதான் சகோதரத்துவம். இதுதான் மதங்களைத் தாண்டிய ஒற்றுமை உணர்வு. ஒரு இந்துவை இஸ்லாமியன் நேசித்தான். ஒரு இஸ்லாமியனை இந்து நேசித்தான். அப்படித்தான் தமிழ்நாடு இப்பொழுதும் இருந்துகொண்டிருக்கிறது.

இந்து பண்டிகைகளில் இஸ்லாமியர் கள் கலந்துகொள்வதும், இஸ்லாமியர் நிகழ்ச்சிகளில் இந்துக்கள் கலந்து கொள்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது யாராலும் உடைக்க முடியாத உறவாகத் தொடரவேண்டும். மத வெறியர்களை ஜாதி வெறியைத் தூண்டுபவர்களை இன்றைய இளைஞர்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டும்.

இதையெல்லாம் எங்களுக்கு சொல்கிறாயே,… நீ என்ன செய்தாய்… என்று கேட்பீர்கள்.

பதில் சொல்லத்தான் வேண்டும்.

ஜாதி, மதப் பிரச்சினைகள் இல்லாத சமுதாயம் அமைய நானும் என் பங்களிப்பை நிறையவே செய்திருக்கிறேன். நான் மட்டும் தனியாகச் செய்யவில்லை. எனக்குள்ளே விஜயகாந்த் இருந்தார். அவர்மூலம் செய்தேன். அவருடன் இணைந்து செய்தேன். அவர் இட்ட உத்தரவால், அவர் கொடுத்த உற்சாகத்தால், நாட்டின் நலனுக்காக எத்தனையோ திரைப்படங்களில் எவ்வளவோ எழுதியிருக்கிறேன்.

ஆனால் அநியாயத்துக்கும், அராஜகத்திற்கும் பணிந்து போகாதவர் விஜயகாந்த். அதனால்தான் என் எழுத்திற்கு ஒரு மரியாதை கிடைத்தது. அவர் கனிவானவர், ஆனால் அரசியல் மிரட்டல்களை, அதிகார அச்சுறுத்தல்களையெல்லாம் எதிர்க்கும் துணிவானவர். அதனால்தான் என் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைத்தது. அவருக்காக நான் எழுதிய படங்களில் அலசப்படாத மக்கள் பிரச்சினைகளே இல்லை.

எந்த ஆட்சியாக இருந்தாலும் தவறுகளை சுட்டிக்காட்டியிருக்கிறோம். தைரியமாகத் தட்டிக் கேட்டிருக்கிறோம். தமிழர்களின் பெருமைகளை தலைநிமிரச் செய்திருக்கிறோம். பசியோடு வருபவர்களுக்குத் தமிழன் சோறு போடுவான், பகையோடு வருபவர்களைக் கூறுபோடுவான் என்பதை நெஞ்சுறுதியோடு சொல்லியிருக்கிறோம். காவல்துறையும், நீதித்துறையும் மக்களைப் பாதுகாக்கும் அரணாக இருக்கவேண்டும் என்பதை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறோம்.

இப்பொழுது வரும் திரைப்படங்களில் தைரியமாகச் சொல்கிறார்கள் என்று பாராட்டப்படுகின்ற விஷயங்களை எல்லாம் விஜயகாந்த்தும், நானும் பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டோம். மத வேறுபாடு களை மறப்போம்... மனிதர்களாக இருப்போம் என்பதை மிகஅழுத்தமாக எழுதியிருக் கிறேன். ஜாதியை வைத்து அரசியல் செய்பவர்களை மிகக்கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன்... வசனங்களால் வறுத்தெடுத்திருக்கிறேன்.

அப்படியெல்லாம் என்னை எழுத வைத்து சிம்மக்குரலில் கர் ஜித்தவர் புரட்சிக் கலைஞர் விஜய காந்த். அதனால்தான் நான் பலரால் மிரட்டப்பட்டிருக்கிறேன். எழுது வதற்கு கை இருக்காது என்றெல்லாம் மிரட்டியிருக்கிறார்கள். அந்த மிரட் டல்களுக்கெல்லாம் நான் அஞ் சாமல் எழுதியதற்குக் காரணம் விஜயகாந்த், எனக்குக் கேடயமாக, பாதுகாப்புக் கவசமாக இருந்ததால்தான்.

அப்படி நான் எழுதிய சில படங்களை இன்றைய இளைஞர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

1991ஆம் ஆண்டு வெளிவந்த படம் மனோ பாலா இயக்கிய "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'. அந்தப் படத்தில் மலையாள நடிகர் திலகனும் ஒரு வில்லன். ஜாதி வெறி பிடித்தவர். வசதியானவர். விஜயகாந்த் அவர்கள் சவப்பெட்டி செய்யும் ஒரு சாதாரணத் தொழிலாளி. ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைப்பதற்காக திலகனைப் பார்க்க வந்தி ருப்பார். அந்தக் காட்சியிலே நான் எழுதிய வசனம்

திலகன்: "நான் நம்பூதிரி.…இந்த ஊரே என்னைக் கையெடுத்துக் கும்பிடும்.… என்னைப் பாத்தா தோள்ல போட்டிருக்கிற துண்டை எடுத்து இடுப்புல கட்டுவாங்க. ஆனா நீ யாரு… சவப்பெட்டி செய்றவன். எருக்கம் பூ... பூஜை அறைக்கு வர ஆசைப்படக்கூடாது.

விஜயகாந்த்: "உண்மையான பக்தன் எந்தப் பூவால அர்ச்சனை பண்ணாலும் ஆண்டவன் ஏத்துக்குவான். உண்மையான மனுஷன் எந்த மதமானாலும் மாப்பிள்ளையா ஏத்துக்குவான்.''

திலகன்: "கீழ்ஜாதிக்கார நாயி...…என் வீட்டு தட்டுல சோறு திங்க நான் அனுமதிக்கமாட்டேன்.''

விஜயகாந்த்: "ஜாதியைப் பத்தி இவ்வளவு பேசுறீங்களே. நீங்க போடற செருப்பு எந்த ஜாதிக் காரன் தச்சதுன்னு உங்களுக்குத் தெரியுமா? மானத்தை மறைக்கிறதுக்காக நீங்க உடுத்தியிருக்கிற உடுப்பு எந்த ஜாதிக்காரன் நெஞ்சதுன்னு உங்க ளுக்குத் தெரியுமா? நீங்க சாப்பிடற சோறு.. எந்த ஜாதிக்காரன் விதை விதைச்சான். எந்த ஜாதிக்காரன் உரம் போட்டான். எந்த ஜாதிக்காரன் அறுவடை பண்ணான்னு உங்களுக்குத் தெரியுமா? நீங்க குடிக் கிற தண்ணீர்...… எந்தெந்த ஜாதிக்காரன் கைபட்டு, கால் பட்டு உங்க வீட்டுக்கு வருதுன்னு உங்களுக் குத் தெரியுமா? இவ்வளவு ஏன்? நீங்க உள்ளே இழுத்து சுவாசிக்கிற மூச்சுக் காத்துல, கீழ் ஜாதிக் காரங்க விடற மூச்சுக் காத்தும் கலந்திருக்கு தெரியுமா? உங்க ஜாதி, மதம் எல்லாம் கடவுள் படைச்சதில்ல, மனுஷன் பிரிச்சது. இப்படி பட்டை போட்டா சிவன் கோயில் யானை, இப்படி நாமம் போட்டா விஷ்ணு கோயில் யானை,… நாமம் போடச் சொன்னது மனுஷன்தான், யானை இல்ல''…

திலகன்: "நீ என்ன பேசுனாலும் மதம்கிற மூணு எழுத்துக்காக நான் எதை வேணும்னாலும் இழக்கத் தயாரா இருக்கேன்''

விஜயகாந்த்: "காதல்ங்கிற மூணு எழுத்துக்காக நான் உயிரையே இழக்கத் தயாரா இருக்கேன்''

இந்தக் காட்சியில் தியேட்டரில் எழுந்த கை தட்டல், என் வசனத்திற்காக என்று நினைக்க வில்லை. ஜாதி வெறியை வேரறுக்க நினைப்பவர் களின் கைதட்டல், மத ஒற்றுமையை ஓங்கிப் பிடிக்க நினைப்பவர்களின் கைத்தட்டல். விஜயகாந்த் பேசியதால் எழுந்த கைத்தட்டல். அப்படி நினைத்துதான் மகிழ்ச்சியடைந்தேன்.

(வளரும்...)

படம் உதவி: ஞானம்

ss

nkn100224
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe